Thursday, March 01, 2007

எலும்பில்....ஓர்..தேவாலயம்!!




உண்மை!சில சமயம் கற்பனைக் கதைகளிலும் அன்னியப்படும்.
அது செக்(Czech) குடியரசின் தலைநகரான பராக்கிலிருந்து(PRAGUE) ;
70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள SEDLEC எனும் கிராமத்தில்
காணலாம்.

இந்தக் கிராமத்திலுள்ள தேவாலயத்தின் உட்புறம்; மனித
எலும்புகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இக்கதை 1218 ல் ஆரம்பமானது. ABBOT HENRY என்பவர் ;
புனிதமண்ணுக்கு யாத்திரை செய்து திரும்பும் போது,
அங்குள்ள
பழமையான இடுகாட்டு மண்ணைக் கொண்டு வந்து இந்தத்
தேவாலயத்தில் தூவியுள்ளார்.

இதன் காரணமாக இத்தேவாலயம் மிகப் புனித இடமானதுடன்;
இடுகாடாகவும் மாறியது.



1318 வரை; 30000 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. 1511 ல்
கட்டாயமாகப் பழைய எலும்புகள்அப்புறப்படுத்தினால் தான் ;
புதிய உடல்கள் அடக்கம் செய்யலாமெனும் நிலை வந்தது.



அப்படிச் சேர்த்த எலும்புகளைக் கொண்டு இத் தேவாலயத்தை அழகுபடுத்தும்படி; 1870 ல் Duke of SHWARTZENBERG அவர்கள்; மரவேலையாளர்களை நியமித்து. அவர்கள் அப்பணியை அழகுற
முடித்தனர்.



இத்தேவாலய உள்புறத்தை சுமார் 40000 உடல்களின் எலும்புகள் அலங்கரிக்கின்றன.அத் தேவாலயத்தின் சில படங்களே இவை.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மன்னிக்கவும் இது ஒரு பரிசோதனைப் பின்னூட்டம்!

வைசா said...

யோகன்,
இத்தனை எலும்புகள் உள்ள ஆலயத்துக்குள் செல்லும் போது சில்லிட்டு எமது எலும்பு வரை தாக்குமோ?

ஆலயத்தினுள் அச்சமூட்டுவதாக இருக்குமல்லாவா?

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
உங்களைத் தவிர எவருமே வரவில்லை. எல்லோரும் பயந்திட்டாங்க போல இருக்கு; அவங்களுக்கு
பயத்தில கையும் எழுதல ;கால் ஓடிட்டுது போல இருக்கு!!ஆனாலும் இனையத் தலைமுறை இவ்வளவு
பயப்படுமென நான் நினைக்கவில்லை.
அச்சம் வரக் கூடியதுதான்; ஆனால் பெரியவர்கள் இதைச் சென்று பார்ப்பார்கள். அத்துடன் இந்த இறந்தவர்களின் உறவினர்களுக்கு அச்சமில்லாமல் இருக்கலாம்.
ஊரவர்களுக்கு பழகப் பழக சரியாகிவிடும் என நினைக்கிறேன்.