
"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969
பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.
கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.
கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.
Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)
Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.
Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.
Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (
even one of) its hairs.-
koodal.com-Kuralகௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.
"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!
வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக்
கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை
கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.
விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.
வள்ளுவர் தெளிவாக
"கவரிமா" என்று சொன்னதை; எப்படிக்
கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "
கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "
கவரிமா அன்னார்" எனவே உள்ளது.
முதல்
கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.
இதன்
ஒரு மயிர் அல்லது
உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த
ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.
இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.
இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "
கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.
கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "
மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.
இதே வேளை "
சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார்.
கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "
சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.
என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்;
ஒரு மயிர் விழுந்தால் ;
மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.
இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கவரிமான் இருந்தால் அதன் விபரத்தைத் தாருங்கள்; படத்தைக் காட்டுங்கள்.