Friday, November 10, 2006

பழச் சிற்பம்

கல்;மரம்;மண்,உலோகம்,கண்ணாடி.....ஏன் மணலிலும் கூடச் சிற்பம் செய்வார்கள்.

யாரோ ஒருவர் வத்தகப் பழத்தில் (தார்ப்பூசணி) சிற்பம் செய்துள்ளார்.

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லுமாயுதமென்பதா???
35 comments:

அம்மாஞ்சி said...

பேஷ்... பேஷ்...
ரொம்ப நன்னா இருக்கு.....

அம்மாஞ்சி

ENNAR said...

வரைபவனுக்கு பழமும் சுவர்
நன்றாக உள்ளது ஜான்

குமரன் (Kumaran) said...

அருமை அருமை.

இலவசக்கொத்தனார் said...

நல்ல படங்கள். இங்கு Halloween என்ற திருவிழாவிற்கு அனைவரும் பூசணியில் பயப்படும் படியாக முகங்கள் செய்து வைப்பார்கள். அப்பொழுது போட்டிகள் கூட நடக்கும். கூகிளாண்டவரைப் பிரார்த்தித்தால் பார்க்கக் கிடைக்கும்.

இலவசக்கொத்தனார் said...

யோகன் அண்ணா,

அது சிற்பம் தானே. என்னதான் அழுத்தமாக இருந்தாலும் சிற்ப்பமாகாதே! :)

வைசா said...

மிக அருமையாகச் செய்திருக்கிறார்கள். இவற்றை செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்ததோ!

நிற்க. இவை சிற்ப்பங்கள் அல்ல. சிற்பங்கள். தமிழில் மூன்று எழுத்துகளுக்குப் பக்கத்தில் மட்டுமே மெய்யெழுத்துகள் வரமுடியும்.

ய் - காய்த்தல்
ர் - பார்த்தல்
ழ் - மகிழ்ச்சி

ஆனால் ஆங்கிலச் சொற்களை அல்லது பெயர்களைத் தமிழில் எழுதும்போது இந்த விதி மீறப் படுகிறது.

வைசா

Anonymous said...

அய்யா, சிற்பம்தானே சரியான வார்த்தை ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

யோகன் அண்ணா

படங்கள் மிகவும் அருமை!
தர்ப்பூசணி=வத்தகப் பழம்
இன்று தான் அறிந்து கொண்டேன்; நன்றி!
அடுத்த முறை சென்னை செல்லும் போது இவ்வாறு சொல்லி வாங்கப் பாக்கறேன்!:-))

அந்த ஆயிரம் இதழ் தாமரை மிகவும் அழகு! அலைமகள் அமரும் தாமரையோ என்பது போல் உள்ளது!

அட நம்ம தாஜ் மகால் கூடத் தான்!
ஆமை ஓட்டுக்கு, வெளிப் பச்சையை யோசிச்சுப் பயன்படுத்தி உள்ளார் சிற்பி! அருமை!!

கடல்கணேசன் said...

அழகான கைவண்ணம்.. கலைஞனின் திறமை வியக்க வைக்கிறது..

நன்றி யோகன் உங்களுக்கு

மலைநாடான் said...

யோகன்!

இச்சிற்பங்கள் வடிக்கப்படுவதை நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன். கூரிய சிறிய கத்தியொன்றால் மிக லாவகமாகவும், வேகமாகவும், செதுக்குவார்கள்.
தாய்லாந்தியர்களும், ஜப்பானியர்களும், இவ்வகைப் பழச்சிற்பங்கள் செதுக்குவதில் மிகத் திறமையானவர்கள்.

Johan-Paris said...

பிளக்கரில்(BETA) ஏதோ மாற்றமென இருந்ததே என "ஆம்" போட்டேன் . இப்போ சில தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.அதனால் உங்கள் பலர் பெயர்கள் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் போட்டிருப்பவர்கள் பெயர் தெரிகிறது. எனினும் எல்லோருக்குமாக சிற்ப்பத்தைச் ; சிற்பமாக்கிவிட்டேன். உங்களை நம்பித் தவறைக்கூட துணிந்து விடுகிறேன். அதை எழுதும் போது "சிற்ப்பம்" கண்ணை உறுத்தியபோதும்; சொல்லிச் சொல்லிப் பார்த்தபோது, "ப்"; வருவதுபோல் இருந்ததால்; சரி ;பிழையானால் நண்பர்கள் சொல்லுவார்களே!!!என நம்பி இட்டேன்; சுட்டிய அனைவருக்கும் நன்றி!!
உங்கள் பெயர்கள் தெரிய நான் என்ன??செய்வது. அதன்பின் தங்கள் விமர்சனங்களுக்கு பதிலிடுவேன்.
யோகன் பாரிஸ்
.

சின்னக்குட்டி said...

நல்லாயிருக்கு...சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம் என்று சொல்லுவினம்...

உதை பார்த்த பின் பழம் இருந்தால் சிற்பம் துலக்கலாம் என்று சொல்லுவினம்..

Johan-Paris said...

அம்மாஞ்சி!
மிக ,மிக மகிழ்ந்துள்ளீர்கள் போல் உள்ளது.உங்கள் மகிழ்ச்சி ;நமக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
வரவுக்கும் ,நாலுவார்த்தை சொன்னதுக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

என்னார் ஐயா!
சரிதான்; திறமைக்கும்; கற்பனைக்கும்.....தளமெதுவென்பதில்லை.
என்னை ஏன்?,,ஜான் என்கிறீர்கள்; நான் யோகன்
யோகன் பாரிஸ்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

யோகன் அண்ணா,
//பிளக்கரில்(BETA) ஏதோ மாற்றமென இருந்ததே என "ஆம்" போட்டேன் . இப்போ சில தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.அதனால் உங்கள் பலர் பெயர்கள் தெரியவில்லை//

இட்லி வடையருக்கும் இதே பீட்டா பிரச்னை இருந்தது என்று சொல்லி இருந்தார் ஒரிரு மாதம் முன்; ஆனால் எப்படி சரி செய்தார் என்று பதியவில்லை போலும்!
http://idlyvadai.blogspot.com/2006/09/blogger-beta.html

அவருக்கு மடல் அனுப்பிக் கேளுங்களேன்! idlyvadai@gmail.com

Johan-Paris said...

அன்புக் குமரா!!
அப்பாடா...பிடித்துதா??,,வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

கொத்தனார்!
அமெரிக்காவென்றாலே!!! பயப்படும்படிதான் எதையும் செய்கிறாங்க.....பூசணிக்காயில் செய்தாலும்!!
இவை பேரழகும்;விரிவான கற்பனையும்.
கருத்துக்கும் வரவுக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

வைசா!
சிற்பமாக்கிவிட்டேன். தமிழ்ப் பாடமே சொல்லிக்கொடுக்குறீங்க ;மிக்க நன்றி.
எவ்வளவு நேரமெடுத்தார்களோ!!! தெரியவில்லை. அது நாட்கணக்கானாலும் தகும்.
தவறாமல் வருகிறீர்கள்;தகவல்கள் தருகிறீர்கள்
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

பெயரிலியாக வந்த அன்பருக்கு!
மாற்றி விட்டேன். சுட்டியமைக்கும் ;வரவுக்கும் நன்றி
தங்கள் பெயரைக் கூறக் கூடாதா??,,
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

மலை நாடர் !
என்ன??? காணக்கிடைக்கவில்லை. நீங்கள் கூறுவது சரி; ஆமை முதுகில் அவர்களுடைய எழுத்துதான் உள்ளது. நேரே பார்த்தீர்களா??? கொடுத்து வைத்தவர்.
சிற்பியால் தான் சிற்பியின் ஆற்றலை மதிப்பிட முடியும்.
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

சின்னக் குட்டியண்ணர்!
ஆம்; அப்படி ஓர் புது மொழி வந்தாலும் ஆச்சரியமில்லை.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

ரவிசங்கர்!
இப்பழத்தை; ஈழத்தில் வத்தகப்பழம் எனத்தான் கூறுவோம். சென்னையில் புரிந்து கொள்ளுவார்களோ?,தெரியவில்லை.
இச் சிற்பி மிக சிந்தித்தே!!!செதுக்கியுள்ளார். இதிலுள்ள van gogh வின் சிற்பத்தின் கண்ணைப் பாருங்கள் உயிரோட்டம் உள்ளது.இவர் மிகுந்த ஆற்றலும் கற்பனை வளமும் உள்ளவர் தான் ; தென்கிழக்காசியராக இருக்கலாம். ஆமை முதுகில் கையொப்பம் இட்டுள்ளார்.(மலை நாடரும் நேரிலேயே பார்த்ததாகக் கூறுகிறார்.)
நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

கணேசன்!
அவரோ பழச் சிற்பி ,நீங்கள் எழுத்துச் சிற்பி.....
வராதவர் வந்து, கருத்துக் கூறியுள்ளீர்கள்.
மிக்க நன்றி!!
யோகன் பாரிஸ்

துளசி கோபால் said...

நல்ல படங்கள் யோகன்.
இதை (சிலவருஷங்களுக்கு) முந்தியே
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கானா பிரபா said...

//சின்னக்குட்டி said...
நல்லாயிருக்கு...சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம் என்று சொல்லுவினம்...

உதை பார்த்த பின் பழம் இருந்தால் சிற்பம் துலக்கலாம் என்று சொல்லுவினம்..//
சின்னக்குட்டியரை நான் வழிமொழிகின்றேன்

G.Ragavan said...

அப்பப்பா..........தர்பூசணியில் இத்தனை வேலைப்பாடுகள். வெட்டித் திங்கிற பழத்துல அழகான வேலைப்பாடுகள். சூப்பர்.

Johan-Paris said...

பிரபா!
இளையராஜா!! கோலோச்சியகாலத்தில்;" இளையராஜா வீட்டு இட்டலிச் சட்டியும் இசைபாடுமெனும்" புதுமொழி திரையுலகில் உதித்தது.
அதனால் சின்னக்குட்டியண்ணர் சொன்னது நடந்தாலும் ஆச்சரியமில்லை.
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

ராகவா!
நாம் சாப்பிட்டு முடிப்பது பற்றி யோசிக்க; அவர் இதைச் சிலையாக்குவது பற்றிச் சிந்தித்துள்ளார்.
கலைஞன்....உண்மையில் பிரமாதம் ;மிக ரசித்தேன்.
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

துளசியக்கா!
நீங்கள் இணையத்தில் சுற்றும் சுற்றுக்கு; இவை உங்கள் கண்ணில் படாவிட்டால் தான் ஆச்சரியம்.
எனக்குப் பார்த்ததும் மிகப் பிடித்தது. பலர் பார்த்திருக்க முடியாதே!!எனப் போட்டேன். என் எண்ணத்தை பின்னூட்டங்கள்; நிரூபிக்கின்றன.
நன்றி
யோகன் பாரிஸ்

pxcalis said...

நண்பன் யோகன் அவர்களுக்கு!
தெடித் தேடித் திரவியமாய்த் திரட்டித் தரும் தங்களின் ஆக்கங்கள் கண்டேன் மகிழ்ந்தேன். வத்தகப் பழத்திலும் வித்தகம் காட்டமுடியுமென்பதை காட்டியுள்ளார் அந்த வத்தகப்பழ வித்தகக் கலைஞர். நித்தமும் இதேபோல் சுத்தமான ஆக்கங்களை தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். சின்ன வயசில சித்திரப் பாடத்துக்கு சவர்க்காரத்தில சின்னச் சிற்பம் செதுக்கின ஞாபகமும், கைவெட்டுண்டு கண்கலங்கிய ஞாகமும் இன்றும் ஈரமாய் என் மனதில்......!
அன்புடன் வானம்பாடி கலீஸ்.

Johan-Paris said...

கலிஸ்!
எனக்குப் பிடிப்பது;;;ஒரு சிலருக்காவது பிடிக்கும்;எனும் நம்பிக்கையில் பார்ப்பதைப் பகிர்வேன்.
ஆம்.....இவர்கள் தான் வித்தகர்கள்.இப்படி எந்த வித்தையும் எனக்குத் தெரியாது... ஆனால் இரசிப்பேன்.
நேரம் கிடைக்கும் போது ஏனையவற்றையும் படிக்கவும்.
வரவு;;;கருத்து யாவுக்கும் நன்றி!!
நண்பர் மலைநாடர் பதிவுகள் படிப்பதில்லையா??? வித்தியாசமான விடயங்கள் திருகோணமலை பற்றிக் கூறுவார்.
யோகன் பாரிஸ்

pxcalis said...

நண்பன் யோகன் அவர்களுக்கு!
உங்கள் ஆலோசனைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அத்துடன் எனக்கு சிறிய உதவி உங்கள் மூலமாக.....! ஏனைய சில உங்களால் பரிந்துரைக்கப்படுகின்ற தமிழ் புளொக்கர் நண்பர்களினதும் தொடர்புகளுக்காக அவர்களது புளொக்கர் முகவரிகளையும் எனக்கு அனுப்பி வைப்பீர்களா?
அன்புடன்- கலீஸ் -

சேதுக்கரசி said...

வாவ்!

Johan-Paris said...

சேதுக்கரசி !
என்ன???வாவ்.....வா.....வரே வா......
வரவுக்கு நன்றி!!
எனையவற்றையும் படித்துக் கருத்திடவும்;
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

சேதுக்கரசி!
தங்கள் தளம் வந்தேன். அதுவுமில்லையே!!
நான் பார்ப்பதில் ஏதாவது தவறா?,
யோகன் பாரிஸ்