Wednesday, May 16, 2007

வெறி பிடித்த மிருகங்கள்!!

மதுவின் வெறியால்; அது கொடுக்கும் மயக்கத்துக்கு அடிமையாகி...தன் நிலை இழந்த மனிதர்கள் பலரைப்
பார்த்துச் சிரித்தோ! பரிதாபப் பட்டோ இருப்பீர்கள்.
அதன் தன்நிலை மறக்கச் செய்யும் தன்மையை உணர்ந்தும் பலர் அதை அருந்துகிறார்கள்.
அவலப்படுகிறார்கள்.

இதோ இந்த வெறி பிடித்த மிருகங்களைப் பாருங்கள்.


10 comments:

சின்னக்குட்டி said...

மனிசர் என்று நினைச்சன் ...சாட்சாத் மிருகங்களே மப்பிலை மதுவிலை திரிகின்றன பதிவுக்கு நன்றிகள்.

G.Ragavan said...

தலைப்பைப் பாத்துட்டு என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்...வந்து பாத்து விழுந்து விழுந்து சிரிச்சேன் :-))))))) நாட்டுலதான் இப்பிடின்னா காட்டுல அத விடவும்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக் குட்டியர்!
" மிருக உரிமை ஆர்வலர்கள்" .."ஆகா இதுவே ஆனந்தமெனக் குதிக்கட்டும்...மனிதனை விஞ்சும் மிருகம் என மார்தட்டட்டும்.
கருத்துக்கு நன்றி

கானா பிரபா said...

மது, மாது பிரச்சனை மிருகங்களுக்கும் இருக்குப் போல

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
இதை எப்போதோ பார்த்துவிட்டேன். ஆனாலும் இதுதான் தகுந்த நேரமெனக் கருதியதால் போட்டேன்.
அத்துடன் தலைப்பையும் ; ஓடிவரவேண்டும்...அத்துடன் விடயத்துக்கும் பொருத்தமாக இருக்கவும் என்பதால்; தெரிவு செய்தேன்!!! வேலை செய்திருக்கு....
வெறித்த மறுநாள் குரங்குகள் ;தலையில் கைவைத்துக் கொண்டிருப்பது; எனக்குப் பல நண்பர்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.
ஓடி வந்து கருத்திட்டதற்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
மாதுப் பிரச்சனையில் (பெண்) விழுந்து புரளும் மிருகம் கண்டுள்ளேன். ஆனால் மது; இது முதல் தடைவையாகப் பார்க்கிறேன்.
கருத்துக்கு நன்றி!

மலைநாடான் said...

யோகன்!

கிழக்கில் " தேனடிச்ச கரடி மாதிரி.." யென்டு ஒரு சொல்லாடல், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரியிற ஆட்களுக்கு சொல்லிறவை. இதைப்பார்க்க அது ஞாபகத்துக்கு வந்தது. இதே போன்று இன்னுமொரு சொல்லாடல் " இஞ்சி தின்ற குரங்கு.." :))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
"தேனடிச்ச கரடி" அருமையான சொல்லாடல்! முதற் தடவை கேட்டேன். நன்றி!

வி. ஜெ. சந்திரன் said...

முந்த நாளே அலுவலக கணனியில் ஒலிவடிவம் இல்லாமல் பார்த்தது. இப்ப தான் ஒலியோடு பார்த்தேன். தலையில் கைவைத்திருக்கும் குரங்கு :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரன்!
இந்தத் தலையில் கைவைத்தல் பரம்பரைப் பழக்கம் போல், என் நண்பர்கள் பலர் குடித்த மறு நாள் இப்படித் தான் இருப்பார்கள். அத்துடன் இனிமேல் இந்தச் சனியனைத் தொடுவதில்லை எனக் கூறி
அடுத்த வாரவுறுதி வேறு வகைப் போத்திலுடன், மலைநாடர் ,சொன்னதுபோல் "இஞ்சி திண்டது போல்"
சிரிப்பார்கள்.
கருத்துக்கு நன்றி