Thursday, August 30, 2007

நெல்சன் மன்டெலா சிலை- லண்டன் பாராளுமன்றத்தில்

முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் திரு. நெல்சன் மன்டெலாவுக்கு (Nelson MANDELA- 89); பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் 2.7 மீட்டர் உயரச் சிலை ; நேற்று 29-08- 2007 அன்று பிரித்தானியப் பிரதமர் கோர்டொன் பிறவுண்(Gordon BROWN); லண்டன் நகரபிதா கென் லிவிங்ஸ்ரோன்(Ken LIVINGSTONE); நெல்சன் மன்டெலா முன் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்ரன் சர்சில்(Winston CHURCHILL); முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்(Abraham LINCOLN) சிலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.இச் சிலை இயன் வோல்ரஸ்(Ian WALTERS) என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.இதை ஒட்டி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில்; பிரித்தானிய பிரதமர் "எமது தலைமுறையில் மிகப் புகழ்மிக்க ;மிகுந்த மனத்தைரியம் மிக்க பெருந்தலைவர் எனப் புகழ்ந்தார்.



இவ் விழாவில் பெருந்திரளான நிறப் பாகுபாட்டுக்கெதிரான போராடும் மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்

6 comments:

மாயா said...

இது எப்பவோ வைத்திருக்கவேண்டிய சிலை . . .

வைசா said...

ஏற்கனவே இவரது மார்பளவு சிலை Royal Festival Hallக்கு முன்னால் உண்டு. இந்தச் சிலை பெருமை தரும் விடயம். நன்றி யோகன்.

வைசா

Thamizhan said...

பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் மனித நேயம் அடைந்து வருகிறது.
நாட்டின் பெரும் பணக்காரர் இந்தியன்.
தென் ஆப்பிரிக்கக் கருப்பர் சிறந்த மனிதர்.
இந்த மனித நேயம் இந்திய படித்த,பதவியில் உள்ள உயர்சாதியினருக்கு வருங் காலமே உண்மையான விடுதலை அடைந்ததைக் குறிக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாயா!
இப்போதாவது வைத்தார்கள் என மகிழ்வோம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
ஏற்கனவே உள்ள செய்தி எனக்குப் புதிது.
இச்சிலையால் பிரித்தானியர் தம்மைப் பெருமைப்படுத்துயுள்ளார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Thamizhan!
//இந்த மனித நேயம் இந்திய படித்த,பதவியில் உள்ள உயர்சாதியினருக்கு வருங் காலமே உண்மையான விடுதலை அடைந்ததைக் குறிக்கும். //

இந்தியா என்றல்ல உலகில் எங்குமே! மனிதனை மனிதன் மதிக்கும் நிலை வரட்டும்.
வரும்...விடுதலை