உங்களில் பலருக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்.
பாகிஸ்தானின் குவாலி(Qawwali) இசைப்பாடல் மூலம் உலகம் புகழ்ந்த நஸ்ரத் பேத் அலிகான்(Nusrat Fateh Ali Khan).
13-10-1948 ல் பாகிஸ்தானிப் பஞ்சாப்பில் பிறந்தவர்.
தன் குடும்பத்தினர் இசைக்கும் இசை வடிவான இந்த 600 வருடப் பழமை வாய்ந்த குவாலி இசையை, தந்தையிடம் கற்றுத் தேறி ,தந்தையின் மறைவின் பின் குழுவைத்
தலைமை தாங்கி தான் மறையும் வரை; அதற்கு உலக அரங்கமெங்கும் புகழ் கூட்டிச் சென்றவர்.
இவர் குழுவில் சுமார் 11 பேர் உள்ளனர். யாவரும் உறவினரே...பலர் பின்குரலும்..கைத் தாளம் போடுபவர்களாகவுமே உள்ளார்கள்.
இவர் உருது,பஞ்சாபி,இந்தி மொழிகளில் பாடி மகிழ்வித்தார். பல மேலைத் தேச இசை வல்லுனர்களுடன் சேர்ந்திசைத்து, சுமார் 125 இசைஅல்பங்கள் வெளியிட்டு குவாலி இசையுலகில் அதிக அல்பம் வெளியிட்டவர் எனும் கின்னஸ் சாதனை படைத்தவர்.
DEAD MAN WALKING,THE LAST TEMPTATION OF CHRIST,NATURAL BORN KILLERS போன்ற ஹாலிவூட் படங்களுக்கு இசையமைத்தவர்.
பிரான்சில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1997 ல் பாரிசில் பெரிய மண்டபத்தில் இவருக்கு 5 நாட்கள் மாலை 8.30 மணி நிகழ்ச்சிக்கொதுக்கியிருந்தது.
குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்றத்துக்காக
அமெரிக்கா செல்லும் வழியில் ,இங்கிலாந்தில் 16-08-1997 ல் மாரடைப்பினால் இறையெய்தினார்.
இவரது இசையை நேரடியாகக் கேட்க நான் ஆவலாக 1997ல் நுளைவுச் சீட்டுக்குப் பதிவு செய்திருந்தும்,கைகூடவில்லை.
ஆனால் இவர் இறையெய்திய போது ,லண்டனில் இருந்தேன். அப்போது இவருக்கு மரியாதை செய்ய தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியாக ,லண்டனில் நடந்த கச்சேரி
ஒன்று போட்டது.
கேட்டுப் பாருங்கள்
Nusrat Fateh Ali Khan
envoyé par ploukkk
அதில் இந்த ‘மஸ்து, மஸ்து’ என்ற பாடல் மிகப் பிரபலமாக வரவேற்பைப் பெற்றது.
இவர் இசையை நான் மொழி புரியாவிடிலும் மிகரசிப்பேன்.
இசைத்தட்டுக்கள், ஒலி ஒளி நாடாவிலும் வைத்துள்ளேன்.
இன்றும் இவர் கச்சேரி நேரே பார்க்கக் கிடைக்கவில்லை, எனும் கவலை எனக்குண்டு.
அவர் மறைந்து 10 வருடமாகிறது.
அவரை நினைத்தேன், உங்களுடன் பகிர்கிறேன்.
அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.....
8 comments:
இவர் பாடரத பாக்கரதும் குதூகலமான மேட்டர்.
வந்தே மாத்ரத்தில் 'போறாளே பொன்னுத்தாயி' உல்டாவ இவருதான் பாடியிருப்பாரு. அட்டஹாசமா இருக்கும்.
அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்துக் தைத்தட்ட வைக்கும் இவரது பாட்ல்கள்.
சில வருடங்களுக்கு முன் எனது பாகிஸ்தானிய/ஆப்கானிஸ்தானிய நண்பர்கள் இவரின் பாடல் அடங்கிய ஒலித் தட்டை அன்பளிப்புச் செய்தார்கள். அவர்களுக்குத் தெரியும் நான் இவரின் பரம இரசிகன் என்று.
இந்த மஸ்து மஸ்து பாடல். ஆகா! அருமை.
நான் சொல்லவந்ததை சர்வேசனே சொல்லிவிட்டார் ;-)
வித்தியாசமான தனித்துவமான குரல்
Surveysan!
ஆம் இவர் பாடுவதை பார்க்க குசி வந்து ஆடவேண்டும் போல் இருப்பது உண்மையே!!
மொழி இவரை அனுபவிக்கத் தடையில்லை.
வந்தே மாதரம் அல்பத்தில் இவர் பாடியுள்ளது. மறந்து விட்டேன்.
நல்ல கலைஞர். எனக்கு இவரைப்பற்றி கொஞ்சமும் தெரியாது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யோகன் பாரிஸ்.
உங்கள் இடுகையில் இருக்கும் இரண்டாவது பாடலை கேட்ட உடன் ரஜினியின் சிவாஜி படத்தின் "வாஜி வாஜி" பாடல்தான் உடனே என் மனதில் தெறித்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். வேண்டுமென்றால் நீங்கள் ஒரு முறை கேட்டு ஒப்பிட்டு பாருங்கள்.
//அருமையான கலைஞர். மொழி தெரியாவிட்டாலும் தலையசைத்துக் தைத்தட்ட வைக்கும் இவரது பாட்ல்கள்.//
வெற்றி!
நீங்கள் இவரை அறிந்துள்ளது மிக மகிழ்ச்சி; எனக்கு அறிமுகம் தற்செயலாகக் கிடைத்தது. பாரிஸ் மாநகரசபை உலக இசைக்கலைஞர்களை அழைத்து வருடா வருடம் கச்சேரி வைக்கும்; அப்போது
தொடர்ந்து சிலவருடங்கள் இவர் நிகழ்ச்சி இருந்தது, மண்டபம் நிறைந்து விடும். அதனால் பார்க்கக்
கிடைக்கவில்லை; அதனால் இசைத் தட்டு வாங்கிக் கேட்டுப் பரீட்சயமானேன்.
பெரும் சாதனையாளர்.
மாசிலா!
நான் சிவாஜி படத்தைப் பார்த்தபோது( இணையத்தில்) பாடல்களில் ஆர்வம் காட்டவில்லை.அந்தக் காட்சியில் தானே தொப்புள் இராட்சியம்..;சலித்து விட்டுதையா!!!!
நீங்கள் குறிப்பிட்ட பின் கேட்டபோது; உங்கள் யூகம் சரியே...சில இடங்களில் அதன் சாயல் உள்ளது.
அத்துடன் ரகுமானும் இவர் ரசிகர்;நண்பர்..அத்துடன் வேற்று இசையை தமிழுக்குக் கொண்டுவருவதில்
ரகுமான் பின் நிற்பதில்லை. அதனால் ஒருங்கிசைவு தவிர்க்கமுடியாதது.
இவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது சந்தோசமே!!
பிரபா!
தங்கள் வானொலியில் இவரை அறிமுகப்படுத்தி விட்டீர்களா???
Post a Comment