Monday, September 03, 2007

பாரிஸ் விநாயகர் தேரில்...

பாரிசில் சென்ற ஞாயிறு 02-09-2007 அன்று , மாணிக்க விநாயகர் தேரில் பவனி வந்தார்.
உங்களுக்காகச் சில படங்கள்...

பஞ்சமுக விநாயகர் தேரில்.....





பாரிஸ் வீதியில் தேர்....




நாதஸ்வர மேளம் முழங்க...


உடன் துப்பரவுப் பணி...







நிறைகுட வரவேற்பு...



சிதறக் காத்திருக்கும்...

சிதறிய.....


மாவிலை,கரும்பு, தோரணம்..


சேலையிலும் தோரணம்..
முருகன் தேர்


காணொளிக் காட்சியாக சில பகுதிகள்....







வழமையை விட இந்த வருடம், மக்கள் குறைவாக வருகை தந்த போதும், திருவிழா பெருவிழாவாக நிறைவெய்தியது.

36 comments:

கானா பிரபா said...

அருமையான தொகுப்பு அண்ணா, மக்கள் குறைவுக்கு ஏதாவது காரணம்?

இலவசக்கொத்தனார் said...

அருமையான நிகழ்வு. படங்கள் கொஞ்சம் கருப்படித்து விட்டனவே. அருகில் சென்று படம் பிடிக்க முடியவில்லையோ?

மற்றொரு பதிவில் நல்லதொரு படம் காணக் கிடைத்ததே!! :))

ஆதிபகவன் said...

அப்படியே, ஊர் ஞாபகம் வருது. அருமையான படங்கள்.

Anonymous said...

நன்றாக உள்ளது யோகன். நன்றி !

அது சரி இந்த விழாவில் ஏதோ கலகம் செய்ததாய் நம்ம தமிழச்சி ஒரு பதிவு போட்டு இருந்தாங்க அதைப் பத்தியும் கொஞ்சம் (அது உண்மையா இருந்தா) சொல்ல முடியுமா

நன்றி
கரிகாலன்

Anonymous said...

படங்களுக்கு நன்றி யோகன் அண்ணா.

இரு விதமான தேர்கள் பவனி வந்தமாதிரி தெரிகிறதே....ஏதேனும் படங்கள் மாரிவிட்டதா?, இல்லை நான் சரியாக பார்க்கவில்லையா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
மக்கள் குறைவுக்காக நான் கருதுபவை.
1) சமீபத்தில் நோர்வேயில் கோவில் விழாவில் நடந்த கலவரம்;கத்தி வெட்டு
2) திங்கள் பாடசாலைகள் தொடங்குவதால் தூரவிடங்களில் இருந்து வருவோர், பெரும்பகுதி வராமல் இருந்திருக்கலாம்.
3) வர வர பாரிசில் ஆலயம் இருக்கும் சூழலும்; கலவர பூமியாகிக் குழுச் சண்டைகள் நடக்குமிட மாவதால்; மக்கள் இதைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.
4) பிள்ளைகள் வளர வளர; வீட்டில் இணைய வசதியும் பெருகப் பெருக ,இளைஞர் சமுதாயம்
இவற்றைத் தவிர்க்கிறார்கள்.(சென்ற வருடம் பிள்ளைகளுடன் கண்ட பல பெற்றோர் இவ்வருடம் தனியே வந்தார்கள்)
இவை ஆனால் நம்பிக்கை குறைந்து; பகுத்தறிவு வெள்ளம் பாய்தோடி இவர்கள் மனம் மாறிவிட்டார்கள்
எனக் கூற இடம் இல்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலவசக் கொத்தனார்!
கூட்ட நெரிசலில் சமீபத்தில் படம் எடுப்பது; மிகக் கடினம்; அத்துடன் எனது கருவி மிகச் சிறியது.
அன்று வானம் மூடி இருந்ததும் ஒரு காரணம் ;பலர் மிக நல்ல பிக்சல் கூடிய கருவிகளால் படம் எடுத்திருப்பார்கள். அவை மிகத் தெளிவாக இருக்க வாய்ப்பு உண்டு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆதிபகவன்

காலை 10 இலிருந்து மாலை 3 வரை பாரிஸ் தெருக்கள் சில ஊர்த் தெரு போல் தான் இருந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கரிகாலன்!
நான் 10.30 முதல் 1.30 வரை தேருடன் வந்தேன் ,எந்த இடத்திலும் எவரின் கலவரத்தையும் காணவில்லை.
இந்தத் தேர் மொத்தம் 5 கிலோ மீட்டராவது பவனிவருகிறது.இதில் எந்த இடத்தில் அவர்கள் நின்றார்கள் என்பது தெரியாது.
சென்ற வருடம் சிலர் துண்டுப் பிரசுரம் தந்தார்கள். இம்முறை அதுகூட எனக்குக் கிடைக்கவில்லை.
அத்துடன் அவர்கள் கருத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இந்த நாட்டில் உண்டு. அதே போல் தேரிழுக்கும் உரிமையும் உண்டு.
இழுக்கக் கூடாதெனக் கூற இந்த நாட்டின் அரசைத் தவிர எவருக்குமுரிமையில்லை.
இது நம்பிக்கை சம்பந்தப் பட்ட விடயம். நான் போனது காணாத பலரைக் காணலாம். நாதஸ்வரம் கேட்கலாம்.பலதரப்பட்ட மக்களை ஒன்றாக மகிழ்வான முகத்துடன் பார்ப்பதும் ,இப்படியான விழாக்களில் என்பதாலும்.
என்னை அறிவில்லாத முட்டாளே! என்றால்...சரி புத்திசாலிகள் சொல்லிப் போட்டு போகட்டுமென்பேன்.இதற்கெல்லாம் கொடுக்குக் கட்ட முடியுமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயர் குறிப்பிடாத அன்பரே!
நீங்கள் பார்த்ததும், நான் போட்ட படமும் சரியானதே!!
சிவப்பு வெள்ளை முடியுடன் வந்தது, பிள்ளையாரின் தேர், பச்சைகலந்த நீல முடியுடன் வந்தது முருகனின் தேர்.இதைவிட ஒரு வண்டி பிள்ளையார் சிலைவைத்து அர்சனைப் பொருட்கள் விற்பனை செய்தது.

வெற்றி said...

தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கும்
ஒளிப்படத்திற்கும் மிக்க நன்றி யோகன் அண்ணை.

Anonymous said...

மொதப் படத்தைத் தவிர மத்த எதுலயும் பூணூலைக் காணோமே!

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி யோகன்.

கொண்டாட்டத்தைப் பார்த்தால் பேசாம
அங்கேயே வந்துரலாம்போல இருக்கு.

ஒருவிதத்தில் கொடுத்துவச்சவங்கதான்
நீங்க.

தேரோட்டமெல்லாம் ஜமாய்க்குறீங்கப்பா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
ஒளிப் படமேற்றுவது; மிகச் சிரமமாக இருந்ததால் அன்று மாலை;எதுவும் செய்ய முடியவில்லை. பின்பு படத்தை மாத்திரம் போட்டு விட்டு; முயன்ற போது பையப்;பைய சரி வந்தது.
அதைப் போடும் போது உங்களை நினைத்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நூலில் பூ கோர்ப்பவன் !
மிக அழகுணர்வு மிக்க வேலையாச்சே; நான் பூவில் மாலை கோர்ப்பது பற்றிக் குறிப்பிட்டேன்.
அடுத்து எங்காவது...தேர்வடம் பிடித்த, காவடி எடுத்த; கற்பூரச்சட்டி ஏந்திய;அங்கப்பிரதிஸ்டை செய்த;அடி அளித்த... பூனூலைக் கண்டால் ;படம் எடுத்துப் போடவும். நான் இது வரையில் காணவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இதை ஈழத் தமிழர் சிறப்பம்சமென இங்குள்ள பாண்டிச்சேரி நண்பர்கள் கூறுவார்கள். அதாவது 50 வருடங்களுக்கு மேல் பிரான்சில் வாழ்ந்தும் தாம் நினைக்காத பலவற்றை இங்கே செய்து காட்டியது ஈழத் தமிழரே ! என்பது அவர்கள் அபிப்பிராயம்.

Sundar Padmanaban said...

அன்பின் யோகன்.

புகைப்படங்களுக்கு நன்றி. 'ஊர் கூடி தேர் இழுத்தால்' என்று ஒற்றுமைக்குக் கோடி காட்டிச் சொல்வார்கள். இன்னொரு தேசத்தில் இப்படி ஒரு விஷயத்திற்காக ஒற்றுமையாய்த் திரண்டிருக்கும் மக்களைப் பார்த்தால் மகிழ்வாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு சிதறு தேங்காய், பாலபிஷேகம், என்று உண்ணும் பொருட்களை கடவுளுக்கும், கட்டவுட்டிற்கும் வீணாக்குவதில் உடன்பாடில்லை. தண்ணீரின்றியும் உணவின்றியும் அனுதினமும் சாகும் எத்தனையோ ஆயிரம் மக்களிருக்க இன்னொரு புறம் அவற்றை வீணாக்கும் சம்பிரதாயங்கள் நடைபெறுவது முரணாக இருக்கிறது. இதற்கான செலவை வறியவர்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வேளை சோறு கிட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

நன்றி.

குமரன் (Kumaran) said...

பாரிஸ் விநாயகர் தேர்த்திருவிழாவை நேரில் கண்டது போல் இருக்கிறது ஐயா. படங்களுக்கு மிக்க நன்றி. நான் பார்க்கும் போது படங்கள் கருப்படிக்கவில்லை. தெளிவாக இருந்தன. ஒரு வேளை மேக மூட்டம் விலகிப் போய்விட்டது போலும். :-)

மதுரை, பழனி போன்ற ஊர்களில் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்யும் பூணூல் அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன் ஐயா.

ILA (a) இளா said...

//படங்களுக்கு நன்றி யோகன்.

கொண்டாட்டத்தைப் பார்த்தால் பேசாம
அங்கேயே வந்துரலாம்போல இருக்கு.

ஒருவிதத்தில் கொடுத்துவச்சவங்கதான்
நீங்க.

தேரோட்டமெல்லாம் ஜமாய்க்குறீங்கப்பா.//

Repeat

Anonymous said...

ராஜேஷ் சந்திரா எந்தப்பதிவிலே கறுப்படிக்காத நல்ல படங்களைப் பார்த்தீர்கள்?

G.Ragavan said...

நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் தந்தன.

ஐயா, ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் வேண்டும். அது கலை வழிபாடு பண்பாடு என்று செழித்தோங்க வேண்டும். இந்தியத் தமிழர்களைச் சாராமல் நிலைநிற்க வேண்டும். அது மிகவும் அவசியமானதும் கூட. அதனால்தான் பாண்டிச்சேரியில் இருந்து சென்றவர்கள் செய்யாததைக் கூட இலங்கையிலிருந்து சென்றவர்கள் செய்கின்றார்கள். செய்யவும் வேண்டும்.

Muruganandan M.K. said...

மிக அருமையான பதிவு. மேலை நாடுகளிலும் எமது கலை, பண்பாடு சிறப்பாக பேணப்படுவது கண்டு மகிழ்ந்தேன். அதை ஆவணப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆனாலும் எனக்கு சிதறு தேங்காய், பாலபிஷேகம், என்று உண்ணும் பொருட்களை கடவுளுக்கும், கட்டவுட்டிற்கும் வீணாக்குவதில் உடன்பாடில்லை. தண்ணீரின்றியும் உணவின்றியும் அனுதினமும் சாகும் எத்தனையோ ஆயிரம் மக்களிருக்க இன்னொரு புறம் அவற்றை வீணாக்கும் சம்பிரதாயங்கள் நடைபெறுவது முரணாக இருக்கிறது. இதற்கான செலவை வறியவர்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வேளை சோறு கிட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து//

அன்பின் சுந்தர்!
தங்கள் இந்தக் கருத்தில் மாறுபட்ட கருத்து; இதைச் செய்பவர்களுக்குக் கூட இருக்காது.
இவை நம்பிக்கை சார்ந்தவை;எடுத்தேன் கவிழ்த்தேன் என நாம் முடிவு செய்ய முடியாது. ஆனாலும் மாற்றம் கட்டாயம் வரும் என நம்புவோம்.அப்போ 100 இப்போ 25 ஆகியுள்ளது(தேங்காய்)...இதுவும் மாற்றம் தானே!
இது தொடரும் ஆனால் காலம் எடுக்கும்..
இந்த வியாபாரநிலைய உரிமையாளர்கள்;தம்மாலான தர்மகாரியங்களும் செய்யாமல் இருக்கமாட்டார்கள்.
விழாவில் சிற்றுண்டி, குளிர் பானம்,சாப்பாடு என வந்தவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள்.
அந்தக் அசைய முடியாத கூட்டத்தில்; தாகசாந்தி செய்ய அவர்கள் உதவினார்கள்.இயற்கைக் கடனுக்கு
தங்கள் நிறுவனங்களை உபயோகிக்க அனுமதித்தார்கள். இவையும் ஒரு வகையான உதவியே..

Anonymous said...

நன்றி யோகன் உஙல் பதிலுக்கு.

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
நல்ல ஆன்மீகவாதியான நீங்கள் எதற்காக கடவுளை கும்பிடுறவன் காட்டுமிரான்டி என்ற கொள்கை கொண்ட தமிழச்சி போன்றோர்க்கு அடி தாங்குகிறீர்.

கரிகாலன்

Anonymous said...

தேருக்கு நேரிலே சென்று வந்த நிறைவைத் தந்தது உங்கள் பதிவு.
மிக்க நன்றி.

மாயா said...

நன்றாக உள்ளது யோகன் அண்ணா.
நன்றி !

இந்தக்கோவில் மிகச்சிறியதாமே ??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
Anonymous said...

superb :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நல்ல ஆன்மீகவாதியான நீங்கள்//

கரிகாலன்!
'இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'
நான் எவருக்குமே அடிதாங்குபவனுமல்லன், எவர் அடியையும் தாங்குபவனும் அல்லன்.
எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்க விரும்புகிறேன். அவற்றை எடை போடவும் தவறுவதில்லை.
நான் நல்ல ஆத்மீகம் புரிந்தவனாக வாழவிரும்புகிறேன்.
அதனால் இவற்றைப் பெரிது படுத்துவதில்லை.
கிருஸ்தவ மதம் பரப்புவோரும் வீட்டுக்கு வருவார்கள். செவிமடுப்பேன்.அவர்களைக் கேவலப்படுத்த என் ஆத்மீகம் இடம் தருவதில்லை.
'ஞால மீதுந்தன் நனிசிறு வாழ்க்கை
கால வெள்ளத்தில் கண்டதோர் திவலை'
அந்தச் சொற்ப வாழ்வை மகிழ்வுடன் கழிக்க ஆசைப்படுகிறேன். தவறா??
சுந்தரர்...ஆண்டவனையே பித்தா என்றார். இவர்கள் எங்களைப் பித்தர் என்கிறார்கள்.
அப்படியே பித்தனாக இருப்பதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்' இது தான் என் போக்கு.
என்னை என் தாய் இன்று இருந்து கடவுளை நினையாதே! என்றாலும் அவரை மதிக்கும் நான் இந்த கருத்தில் இணங்கேன்.
என் தாய்க்கே இந்தக் கதி!!
இவர்கள் யார்?? என்னை மாற்ற
அதலால் இவற்றுடன் என் மிகுதிக்காலத்தைக் கழிக்க உடன் பாடில்லை.
தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அனானி அன்பருக்கு!
உண்மையில் உங்களுக்கு தேரை நேரில் பார்த்த மகிழ்வெனில், அதையிட்டு எனக்கும் மகிழ்வே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் தந்தன.//

ராகவா!
ஐரோப்பாவில் இருந்தால் அடுத்த வருடம் வாருங்கள்.
எந்நிலையிலும் இவ்விழா வருடா வருடம் நடக்கும்

உண்மைத்தமிழன் said...

நன்றி யோகன்..

ஈழத் தமிழர் என்றாலும், புதுவைத் தமிழர் என்றாலும் அனைவரையும் ஒன்றிணைக்க இங்கே ஆன்மிகம் உதவுகிறது எனில் அதை இரு கரம் கூப்பி வரவேற்போம்.....

உங்கள் புண்ணியத்தில் விநாயகரை நானும் தரிசித்தேன்.. தொடரட்டும் உமது ஆன்மிகப் பணி..

sathiri said...

யோகன் அண்ணா நானும் வந்தனான் கையிலை ஒருபேப்பர் குடுத்து கொண்டு அலைஞ்சு திரிஞ்சனான் காணேலல்லையா கடைசியா சிலபேர்வாளோடை வந்திறங்கதான் ஓடி ஒழிச்சிட்டன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாயா!
சொன்னால் நம்புவது சிரமம், இந்தக் கோவிலுள் விழுந்து கும்பிட முடியாது.மிக மிக மிகச் சிறியது,சுமார் 6 மீx4மீ நீள அகலமுடையது. இதனுள் அத்தனை இந்துத் தெய்வத் திருவுருக்களும் உண்டு.
ஆனால் ஊரில் சொல்லுவார்கள்,' மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென'...புகழுடன் தான் இருக்கிறார்.
இது ஒரு தனிப்பட்டவரின் கோவில்
இது பெரிதாக வருவதில் பல சிக்கல்கள் உண்டு.
இதை விலாவாரியாக கூற முடியாது.
ஆனாலும் இந்தத் தேர்த் திருவிழா பாராட்டும் படி நடக்கிறது.
நல்லதை மாத்திரம் பார்க்கிறேன்.
குறை கூறுவது இலகு...நடைமுறை அவ்வளவு இலகுவல்ல...
அதனால் நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மேலை நாடுகளிலும் எமது கலை, பண்பாடு சிறப்பாக பேணப்படுவது கண்டு மகிழ்ந்தேன்.//

டாக்டர் ஐயா!
இங்கிருந்தாலும், அந்த இன்பமான நாட்களை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.அவைஉணர்வுடன் ஒன்றியவை.
நீங்கள் பார்த்து மகிழ்ந்தது. எனக்கும் மகிழ்வே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மைத் தமிழன்!

ஈழம், புதுவை, மொறீசியஸ் ,றியூனியன் தீவு என சகல உலகத் தமிழர்களுடன் வட இந்தியர்களிலும் இறையுணர்வு மிக்கோருடன், மற்றவர் கலை கலாச்சாரத்தை மதிக்கும் பிரான்சியர் ,பிரான்சு வாழ் ஏனைய இனத்தவர்களும் ஒன்றுகூடி மகிழ்தார்கள்.