Thursday, September 06, 2007

மேற்கத்தைய பாரம்பரிய இசையுலக மேதைLUCIANO PAVAROTTI மறைந்தார்.



மேற்கத்தைய பாரம்பரிய(OPERA) இசையுலகின் மன்னனாக 40 வருடங்கள் ரசிகர் மனதைக் கவர்ந்த லூசியனொ பவறொற்ரி (Luviano PAVAROTTI) இன்று அதிகாலை இறையெய்தினார்.

இவர் இத்தாலியப் பிறப்பிடமாகக் கொண்டு; தன் குரலால் உலக மேற்கத்தைய பாரம்பரிய இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்.

1990 உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியின் முன்; ஏனைய திறமைமிக்க மேதைகளான
Placido DOMININGO,Jose CARERRAS; உடன் Zubin MEHTA(இந்தியர்) சுபேன் மேத்தா வின் நெறியாள்கையில் பாடியதை ,உலகமே கட்டு கேட்டு ரசித்தது.

2006 இல் இருந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டதால்; பாடுவதை நிறுத்தியிருந்தார்.

என் ஆரம்ப காலப் பாரிஸ் வாழ்வில் இவர் என் தனிமையில் துணையாக இருந்தவர்.


ஆச்சரியப்படவேண்டாம்....

1984 ல் , பாரிஸ் வந்த போது; இங்கு சில குறிப்பிட்ட தொலைக்காட்டிகளே இருந்த காலம்; நமது பாடல்கள் கேட்கக் கிடைக்காத காலம்.வீட்டு நினைவுகளால் நித்திரை தொலைத்த காலம்..தொலைக்காட்சியிலோ நள்ளிரவின் பின் பாரம்பரிய இசையே போடுவார்கள்..;ஏதோ பார்ப்போம் என பார்த்த போது மெள்ள மெள்ள இதில் சிறு ரசிப்புத் தன்மை ஏற்பட்டது.

குறிப்பாக இவர் மேடையில் எப்போதுமே சிரித்த முகத்துடனே பாடுவார்.நேரடிக் கச்சேரிகளில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ரசிகர்களின் கைதட்டலை ஏற்றுக் கைகூப்பிக் கும்பிடுவார்.
அந்தச் சிரித்தமுகம் என் தனிமைக்கு இனிமையாக இருந்தது
.

இவர், நம் செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜேசுதாஸ்; ஷேசு கோபாலன்; சீர்காழியுடன் ஒப்பிடக் கூடியவர்.
திறமை மிக்க ஒரு மேதையை இசையுலகம் இழந்து விட்டது.

10 comments:

கானா பிரபா said...

அஞ்சலிகள் உரித்தாகுக. உலகக்கோப்பை போட்டியில் இவரின் இசைவிருந்து சிறப்பித்ததாகவும் தொலைக்காட்சியில் காட்டியிருந்தார்கள்

மலைநாடான் said...

யோகன்!

என்னை ஆகர்சித்த கலைஞர்களில் இவரும் ஓருவர். இவர் பாடல் வானொலியில், தொலைக்காட்சியில் வந்தால், என் பிள்ளைகள் என்னை அழைது, உங்களுடைய ஆள் என்று சொல்லுமளவுக்கு அவரது ரசிகன் நான்.

அஞ்சலிகள்!

Boston Bala said...

அஞ்சலி

சின்னக்குட்டி said...

அஞ்சலிகள்!

Anonymous said...

இவர் பாடறதைக்கேட்டிருக்கேன். தம் கட்டி ஒப்ரா பாடறது எவ்வளவு கஷ்டம். அதுவும் சுதி விலகாம. கடைசி வரைக்கும் அதே குரலோட பாடிட்டு இறந்து போயிட்டார். பாவம்
இவர மாதிரியே Andrea Boccelli
ங்கறவரும் ஒப்ரா ரொம்ப நல்லா பாடுவார்

மாயா said...

அஞ்சலிகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
அந்த நிகழ்ச்சி இவர் ஏனைய பிரபலங்களுடன் இணைந்ததால் புகழ் பெற்றது. நமது நல்லூர் தேரடிக் கச்சேரியில் யாழ் தவில் வித்துவான்கள் இணைவது போல்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//உங்களுடைய ஆள் என்று சொல்லுமளவுக்கு அவரது ரசிகன் நான். //

மலைநாடர்!
இவர் குரல் கேட்கக் கேட்கத்தான் ; அதன் இனிமையில் ஒன்றலாம். இன்று இரவு இங்கே நினைவு நிகழ்ச்சியாக 1990 உலகக் கோப்பை , நிகழ்ச்சி மறு ஒளிபரப்புச் செய்ய உள்ளார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாலா; சின்னக்குட்டியர்!
அஞ்சலி செய்வோம்!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்ன அம்மிணி!
இந்த உச்ச நிலையில் பாடுபவர்களை இங்கே TENOR என்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட Andrea Boccelli எனக்குப் பிடிக்கும். இவர் ஒரு பார்வையற்ற கலைஞர். இறைவன் ஒன்றைக் குறைத்து இன்னொன்றை மிக உச்சத்தில் கொடுத்துள்ளார். மிகுந்த முயற்சியும்;தன்னம்பிக்கையும் உள்ள கலைஞன்.அத்துடன் இவர் தன் முயற்சியாலும்; கேள்விஞானத்தாலும் தன் திறமையை வளர்த்தவர்.