தெய்வீக நம்பிக்கையுள்ளவர்கள் ,நல்ல இசையை நுகர்வோர்,ஜேசுதாசின் இன்குரலின் மையல் கொண்டோர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
ஹரிவராசனம் விச்வ மோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலானஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
உயர்ந்ததும் தங்கமயமானதுமான பொன்னம்பல மேட்டில் எழுந்தருளியிரிப்பவர்!
உலகையே மயக்கச் செய்பவர்!
பூசிக்கத் தகுந்த திருவடிகளைக் கொண்டவர்!
பகைவர்களை நாசம் செய்பவர்!
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் துதி பாடு சரணங்களை உடையவர்!
அறியாமையை நீக்கி அருளாடச் செய்பவர்!
சூரியன் போல் பிரகாசிப்பவர்!
பஞ்சபூதங்களுக்குத் தலைவர்!
இனிமையான பேச்சு உடையவர்!
மென்மையான புன்சிரிப்புக் கொண்டவர்!
களபச் சாந்து பூசிய திருமேனியர்!
அழகான கழுத்தும் உறுதியான உடலும் கொண்டவர்!
சிங்கத்தின் பிடரியைப் போன்று பின் கழுத்துவரையும் தவழும் தலைமுடியைக் கொண்டவர்!
சரங்குத்தியி அருள்பவர் சாஸ்தா!
சாஸ்திர வல்லுனர்களுக்குப் பிரியமானவர்!
எண்ணியதை முடித்து வைப்பதில் முதல்வர்!
வேதங்களையே ஆபரணமாகக் கொண்டவர்!
நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவர்!
அழகான காதுகளைக் கொண்டவர்!
சரண கோஷத்தில் விருப்பம் உள்ளவர்!
தேவர்களால் துதிக்கப்படும் அப்படிப்பட்ட ஹரிஹரசுதனைத் துதிக்கிறேன்.
*** நன்றி:சக்திவிகடன் டிசம்பர் 2004
யூ ரூபில் இட்ட shankermcsa
''கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் மறவேன்'
6 comments:
மனம் மயக்கும் யேசுதாஸின் பாட்டு.
சின்ன அம்மிணி
உண்மை; மயக்கும்
இன்குரல் எங்கோ இட்டுச் செல்கிறது.
அருமையான பாட்டு அண்ணா, சுவாமி ஐயப்பனில் வந்தது.
நன்றி நன்றி நன்றி
வெரும் 2 வாத்தியங்கள் மட்டும் வைத்துக்கொண்டு குரல் என்னும் 3 வது வாத்தியத்தில் மூலம் ஏசுதாஸ் கட்டிப்போட்டுவிட்டார்.
பிரபா!
இந்தப் படம் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.
பாடல் கேட்ட நாள் முதல் பிடிக்கும்.
வடுவூர் குமார்!
இந்தக் குரல் எனும் 3 வது வாத்தியம் கொண்டு பாடி ஜேசுதாஸ் கட்டிப் போட்டது உண்மை..
Post a Comment