Friday, October 12, 2007

பாம்பும் நீர் குடிக்கும்...பாருங்கள்

வவ்வால் தன் 'சில கேள்விகளும் பதில்களும்' எனும் பதிவில், பாம்பு நீர் குடிப்பதில்லை ,அதன் பிளவு பட்ட நாக்கு பொருந்தாது என எழுதியிருந்தார்.

ஆனால் நான் பார்த்த தொலைக்காட்சி விபரணச் சித்திரத்தில் ,ஆபிரிக்காவில் ஆற்றோரம் பாம்பு நீரருந்தியது, நினைவில் வந்தது. அதை அவருக்குப் பின்னூட்டமாகப் போட்டபின் யூரியூப்பில் தேடிய போது இவை கிடைத்தது.

இவை வளர்ப்புப் பாம்புகள் ஆனால் இயற்கைச் சூழலில் வாழும் பல இனப் பாம்புகள் நீரருந்துகின்றன.

தயவு செய்து இயற்கையில் வாழும் பாம்பு ,எப்படி நீர் அருந்துகிறதென இங்கே

பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs










18 comments:

வெற்றி said...

ஒளிப்படத்துண்டுகளுக்கு மிக்க நன்றி யோகனண்ணை.

G.Ragavan said...

நல்லாவே தண்ணியடிக்குதுக..இல்ல.இல்ல தண்ணி குடிக்குதுங்க இந்தப் பாம்புக!

படத்தத் தேடிக்குடுத்ததுக்கு நன்றி யோகன் ஐயா.

theevu said...

பாம்பு நீரருந்தினால் பாலும் அருந்தவேண்டுமே

இது சற்று குழப்பமான விடயம்.

இங்கு ஜேர்மன் ரீவியில் முன்னர் ஒரு 80 களில் சீல்மான் என ஒருவர் சொன்னார்.
பாம்பு பால் அருந்துவது என்று இந்தியாவில் கதைப்பது எல்லாம் சும்மா கற்பனை என்று அறுதியிட்டார்

அதுவரை தேவர் ப்லிம்ஸிலிருந்து இலக்கியம்வரைக்கும் இந்த பாம்பும் பாலும் இணைந்தே வந்தன.

இது எனக்கு பெரிய ஆச்சரியமாக அல்லது குழப்பமாக இருந்தது.

பிள்ளையாரே பால்குடிக்கும்போது பாம்பு ஏன் குடிப்பதில்லை என:(


பின் ஒருமுறை பாம்புகளை பற்றி நன்கு அறிந்த இருளர்களை இதுபற்றி
கேட்கும்போது அவர்களம் பாம்பு பால் குடிக்கும் என்பதை மறுதலித்தார்கள்.

யாராவது பதிவு பாம்புகள் இதுபற்றிய அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்.

Anonymous said...

அப்போ பாம்பு பால் குடிக்கறது கூட கதையல்ல நிஜம்தான் போலிருக்கு

Anonymous said...

யோகன் அண்ணை பம்பு தண்ணீ குடிக்கிறத உண்மையா முந்தி நீங்கள் பாக்கேல்லையோ? உங்கட ஊரில கிணறு இல்லைப்போல

மதுமிதா said...

ப‌ட‌ம் ந‌ன்றாக‌ இருக்கிற‌து யோகன்

பாம்புத‌ண்ணீர் குடிப்ப‌துபோல்தான் படத்தில் தெரிகிற‌து


பாவ‌ண்ண‌ன் எழுதிய‌ 'அல்லி' சிறுக‌தை நினைவுக்கு வ‌ருகிற‌து பாம்பைப் பார்த்த‌தும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இனி பாம்பு பால் குடிக்குமா??
என்பது ஆய்வோம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
என்ன?? தடுமாறுறீங்க..தண்ணியடிக்க இல்லை தானே?
பாம்பு பார்த்த நடுக்கமா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தீவு!
இயற்கையில் பாம்பு பால் அருந்துவதற்கான சாத்தியக் கூறு இல்லை.
http://www.explorewardha.com/snake.htm
பல விபரத்தை இந்தப் பக்கத்தில் பாருங்கள்.

சிலபாம்புகள் நீர் தேடியருந்தும், சில முட்டை, இறைச்சியில் தேவையான நீரைப் பெறும்.

வளர்ப்புப் பாம்புகள், மிகத் தாகமாக இருந்தால் பாலேன்ன,எந்தத் திரவத்தையும் குடிக்கலாம்.
பிள்ளையார் பால் குடித்தது சுத்தப் புலுடா, உடான்சு.

இறைநம்பிக்கைக்கும் இந்த பால் குடிப்புக்கும் சம்பந்தமில்லை.
அப்படிப் பார்த்தால் பிள்ளையாருக்கு
மிகப் பிடித்த மோதகம் தான் சாப்பிட்டிருக்க வேண்டும்.
இது சாயி பாவா சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம் எடுத்துத் தருவது போல்
ஒரு பூசணிக்காய் கேட்டால் தரவே மாட்டார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்ன அம்மிணி!
விடிய விடிய ராமர் கதை விடிந்த பின் ராமர் சீதைக்கு என்ன? முறை என்பது போல்.
நீங்கள் பாம்பு பால் குடிக்குமென்பது பொது விதி போலாக்கிவிட்டீர்கள்.
வளர்ப்புப் பாம்பு தாகத்தில் சில சமயம் குடிக்கலாம்; ஆனால் இயற்கையில் வாழும் பாம்புக்குச்
சாத்தியமே இல்லை.
நீர் குடிப்பதால் பால் குடிக்குமெனும் முடிவுக்கு வரமுடியாது.
விதிவிலக்குகளை விதியாகக் கொள்ள முடியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜோக்கிரட்டீஸ்

//யோகன் அண்ணை பம்பு தண்ணீ குடிக்கிறத உண்மையா முந்தி நீங்கள் பாக்கேல்லையோ? உங்கட ஊரில கிணறு இல்லைப்போல//

தம்பி!
எல்லாம் இருந்தும் ; பாம்பு நீர் குடிக்கும் போது பார்க்க;ஊரில் கிடைக்கவில்லை.

செல்லி said...

யோகன்
பின்ன............பாம்பும் தண்ணியடிக்கத் (குடிக்கத்) தொடங்கீட்டுதுகள் எண்டு சொல்லுறியள்!

காலங் கெட்டுப் போச்சண்ணை..நடக்குமா என்றதுகூட நடக்குதண்ணே1..

Anonymous said...

பாம்பு பாலைக் குடிச்சாத்தான் என்ன?
தண்ணியடிச்சாத்தான் என்ன?
அத அத அதுகளின்ர பாட்டுக்கு
விட்டிடுங்கோ!!
சும்மா தெருவில போற பாம்பை
ஏனைய்யா மடியில கட்டிக்
கொண்டலைகிறீர்கள்.
சுவாமி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பாம்புத‌ண்ணீர் குடிப்ப‌துபோல்தான் படத்தில் தெரிகிற‌து//

மதுமிதா!
அடித்துக்கூறலாம். குடிப்பதுபோல் அல்ல குடிப்பதே!!
பாம்பு நீர் குடிக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!!
பாம்புக்குத் தாகமெனில் தண்ணி குடிக்கும்.
மனிதன் நினைச்சால் அதைத் தண்ணி
'அடி' க்கவும் வைப்பான்.(பிழைப்புக்கு)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பாம்பு பாலைக் குடிச்சாத்தான் என்ன?
தண்ணியடிச்சாத்தான் என்ன?
அத அத அதுகளின்ர பாட்டுக்கு
விட்டிடுங்கோ!!
சும்மா தெருவில போற பாம்பை
ஏனைய்யா மடியில கட்டிக்
கொண்டலைகிறீர்கள்.
சுவாமி//

பெயரற்ற சுவாமி!
அதுதானே பாம்பு தண்ணி குடிச்சாவென்ன? அடிச்சாவென்ன? பாலைக் குடிச்சாவென்ன??
அதையேல்லாம் ஏன் மடியிலக்கட்ட வேண்டும்.
பேசாம 'தொப்புளில பம்பரம் விடுவாங்க, தொங்க போட்டுக் கொண்டு பாத்திட்டு படுக்க வேண்டியது தானே!!!

நீங்க இந்தப் பக்கம் வழி மாறி வந்துட்டியலள் போல கிடக்கு...

மெல்ல மெல்ல வேலிக் கதியாலப் புடிச்சுக் கொண்டு வீட்ட போய்ச் சேருங்கோ...சாமி.

சதங்கா (Sathanga) said...

யோகன்,

இது சற்று வித்தியாசமான செய்தி. இது வரை பாம்பு பால் அருந்தியதை நம்பியதில்லை. ஆனால் நீரருந்துமா என்று யோசித்தது கூட இல்லை. அதனால் இது எனக்கு சற்று வித்தியாசமான செய்தி. youtube சாட்சியாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் பதிவில் உள்ள படத்தைப் பார்க்கும் வரை பாம்பு நீர் குடிக்கும் என்று நான் நினைக்கவில்லை..புதிய செய்திதான்..பால் குடிக்கும் என்று எல்லோரும் சொல்லும் போதும் நம்பியதில்லை..காட்சியப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..