சென்ற மேயில் பிரான்சின் அதிபராகப் தெரிவாகிப் பதிவியேற்ற திரு. நிக்கோலா சார்கோசி-54 (Nicolas SARKOZY)அவர்கள் கடந்த ஒக்டோபர் ,அவர் 2 வது மனைவி சிசிலியாவுடனான மண வாழ்வு முறிந்து விவாகரத்தாகிய நிலையில்...பிரான்சு வெகு ஜன ஊடகமெங்கும் ,அதிபரின் புதிய காதலி பற்றிய செய்தியால் சூடேறியுள்ளது.
பிரபல முன்னாள் மாதிரி உடையழகியும்; இன்னாள் பாடகியுமான கார்லா புறுனி-39 (Carla BRUNI) ,அதிபரின் புதியகாதலி அத்துடன் இவர்கள் பல இடங்களில் ஒன்றாக சந்தித்துள்ளார்கள் என்ற முக்கிய செய்திகள்; படங்களுடன் பத்திரிகைகள் செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.
இவை வெறும் வதந்திகள்; அப்பிராயம் கூற இல்லை போன்ற செய்திகள் அடிபட்டாலும்; இப்படிபல வதந்திகள் உண்மையானது; நடந்துள்ளதால்...நெருப்பின்றிப் புகையில்லை எனும் நிலையில் , மக்கள் உள்ளனர்.
அதிபர் முன்னாள் மனைவி விவாகரத்து பற்றிய செய்தி கூட ,வதந்தியாகப் பரவி உண்மையானது.பிரான்சு மக்கள் இது ;அவர் சொந்த விடயம் எனும் அளவிலேயே கவனிக்கிறார்கள். 54 வயதான அவருக்கு ஒரு துணை தேவை எனவும் கருதுகிறார்கள்; விவாகரத்தானவரானதால் இதனால் எவருக்கும்பங்கமில்லை என நினைக்கிறார்கள்.
அமெரிக்கர் போல் மக்கள் எப்படியும் வாழலாம்;ஆனால் அதிபர் குணக் கொழுந்தாக வாழவேண்டுமென; கிளிங்ரலீலை அறிய 40 மில்லியன் டாலர் செலவு செய்யும் மனநிலை ,பிரஞ்சு மக்களுக்கில்லை.
ஏற்கனவே முன்னாள் அதிபர் காலம் சென்ற மித்திரன்(Mitterrrand) மனைவி உயிருடன் இருக்க ; காதலி வைத்திருந்து பிள்ளையும் பெற்றவர். முன்னாள் அதிபர் சிராக்குக்கும் (Chirac) பலரைக் காதலித்தவர் என்ற பெயர் பெற்றவர்.
இந்த நிலையில் இந்த வதந்தி....உண்மையாகலாம்...என நம்பப்படுகிறது
கிசு கிசு யாருக்குத்தான் பிடிக்காது...அதுவும் பெரிய இடத்துக் கிசு கிசு...தமிழ் மணமும்...இதை அறியட்டும் என பதிவாக்கிறேன்.
கிசு கிசு யாருக்குத்தான் பிடிக்காது...அதுவும் பெரிய இடத்துக் கிசு கிசு...தமிழ் மணமும்...இதை அறியட்டும் என பதிவாக்கிறேன்.
பதவி ஏற்ற நாள் முதல் பல நாடுகளுக்கு அரச பயணம் செய்யும் அதிபர் தனிமையிலே செல்வது பார்க்க அழகில்லை.
குறிப்பாக சீனப் பயணம் அவர் தன் தாயாருடன் சென்றுள்ளார். அதைச் செய்தியில் காட்டினார்கள்.
அதனால் இந்தக் கிசு கிசு உண்மையாக வேண்டும். அதிபர் துணையுடன்
இருக்க வேண்டும். அதில் தனி அழகே உண்டு. இது என் விருப்பம்...
செய்தியைக் காட்சியாகப் பார்க்க......
6 comments:
முதல் மனைவி யாரோடும் கிசுகிசுக்கப்படலையா? இவர் மேல மட்டும் அக்கறைப்படறீங்களே..அந்தம்மா நிலைமயும் தனிமைதானே
:-))))))))))))))))
ஆஹா பிரான்ஸ் அதிபருக்கே சின்ன வீடா ;-)
பிரான்சில்தான் இத்தகைய கிசுகிசுக்களை புகைப்படமாக்குவதற்கும் ஒளி ஒலிப்பதிவு செய்வதற்கும் நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். ஓடி ஓடி கிளிக்செய்வார்கள். அதற்கு பல ஆயிரம் ஈரோக்களை அது ஈட்டிக்கொடுக்கிறது. அண்மையில் அதனை ஒளிப்பதிவு செய்து காட்டியதுடன் அவர்களை பேட்டியும் எடுத்தது தொலைக்காட்சி. அப்பாடா நான் பிரமித்தே போனேன். ஒன்றகால் மணிநேர புறோக்கிராமது.பலர் அதையே தொழிலாக கொள்கிறார்களாம்.
//இவர் மேல மட்டும் அக்கறைப்படறீங்களே..அந்தம்மா நிலைமயும் தனிமைதானே//
தங்ஸ்!
அதிபர்; தன் எதிர்காலம் இப்படித்தான் எனக் குறித்து அடிபோட்டு வாழ்பவர்; சிசிலியாவுடனான வாழ்வில் சிக்கல் இருந்தபோதும் சமாளித்து விடுவேன் என நம்பியவர்; பதவி ஏற்றபின் கொடுத்த
பேட்டியிலும் "அவர் பிரான்சின் முதற்பெண்மணிக்காகத் தன்னைத் தயார் செய்வார்" என ஏதோ நம்பிக்கையுடன் கூறியவர். அமெரிக்கப் பயணத்தில் சிசிலியா கலந்து கொள்ளவில்லை. பத்திரிகைக் கேள்விக்கு" நான் புஸ்சை ஏன் பார்க்க வேண்டுமென ஒரு போடு போட்டவர்".
அதிபர் நிலை "காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே;;;இந்த வீட்டு மானின் எண்ணம் ஏதோ
புரியவில்லையே" என்ற படித்தால் மட்டும் போதுமா???? கதாநாயகன் நிலை. அதிபர் ஒத்துவாழ எடுத்த
முயற்சிகள் தோற்றன; இது சிசிலியா எடுத்த முடிவு. இந்த முதற்பெண் வாழ்வு அவருக்கு விருப்பமில்லை.
அதனால் அவர் பிரிந்தார். அதிபர் பிரியவில்லை ஆதலால் அவர்மேல் அனுதாபம் எனக்கு.
சிசிலியாவுக்கும்;;;;; கிசு கிசு வரலாம்.பொறுங்கள்....யாராவது புண்ணியவான் வருவார்.
பிரபா!!
நான் கொஞ்சம் நம்ம தமிழில் கிசு கிசுக்க... நீங்க " பாக்கிய ராஜ் " தமிழில் கலாக்கிறீர்கள்.
சின்னவீடு குப்பனுக்கும் சுப்பனுக்கும் இருந்தால் செய்தியாகுமா??? அது இருக்கவேண்டிய இடத்தில்
இருந்தால் செய்தி...
அது சரி...பெரியவீடு போன நிலையில், இதைச் சின்னவீடு என்று சொல்ல இலக்கணம் ஏற்றுக் கொள்ளுமா???
விக்கிமீடியாவில் பார்த்துச் சொல்லுங்கோ!!!
நாளாயினி!
இந்த வியாபாரத்தில் ஐரோப்பாவில் இங்கிலாந்து முதலிடம், எனினும் "டயானாவுக்கு" உலைவைக்க காரணமானதும்
இந்த வியாபாரம் எனும் கருத்துமுண்டு.பிரஞ்சு அதிபரின் இந்த விடயமான படம் 40,000 யூரோ விலைக்கு போயுள்ளது.
இதைத் தொழிலாகக் கொண்டு பல புகைப்பட விற்பன்னர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பல பிரபலங்கள்
வீட்டு வாசலில் மதிலோரம் ஏணியுடன் காய்வார்கள்; சிலசமயம் பிரபலங்களிடம் அடியும் வாங்குவார்கள்.
சோபிஸ்னஸில் இருக்கும் பல பிரபலங்கள் மார்கட் டல்லடிக்கும் போது; இவர்களை நாடி பிரபலப்படுத்த.
வைப்பதும் உண்டு...படமோ, அவர்கள் அல்பமோ பிரபலமாக இந்த கிசு கிசுவை நம்பியே இவர்கள்
உள்ளார்கள்...இதை வாசிக்கும் ரசிகர்கள் இதை அறிந்தும் ஏனோ இதில் ஆர்வம் காட்டுவதே ;இந்த வியாபாரத்தின் உயிர் நாடி.
இது இப்போ நம் இந்தியத் திரைத் துறையுளும் நுளைந்துள்ளது. சமீபத்தில் "அது மீசை முளைச்ச பொண்"...அதைப் பார்க்க எனக்கு அருவருப்பா இருந்ததென ஒரு இயக்குனர் சொன்னாரே..
இதெல்லாம் "நீ அடிப்பது போல் அடி;நான் அழுவதுபோல் அழுது" ஏமாந்தவர் தலையில் மிளகாய் அரைக்கும் விளையாட்டு.
Post a Comment