Saturday, March 22, 2008

ஆடல் காண்பீரோ...அழகு மயிலாடல் காண்பீரோ!!.

பாம்புக்குப் படையும் நடுங்கும் ஆனாலும் அதைப் பிடித்து ஆடவைத்துவிடலாம். மயில் அப்படியல்ல...எம் நினைப்புக்கு ஆடுவதல்ல....அது நினைத்தே ஆடும்...

நான் மயில்களைப் பல தடவை கண்ட போதும், ஆடும் மயிலை ஒரு தடவை கதிர்காமத்தில் சில விநாடிகள் கண்டுள்ளேன்.
2004 ஈழம், இந்தியா சென்றபோது பல மயில்களைக் கண்டேன். ஆனால்
ஆடும் மயில் காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தில் நீலமயிலுடன்,வெள்ளை மயிலும் எப்படி அழகு நடம் புரிகிறது.
படத்திலாவது இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழ்வோம்.


6 comments:

M.Rishan Shareef said...

மயில்கள் எப்பொழுதும் அழகுவாய்ந்தவை.
அவை நடக்கும்போதும்,அகவும் போதும் ஏதோ கர்வமாகச் செய்வதாய் எண்ணத் தோன்றும்.

சிறு வயதில் மிருகக் காட்சிசாலையில் பார்த்திருக்கிறேன்.கொஞ்சம் வளர்ந்த பிறகு எனது அயலில் இருந்த ஆயுர்வேத வைத்தியசாலையில் இரு மயில்கள் வளர்ப்பதனால் நேரம் கிடைக்கும் போது [விளையாட்டுப்பருவம் தானே எப்பொழுதும் நேரம் கிடைக்கும் )போய்ப் பார்த்து வருவேன்.

பிறகு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு நானும் ,வகுப்புத் தோழர்களும் அனுராதபுரம்,நாச்சியாதீவு,ஹொரவப்பொத்தான காட்டுப்பகுதிக்கு 40 நாட்கள் சுற்றுலா போயிருந்தபோது சில வீடுகளில் கோழிகளைப் போன்று மயில்களை திறந்து விட்டு வளர்ப்பதைப் பார்த்தேன்.
மயிலிறகுகளை தூசுதட்ட பயன்படுத்துகிறார்கள்... :(
[நான் சிறுவயதில் மயிலிறகின் ஒற்றை இழையை புத்தகத்துள் வைத்து தினமும் வளர்கிறதா எனப்பார்த்து பக்குவமாய் ஏமாந்தவன் ]

காட்டுமயில்களும் வெகு இயல்பாக அவித்தநெல் காயும் பாயருகே வந்து கொறிக்கும்.மயிலலைந்த தோட்டம் வானவில்லை இறைத்தது போல சிறகுதிர்ந்திருக்கும்.

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் வீட்டில் வளர்த்துவந்த மயில் இறந்துவிட்டது எனக்கேள்விப்பட்டேன்.

அதற்கு வந்த நோய் heart attack என்றார்கள்.நிஜமாகவே மயில்களுக்கும் அந்நோய் வருகிறதா?

சொந்தப்பிள்ளையை இழந்தது போல் சுரத்திழந்து சோகமாய் நின்றது அவ்வீடு.

Anonymous said...

மயில்கள் எப்போதுமே அழகானவைதான். உங்களைப் போலவே நானும் பேரூந்தில் சென்றுகொண்டிருந்த வேளை ஒரு முறை மயிலாடுவதைப் பார்க்கும் தரிசனம் கிடைத்தது. என்னதான் சலனப்படத்தில் பார்த்தாலும் 'நான் நேரில் பார்த்தேன்' என்று சொல்லுவதில் ஏதோவொன்று உள்ளது.

வெள்ளைமயிலை நான் ஒருபோதும் நேரில் பார்த்தது கிடையாது.

அதுசரி மயிலில் உங்களுக்கு அவ்வளது கொள்ளைப் பிரியமோ! உங்களது மற்ற வலைப்பூவிற்கும் வெண்மயிலின் அழகைப் தலைப்பாக்கியிருக்கிறீர்களே.

வடுவூர் குமார் said...

நிஜத்தின் காணக்கிடைக்காத அரிய காட்சி.
மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரிஷான்!
வன்னிப் பகுதியிலும் இதன் முட்டைகளைக் காடுகளில் சேர்த்து, கோழிகளால் அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்ப்பார்கள்.
நான் அவர்களிடம் குஞ்சுக்குக் கேட்டேன். கிடைக்கவில்லை
முன்பு யாழ் நல்லூர் கந்தசாமி கோவிலிலும் இருந்தது.
மயிலிறகு குட்டி போட வைக்காதவர்களே நம் நாட்டில் இருக்கமாட்டார்கள் போலும்.
அடியேனும் முயற்சித்தேன்.

மயிலுக்கு மார்படைப்பு வருமோ??
தெரியவில்லை..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கௌபாய்மது.
ஆம் மயிலில் எனக்குப் பிரியம்.
அது என் இஸ்ட தெய்வம் முருகனை
நினைவூட்டுவது, அத்துடன் அதன் கம்பீரம்.
நான் வெள்ளை மயில் ஒரு செல்லப்பிராணி விற்பனை நிலையத்தில் பலவருடங்களுக்கு முன் பாரிசில் பார்த்தேன்.
நீல மயிலை சென்ற மாதம் இத்தாலி சென்ற போது அங்குள்ள இந்துக் கோவிலில் பார்த்தான்.
அது ஆடவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வடுவூர் குமார்.
இரண்டு நிற மயிலும் ஒன்று சேர ஆடியது. உண்மையில் அரிய காட்சியே.
ஆரம்பத்தில் வெள்ளைக்காகத்தான் பார்த்தேன்.