Saturday, April 12, 2008

இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்





















இத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த
ஆலயம், UNIONE INDUISTA ITALIANA - SANATANA DHARMA SAMGHA -GITANANDA ASHRAM
எனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
பிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.
கூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.
ஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.
சமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.
தீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.
அத்துடன் மதிய போசனமும் உண்டு.
வேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.
தினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,
நவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.
கண்ணுக்கெட்டியவரை உண்டியலைக் காணவில்லை.
இந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்
மிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
யோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.
சில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.
சேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.
அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
கண்ணியம் மிக்கோராகக் காணப்பட்டார்கள்.
அங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.
இப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்
மகிழ்கிறேன்.
இக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து
019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.
அனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...

6 comments:

கானா பிரபா said...

நல்ல பெரிய கோயிலாக இருக்கு, படங்கள் அருமை, பதிவுக்கு நன்றி அண்ணா

குமரன் (Kumaran) said...

சித்திரை திங்கள் முதல் நாளில் ஆலய தரிசனம் தங்கள் தயவால் நன்கு அமைந்தது யோகன் ஐயா. நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது படங்கள். மிக்க நன்றிகள்.

தங்களுக்கு இனிய சித்திரைத் திருநாள்/புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
மலைப் பிரதேசமானதால் நிலச்சிக்கல் இல்லாததால் கோவிற்பிரதேசம் பரந்துள்ளது உண்மையே.
இன்னும் பெருவாரியான சிலைகள்
எழுந்தருளக் காத்துள்ளன.பல வருட வேலைகள் இன்னும் உள்ளன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
உங்களைப் போல் ஒரு சிலரை மனதில் வைத்தே படங்கள் எடுத்தேன்.
தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாளோ, புத்தாண்டோ
நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஆ.கோகுலன் said...

//கண்ணுக்கெட்டியவரை உண்டியலைக் காணவில்லை//
....????!!!!! :-))
ஆலய அறிமுகத்திற்கு நன்றி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கோகுலன்!
ஆலடி அரசடி வைரவர் சூலத்தின் பக்கத்திலும் உண்டியல் கண்டு;ஐரோப்பா எங்குமே உண்டியலாகக் கண்ட எனக்கு இது ஆச்சரியமே!!