Friday, May 25, 2007

அழகின் ஜனனம்!!




ண்த்துப் பூச்சி பறக்குது! பார்!!
அழகான செட்டை அடிக்குது! பார்!!
பூக்கள் மேலே பறந்து போய் தேனைக்குடித்துப் பறக்குது பார்!!


இந்தப் பாட்டை சிறுவர்களாகப் படித்துமிருப்பீர்கள். இப்பூச்சியைப் பார்த்தும் ரசித்திருப்பீர்கள்!

பூப்பூவா பறந்து போகும் பட்டாம்பூச்சியக்கா! நீ
பள பளனு போட்டிருப்பது யாரு? கொடுத்த சொக்கா?


இந்தத் திரையிசைப் பாடலும் கேட்டிருப்பீர்கள்.

இந்த அழகின் ஜனனத்துள் ;இவ்வளவு நுட்பம் இருந்ததை என் இளமையறியவில்லை.


அந்த அறியாக்காலத்தில் "மயிர் கொட்டிப் புழுவுக்கு" மண்ணெய் தெளித்துக் கொழுத்தியுள்ளேன்.

இப்போ எவ்வளவு "அழகை" அழித்துள்ளேன். ஊர்பூரா "பூவரசில்" தொங்கும் இதை அழித்தார்கள்!!

என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.

இந்த நகர் மயமான வாழ்வில்; எப்போதாவது ஒரு நாள் அழையா விருந்தாளியாக என் பலகணிப் பூவை நாடிவரும் பட்டாம் பூச்சியை ஆசையுடன் ; அசையாது பார்த்து ரசித்து; மனதுள் மன்னிப்பும் கேட்பேன்.

இவை மனிதனுக்குச் செய்யும் சேவை!!;மரங்களை விருத்திசெய்யும் மகரந்தச் சேர்க்கை அளப்பெரியது. மகத்தானது..மனிதனால் முடியாதது.

இந்த அழகின் ஜனனத்தைப் பார்த்த போது உங்களுடன் பகிர வேண்டும் போல் இருந்தது.


11 comments:

சின்னக்குட்டி said...

வண்ணத்து பூச்சியை பல வண்ணங்களில் எழுதியிருக்கிறியள்..ஐடியா சூப்பர்...யோகன்

பகிர்ந்து கொன்றமைக்கு நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
இந்த "வண்ண ;எண்ணம் எழுதிக் கொண்டு இருக்கும் போது வந்தது.
அதை நீங்கள் கவனித்தது...மகிழ்வாக இருக்கிறது.
அடுத்த வரியில் ஒரு கணம் ஆடிப் போனேன். என்ன?? "பகிர்ந்து கொன்றதுக்கு" என்பதைத்...தான் சொல்கிறேன்.
இந்தக் "கொன்று- கொண்டு" தவறால் தான் "கோவலன் உயிர் போன தென்பாங்க....
உண்மையில் இந்த பாம்பு,பல்லி; பூச்சி; புழு எல்லாம் படம் காட்டி நான் "கொல்ல" வில்லைத் தானே!
சத்தியமா! உள்ளதைச் சொல்லுங்கப்பு!!

மலைநாடான் said...

யோகன்!

வண்ணமயமான பதிவு.

தவறுகள் இல்லா இளமையும், அதைப்புரிந்துகொள்ளா முதுமையும், முறையான பருவங்களல்லவே.

பதிவுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தவறுகள் இல்லா இளமையும், அதைப்புரிந்துகொள்ளா முதுமையும், முறையான பருவங்களல்லவே.//

மலை நாடர்!
இங்குள்ள பிள்ளைகளுக்கு பாட்டுடன், அதன் பயனும் சொல்லிக் கொடுப்பது போல், நமக்குக் கிடைக்கவில்லை. எனக் கருதுகிறேன்.
சரியான வழி காட்டல் இருந்தால் எல்லாத் தவறையுமில்லாவிடினும், சிலதையாவது தவிர்த்திருப்போம்.

வி. ஜெ. சந்திரன் said...

வண்ணாத்து பூச்சி பற்றின இந்த பதிவை பார்த்த போதே பின்னூட்டம் போட விரும்பினேன். ஆனால் அலுவலக கணனியில் ஈ கப்பை இல்லை.

முன்னொரு காலதில் எனது பாடத்துக்காக 15 வித்தியாசமான பூச்சிகளை புழுவில் இருந்து உணவூட்டி வளர்த்து, பூச்சியாய் வந்த பின் அதை சரியான முறையில் பாதுகாத்து அதற்கேன சிறப்பாக தயாரிக்கபட்ட பெட்டியில் வைத்து கையளிக்கதிருக்கிறேன்.

அதில் 4 வித்தியாசமான வண்ணாத்து பூச்சிகளும் அடக்கம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரன்!
உங்கள் கல்விக்கூடத்தில் அழகை ஆராதிக்க ஊக்குவித்துள்ளார்கள்.
மிகச் சந்தோசமாக இருக்கிறது.
இயற்கையின் உன்னதங்களை இன்று
தொலைக்காட்சியில் விரிவாகப் பார்க்கும்போது, அட இது தெரியாமல் போச்சே!!!என இருக்கும்
தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி!

Chandravathanaa said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி யோகன்.

சின்ன வயதிலேயே மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சியாவதும் வண்ணாத்திப்பூச்சி மீண்டும் மயிர்க்கொட்டியாவதையும் படித்தேன்.
ஆனாலும் மயிர்க்கொட்டியோடு வாழ முடியவில்லையே. வாழ்வது சில நாட்களேயானாலும் அந்த சில நாட்களுக்குள் வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே புழுக்கள் என்றால் பயம் எனக்கு.
இதை எழுதும் போது கூட எனது உடலில் ஒரு வித பயத்தின் சிலிர்ப்பு. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

ஊரிலே மயிர்க்கொட்டி நூல் விட்டு இறங்கும் என்ற பயத்திலேயே மரங்கள் நிற்கும் இடங்களைத் தவிர்த்திருக்கிறேன். எப்படித்தான் தவிர்த்தாலும் எப்படியோ எம்மீது தொத்தி விடுகின்றன.

எங்கள் வீட்டுச் சுவர் மிகவும் உயரமானது. அதிலே அதி உயரத்தில் கம்பளி மசுக்குட்டிகள் வந்து நிற்பதுண்டு. ஓட்டில் கூட ஒட்டிக் கொண்டு நிற்பதுண்டு. அதை அப்புறப் படுத்தும் வரை யாருக்கும் வீட்டில் நித்திரை வராது.

நூல் விட்டு இறங்குவது கூடுதலாக வெள்ளை மயிர்க்கொட்டிகளே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே புழுக்கள் என்றால் பயம் எனக்கு.//

இந்தப் பயம் , நம்ம சகோதரிகளுக்கு
இருந்தது.சுத்த வெள்ளைப் போர்வையே பாவிப்பார்கள்.
ஆம் வெள்ளை மயிர்க் கொட்டிதான் நூலில் இறங்கும்.

M.Rishan Shareef said...

என் சின்ன வயது முதல் இன்றுவரை மயிர்கொட்டிப் புழு என்றாலே மேனி சிலிர்க்க அறுவறுப்படைந்திருக்கிறேன்.
பூவரச மரங்கள்,முருங்கை மரங்கள்,சில வீட்டு நாட்டு ஓடுகளென நிறையப் பார்த்திருக்கிறேன் அவை ஊர்வதையும்,உறங்கிக் கிடப்பதையும்.
இவைதான் வண்ணத்துப்பூச்சியாகி சூழலை அழகாக்குகிறது என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன் யோகன்.
புழுவிலிருந்து தான் வண்ணத்துப்பூச்சி வருகிறது என்பது தெரியும்.ஆனால் இவ்வளவு விளக்கமாக இதுவரையில் கண்டதில்லை.
நன்றிகள் நண்பரே.

வவ்வால் said...

யோகன் ,
கூட்டுப்புழுவிலிருந்து , வண்ணத்துப்பூச்சியாக மாறுவதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனால் உங்கள் அளவுக்கு ரசிக்கத்தான் தெரியவில்லை.

//முன்னொரு காலதில் எனது பாடத்துக்காக 15 வித்தியாசமான பூச்சிகளை புழுவில் இருந்து உணவூட்டி வளர்த்து, பூச்சியாய் வந்த பின் அதை சரியான முறையில் பாதுகாத்து அதற்கேன சிறப்பாக தயாரிக்கபட்ட பெட்டியில் வைத்து கையளிக்கதிருக்கிறேன்.//

//சந்திரன்!
உங்கள் கல்விக்கூடத்தில் அழகை ஆராதிக்க ஊக்குவித்துள்ளார்கள்.
மிகச் சந்தோசமாக இருக்கிறது.
இயற்கையின் உன்னதங்களை இன்று
தொலைக்காட்சியில் விரிவாகப் பார்க்கும்போது, அட இது தெரியாமல் போச்சே!!!என இருக்கும்
தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி!//

அவங்க கல்விக்க்கூடத்திலே அழகை ரசிக்கலை, கடைசில் அதை கொன்று தெர்மக்கோல் அட்டைல பின் குத்தி காட்டுவாங்க :-)) லார்வா, பியுப்பா, அடல்ட் என்று எல்லா நிலையிலும் ஒரே வகைக்கு வைக்கணும்,அப்போத்தான் மதிப்பெண் கிடைக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பூவரச மரங்கள்,முருங்கை மரங்கள்,சில வீட்டு நாட்டு ஓடுகளென நிறையப் பார்த்திருக்கிறேன் அவை ஊர்வதையும்,உறங்கிக் கிடப்பதையும்.
இவைதான் வண்ணத்துப்பூச்சியாகி சூழலை அழகாக்குகிறது என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன் //
ரிஷான்!
உண்மையில் இந்த விபரம் அறிய இப்பதிவு உதவியதாயின் எனக்கு மிக மகிழ்வே!!