மனிதன் மனிதனிலோ ,மற்றைய உயிர்களிலோ காட்டும்
அன்பை மனிதாபிமானம் என்கிறோம்.
அந்த மனிதாபிமானம் உலகில் குறைந்து வருகிறதெனும் கூச்சலுக்குக் குறைவில்லை.
ஆனால் எதிர் மாறாக மிருகங்களுள் அபிமானமும், அன்பும்
ஓங்குதோ என ஐயம் ஏற்படவைக்கின்றன தொடர்ந்து வரும்
காட்சிகள்.
1- ஆகா...இந்த வாத்துக்குஞ்சு..எப்படி மீன்களுக்கு ஊட்டுதெனப் பாருங்கள்.
2- பூனை அணிலுக்கு எதிரி...இது தான் நாம் அறிந்தது.
இந்தத் தாய்ப் பூனையைப் பார்ப்போமா???
3- இந்த சிறுத்தை இக்குரங்குக் குட்டியின் தாயைக் கொன்ற
பின் செய்வதைப் பாருங்கள்.
4-நான், நீங்கள் கூட பூனை,காகத்தைக் கலைப்பதையே கண்டிருப்பீர்கள்.
இதைப் பாருங்கள்
ஜெகோவாவின் சாட்சிகள், பிரசாரத்துக்குத் தரும் புத்தகங்களில்
மானும் புலியும் அருகருகே நின்று நீரருந்தும் படங்கள் இருக்கும்.
இயற்கை நியதிக்கு விலக்காக இருக்கே!!! என ஆச்சரியப்படுவேன்.
ஆனால் நடந்துதான் விடுமோ???
இக் கலியுகத்தில்.
8 comments:
யோகன்,
உண்மையில் நம்புவதற்கு கடினமான காட்சிகள் இவை, மேலும் இதனை படம் எடுப்பதற்கு எத்தனைக் கஷ்டப் பட்டிருப்பார்கள் என நினைத்தால் அதுவும் ஆச்சரிய மூட்டுகிறது.
மனிதனேயம் என்பது போல மிருக நேயமும் உள்ளது. மிருகங்கள் உணவிற்காக தான் வேட்டையாடுகின்றன ,தேவை இல்லாமல் கொல்வதில்லை, மனிதர்கள் சக மனிதர்களைக் கொல்வது அப்படியா?
சூப்பர்..யோகன் மனிதாபிமானமே அரிதாக போகும் காலத்தில் மிருகாபிமானத்தை தேடி கண்டுபிடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ஐயா இந்தப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன். கொலை செய்தே உண்ணும் விலங்குகள் கூட அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வாழ்கின்றனவே. அடடா! மனிதர்களே...விலங்குகளிடமிருந்து கற்க வேண்டியது நிறைய உள்ளது. ஒன்று பட்டு வாழுங்கள்.
வவ்வால்!
"மிருகங்கள் உணவிற்காக தான் வேட்டையாடுகின்றன ,தேவை இல்லாமல் கொல்வதில்லை, மனிதர்கள் சக மனிதர்களைக் கொல்வது அப்படியா?"
உண்மை, மிக உண்மை...
நாம் ஆறறிவு எனப் பீற்றுகிறோம்.
இவர்கள் ஆர்வத்துடன் செயற்பட்டுத் தேடுவதால், சிரமங்களை பொருட்படுத்துவதில்லை, என நினைக்கிறேன்.
சின்னக்குட்டியண்ணர்!
நீங்களே சுப்பர் எண்டுட்டியள்!
இவற்றைத் படமாக்கியவர்களுக்கே
என் நன்றி!!
ராகவா!
இன்றைய மனித அடிபாடுகளைப் பார்க்கும் போது, இவை நெகிழவைக்கும் காட்சிகளே!
மிருகங்களிடம் நாம் நிறைய கற்க உண்டு.
பேதத்தை வளர்த்துக் குளிர் காய்வோர், ஒற்றுமையைத் தானே
எரிக்கிறார்கள்.
யோகன் அண்ணா,
மூன்றாவது படத்தைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்!
மனித நேயம் என்ற சொல்லைப் போல் மிருக நேயம் என்ற சொல்லும் வரவேண்டும்!
பசி வரும் நேரத்தில் மட்டுமே கொலை உணர்ச்சி வருகிறது அவற்றிடம். ஆனால் நம்மிடத்தில் தான் எப்போது கொலை உணர்ச்சிகள் வரும் என்று கண்டு பிடிக்கவே முடியாது!:-)
வார்த்தையால் கொலை, மனத்தால் கொலை, செய்கையால் கொலை என்று அடுக்கடுக்காக இருக்கே!
ஆனாய நாயனார் என்ற நாயன்மார் குழலூத, தவளையும் பாம்பும், மானும் புலியும், யானையும் சிங்கமும் ஒருங்கே வந்ததாகச் சொல்வார்கள்!
நம் முன்னோர்கள் ஏன் வாழ்வின் சில காலங்களில் காட்டைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று புரிகிறது!
//மூன்றாவது படத்தைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்!
மனித நேயம் என்ற சொல்லைப் போல் மிருக நேயம் என்ற சொல்லும் வரவேண்டும்!//
ரவிசங்கர்!
ஆம், வீட்டு விலங்குகள் மத்தியில்
பரஸ்பர உறவு வர வாய்ப்புண்டு.
ஆனால் இந்தச் சிறுத்தை...
வித்யாசமே
Post a Comment