Thursday, December 06, 2007
அம்பேத்கர்-அவமானங்கள் உருவாக்கிய அற்புத மனிதர்...
ஒரு மாட்டு வண்டிக்காரன் அச் சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவனது பேச்சொலியின் வட்டாரவழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று அறிந்ததும் மாட்டைக் கழட்டி விட்டு வண்டியைக் குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.
தாகத்துக்கு அந்தச் சிறுவன் தண்ணீர் கோட்கிறான்; அதோ இதுதான் உனக்கான தண்ணீர் எனச் சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைக் காட்டியுள்ளார்கள்...உயர் சாதிக்காரர்கள்.
அவன் மட்டுமல்ல- அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தைத் திருத்த மறுக்கிறார் ஆசிரியர்.
முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத் தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான். அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான்.
வடமொழியைப் பாடமாய் எடுத்துப் படிக்க விரும்பிய போது இந்து தர்மம் -கல்விச் சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.
பதினாறு வயதில் திருமணம் நடக்கிறது; தீண்டத் தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாது எனும் விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்கிறது அந்த ஏழையின் திருமணம்.
இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார்.
அடிமை இந்தியாவில் வெள்ளை ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் ,சுதந்திர இந்தியாவில் இந்து ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.
தீண்டத் தகாத 429 சாதிகளுக்கு யுகவிடுதலை பெற்றுத் தந்திருக்கிறார்.
சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமோ??
அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன் "அம்பேத்கர்"
திரு.அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கியவர்; தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து உயர்ந்தவர்;பல தாழ்த்தப்பட்ட இனங்களின் உயர்வுக்கு பாடுபட்டவர் என்பதற்குமேல் ,அவர் வாழ்வில் பட்ட அவமானங்கள் நான் அறியவில்லை.
தற்செயலாக 05 - 12 - 2007 , குமுதம் இதழில் கவிஞர் வைரமுத்து; " அவமானங்களால் ஒரு மனிதன் உருவாக முடியுமா?" எனும் கேள்விக்குக் கூறிய பதிலில் ...அம்பேத்கர் வாழ்வில் பட்ட அவமானங்களைப் படித்தபோது; அது சந்தர்ப்பவசமாக அவர் நினைவு நாளிலும் அமைந்ததால் உங்களுடன் பகிர்கிறேன்.
அம்பேத்கர் , மாமனிதரே...
****அம்பேத்கர் படம் விடாது கருப்பு அவர்கள் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது- நன்றி
Labels:
அம்பேத்கர்,
குமுதம்,
வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பென்களுக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று முதலில் போராடியவர் அம்பேத்கர்.அம்முயற்சி வழக்கம் போல பிராமணர்களால் முடக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு என்ற சட்டம் இயற்றப்பட்டது.இப்போது மன்மோகன்சிங் அரசு இந்திய அளவில் பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு என்ற சட்டம் இயற்றியுள்ளது.
இதற்கெல்லாம் மூலகாரணமாகிய அம்பேத்கரின் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்.
ஜாலிஜம்பர்!
இந்த உன்னத மாமனிதர் வரலாறு தேடிப்படிக்க வேண்டியது.முயல்கிறேன்.
அசாதாரண துணிவு மிக்கவர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர்:
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
"இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை" என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்இ தனது விடா முயற்சியாலும்இ உழைப்பாலும் எதிர்ப்புக்களை தவிடு பொடியாக்கி முன்னுக்கு வந்தவர்.
மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் அம்பாவாடே என்ற கிராமத்தில் 14-4-1891-ல் பிறந்தார். தந்தை ராமாஜி மாலோஜி. தாய் பீமாபாய். ஏழைக் குடும்பமான இவர்களுக்கு 14 குழந்தைகள். கடைசிப் பிள்ளைதான் அம்பேத்கார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி. இவர்களது குடும்பம்இ
அம்பேத்கார் கல்வி நிலையங்களில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். உயர்ந்த சாதிப்பிள்ளைகளும்இ ஆசிரியர் களும் பள்ளி நிர்வாகமும் தாழ்ந்த சாதிப்பிள்ளைகளைக் கேவலமாக நடத்தினர். தாழ்ந்த சாதிப்பிள்ளைகள்இ உயர் சாதிப்பிள்ளைகளுடன் சேர்ந்து உட்காரக்கூடாதுஇ உயர்சாதிப்பிள்ளைகளுடன் பேசக்கூடாதுஇ தொடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தனர்.
இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு படிக்க வேண்டுமா என்றுகூட அம்பேத்கார் நினைத்தது உண்டு. ஆனால் அம்பேத்கார் என்ற அந்தன ஆசிரியர் ஒருவரின் அன்பும் அரவணைப்பும் அவர் எண்ணத்தை மாற்றின. தாழ்த்தப்பட்டவர்களும் மனிதர்களே. அவர்களையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய கொள்கையுடைய அந்த ஆசிரியர்இ அம்பேத்கார் படித்து முன்னேற எல்லா உதவிகளையும் செய்தார். அவருடைய அன்புக்கு அடிமையான அம்பேத்கார்இ பீமாராவ் ராம்ஜி என்ற தன் பெயரை "அம்பேத்கார்" என்று மாற்றிக்கொண்டார். அன்று முதல் அவர் பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (பி.ஆர்.அம்பேத்கார்) என்று வழங்கப்படுகிறது.
திருமணம்
14-வது வயதில் மெட்ரிகுலேஷன் படித்துத் தேறியதும்இ அம்பேத்காருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தார். மனைவி பெயர் ராமாபாய். பிறகு பம்பாய் கல்லு}ரியில் இண்டர் மீடியட் படித்து முடித்தார். அடுத்து பரோடா மன்னரின் உதவி பெற்று "பி.ஏ." படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா அரசின் படையில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் மற்றவர்களால் தொல்லை. இடையில் தந்தை காலமாகி விடவேஇ வேலையை விட்டுவிட்டு பம்பாய் திரும்பினார்.
அம்பேத்காரின் தந்தை ராமாஜி.
மேலும் மேலும் படிக்க விரும்பினார். ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் பரோடா மன்னரின் உதவி பெற்று 1913-ல் அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பின்னர்இ பல சிரமங்களுக்கு இடையே லண்டன் சென்று படித்துஇ பொருளாதாரத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி "எம்.எஸ்சி" பட்டம் பெற்று பம்பாய் திரும்பினார். மேலும் படித்து "பாரிஸ்டர்" பட்டம் பெற்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக ஒரு சங்கத்தை நிறுவினார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டார். அவருடைய சேவையைப் பாராட்டி பம்பாய் மாகாண கவர்னர்இ பம்பாய் மேல்-சபை உறுப்பினர் பதவியை அளித்தார்.
கட்டுப்பாடு
மாகாத்து என்ற நகரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. அம்பேத்கார் அங்கு சென்றுஇ இதைக் கண்டித்துப் பேசினார். அவரே குளத்தில் இறங்கி நீர் அருந்தினார். தாழ்த்தப்பட்ட மற்றவர்களும் நீர் அருந்தினர். பெரும் மோதல் ஏற்பட்டுஇ பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றது. எல்லா மக்களும் நீர் எடுக்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது அம்பேத்காருக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
காந்தியை பின்பற்றுபவராகத் தோன்றினாலும்இ கொள்கை அளவில் அம்பேத்காருக்கும்இ காந்திக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அது பிறகு சமரசமாகத் தீர்ந்தது.
இளம் வயதில் அம்பேத்கார். மனைவி ராமாபாய் இறந்த துயரத்தால் துறவிபோல வாழ்ந்தார்.
மனைவி மரணம்
அம்பேத்காரின் மனைவி ராமாபாய் 27-5-1935 அன்று காலமானார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த அம்பேத்கார் வாழ்க்கையில் சலிப்படைந்தார். துறவி போல வாழ்ந்தார். பின்னர் "சுதந்திர தொழிலாளர் கட்சி" என்ற கட்சியை தொடங்கினார். அம்பேத்காரின் முயற்சியால்இ பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைத்தது.
உயர்ந்த சாதியினரை உறுப்பினர்களாகக் கொண்டு இருந்த வைசிராய் நிர்வாக சபையில்இ அம்பேத்காரின் சேவையைப் பாராட்டி அவரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அத்துடன் தொழிலாளர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பதவி வகித்தார். தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அரும் பணியாற்றினார்.
1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதிஇ ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணயசபை செயல்படத் தொடங்கியது. அதில்இ சட்டம் இயற்றும் குழுவில் அம்பேத்காரும் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவினர் இயற்றியதுதான் இந்திய அரசியல் சட்டம்.
சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பு ஏற்றதும்இ அவரது மந்திரிசபையில் அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்து பணியாற்றினார். அரசியல் நிர்ணய சபையின் 3-வது கூட்டத்தில்இ தீண்டாமையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்பேத்காரின் நீண்ட கால முயற்சி வெற்றி பெற்றது.
மறுமணம்
இரண்டாவது மனைவி சாரதா அம்மையாருடன்.
அம்பேத்கார்இ ஓயாமல் உழைத்ததால் உடல் நலம் குன்றி பம்பாய் மருத்துவமனையில் சேர்ந்தார். சாரதா அம்மையார் என்ற டாக்டரின் கனிவான சேவையால் அவர் குணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த அம்மையாரின் விருப்பத்துடன் அவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் பிராமண வகுப்பைச் சேர்ந்த சாரதா அம்மையார்இ கலப்புத் திருமணத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நேரு மந்திரிசபையில் சட்ட மந்திரியாக பணியாற்றியபோதுஇ மற்றவர்களுக்கும் அம்பேத்காருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியை விட்டு விலகி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
புத்த மதம்
பல காரணங்களால் இந்து மதத்தின் மீது சலிப்பு அடைந்த அம்பேத்கார்இ 1956 அக்டோபர் மாதம் இந்து மதத்தை விட்டுஇ மனைவி சாரதா அம்மையாருடன் புத்த மதத்தைத் தழுவினார். பிறகு புத்த மதத்தைப் பரப்பும் முயற்சியில் தீவிரப் பங்கு கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6-ந்தேதி காலமானார். 1990-ல் இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது அவருக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப் பட்டது.
( எனது தகவல்கள் சரியா யோகன்?)
நிர்ஷன்!
இவை சரியாகவே இருக்கும். திரட்டிச் சுருக்கியிட்டதற்கு மிக்க நன்றி
யோகன்,அம்பேத்கார் ஒரு அற்புதமான மனிதர். உதாரணமாகக் கொள்ள வேண்டியவர். நீங்கள் தந்திருந்த தகவல்கள் உண்மையில் பிரமிக்கவைத்தன. எனது மாணவர்களுக்கு இதனை பகிர்ந்துகொண்டேன்.
Post a Comment