கதைகளிலும்,கவிதைகளிலும்...வர்ணிப்பதைப் படித்துள்ளேன்.
இப்படியும் இருக்குமா??? மிகைப்படுத்துகிறார்கள் என எண்ணியிருந்தேன்.
வாழ்நாளில் இப்படி படத்தில் கூடப் பார்க்கவில்லை.
இதைப் பார்க்க மலைப்பாக இருந்தது. எப்படித்தான் இப்பெண் சமாளிக்கிறாரோ!!
நீங்களே, பாருங்கள்.
மயில் தோகை போல் என்பாங்க...நிசமாகவே..மயில் கூட பின்னுக்குத்தான்
என் தலையில் உள்ள ஒரு அங்குல நீளத்தை,அதுவும் களைபிடுங்கிய
வயல் போல் உள்ளதைப் பராமரிக்க ,நான் படும் பாடு.
இந்தப் பெண் இவ்வளவு நேர்த்தியாக பராமரிக்கிறார். பாராட்டுகிறேன்.
பார்த்தேன் ,மலைத்தேன்,பகிர்ந்தேன்
38 comments:
வணக்கம் தோழர்
உங்களுக்கு இந்தப் பொண்ணு மயிரைப் பார்த்தால் மயில் தோகையை விட அழகாக தெரிகின்றதா? எனக்கென்னவோ இந்த பெண்ணைப் பார்த்தால் ஏதோ ஒரு வகை மிருகம் போல் இருக்கின்றது. மரத்தையும், பெண்ணையும் பார்க்கும் போதே இப்படி ஒரு அதிர்ச்சியைக் காட்டுவீர்கள் என்று நினைக்கவேயில்லை.இவ்வளவு பெரிய மயிரை வைத்து பராமரித்துக் கொண்டு இது என்ன செய்து கிழிக்கப் போகின்றது என்ற கேள்வியே எனக்குள் தோன்றுகின்றது. மயிரைப் பராமரிக்கவே மயி(ரு)லுக்கு நேரம் சரியாக இருக்கும். அதுவும் இந்த வீடியோ படத்தில் மட்டும் தன் தலைமுடியை 0.06 இல் இருந்து 3.50 க்குள் 36 முறை தன்மயிரை தன் கைகளால் தடவிக் கொண்டு இருக்கிறார் என்றால் 24 மணிநேரத்தில் எத்தனை முறை இப்படி செய்வாரோ? அதாவது அவருடை சிந்தனையும், செயலும் மயிரிலேயே இருக்கின்றது.
பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி" அதற்காகன பராமரிப்புக்கு காலம் விரயம் தானே தவிர அதன் பயன் வேறொன்றும் இல்லை என்பார். அது சரி இந்த பெண் ஏன் மரத்தில் ஏறி போஸ் கொடுக்கிறார்? இரவில் இது இப்படி நின்று எவனாவது பார்த்தால் ரத்தவாந்தி எடுத்து செத்துப் போயிடுவான்னு தோனுது.
ஆகா. உண்மையிலேயே ரொம்ப பெருசா தான் இருக்கு. :-)
யோகன்,
சிலருக்கு இப்படி அபூர்வமா முடி ரொம்ப நீளமா இருப்பது உண்டு. எங்க அம்மாவுக்குக் கால்வரை நீளமுள்ள முடி. அவுங்க உயரம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்தாங்க. அவுங்க தலைக்குக் குளிச்சுட்டு, மேல்மாடியில் தலை உலர்த்தப் போனாங்கன்னா...நான் ( அப்பச் சின்னவ) ஒரு மணைப்பலகையைத் தூக்கிட்டுப் பின்னாலேயே போவேன். அதுலே ஏறி நின்னுக்குவாங்க. இல்லேன்னா ஈரமுடி தரையில் புரண்டு அழுக்காயிருமுன்னு.
எங்க பாட்டி, சித்திகள் எல்லாருக்குமே முடி ரொம்ப நீளமா இருக்குமுன்னாலும் அம்மாதான் நம்பர் 1.
(எங்க அம்மா ஒரு டாக்டர்)
ஆனாலும் நீங்க போட்ட படத்தில் உள்ள பெண்ணுக்கு நல்ல நீளம்தான்.
///பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி" அதற்காகன பராமரிப்புக்கு காலம் விரயம் தானே தவிர அதன் பயன் வேறொன்றும் இல்லை என்பார்.//
Agreed. Why did he have a long beard?!!!!!
அன்பான சகோதரி தமிழிச்சிக்கு!
வராத நீங்கள் வந்துள்ளீர்கள், இது ஒரு மயிர் சமாச்சாரமென இருந்தேன்.
உங்களையே உள்ள கூட்டி வந்து விட்டது.
மயிருக்கையும் விசயம் இருக்குத்தான்!ம்ம்
'//எனக்கென்னவோ இந்த பெண்ணைப் பார்த்தால் ஏதோ ஒரு வகை மிருகம் போல் இருக்கின்றது.//'
இது பார்ப்பவர் மன நிலை பொறுத்தவிடயம்.
மன்னிக்கவும் எனக்குப் பெண்ணாகத் தான் தெரிகிறார்.
நான் சாதாரணமானவன், இதை நீங்கள் யாராவது நிபுணரிடம் காட்டி
பெண்ணா? மிருகமா? என்பதைத் தெளிவுபடுத்தவும்.
அந்த நிபுணர் உங்களை மனநல மருத்துவரைப் பார்க்கும் படி கூறினால்(கூறுவார்) நான் பொறுப்பல்ல.
இதைப் பராமரிப்பது அவர் பிரச்சனை
அடுத்தவர் சுதந்திரத்தை,உரிமையை,ஆசையை
விமர்சிக்க எனக்கு உரிமையில்லை.
'//மயிரை வைத்து பராமரித்துக் கொண்டு இது என்ன செய்து கிழிக்கப் போகின்றது என்ற கேள்வியே எனக்குள் தோன்றுகின்றது'//
ஆனானப்பட்ட தமிழிச்சியையே .06லிருந்து 3.5 மட்டும் ,தான் மயிர் கோதியதை எண்ண வைத்ததே, அவர்
சாதனை என நான் கருதுகிறேன்.
//'பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி"'//
சரி...பெரியார் நீளத் தாடியுள்ளவர்களைப் பற்றி எதுவுமே
கூறவில்லையா??
ஆனால்,நான் என் இளமையில் தாடி வைத்த போது; என் அப்பா 'தாடி வைத்தவன் சோம்பேறி' என்பார்.
என் அப்பா பெரிய அறிவாளி எனச் சொல்வதற்கில்லை ஆனால் ஏன் சொன்னாரோ? தெரியவில்லை,அவர் பெரியாரை மனதில் வைத்துச் சொல்லவில்லை
என்பது உண்மை.
அட அதுக்காகத் தானா?? நீங்க கட்டையாக வெட்டியுள்ளீர்கள்.
அப்போ பெண்கள் மொட்டை போட்டால், அதி உற்சாகமானவர்களா??
//அது சரி இந்த பெண் ஏன் மரத்தில் ஏறி போஸ் கொடுக்கிறார்? //
இந்தப் பெண்ணுக்கு மரமேற இந்த நீளமான முடி ஒரு தடை இல்லை.
பராக்கிரமமான புதுமைப் பெண் என
புரியவைக்க மரத்தில் ஏற்றியுள்ளார்கள்
போலும்.
//இரவில் இது இப்படி நின்று எவனாவது பார்த்தால் ரத்தவாந்தி எடுத்து செத்துப் போயிடுவான்னு தோனுது.//
இரவிலில் இவனுக்கு அவங்க வீட்டு
மரத்துக்குக் கீழ் என்ன வேலை.
பண்பற்றவனோ??
பகுத்தறிவுச் சிங்கங்களுக்குப் இரத்த வாந்தி வரக்கூடாதே???
எங்கேயோ உதைக்குதே!!
குமரா!
அது பெரிசு என்பது சரி.
இது பெண் தானே?? நீங்களாவது சொல்லுங்க!
தமிழிச்சி மிருகமாம்..
துளசியக்கா!
நீளமான முடி பார்த்துள்ளேன். இவ்வளவு நீளம் அல்ல.
25 வருசத்துக்கு முன் கொழும்பில்
ஒரு வேலைத்தலத்தில் சிங்களப்பெண்
தன் கூந்தலை கதிரையில் சுற்றிவிட்டு
இருந்ததைக் கண்டுள்ளேன்.
அவர் கூட எழுந்தபோது முழங்காலுக்குக் கீழ்.
தங்கள் தாயார் பற்றிக் அறியும் போது, அபூர்வமாக தரை தவளும் கூந்தல் உள்ளோரும் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஆக, நீங்களும் தமிழச்சி, தமிழ்பித்தன் பாணியில் தலைப்பிடத் தொடங்கிவிட்டீர்கள்.
வாழ்த்து!!!
அம்மாடி, இந்த பெண்ணுக்கு பெருசுன் என்று எழுதியதன் மூலம் உனது குப்பை மூளை தெரிகிறது. நீயும் டோண்டு ரேஞ்சுக்கு காமக்கதை எழுத வேண்டிய ஆள்தான்.
சாக்கடை மூளை கொண்டு அற்ப பிராணியாக திரிவதற்கு பதிலாக நாண்டுகிட்டு சாவலாம் ஜோகன் அண்ணை!
\\பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி" அதற்காகன பராமரிப்புக்கு காலம் விரயம் தானே தவிர அதன் பயன் வேறொன்றும் இல்லை என்பார்.
Agreed. Why did he have a long beard?!!!!!//
பொதுவாகவே சோம்பேறிகள்தான் பெரிய முடி, பெரிய தாடி வைத்திருப்பார்கள். கிட்டே நெருங்கவே முடியாதபடி துர்நாற்றம் வீசும். திருவாளர் ஈ வே ராமசாமிநாயக்கரும் அப்படியே என்று நினைக்கிறேன். இந்த மாபெரும் தலைவர் மாதமொரு முறைதான் குளிப்பாராம், பல் விளக்குவாராம். ஆமாம், ஆடு மாடெல்லாம் பல்லா விளக்குகின்றன? பாவம் அவரது துணைவியார்கள், அதுவும் அந்த 26 வயது இளம்பெண்ணின் கதியை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்.
இதே போல் ஒரு சிங்களப் பெண்ணை நான் பார்த்துள்ளேன். தரையில் புரள்வதால் கடைசியில் மட்டும் வெட்டி விட்டிருந்தார். எப்படித்தான் பராமரிக்கிறார்களோ?
யோகன் ஐயா தலைப்புக்கு :(
யோகன் ஐயா... இந்தப் பொண்ணப் பாத்தா பயமா இருக்கு. இன்னும் சொல்லப் போனா விட்டலாச்சாரியா படத்துல வர்ர வெள்ளைப் பேய் மாதிரி இருக்கு. பாவம். இவங்களுக்கு இதுவே வேலை போல. கூந்தலே வாழ்க்கை. வாழ்க்கையே கூந்தல்.
///நிபுணர் உங்களை மனநல மருத்துவரைப் பார்க்கும் படி
கூறினால்(கூறுவார்) நான் பொறுப்பல்ல.///
மனநலம் படித்தவருக்கு மனநிலை மருத்துவரைத் தேடி போக வேண்டியதில்லை தோழர்.
இந்த மேட்டரை நாமே பேசி தீர்த்துவிடலாம். உதாரணத்திற்கு பிரான்சில் கவர்மெண்ட் வேலையிலேயே அல்லது பொதுவாக வேலை தேடி போகும் போகும் ஒரு சில வரைமுறைகள் உண்டு. அதே போல் நூலகம் லூவ்ர் போன்ற இடங்களில் குட்டை பாவாடை போட்டுக் கொண்டோ, ஆபாசமாக உடையோ அணிந்துக் கொண்டு வந்தால் உள்ளே விடமாட்டார்கள்.
தலையில் பலவகை வர்ணங்களை புசிக் கொண்டோ விதவிதமான ஹேர்ஸ்டைலில் முடிவைத்துக் கொண்டு வேலை தேடினால்
எவனு(ளு)க்கும் வேலை கிடைக்காது என்ற விடயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பெண்ணும் அந்த நிலையிலேயே பார்க்கப்படுவார். இது ஒரு கோணம்.
///இதைப் பராமரிப்பது அவர் பிரச்சனை அடுத்தவர் சுதந்திரத்தை, உரிமையை,ஆசையை
விமர்சிக்க எனக்கு உரிமையில்லை.///
கண்டிப்பாக யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இந்த சாதனைக்குப் பிண்ணனியில் பல பிரச்சனைகள் அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக இருக்கும். தலைமுடிகளை மொத்தமாக தூக்கி கொண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது தலைக்கணம் தாங்காமல் கழுத்துவலி ஏற்படும். கழுத்துவலி தலைவலியை உற்பத்தி செய்யும் தலைவலி எரிச்சலைக் கொடுக்கும்... இப்படி எடுத்துக் சொல்லிக் கொண்டே போகலாம்.
///ஆனானப்பட்ட தமிழிச்சியையே .06லிருந்து 3.5 மட்டும் ,தான் மயிர் கோதியதை எண்ண வைத்ததே, அவர்
சாதனை என நான் கருதுகிறேன்.///
:)))))))))))))) அது ஆராய்சிங்கோ!
///பெரியார் நீளத் தாடியுள்ளவர்களைப் பற்றி எதுவுமே
கூறவில்லையா?? ///
அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வைத்திருந்திருந்து பார்த்திருக்கவில்லையோ? என்னவோ? பார்த்தால் விட்டிருப்பாரா?
நான் தமிழ்படிக்க ஆரம்பித்த போது ஒரு பாடல் அதில் உண்டு. மாடி மேலே தாத்தாவுக்கு காடு போல தாடியாம். மாடி மேலே நிற்கும் போது தாடி மண்ணில் புரலுமாம். அப்புறம் ஞாபகமில்லை.
///நீங்க கட்டையாக வெட்டியுள்ளீர்கள்.///
நீங்க வேற தோழா!
இப்பதான் இந்த அளவுக்கே முடி வளர்த்து வச்சிருக்கேன்.இதற்கு முன்பு coure ஸ்டைல் வைத்திருந்தேன்.
///இரவிலில் இவனுக்கு அவங்க வீட்டு மரத்துக்குக் கீழ் என்ன வேலை.
பண்பற்றவனோ??///
நீங்க அப்படி யோசிங்களா?
இந்த பொண்ணு தரையில நின்னா முடி கீழ விழும். அதனால எது மேலேயாவது ஏறிகொண்டு தான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எட்ட இருந்து பார்த்தலே எல்எல்லாம் தெரிந்து விடும் கிட்ட போய் பார்க்க வேண்டியதில்லை.
///இந்தப் பெண்ணுக்கு மரமேற இந்த நீளமான முடி ஒரு தடை இல்லை.///
உங்களுக்கு சுனாமி கதை தெரியுமா? சுனாமியில் இறந்தவர்களில் ஆண்கள் பிணங்களை விட பெண்கள் பிணங்கள் நிறைய கிடைத்ததற்கு காரணம் பெண்களின் முடிகள் மரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு கிடந்தது தான். இந்த விஷயத்தையும் ஆராயலாம். மேற்கொண்டு எழுத நேரமில்லை தோழர்.
மற்றவை உங்கள் பதில் கண்டு
தோழமையுடன்...
கொண்டோடி!
என்னை நீங்கள் அதிகம் புகழ்கிறீர்கள்; அதாவது "தமிழிச்சி;தமிழ்ப்பித்தன்" அளவுக்கு
தலைப்பில் உயர்ந்துவிட்டேனென; ஆனால் நான் அந்த அளவு; குத்திக்கரணம் அடித்தாலும்
வரமுடியாது.
இது என் தாழ்மையான கருத்து.
//அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வைத்திருந்திருந்து பார்த்திருக்கவில்லையோ? என்னவோ? பார்த்தால் விட்டிருப்பாரா? //
இருக்கலாம். அதுக்காக பெரியார் கண்ணாடியே பார்க்கவில்லை என்று மழுப்பக்கூடாது.
தம்பி! தமிழச்சி பித்தன்!
மன்னிக்கவும் ரசிகன்;(அதிக ரசிப்புத் தன்மையைப் பித்தம் எனலாம்) மிக்க நன்றி ,மூளை என்ற வார்த்தையை உங்கள் பின்னூட்டதில்
பார்த்ததும் மயிர் சில்லிட்டது.
என்னைப் பெற்றோர்,உற்றோர்,நண்பர்கள்,பழகியவர்கள் அனைவருமே "மூளை இல்லாதவன்"
எனவே முன்னாலும்;பின்னாலும் கூறுவார்கள்.
நீங்கள் ஒருவர் தான் குப்பை மூளையாவது இருக்குது...என்பதைச் சொல்லித் திக்கு முக்காட வைத்து
விட்டீர்கள்.
பாம்பின் காலைப் பாம்பு அறியுமெனக் கொள்கிறேன்.
இதுக்கையேன் சிவவே என்றிருக்கும் டோண்டு அண்ணாவை இழுக்கிறீர்கள்.
நாய்க்கு எங்கே அடித்தாலும் பின்னங்காலைத் தூக்குமாம்; அதுபோல் எல்லாவற்றிற்கும் டோண்டு அண்ணாவை இழுத்தால்;சுணையில்லாமல் போய் விடும்.
நீங்கள் சாகச் சொல்லுகிறீர்கள்; அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டும். உடன் தங்கள் ஆசையை நிறை
வேற்றி ,தங்களை ஆனந்தமடைய வைக்க முடியவில்லை.நிறையக் கடமைகள் உண்டு.
நீங்கள் ரொம்பச் "சைவம்" போல இருக்கிறது.
நீங்கள் நீடூழி வாழ என் குலதெய்வம் முருகனைப் பிராத்திக்கிறேன்.
Doubting Thomas !!
"///பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி" அதற்காகன பராமரிப்புக்கு காலம் விரயம் தானே தவிர அதன் பயன் வேறொன்றும் இல்லை என்பார்.//
Agreed. Why did he have a long beard?!!!!!//"
அன்பரே!
தங்கள் கேள்விக்கு சகோதரி தமிழிச்சி...பதிலிட்டுள்ளார்.
அதென்ன லேபிளில் ஆச்சர்யம் ,பெண் ,பெருசு !!
வால்பையன்
தோழர் யோகன் பாரீஸ் அவர்களுக்கு,
இங்கு ஒருவர் "தமிழச்சி ரசிகன்" என்ற பெயரில் அநாகரிகமான முறையில் என்னை தாக்கி விமர்சித்து பின்னூட்டம் போட்டுள்ளதை அனுமதித்து இருக்கின்றீர்கள். நான் எழுதிய யோனிப்பிரச்னை, பெண்களின் அங்கங்கள் வெட்டுவது குறித்து பாலீயல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இது உங்களுடைய தளம் தான்.
எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக் கூடாது என்ற உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு. நான் எழுதியது அநாகரிகமான முறையில் என்று இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான நீங்கள் நினைத்தால் அந்த பின்னூட்டம் அப்படியே இருக்கட்டும்.
அன்பின் யோகன்,
இது போல ஒரு நீள்கூந்தல் சிங்களப் பெண் எனது ஊரில் இருந்தாள்.நல்ல சிவப்பு நிறமவள் முழங்கால் கீழ் நீளும் கூந்தலை பின்னலிட்டு வேலைக்குப் போவாள்.
ஏதோ கூட்டுறவுக் கடையில் வேலை செய்தாளென்று நினைக்கிறேன்.
இவள் வீதியில் நடந்தால் இளைஞர்கள் பின்னால் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
[நான் என்ன செய்தேன் என்று கேட்க வேண்டாம் நண்பரே.நான் அப்பொழுது சிறு பையன் :)]
பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.
ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்.
உங்கள் பதிவு அவளை ஞாபகப்படுத்தி விட்டது.
இறந்த காலங்கள் எம் மனதில் ஏதோவொன்றை விதைத்துச் செல்கின்றன.
சில ஒத்த விடயங்கள் நீர்த்துளியாய் மனதை நனைக்க பழைய நினைவுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன.
நன்றி நண்பரே :)
நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிருக்காதமே மெஇய்யாலுமா? எனது தோழி இப்பிடிச் சொல்லி சில வருடங்களின் முன்னால் 15cm வெட்டிக் கொண்டார்.
முதல் வந்து அநாமியாகக் கருத்துக்கூறிய அன்பருக்கு.
நீங்கள் பெரியார் பற்றிக் கூறியவை உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால்
சிலர் முதுமையில் உடலில் நீர் ஊற்ற மறுப்பதை அவதானித்துள்ளேன்.
பிரபலமானவரானதால் அது வெளியே
தெரிந்திருக்கலாம்.பிரான்சின் சென்ற வருடம் இயற்கை எய்திய சமூகப் பணியாளர் அபே பியர் எனும் முதியவருக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம் ,ஆனால் அவரை நெருங்காதோர் இல்லை.ஜனாதிபதி சிராக் வரை.
மேலும் பெரியாரின் மனைவி பற்றி மிகக் கவலைப் பட்டுள்ளீர். அதுவும்
அவர் சொற்ப வயது பற்றி.
ஆனால் நமது வைத்தியசாலைகளில்
புண்களுடன் நாறும் எத்தனையோ பேரை மிக வயது குறைந்த தாதிமாரே
கழுவி மருந்திடுகிறார்கள்.
சேவை என மனம் கருதினால் இவற்றைக் கருத்தில் கொள்ளாது.
உங்களுக்கு ஒரு விடயம் 'கருவாட்டுக்குள் புழு எனக் கதறும் நாம் கத்தரிக்காய்க்குள் புழுவை'
மறைக்கிறோம். சிக்கலில் சிக்கிய சங்கராச்சாரியார் பல்லு விளக்குகிறேன் எனச் சத்தியம் பண்ணினாலும் நம்புவீர்களா??
அவருக்கு உள்ள வசதிக்கு ஏன்? அதைச் செய்யக் கூடாது.
அவரை எத்தனை ஆயிரம் பேர் ஆசிக்கென நெருங்குகிறார்கள்.
மறைந்த பாப்பரசர் ஜோன் பால் 2
தள்ளாத வயதிலும் என்ன?? மாதிரி
இருந்தார்.
தாடி வைத்ததற்காக பெரியாரைச் சோம்பேறி எனச் சொல்லவேண்டாம்.
இந்தச் சோம்பேறி பலருக்குச் சிம்மசொற்பனமாக இருந்து, தமிழகத்தின் தலையெழுத்தையே
தலைகீழாகியது உங்களுக்குத் தெரியாத
தல்ல.
எனவே நமக்குப் பிடிக்கவில்லையென்பதால் குறைத்து
எடை போடக் வேண்டாம்.
அதுவும் மறைந்திருந்து....
தமிழ்ப்பிரியன்!
இலங்கையில் சிங்களப் பெண்களுக்கு
நீளமான முடியே! அவர்கள் தேங்காய்
எண்ணை பாவிப்பதும் ஒருகாரணமோ
தெரியவில்லை.
அவர்களது உடலில் ஒட்டியுள்ளது, சிரமமானாலும் செய்ய வேண்டியதே!
எந்தப் பெண்ணும் எவ்வளவு சிரமமிருந்தாலும் முடி கொட்டுவதை
விரும்புவதில்லை.
சுகமான சுமைதான் அவர்களுக்கு...
ராகவா?
எனக்கு மயில் தோகை போல் தெரிந்தது, உங்களுக்குப் பேய் போலா தெரிகிறது.
நீங்கள் பேயைக் கண்டுள்ளீர்களா??
தமிழிச்சிக்கு ஒருவகை மிருகமாகத்
தெரிந்துள்ளது.
அந்தப் பெண் ஒரு தடவை வாரிச்சுற்றினால் நாள் பூரா, அப்படியே
இருக்கும் போல் உள்ளது.
நீங்கள் கருதுவதுபோல், கூந்தலே
வாழ்க்கையாகவில்லைப் போல் உள்ளது.
இதே பக்கத்தில் பல வேறு படங்களும்
பார்த்தேன்.மகிழ்வாகத் தான் உள்ளார்கள் போல் உள்ளது.
சிரமமானால் வெட்டியிருப்பார்களே??
இப்படியே இருக்கவேண்டுமெனும் நேர்த்தியா???புரியவில்லை.
அன்புடன் சகோதரி தமிழிச்சி!
தங்கள் பின்னூட்டம் ,சற்று பகிடி கலந்திருப்பதால் நானும் பகிடியாகவே
கூறுகிறேன்.
//மனநலம் படித்தவருக்கு மனநிலை மருத்துவரைத் தேடி போக வேண்டியதில்லை தோழர்.//
மனம் நலம் படித்தவர்களுக்குக் கூட
மன நலம் பிரள்வது உண்டு. அப்போ
மருத்துவரிடம் போயே ஆக வேண்டும்.
//இந்த மேட்டரை நாமே பேசி தீர்த்துவிடலாம்//
நிச்சயம் அதுவே எனக்குப் பிடிக்கும்
ஆம், உடை நடை என்பது பற்றி சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்
என்னும் பிரான்சிலும் தனிச் சட்ட திட்டம் உண்டு.
ஆனால் இந்தப் பெண் இப்படியே தலைவிரி கோலமாகவா??வேலைக்கு
வரப்போகிறார்.
இல்லை, நீங்களே பார்த்தீர்களே அந்தப் பெண்னின் தலையில் இவ்வளவு பெரிய முடி என்பது தெரிந்ததா?? இப்படி நேர்த்தியாக வந்தால் எங்கும் தடையில்லை.
இலங்கையில் நான் பார்த்த பெண்
பின்னிவிட்டிருந்தார். இருக்கும் போது லாவகமாக கதிரைப் பின் பக்கத்தில்
சுற்றி விட்டிருந்தார்.கொள்ளை அழகு.
இவர்கள் பிரான்சில் வந்து வேலை
தேடுவார்கள் என்பது அதீத கற்பனை.
அப்படி வந்தாலும் முக்காட்டுக்கு நீதிமன்றமேற சங்கங்கள் உதவியது போல் ,இதற்கும் நாலு பேர் வராமலா?
போய்விடுவார்கள்.
//இந்த சாதனைக்குப் பிண்ணனியில் பல பிரச்சனைகள் அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக இருக்கும்//
கண்டிப்பாக , எல்லாச் சாதனையாளர்களும் எதாவதை இழந்தே இருப்பார்கள்.உங்களை,
அப்துல் கலாம் ஐயா போல்..
நீங்கள் கூறும் கழுத்துவலி,தலைவலி
பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு பாரமாக இருக்குமா?? ஆனால் ஓரளவு
வயதில் இருந்தே பழக்கப்பட்டிருப்பதால், இதற்குச் சாத்தியமில்லை என நினைக்கிறேன்.
இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்யும் பெண்கள் ஒரு நாளுக்கு சுமார் 8 மணிநேரம் கொழுந்துக் கூடையை சுமார் 15 கிலோ கொழுந்துடன் சுமந்து
மலை ஏறுவார்கள்,அக்கூடைப் பட்டி
தலையில் இருந்தே தொங்கும், அவர்கள் கழுத்து நோ, தலைவலி என
அவதிப்பட்டதில்லை.அவர்களுடன் பேசக்கிடைத்தபோது கேட்டேன்.பழகிப் போய்விட்டது என்றார்கள்.40 வருடம்
அதே வேலையைத் தினம் செய்தோரைத்
தெரியும் . வலியிருந்தால் இவ்வள்வு காலம் செய்யமாட்டார்கள்.
அமேசன் பழங்குடியினரும் அப்படியே
சுமக்கிறார்கள்.
//அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வைத்திருந்திருந்து பார்த்திருக்கவில்லையோ? என்னவோ? பார்த்தால் விட்டிருப்பாரா? //
பெரியார் காலத்திலே தானே,சாமிகளும் சன்னியாசிகளும்,யோகிகளும் அதிகம் இவர்கள் தாடியில்லாமலா?? இருந்திருப்பார்கள்.
பார்த்திருப்பார்..பார்த்தும் பார்க்காததுபோல் இருந்திருப்பார்.
//நான் தமிழ்படிக்க ஆரம்பித்த போது ஒரு பாடல் அதில் உண்டு. மாடி மேலே தாத்தாவுக்கு காடு போல தாடியாம். மாடி மேலே நிற்கும் போது தாடி மண்ணில் புரலுமாம். அப்புறம் ஞாபகமில்லை.//
விரும்பினால் சொல்லுங்கள், நீங்கள்
தமிழ் எங்கே எதுவரை படித்தீர்கள்.
தமிழுடன் துணிவையும் கற்றுள்ளீர்கள்
அதுதான் கேட்டேன்.
//coure ஸ்டைல் வைத்திருந்தேன்//
இந்த ஸ்டைல் என்ன? என்று உண்மையிலே தெரியாது.
//இந்த பொண்ணு தரையில நின்னா முடி கீழ விழும். அதனால எது மேலேயாவது ஏறிகொண்டு தான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எட்ட இருந்து பார்த்தலே எல்எல்லாம் தெரிந்து விடும் கிட்ட போய் பார்க்க வேண்டியதில்லை. //
இந்தப் பெண்ணுக்கு எல்லாம் மரத்திலே எனும் முடிவுக்கு வந்து விட்டீங்க... ஆனாலும் அந்தப் பெண்ணை நீங்க நல்லாக் கேலி செய்கிறீங்க.
//உங்களுக்கு சுனாமி கதை தெரியுமா? சுனாமியில் இறந்தவர்களில் ஆண்கள் பிணங்களை விட பெண்கள் பிணங்கள் நிறைய கிடைத்ததற்கு காரணம் பெண்களின் முடிகள் மரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு கிடந்தது தான். இந்த விஷயத்தையும் ஆராயலாம். மேற்கொண்டு எழுத நேரமில்லை //
உங்கள் படிப்பு எல்லாவற்றையும் ஆராய வைக்கிறது.
என் சிற்றறிவு எப்படிப் பார்க்குதெனில்
முடிதான் காரணமெனில் , முடிகுறைந்த ஆண்கள் ஏன் இறந்தார்கள்.
ஆண்களும் பலர் இறந்தபோதும் அவர்களுக்கு முடி இல்லாததால் மரங்களுக்குள் சிக்கி உடல் கூடக் கிடைக்காது போய் விட்டது.பெண்கள் உடல் முடி மரங்களுடன் சிக்கியதால்
கிடைத்தது.
முக்கியமாக ...
தங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில்
தமிழிச்சி ரசிகன்...உங்களை அநாகரீகமாக தாக்கி விமர்சித்த பின்னூட்டத்தை வெளியிட்டதாகக் கூறியுள்ளீர்கள்,
அவர் உங்களையல்ல என்னைத்தான்
திட்டிச்,சாகும்படி கேட்டுள்ளார். நன்கு
பார்க்கவும்.
உங்களுக்கு மனவருத்தம் தரக்கூடியதானால் கட்டாயம் எடுத்துவிடுவேன்.
அதை வெளியிடாமல் இருந்தால் அவர் நான் ஏதோ பயந்து விட்டேன்.
என நினைப்பார் அத்னால் தான்..வெளியிட்டேன்.
அது தன் குணத்தைக் காட்டியுள்ளது.
ஆனால் அதில் உங்களைச் சாடி எதுவும் இல்லை.
தமிழிச்சி ரசிகன் என்பது தவிர..
அதை எடுக்கவேண்டுமென நீங்கள் விரும்பும் பட்சத்தில் ,எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
உங்கள் மேல் எனக்கு என்றும் மரியாதை உண்டு.
பின்னூட்டமிடாவிடிலும் தங்கள் பதிவுகள் படிப்பேன்.அந்த மொடல் அழகியின் மரணம் பற்றிப் படித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது.
நம்பக் கஸ்டமாகவும் இருந்தது.
நன்றி
//இருக்கலாம். அதுக்காக பெரியார் கண்ணாடியே பார்க்கவில்லை என்று மழுப்பக்கூடாது.//
அநாமி...விட்டு விடுங்கள்.
நன்றி
வால்பையா?
லேபிளில் இது அபூர்வமான ,ஆச்சரியப்பட வைக்கும் விடயமென்பதால் ஆச்சரியம் என்றேன்.
படத்தில் பெண் அதனால் பெண்.
பெரியதை, நீளமானதை பெரிசு என்போம்.
இதை விட பெரிசா?? கணனி மொழியும் தெரியாது.
அப்போ என்ன?? போடவேண்டும்
சொல்லியாவது தாருங்கள்.
//இவள் வீதியில் நடந்தால் இளைஞர்கள் பின்னால் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
[நான் என்ன செய்தேன் என்று கேட்க வேண்டாம் நண்பரே.நான் அப்பொழுது சிறு பையன் :)]//
ரிஷான்!
நீங்களும் பின்னால் போயிருக்கலாம்; சிறுபையன் தானே ,யாரும் தவறாக ஏன் அந்தப் பெண்கூட தவறாக எடுத்திருக்கமாட்டார்.
//பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.
ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்//
காதலில் தோல்வியெனில் பௌத்தப் பெண்களுக்கு இப்படியும் ஒரு வசதி உண்டா??; அவரைப் பாராட்டுகிறேன். தற்கொலை செய்யாது வாழ்ந்து காட்டியதற்கு...அதுவும் பிக்குனியாக
//இறந்த காலங்கள் எம் மனதில் ஏதோவொன்றை விதைத்துச் செல்கின்றன.//
பல இறந்த காலங்கள் எல்லோருக்குமே மீட்டுப் பார்க்கும் போது; ஏக்கம் கலந்த சுகம் இருக்கும்.
//நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிருக்காதமே மெஇய்யாலுமா? //
மீறல்!
"கொடிக் கூந்தலாள் குடும்பத்திற்காகாள்" இப்படி ஒரு சொல்வழக்குண்டு.
இந்தப் பழமொழிகள் ,சொல்வழக்குகள் பற்றி மறைந்த எழுத்தாளர் திரு.சுஜாதா
அவர்கள் " எதுகை மோனையுடன் வரும் பழமொழிகள்;சொல்வழக்குகள்,நடைமுறைக்கு ஒவ்வாதவை " என்று கூறியதே ஞாபகம் வருகிறது.
இங்கே பின்னூட்டமிட்டுள்ள துளசியக்காவின் பாட்டி, தாயாரெல்லாம் நன்கு வாழ்ந்து; குடும்பங்களையும்
சிறப்புடன் தான் வாழவைத்துள்ளார்கள். அதுவும் துளசியக்கா தாயார் ஒரு டாக்டராக இருந்துள்ளார்.
துளசியக்கா போல் ஒரு திறமைசாலியையும் உருவாக்கியுள்ளார்.
இப்படி இன்னும் பலர் இருக்கலாம்.
குறுகிய கூந்தலாள் உள்ள வீடுகளில் எல்லாம் குதூகலம் கொட்டுதென்று சொல்லமுடியுமா??
எனவே இந்தப் பழமொழிகள் "சுஜாதா" சொன்னவை போன்றதே!!!
உங்களுக்கு;நல்ல நீளமுடியானால் சீவி முடிச்சு சிங்காரித்து வாழுங்கள்.
அன்பின் யோகன்,
//இலங்கையில் சிங்களப் பெண்களுக்கு
நீளமான முடியே! அவர்கள் தேங்காய்
எண்ணை பாவிப்பதும் ஒருகாரணமோ
தெரியவில்லை.//
நிச்சயமாக.சாதாரண தேங்காயெண்ணெய் அல்ல.
இளநீர்த் தேங்காயெண்ணையில்,வல்லாரை,கறிவேப்பிலை,மருதோன்றி விதை,கரிசலாங்கண்ணி,இன்னும் வேர்கள்,சில கீரைகள் மண் பானையில் கலந்து தலையில் பூசுவதற்காகவே புதிதாக ஒவ்வொரு முறை காய்ச்சுகிறார்கள்.
எனக்கு எப்படித் தெரியுமெனில் எனது வீட்டிலும்,ஊரில் பல வீடுகளிலும் அவர்களுக்கு காசு கொடுத்து செய்து தரச் சொல்வோம்.
எண்ணைய்யில் குளிர்மையோடு நற்சுகந்தமும் வீசும்.
முடி உதிர்தலோ,பொடுகோ,முடி செம்பட்டை நிறமாவதோ வருவதில்லை.
வீடுகளில் ஆண்,பெண் பேதம் பார்க்காமல் பாவிக்கிறோம்.
இங்கு வந்த பிறகும் அம்மாவிடம் ஒரு போத்தல் வாங்கியனுப்பச் சொல்லியிருக்கிறேன்... :)
//ரிஷான்!
நீங்களும் பின்னால் போயிருக்கலாம்; சிறுபையன் தானே ,யாரும் தவறாக ஏன் அந்தப் பெண்கூட தவறாக எடுத்திருக்கமாட்டார்.//
இல்லை.நான் அப்போது மிகச் சின்னவன்.வாசலில் இருக்கும் போது அப்பெண் வீதியில் போனால் புன்னகைத்து விட்டோ,கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால் கன்னத்தைத் தட்டிவிட்டோ போவார்.பிறகெங்கே நான் பின்னால் செல்வது ? :(
//பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.
ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்//
//காதலில் தோல்வியெனில் பௌத்தப் பெண்களுக்கு இப்படியும் ஒரு வசதி உண்டா??; அவரைப் பாராட்டுகிறேன். தற்கொலை செய்யாது வாழ்ந்து காட்டியதற்கு...அதுவும் பிக்குனியாக//
இலங்கையில் உள்ள எல்லாப் பிக்குனிகளும் வாழ்க்கையில் ஏதோவொரு விரக்தியுற்று பிக்குனியானவர்கள் தாம்.
ஆண் பிக்குகளுக்கு அப்படியில்லை.
பெற்றோர் நேர்த்திக்கடன் வைத்து,அல்லது வறுமை காரணமாக,அல்லது அதிகப்படியான குழப்படி காரணமாக தங்கள் மகனை சிறுவயதிலேயே விகாரையில் பிக்குவாக்கி விடுவார்கள்.
பெரிய ஆண்களும் வாழ்க்கையில் விரக்தியுற்று அல்லது சுய விருப்பத்தின் காரணமாக பிக்குவானதுண்டு.
ஆனால் இலங்கைப் பெண்களால் சிறுவயதில் பிக்குனியாகி விட முடியாது.
18 வயது கண்டிப்பாகத் தாண்டியிருக்க வேண்டும்.
கல்யாணமாகியிருக்கக் கூடாது.(விதவையாகி,யாருமற்று,ஆதரவற்று இருப்பின் முடியும்.அவர்கள் ஆடை வெள்ளை நிறத்தில் இருக்கும்.விகாரைகளில் தங்கி சேவை செய்வார்கள்.தீபா மேத்தாவின் 'வாட்டர்' திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள் )
அடுத்து ஆடை விடயத்தில் பிக்குனிகள் முழு நீளசட்டையணிந்தே காவியாடை உடுத்தவேண்டும்.தலைமயிர் நீக்கி,ஆபரணங்களை அகற்றவேண்டும்.
அவர்கள் தங்குவதற்கென்று தனியாக விகாரைகள் உண்டு.
இக்காவியாடைகளின் காவி நிறம் பச்சிலைகளின் சாயம் கொண்டே முற்காலத்தில் ஊட்டப்பட்டுள்ளன.
தற்பொழுது எப்படியெனத் தெரியவில்லை.
இலங்கைப் பிக்குகளின் புகைப்படங்களை
http://msmrishan.blogspot.com/2007/08/srilankan-buddas_06.html
எனது இப்பதிவிலும்,
இலங்கைப் பிக்குனியொருவரின் புகைப்படத்தை
http://msmrishan.blogspot.com/2007/08/my-country-people.html
எனது இப்பதிவிலும் பார்க்கலாம் நண்பரே... :)
ரிஷான்!
மிக விரிவான பல தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்துக்கு மிக்கநன்றி!
நீங்கள் இளநீர்த் தேங்காய் எனக் குறிப்பிட்டது ,செவ்விளநீர்த் தேங்காய் எனக் கருதுகிறேன்.
இந்த விசேட மருந்துநெய் பற்றிய
செய்முறையை ,ஏன்? நீங்கள் ஓர்
பதிவாகப் போடக்கூடாது.
பொடுக்குக்குக் கூட நல்ல மருந்தென்பதால் பலருக்குதவலாம்.
அட கூந்தலழகியின் கையால் கன்னத்தில் தடவப் பட்ட சின்னப் பையனா??
அந்தச் சின்ன வயதுச் சம்பவம் ஞாபகத்தில் உள்ளதால் ,அவர் கூந்தல்
ஆச்சரியப்பட வைக்கும் பெரிசாகத்தான்
இருந்திருக்க வேண்டும்.
பிக்குனி பற்றிய தகவல்கள் மிகப் புதியன எனக்கு...இவ்வளவு சோகமுண்டா??
மாற்றுச் சமய விடயத்தை மிக நேர்த்தியாக அறிந்துள்ளீர்கள் ..தொடருங்கள்.
படங்கள் சென்று பார்ப்பேன்.
தற்போது நீங்கள் எங்கே உள்ளீர்கள்.
//தாடி வைத்ததற்காக பெரியாரைச் சோம்பேறி எனச் சொல்லவேண்டாம்.//
If he can call others as சோம்பேறி, he will be called the same by others too :-)
//நீங்கள் இளநீர்த் தேங்காய் எனக் குறிப்பிட்டது ,செவ்விளநீர்த் தேங்காய் எனக் கருதுகிறேன்.
இந்த விசேட மருந்துநெய் பற்றிய
செய்முறையை ,ஏன்? நீங்கள் ஓர்
பதிவாகப் போடக்கூடாது.
பொடுக்குக்குக் கூட நல்ல மருந்தென்பதால் பலருக்குதவலாம்.//
நிச்சயமாக யோகன்.பிரச்சினை என்னவென்றால் நான் இம் மருந்துநெய் செய்துபார்த்தோ,செய்வதைப் பார்த்தோ இல்லை.
இதுபற்றிய செய்தியை எண்ணெய் செய்யும் அச்சிங்கள மக்கள் வாய்மொழி மூலம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.
எனவே நான் அதனைப் பதிவிட்டால் நிறையக் குறைகள் இருக்கும்.
முடிந்தால் ஊருக்குப் போய் தகவல்களைப் புகைப்படங்களோடு சேர்த்து தனிப் பதிவிடுகிறேன் நண்பரே.
//அட கூந்தலழகியின் கையால் கன்னத்தில் தடவப் பட்ட சின்னப் பையனா??
அந்தச் சின்ன வயதுச் சம்பவம் ஞாபகத்தில் உள்ளதால் ,அவர் கூந்தல்
ஆச்சரியப்பட வைக்கும் பெரிசாகத்தான்
இருந்திருக்க வேண்டும்.//
ஹா ஹா ஹா... :)
நம் பால்ய காலத்தில் நம்மீது அன்பு செலுத்தும் யாரையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது.அவர்கள் அசிங்கமாக இருந்தாலும்,செல்லப் பிராணிகள்,பொம்மைகளாக இருந்தாலும் கூட... :)
சிலவேளை திரும்ப அப்பெண்ணை எனக்குச் சந்திக்கநேரிடின் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமல் போகலாம்.ஆனால் எனக்கு அவரைத் தெரியும் மொட்டையடித்திருந்தாலும் கூட... :)
//பிக்குனி பற்றிய தகவல்கள் மிகப் புதியன எனக்கு...இவ்வளவு சோகமுண்டா??
மாற்றுச் சமய விடயத்தை மிக நேர்த்தியாக அறிந்துள்ளீர்கள் ..தொடருங்கள்.//
இலங்கையில் எனது ஊரைச் சுற்றிய பக்கத்துக் கிராமங்கள் அனைத்திலும் சிங்களவர்களே வசிக்கின்றனர்.
விவசாயக்கூலிகளாக,வீட்டு வேலைக்காரர்களாக,சிங்களப்பாட ஆசிரியர்களாக,கூட்டுறவுக்கடை சேவையாளராக,மருத்துவத் தாதிகளாக,மரக்கறிச்சந்தை விற்பனையாளராக,மீன்காரராக,மின்சார சபை,குழாய் நீர்ச்சபை ஊழியர்களாக என தினம் தினம் பல சிங்கள மக்கள் எனது ஊருக்கு வந்துபோய்க் கொண்டிருப்பர்.
நானும் சிறுவயதில் அவர்களுடன் சேர்ந்து எமது வயலில் நாற்று நட்டிருக்கிறேன்.ஏர் ஓட்டியிருக்கிறேன்.
மற்றும் வங்கிகளுக்கும்,,குளிப்பதற்காக ஆற்றுக்குப் போகவும்,சமய வழிபாடுகளிற்காக விகாரைக்கும் எனது ஊருக்கே வரவேண்டும்.
எனவே அவர்களது கலாச்சாரங்கள்,பழக்கவழக்கங்கள்,சமய முறைகள் எனக்கு ஓரளவு தெரியும்.
உண்மையில் எனக்கு நேரில் அறிமுகமான தமிழர்கள் மிகக் குறைவு.
எனது வாழ்க்கையில் முதன்முதல் அறிமுகமான தமிழர் என்றால் எனது 14வயதில் கணிதப்பாட ஆசிரியராக ஒரு யாழ்ப்பாணத்தவர்.இவரே நான் உயர்தரம் கற்கும்போது இரசாயனவியலும் கற்பித்தார்.
அடுத்தவர் எனது உயர்தர வகுப்புத்தோழி.இவர் அவ்வாசிரியரின் மருமகள்.இப்பொழுது திருமணம் முடித்து வெளிநாடொன்றில் வசிக்கிறார்.தொடர்புகளில்லை.
இவரும் யாழ்ப்பாணத்தவர்.
இறுதியானவர் எமது ஊரில் கூலி வேலைக்காக வந்துபோகும் ஒரு பெண்.
50ஐத் தாண்டிய வயது.இவரும் யாழ்ப்பாணத்தவர்.சிறுவயதிலேயே காதலுக்காக வீட்டைத் துறந்து காதலனுடன் எமது ஊருக்கு வந்தவர்.
ஒரு கைக்குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் இறந்துவிட மிகுந்த தன்னம்பிக்கையோடு கூலிவேலைகள் செய்து தன் மகளோடு வாழ்ந்துவருபவர்.
எனது அம்மாவின் தோழி.
ஏதாவது பிரச்சினைகள் என்றால் என்னிடம் சொல்வார்.
இவரது சகோதரி கூட இந்தியத் தமிழ் சினிமாக்களில் நடிக்கும் ஆர்வத்தில் இந்தியா சென்றவராம்.பின்னர் அது பற்றிய எந்தத்தகவலும் இல்லை.
'மிருகம்' பட நாயகியின் பாத்திரம் முழுக்க முழுக்கக் கற்பனை எனக்கூறும் நண்பர்களுக்கு நான் இவரைக் காட்டத்தயார்.
அந்த நாயகி செய்யும் அத்தனை காரியங்களையும் இவர் செய்கிறார்.
தென்னை மரம் கூட ஏறுகிறார்.
மிகுந்த தன்மானம் மிக்கவர்.
தனது கூலியைத்தவிர மேலதிகமாக ஒரு சதம் கூட வாங்கமாட்டார்.
தனது ஆடைகளைக் கூட தானே கை ஊசியால் தைத்து அணிவார்.
எந்தவொரு வீண் அலங்காரங்களும் இல்லை.ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் கோயில் போவார்.
என்னை எப்பொழுதும் மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பெண்மணி இவர்.
இணைய நண்பர்கள்,இவர்கள் மூவரைத் தவிர வேறு தமிழர்கள் அவ்வளவாகப் பழக்கமில்லை.
அன்பின் யோகன்,நீங்களும் யாழ்ப்பாணத்தவர் தானே... ?
உங்கள் பழக்கவழக்கங்கள்,சமூக முறைகள் பற்றி ஒரு பதிவு இடலாமே நண்பரே.எனக்குத் தெரிந்துகொள்ள ஆசை.
அதனால்தான் உரிமையோடு கேட்கிறேன்.
//படங்கள் சென்று பார்ப்பேன்.//
நிச்சயமாக நண்பரே :)
//தற்போது நீங்கள் எங்கே உள்ளீர்கள்?//
தற்பொழுது தொழில்நிமித்தம் கத்தார் நாட்டில் தனியாக வசிக்கிறேன்.மனம் மட்டும் ஊரிலேயே ... :)
////மனம் நலம் படித்தவர்களுக்குக் கூட மன நலம் பிரள்வது உண்டு. அப்போ மருத்துவரிடம் போயே ஆக வேண்டும். ///
ஆமாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவாதம் தான். ஆனால் இந்த படத்தில் இருக்கும் பெண்ணை பற்றி என் சிந்தனையில் ஒருவித மிருகமாக தெரிந்தது. ராகவனுக்கு விட்டலாச்சாரியா படத்துல வர்ர வெள்ளைப் பேய் மாதிரி இருக்கு. அது போல் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கருத்து சொன்னவர்கள் எல்லாம் மனநல மருத்துவரிடம் போக வேண்டுமா?
///ஆனால் இந்தப் பெண் இப்படியே தலைவிரி கோலமாகவா??வேலைக்கு
வரப்போகிறார்.
இல்லை, நீங்களே பார்த்தீர்களே அந்தப் பெண்னின் தலையில் இவ்வளவு பெரிய முடி என்பது தெரிந்ததா?? ////
உங்களுக்கு நேர்த்தியா தெரிவது எங்களுக்கு தெரியலையே?
////சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் என்னும் பிரான்சிலும் தனிச் சட்ட திட்டம் உண்டு.////
அந்த சுதந்திரத்திற்குள் தான் உடை கட்டுப்பாடும் உண்டு என்கின்றேன். சமூகம் எதையும் சுதந்திரத்துடன் அனுமதிப்பதில்லை. உன் வீட்டில் இருக்கும் போது இருக்கும் முழு சுதந்திரம் பொதுவிற்குள் கூடாது என்கிறது.
///நீங்கள் கூறும் கழுத்துவலி, தலைவலி பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு பாரமாக இருக்குமா?? ஆனால் ஓரளவுவயதில் இருந்தே பழக்கப்பட்டிருப்பதால், இதற்குச் சாத்தியமில்லை என நினைக்கிறேன்./////
கழுத்துவலி, தலைவலி பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எதுவும் நாள்பட நாள்பட உடம்பு பழகி விடும் என்ற வாதம் ஏற்புக்குடையதல்ல. உதாரணமாக நம்முடைய சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் கூட நாட்பட நாள்பட முகத்தில் வோகங்களின் கோடுகளை சுருக்கங்ககளாக போட்டு விடும் தன்மை உடையவை. அல்சர் உருவாவவது கூட அப்படித்தான். உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன். உடல்நிலைக்கு ஏற்காத பாதிப்பு தருகின்ற எண்ணங்களே மாறுவலி, அல்சர் தோல் சுருக்கங்களை உற்பத்தி செய்யும் போது இந்த முடியை யோசித்துப் பாருங்கள்.
//// மலை ஏறுவார்கள்,அக்கூடைப் பட்டி தலையில் இருந்தே தொங்கும், அவர்கள் கழுத்து நோ, தலைவலி என
அவதிப்பட்டதில்லை.அவர்களுடன் பேசக்கிடைத்தபோது கேட்டேன்.பழகிப் போய்விட்டது ////
இந்த வாதங்களையும் நான் மறுக்கின்றேன் தோழர். உடல் இருந்தால் வலி இருக்கும் நோய் இருக்கும் முதுமை இருக்கும். ஏழ்மை மிகக் கொடியது. இங்கு வீடு கட்டுவதறகு 4 ஆட்கள் போதும். நம் நாட்டில் அடிக்கும் வெயிலில் துலையில் செங்கற்களையும் மற்றும் பல வித பாரங்களையும் சுமந்து செல்கிறார்கள். மாலையில் உடல்வலி மதாங்காமல் சாராயம் ஊற்றிக் கொள்கிறார்கள். மறுநாள் அதே உழைப்பு நாய் பொழப்பு என்பார்கள். மனிதனை மனிதன் வண்டியில் வைத்து இழுத்துப் போவது எல்லாமே சுகம் கொடுக்கும் வேலையல்ல. அடுத்த வேலை சோற்றுக்காக அவன் போராடியே தீர வேண்டும். அவனைப் போய் இந்த வேலை செய்யாதே! வலிக்காத வேலை செய் என்று சொல்ல முடியுமா? இயலாதவனை வறுமையில் இருப்பவனை பார்த்து கேள்வி கேட்டால் என்ன சொல்லுவான் சலிப்புக்களுனுடே பழகி போயிடுச்சி என்று தான் சொல்லுவான். அவனுக்கு வேறுவழியில்லை.
//// பெரியார் காலத்திலே தானே,சாமிகளும் சன்னியாசிகளும்,யோகிகளும்
அதிகம் இவர்கள் தாடியில்லாமலா?? இருந்திருப்பார்கள்.
பார்த்திருப்பார்.. பார்த்தும் பார்க்காதது போல் இருந்திருப்பார்.////
"பார்த்தும் பார்க்காதது போல் இருந்திருப்பார்" - பெரியாரா?
கண்ணுக்குத் தெரியாத கடவுளையே கேள்விக் கேட்டுக் கொண்டு போனவர். அவர் சமூகவிஷயங்களில் பேசாத விஷயமே இல்லை. பெண்களின் மயிரில் இருந்து கர்பப்பையைக் கூட விட்டு வைக்கவில்லை தோழர். கடவுளுக்கு, மூடநம்பிக்கைக்கு, சமூகத்துக்கு எதிராகவே புரட்சிக் கருத்துக்களை சொன்னவர் இந்த மயிருக்கா பயந்து போய் பார்த்தும் பார்க்காமல் இருந்திருப்பார்?
இந்த செய்திக்கு 34 நீண்ண்ண்ண்ட மறு மொழிகள் - விவாதங்கள் - விளக்கங்கள் - ம்ம்ம் - தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது என நினைக்கிறேன். எத்தனை செய்திகள் - ஆராய்ச்சிகள் - உவமைகள் - அனுபவங்கள் - ம்ம்ம்ம்
வாழ்த்துகள்
//If he can call others as சோம்பேறி, he will be called the same by others too :-)//
நண்பரே!
இப்படிப்பட்ட ஒரு தார்மீக வெறி; சங்கராச்சாரியார் "வேலைக்குச் செல்லும் பெண்கள் நடத்தை கெட்டவர்கள்" என்று சொல்லும் போது யாருக்குமே வந்ததாகத் தெரியவில்லை.
This is called digression! The point here is if Periyar called others as சோம்பேறி, can others can call him சோம்பேறி for the same reason (long beard)!
Your தார்மீக வெறி is simply out of place and just makes it clear you have no further arguments! :-)
ரிஷான்!
புரிகிறது.நீங்கள் நாடுதிரும்பும் போது கேட்டு அறிந்து எழுதுங்கள்.
நான் மலையகத்தில் கடமைபுரிந்த போது; பிக்குனிகளைக் கண்டபோதும் அவர்கள் பற்றி அறியவில்லை.
நீங்கள் பிறந்து வளர்ந்ததால்;அத்துடன் மொழி அத்துப்படி ஆனதால்; அறிய வாய்ப்பாகியுள்ளது.
மிக வித்தியாசமான யாழ் தமிழ்மக்களைச் சந்தித்துள்ளீர்கள். பொதுவாக சிங்களப் பிரதேசங்களில்
யாழ்பாணத் தமிழர் "காரியகாரர்;சுயநலமிகள்" எனும் பொதுவான கருத்துண்டு.
அவர்கள் வாழ்வமைப்பில் உள்ள சில நியதிகள் ,பலரை அப்படி வாழவைக்கிற தென்பதே உண்மை.
மற்றும் படி சகல இனத்திலும் உள்ள குறை நிறைகள் எமக்கு உண்டு.
யாழ்பாண விடயங்கள் பற்றி ...மிக அழகாகத்; தம்பி" கானாப் பிரபா" .;அவர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலடி தளத்தில் எழுதுகிறார்; அத்துடன் மலைநாடர்-குறிஞ்சி நிலம்" கூட நல்ல பதிவுகள் போட்டுள்ளார். சின்னக்குட்டியரின் "ஊர் உளவாரம்" சில பதிவுகள் தந்துள்ளது.
நேரமும் சுவையான தலைப்பும் கிடைத்தால் எழுதலாம்.
கட்டாரில் தனிமை போல் உள்ளது; எங்களுக்குக் கூட இத்தனை வருட மானாலும் ;நாடு பற்றிய ஆசை
தீரவில்லை.
Post a Comment