Saturday, October 06, 2007

பிரான்ஸ் கம்பன் விழா....

டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்
புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்
கம்பன் கழகத்தின், 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.

சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு சுகி சிவம் அவர்கள்
கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.

அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.

முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு மாசிலா மணி
(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து
மலர் வழங்குகினார்கள்.



பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது

பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.





இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்

பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்

எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்

இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.



இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.

இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!

இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.

இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.

குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை

மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை.

ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!

பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.

இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.

இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க

நன்றி!

கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!

அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.

கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!

19 comments:

ஜீவி said...

நல்லதொரு பதிவு.
உங்கள் அனுபவத்தை எங்களுடன்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வெற்றி said...

யோகன் அண்ணை,
தகவல்களுக்கும் ஒளிப்படக் காட்சிகளுக்கும் மிக்க நன்றி.

/* இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது,*/

பாரீசில் இலக்கிய தாகம் கொண்ட தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் போல இருக்கு. :-))

/* கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!! */

கம்பராமாயணம் ஒரு இலக்கிய நூல். அவ்வளவே. அதனால் கம்பனின் தமிழ்ச்சுவைக்காக அதைப் படிக்கலாம். பரவசப்படலாம்.

ஆனால் சிக்கல் என்னெண்டால் கம்பராமயணம் ஒரு வரலாற்று நூல் போலவும் அதில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் உண்மை என்றும் சொல்வதுதான் ஏற்றுக் கொள்ள முடியாதது. கம்பன் ஒரு புலவனே தவிர வரலாற்று ஆசிரியர் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

உண்மையில் நடந்த இராவண மன்னன் கதைக்கும் கம்பன் எழுதிய இராமயாணத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பது என் புரிதலும் நம்பிக்கையும். இது பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

பாரதியாரும் இதைத்தான் சொல்கிறார்:

நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.


அண்ணை, தமிழ்பித்தனின் பதிவில் நான் கம்பர்மலை பற்றிக் கேட்டதற்கு விளக்கமளித்ததற்கு ஒரு சிறப்பு நன்றி.

kiddy ppl said...

///பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.///

ஏன் தோழர் உங்களுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்னை வரலாமா?

தாசன் said...

நன்றி அண்ணா. நல்ல ஒரு விழா பதிவு. இந்த விழா தொடர்பான படங்களை இன்றைய பத்திரிகையில் பார்த்தேன். மாசிலாவுக்கும் எமது வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவி!
இப்படி விழாக்கள் எனக்குப் பிடிக்கும்.
என்னைப் போன்றோருக்காக இட்டேன்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் மகிழ்வே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
//பாரீசில் இலக்கிய தாகம் கொண்ட தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் போல இருக்கு. :-))//

ஆம், தகுந்த பேச்சாளர்களைக் அழைத்து நடத்தினால்,இந்த விழாவுக்கு சுகி சிவம் அவர்கள் ஆற்றல் மண்டபம் நிறைந்ததற்கு முக்கிய காரணம்.

//கம்பராமாயணம் ஒரு இலக்கிய நூல். அவ்வளவே. அதனால் கம்பனின் தமிழ்ச்சுவைக்காக அதைப் படிக்கலாம். பரவசப்படலாம்.//

இதில் எனக்கு என்றும் மாறுபட்ட கருத்தில்லை.

// கம்பன் ஒரு புலவனே தவிர வரலாற்று ஆசிரியர் இல்லை//

இது கம்பனுக்கு மாத்திரமல்ல, பல இலக்கிய கர்த்தாக்களுக்குப் பொருந்தும்.கலைஞர் உட்பட

//உண்மையில் நடந்த இராவண மன்னன் கதைக்கும் கம்பன் எழுதிய இராமயாணத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பது என் புரிதலும் நம்பிக்கையும்//

உண்மையில் இப்படியான ஆயும் திறனோ,அறிவோ எனக்கில்லை.
அத்துடன் என் ஆயுள் இதுக்கெலாம் போதாது. இருக்கும் வரை கிடைப்பதைச் சுவைப்போம். என நினைக்கும் மனநிலை எனக்கு.
ஈரோஸ்ராரில் பிரயாணம் செய்யப்பிடிக்கும்,ஆனால் அது எப்படி இயங்குது என ஆயப்பிடிக்காது. ஆயமுற்பட்டால் பிரயாணத்தை ரசிக்கமுடியாது.இது என் இயல்பு.உதவா இயல்பாக இருந்தாலும் என்னுடன் ஒட்டிய இயல்பு.

பாரதியார்...இது மாத்திரம் சொல்லவில்லை.
சமீபத்தில் படித்தேன்.
நேரு கூட ராமாயணம் பொய் எனக் கூறியுள்ளாராம்.அதனால் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.
இன்னுமொருவர் கேட்கிறார்.
திராவிட கழகத்தையும் நேரு 'ஸ்ருப்பிட்ஸ்' என்றாராம்.
அதையும் ஏற்பீர்களா??
இதெப்படி இருக்கு..

வவ்வால் said...

யோகன்,

வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட்டிங்க நிறைய வீடியோ எல்லாம் எடுத்து போட்டு இருக்கிங்க, நல்ல ஆக்கம்!

மாசிலாவை பார்த்தும் கண்டுக்காம வந்துட்டிங்களே , மனிதர் நீங்கள் நினைப்பது போல் அல்ல என நினைக்கிறேன், பழக இனிமையானவராக இருப்பார் என அவர் பதிவின் மூலம் தெரிகிறது. ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்! :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தாசன்!
பத்திரிகையில் செய்தி பார்த்தீர்களா??
சுகி சிவம் பேச்சுப் பற்றி சிறப்பாக எதாவது குறிப்பிட்டார்களா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஏன் தோழர் உங்களுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாமா?//

சகோதரி தமிழிச்சிக்கு!
இதைத் தாழ்வு மனப்பான்மை என்பதை விட தற்பாதுகாப்பு எனவும்
கொள்ளலாம்.
''கல்லானேயானாலும் கைப்பொருள் உண்டெனில் ,எல்லோரும் எதிர் கொண்டழைப்பர் இல்லானை இல்லாளும் வேண்டாள்,ஈன்றேடுத்த தாயும் வேண்டாள், செல்லாதே இல்லான் வாய்ச் சொல்'

நம்மில் பலர் உடை,நடை, பாக்கட்டில் உள்ள பணம், குடியுரிமை பார்த்துத் தானே பழகுகிறார்கள்.
நன்கு அனுபவப்பட்டவன்.

/அகதித் தமிழன் எனும் இளக்காரமும் இருக்கிறது/

நான் போனது, தமிழ் இலக்கியக் கூட்டத்துக்கு, இயல்பாக ஆடம்பரமாக உடை அணிபவனல்ல..
என் மனம் என்னை ஏதோ எச்சரித்தது.
சுகி சிவம் ,அவர் துணைவியாருடன் கூட அளவளாவினேன்.
அவர்கள் எளிமை என்னை அவர்களுக்கு அருகில் போக வைத்தது.
அன்பர் மாசிலா இனிமையானவராக இருக்கலாம், அவர் எழுத்தில் பார்த்த எளிமையைக் காணாததால், என் மனம் என்னை எச்சரித்தது. ஏனோதெரியவில்லை.
வேறு எதுவுமில்லை..

Anonymous said...

"தெரியாது" விடை கேட்டு ரசித்து சிரித்தேன். நன்றாக இருந்தது.

விழா முடிந்து வெளிக்கிடுற நேரத்தில,
//நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன்//
என்று மண்டயில அடியப்போட்டு கலங்கப் பண்ணிப்போடீங்கள்.

எதற்காக அகதித் தமிழர் ஆக்கப்பட்டோம்!!?.

எல்லாம் நம் தமிழன்னைக்காகத்தான்.

இன்று தமிழ்த்தாய் பெருமையுடன் உலமெல்லாம் பரந்து, வளர்ந்து, தலைநிமிர்ந்து நிற்பது எவரால்!!!.
அகதித் தமிழரால்தான். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்தத் தமிழன்னையே நம் தலை உயர நிச்சயம் அருள் புரிவாள்.

ஜடாயு said...

நல்ல பதிவு யோகன்.

சென்னைக் கம்பன் விழாவில் பல முறை பங்கு கொண்டிருக்கிறேன். சில தடவைகள் உரையாற்றியும் உள்ளேன். "தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயு" என்ற அவன் கவிதையே எனக்குப் பெயர் தந்தது.

// கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது //

"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" என்று பாரதி சொல்கிறார். மானிட குலம் உள்ளவரை கம்பன் கவி வாழும். கம்பன் நாமம் வாழும்.. கம்பன் தொழுதேத்திய இராம நாமம் வாழும்!

கம்பனையும், அவன் காவிய நாயகனையும் இகழ்பவர்கள் தமிழ்த் துரோகிகள் என்பதில் ஐயமில்லை.

"தமிழர் திருமகன் இராமன்" என்ற எனது பதிவைப் பார்வையிடுமாறு வேண்டுகிறேன் -
http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html

கம்பன் புகழ் உலகெங்கும் பரவெட்டும்!

செல்லி said...

தகவல்களுக்கு மிக நன்றி யோகன்.

//நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே,//
யோகன், தன்னைத் தானே தாழ்த்துபவன் தாழ்ந்து கொண்டுதான் போவான். என்வே உந்த தாழ்வு மனப் பாங்கை விட்டிடுங்கோ.

//பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.//
நீங்களும் அவர்களை அலட்சியப் படுத்திவிடுங்கள். மதிப்பவரை மதிப்போம்.
தமிழன் என்ற குடையின் கீழ் எல்லாத் தமிழரும் ஒன்றே. இதில் வேறு அடைமொழி (அகதி) எதற்கு.
வீறு நடைபோடு வீரத் தமிழனே நீ யாருக்கும் சளைத்தவனல்ல.இதை மந்திரமாக அடிக்கடி சொல்லுங்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
//வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட்டிங்க நிறைய வீடியோ எல்லாம் எடுத்து போட்டு இருக்கிங்க//

வித்தகன் ஆகவில்லை, துண்டு துண்டாக எடுத்த 'வீடீயோ' வை, தொடுப்பதற்கு உரிய செயலி மருமகன்
பொருத்தித் தந்தார்.
அதை வைத்து ஒப்பேற்றி விட்டேன்.

அவர் இனியவராக இருக்கலாம்.
எழுத்தில் பார்த்த எளிமையை , அவரில் காணாததால் ஒதுங்கி விட்டேன். இது என் இயல்பு..அனுபவத்தால் வந்த இயல்பு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Anonymous said...
"தெரியாது" விடை கேட்டு ரசித்து சிரித்தேன். நன்றாக இருந்தது.

அன்பரே!
உண்மையில் நெடுநாளுக்குப் பின் நம் மக்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தேன்.
என்னே ஆற்றல் பேச்சாளர்களுக்கு அந்தச் சபையைச் சிரிப்பால் கட்டிப் போட்டார்கள்.
இதற்காகவாவது இப்படிப் பட்ட விழாக்கள் நடத்த வேண்டும்.
மனதார அனைவரையும் பாராட்டுவோம்.
திரு. பாரதி தாசன் அவர்களுக்கு முடிந்தால் மின்னஞ்சல் இடவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜடாயு!
//கம்பன் புகழ் உலகெங்கும் பரவெட்டும்!//

அதில் ஐயம் இல்லை. பரவும்
தங்கள் கட்டுரைத் தொகுப்புப் படித்தேன்.
இராவணன் இகழ்ச்சிக்குரியோன் இல்லை என்பது பற்றி
என் கருத்துக்கள் சில உள்ளது. வாரவிறுதியில் இடுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!

// நீ யாருக்கும் சளைத்தவனல்ல.இதை மந்திரமாக அடிக்கடி சொல்லுங்கள்!//

நன்றி சகோதரி...

-/பெயரிலி. said...

/கம்பனையும், அவன் காவிய நாயகனையும் இகழ்பவர்கள் தமிழ்த் துரோகிகள் என்பதில் ஐயமில்லை. /

யோகன் பாரீஸ் அய்யா, இடம் பார்த்து
ஜடாயு பொல்லாஞ்சிறகை ஊசியோடு விரிக்கிறார். அதையும் கவனியுங்கள்.

-/பேனா இயானா இரீயன்னா இலீயன்னா.

வவ்வால் said...

//"தமிழர் திருமகன் இராமன்" என்ற எனது பதிவைப் பார்வையிடுமாறு வேண்டுகிறேன் -
http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html
//

சந்துல சிந்து பாடுவது அல்லது சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பது இதைத்தானா? :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!

//இடம் பார்த்து
ஜடாயு பொல்லாஞ்சிறகை ஊசியோடு விரிக்கிறார். அதையும் கவனியுங்கள்.//

அது அவர் கருத்து; நான் என்கருத்தைக் கூறவுள்ளேன்.