Monday, September 04, 2006

பாரிஸ் பிள்ளையார் தேரில்






யோகன் பாரிஸ்

24 comments:

வெற்றி said...

யோகனண்ணை,
படங்கள் அருமை. மிக்க நன்றி. பல வருடங்களுக்கு முன்னர் பாரிஸ் வந்திருந்தேன். இக் கோயில் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால் சென்று தரிசித்திருப்பேன். இப்படியான விழாக்கள் கட்டாயம் புலம் பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்பட வேண்டும். இந் நிகழ்வுகளின் மூலமாவது எமது வருங்காலச் சந்ததிகள் நாம் தாயகத்தில் வாழ்ந்த சில முறைகளை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.

வடுவூர் குமார் said...

அந்த இரண்டாவது புகைப்படம்-- சேலைக்குக் விளம்பரமா?
:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆஹா...கணபதியான் தேரில் பவனி வரும் அழகே தனி.

வாழை மரம் கட்டி, குடையுடன் கூடிய தேரில், நம்மவர்கள் ஊர் கூடி தேர் இழுக்க, மேல் மாடங்களில் மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்க,
உருண்டோடுவது தேர் மட்டுமா? பக்தர்களின் மனங்களும் தான்!!!

பிள்ளையாரின் closeup shot ஒன்றும் கிடைக்குமா?

மிக்க நன்றி யோகன், தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்!

Anonymous said...

You should read this.
http://www.satiyakadatasi.com/?p=32

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
என்னிடமுள்ள கருவியால்,எனக்குத் தெரிந்தவகையில் எடுத்தது.அடுத்த தடவை பாரிஸ் வரும் போது,இருவருமே! பிள்ளையாரிடம் போகலாம். கட்டாயம் இவை எமது தலைமுறைக்கும்; வெளிநாட்டவருக்கும் ;எம் கலாச்சாரச் செறிவைச் சொல்கிறது. பிரான்சியர்கள் பலர் ஆர்வமாகப் பங்கேற்று;தமிழ்கலாச்சார உடையணிந்து;அர்ச்சனைத் தட்டேந்தி வழிபாடு செய்வது; வருடாவருடம் அதிகரிப்பது; பிள்ளாயாரின் அற்புதம் என எண்ணத் தோன்றுகிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்.

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

படங்கள் அருமை. தங்கள் தனித்துவமான பாங்கில் இவ்வாலயம் பற்றிய குறிப்புக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.

G.Ragavan said...

படங்கள் அழகு. பண்பாடு எங்கு சென்றாலும் கூட வர வேண்டும். அதுதான் வரம்.

பிரெஞ்சுக்காரர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் சிறப்பு. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அந்தப் பெண்மணி உண்மையிலேயே மிகவும் நேர்த்தியாக சீலை கட்டியிருக்கிறார். பாராட்டுகள்.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. படங்களுக்கு மிக்க நன்றி. நம் மக்கள் எந்த வித வேறுபாடுகளும் இன்றி கூடி நின்று இறைவனை வணங்கும் காட்சி மிக நன்று.

Anonymous said...

ஒரு கணம் நில்லுங்கள்! தயவு செய்து ஒரு நிமிடம் மூளையைக் கசக்கிச் சிந்தியுங்கள்; உலகத்திலேயெ உருப்படாத இருபத்தெட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது. முப்பது வருடங்களாகத் தொடரும் யுத்தத்தால் ஈழத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் சாவின் நிலமாக மனிதப் புதைகுழிகளாக மாறியுள்ளது. பெருவாரியான மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். எம் தேசத்து மழலைகள் உணவிற்காகவும் உடுக்க ஒரு முழம் துணிக்காகவும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்திக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து சென்று ரெட்பானாவும், ஒக்ஸ்போமும், செஞசிலுவைச் சங்கமும் எம் தேசத்து மக்களுக்கு வயிற்றுக்கு சோறிடும் போது, நீங்கள் இங்கிருந்து குளவிக்கல்லை ஒத்த பாழாய்ப்போன கடவுள் சிலைகளுக்குப் பாலாபிசேகமும் தேனாபிசேகமும் செய்து கூத்தாடிக்கொண்டிருப்பது நியாயமானதுதானா? தொண்டர்படைகள் அங்கே உயிரை துச்சமென மதித்துக் கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டிருக்கும்போது நீங்கள் இங்கே தெருவில் தேங்காய் அடித்து வீரவிளையாட்டுக்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பது அறிவார்ந்த செயலாகுமா? யோக்கியமாகுமா? எம் தேசத்தின் தெருக்களிலே இடையறாது பிண ஊர்வலங்கள் சென்று கொண்டிருக்கையில் நீங்கள் பணத்தை இலட்சக்கணக்கில் செலவு செய்து தெருத்தெருவாக காட்டுமிராண்டிகள்போல கையில் தீச்சட்டியும் முதுகில் அலகும் குத்தி சாமி ஊர்வலம் விடுவதில் ஏதாவது அர்த்தமுள்ளதா?

ஆயிரம் வேலும் வாளுமாக ‘போஸ்’ கொடுக்கும் இந்தச்சாமிகள் ஏன் இறந்துகொண்டிருக்கும் எம்மக்களைக் காப்பாற்றவில்லை. ஆயிரம் அற்ப்புதங்களை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்தக் கடவுள்களின் அற்ப்புதங்கள் ஏனஇ யுத்த பூமிகளில் நிகழ்த்தப்படவில்லை? எமமீது ஒரு வெள்ளைக்காரத் தொண்டு நிறுவன மருத்துவருக்கு இருக்கும் கரிசனைகூட ஏன் இந்தக் கடவுள்களுக்கு இல்லை? ஏனென்றால் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!

ஓர் அகதிச் சமூகம் தான் தஞ்சம் புகுந்துள்ள நாட்டில் தனது அரசியல் உரிமைகளுக்காக, தமது தாயக தேசத்தில் நசுக்கப்படும் உறவுகளின் உரிமைக்காகத் தெருக்களிலே இறங்கி ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் இடையறாது நடாத்தவேண்டுமே அல்லாமல், அகதியாக வந்த போது கூடவே தம்மோடு எடுத்து வந்த மூடப்பழக்கங்களையும் வந்த இடத்தில் தேடிக்கொண்ட பகட்டுகளையும் தெருக்களில் நின்று புகலிடத் தேச மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டக் கூடாது.இவை உங்களின் கலாச்சாரப் பெருமையாக ஒரு போதும் கொள்ளப்படாது. இது ஒரு பண்பாட்டு வளர்ச்சியற்ற, அரசியல் உணர்வற்ற மக்களின் கோமாளித்தனமாகவே இந்நாட்டு மக்களால் விளங்கிக் கொள்ளப்படும் என்பதை தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். கடவுள் என்ற பெயராற் கோயில் முதலாளிகளுக்கு கொடுக்கும் ஒவ்வொரு சதத்தையும் எம் தேசத்தில் அல்லலுறும் மக்களுக்குக் கொடுப்பது எப்படியென்று சிந்தியுங்கள். மூலைக்கு மூலை வியாபாரத்திற்க்காகத் தோன்றியிருக்கும் கோயில்களை நிராகரியுங்கள். இந்து மதத்தை ஒழிக்காமல் சமூக ஏற்றத் தாழ்வுகளை, பெண்ணடிமைத்தனத்தை அழிக்க முடியாது எனக் கூறிய அம்பேத்கரின் வார்த்தைகளை நெஞசில் நிறுத்தி வையுங்கள். மதம் ஒரு அபின் என்ற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆயிரம் கோயில்களைக் கட்டுவதைவிட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே உங்கள் ஆன்மாவை ஒளிரச் செய்யும்.

பெரியார் கல்வி வட்டம் - பிரான்ஸ் -

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வடுவூரார்!
மூன்றாவதாக ஒரு நாதஸ்வர வித்துவான் படம்;போடுவோமா? என்று நினைத்துவிட்டு!! அதை நாதஸ்வரத்துக்கு விளம்பரம்,என்று யாராவது நினைக்கக் கூடாதென விட்டு விட்டேன்.ஆனாலும் அப் பெண் சேலையில் நேர்த்தியாக உள்ளாளா? சேலை அப்பெண்ணில் நேர்த்தியாக உள்ளதா?? சொல்லுங்க!!
கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

மணியன் said...

பாரிசில் பிள்ளையாரை கொண்டாடும் நியதி கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை !

Anonymous said...

வணக்கம்.யோகன் -பாரிஸ்

அவரவர் நம்பிக்கைஅவருக்கு.நல்லாயிருக்கு படங்கள்.முக்கியமாக சேலையில்
ஒரு பிரெஞ்ச் காரிகை.காற்றுவந்ததும் கொடி அசைந்ததா கொடி அசைந்தததும்
காற்றுவந்ததா? அது மாதிரி தான்
அந்த சேலை விடையமும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கண்ணபிரான் ரவி சங்கர்!
கூட்டத்துள் ,சமீபமாக படம் பிடிக்க முடியவில்லை. எனினும் சற்று தெளிவானவை!
தனி மடலில் இட்டுள்ளேன்.
வரவுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

உங்கள் நண்பன்(சரா) said...

யோகனண்ணா படங்கள் அனைத்தும் அருமை!

நாங்களெல்லாம் பாரீஸ இப்படிப் படத்துல பார்த்தாத்தான் உண்டு!

// G.Ragavan said... பிரெஞ்சுக்காரர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் சிறப்பு. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
//
சந்தோசப் படக்கூடிய விசயம்!

// வடுவூர் குமார் said...
அந்த இரண்டாவது புகைப்படம்-- சேலைக்குக் விளம்பரமா?
:-)) //

வடுவூராரே.. பக்கத்தில் "ஜில்லுனு ஒரு ஜீன்ஸ்" இருக்குறத்தப் பாக்கலையா:)))


அன்புடன்...
சரவணன்.

சின்னக்குட்டி said...

//அந்த இரண்டாவது புகைப்படம்-- சேலைக்குக் விளம்பரமா?//



//அந்தப் பெண்மணி உண்மையிலேயே மிகவும் நேர்த்தியாக சீலை கட்டியிருக்கிறார். பாராட்டுகள்//

சேலைக்கு விளம்பரம் இல்லைங்க....ஹிஹி...32-16-32 இன் தரிசனமுங்க.....கரெக்ட்டா இருக்குதா..

சேலை தான் மிகவும் செக்ஸி ஆன உடுப்பென சிலர் சொல்லிக்கிறார்கள்

ENNAR said...

ஜான்
நல்ல பதிவு உலகங்களில் பல இடங்களில் இப்படி விழா நடப்பதைக்கேட்கும் போது ரொம் சந்தோசமாக உள்ளது.
நல்ல படங்கள் நன்றி வாழ்த்துகள்
இது போல் நிறைய பதிவிடுங்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இவ்வாலயம் பற்றி எழுதுவேன். அனுமதியுடன் சில படங்கள் எடுத்தால்; அதையும் சேர்த்து, எழுதலாமென நினைக்கிறேன்! நாட்டின் அமைதியின்மை; மனவொருங்கை வெகுவாகப் பாதிப்பதுடன்; தட்டச்சு வேலையும்,கைபடிவதில்லை.முயல்வேன் முடிப்பேன் என நம்புகிறேன்.
யோகன் பாரிஸ்

கலை said...

படங்கள் பார்த்தேன்.

யோஹன் அங்கிள்! (அங்கிள் என்று நான் சொல்லலாமா?)

நீங்களும் கோழிக் குஞ்சுகளோட விளாடினீங்களா? நானும் யாழ்ப்பாணம் போன நேரம் கோழிக் குஞ்சுவோட விளாடினேன். உங்கட blog ல இருக்கிற அந்த படத்துல இருக்கிற ரெண்டுபேரும் யார்?

doondu said...

டோண்டுவுக்கு தயவு செய்து ஆதரவு அளிக்க வேண்டாம். எம் கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அஞ்சலி!
நீங்க! மாமா என்றே சொல்லலாம். ஆனால் நான் இப்போ எங்கள் குடும்பத்தில் பாட்டா தலைமுறை.
அடடே!! நான் கோழிக்குஞ்சோட "விளையாட" ,நீங்க "விளாடி" இருக்குறீங்க!!! நம்ம பேத்திமாரும் இப்படி விளாடி என்று தான் கதைக்கிறாங்க!
இந்தப் படத்தில் இருப்பது;என் லண்டனில் இருக்கும் மருமகனின் பிள்ளைகள்; அபிராமி 7;பூமிகா 1 1/2
அத்துடன் எனக்கு அவுஸ்ரேலியாவில் "அஞ்சலி"- 5 என்றும் ஓர் பேத்தி இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கா???ஆனால் உண்மை!!!
உபரிச் செய்தி எனக்குக் பிள்ளை இல்லை.
யோகன் பாரிஸ்

பெத்தராயுடு said...

ஆஹா..., La Chappelle சாலைதானே?

Woodlands, Disney உணவகங்கள், கோபால் அங்காடி, ஞானம் telecom, யாழ் புத்தகாலயம்...

ஒவ்வொரு வார இறுதியிலும் அங்கு சென்ற நாட்களை மறக்கமுடியுமா?

கோவிலும் அங்கிருந்து சற்று தொலைவில்தானே?

வாழ்க்கையில் முதல்முறையாக கண்ட தேவார இசையுடன் நடந்த வழிபாடு நினைவை விட்டு அகலாது.

ஆமா, கோவில் இன்னமும் அப்படியேதான் உள்ளதா? இல்லை, பெரிதாக்கியுள்ளார்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெத்த ராயுடு!
என்ன??,LA CHAPPELE ஐ அப்படியே! சொல்லுறீங்க ! அதே கோவில் தான்; அது அப்படியே தான் இருக்கிறது. ஏனைய நாடுகள் போல் இங்கு கோவில் வளர, தனிப்பட்ட கோவில்கள் என்பது தடையாக உள்ளது.
அது சரி ,நீங்க தற்ப்போது எங்கேயிருக்குறீர்கள்.விரும்பினால் கூறுங்கள்.
யோகன் பாரிஸ்

பெத்தராயுடு said...

ஐயா,

நான் பாரிஸில் பணிபுரிந்தது, ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால். தற்பொழுது வேலை செய்வது யு.எஸ்-ஸில்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காண்டீபன் !
வாங்க!,,,அடடா!!! அந்த சேலை கட்டிய பிரன்சுப் பெண்ணை ரசித்துக் கொண்டு நின்றது, நீங்களா??
ஒரு படம் பிடிப்போம். என்று நினைத்து விட்டு ,ஒங்களைக் குழப்பக்கூடாதென விட்டு விட்டேன். (சும்மா பகிடிக்கு) ,உங்கள் பதிவுகளைப் படித்துப் பின் பின்னூட்டுகிறேன்.வரவுக்கு நன்றி.
யோகன் பாரிஸ்