25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா?...
2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....என்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்!
இச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....
செய்தியைத் சுருக்கமாகத் தருகிறேன்!
முதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்।
இரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்!, தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்।
இந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்
எப்படி? வந்தது...
இதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.
இன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி.... இன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,எம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது. அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது!।
இந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,
வயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன?
கல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.
நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது!
அடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்
சிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை
விலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே
தஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்
சேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,
சிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,
சிந்தனைக்குரியது.
10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.
நாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....
இவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,
மன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா??
அத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா??
பாடசாலைகளிலும்...
உயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்பழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்।தற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்।குடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பாதிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,
நம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா?