Thursday, September 21, 2006

ஆனை கொண்டான்!!!!


ஆனை கொண்டான்!!!!
ஆம்! அனக் கொண்டா தான் ;உலகில் நீளமான ;நிறைகூடிய ,நீர்வாழ் பாம்பு; தென்னமெரிக்க அமேசன் நதியை அண்டிவாழும் பாம்பு.

24 comments:

சின்னக்குட்டி said...

ஏங்க யோகன் ..நீளமான பெரிய பாம்புகளை போட்டு பயப்படுத்திறியள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டி அண்ணர்!
உங்களுக்குப் பயமா???? சில நாட்களுக்கு முன் ,நண்பர் "அனக்கொண்டா பிடிப்பது" என ஓர் பதிவிட்டார். அது அனக்கொண்டா அல்ல! மலைப் பாம்பு; அது பற்றி விளக்கி எழுதியபின்; என் நண்பர் ஒருவர் அனுப்பிய அனக்கொண்டா படங்களை, உங்களுடன் பகிரலாமெனப் போட்டேன்.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் அண்ணா

நீங்களும் படம் காட்டுறியள்:-)

G.Ragavan said...

இதுல இருக்குறது ஆனை கொண்டானா மலைப்பாம்பா?

இத்தாம் பெருசா இருக்கே....இப்பத்தான் HBOல ஆனை கொண்டான் படத்தப் பாத்துட்டு வந்திருக்கேன்...நீங்களும் மெரட்டுறீங்களே! :-)

சின்னக்குட்டி said...

http://www.muthamilmantram.com/showthread.php?t=15097

இதையும் பாருங்க யோகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நீங்க சொந்தப் படம் காட்டுவீங்க!!! நாம என்ன? செய்வது "சுட்ட" படம் தான் காட்ட முடியுது; பாத்துட்டீங்களா??,கண்டு கொள்ளாதீங்க!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
இது அனக்கொண்டாவே!; உலகில் பெரிய பாம்பு; கடைசிப் படத்தைக் கவனியுங்கள்; அதைத் தூக்கிச் செல்பவர்கள். அமேசன் மழைக் காட்டில் வாழும் ஆதிவாசிகள்.இப்பாம்பு தென்னமெரிக்காவில் தான் உண்டு;மலைப்பாம்பு இதனிலும் சிறியது.
யோகன் பாரிஸ்

பெருசு said...

நான் இருக்கும் பெரு நாட்டில் அமேசான் காடுகளில்
ஆனைகொண்டான் இருக்கிறது.ஆனாலும் ஆனையைப்
பார்க்கும்போது உண்டாகும் குஷி ஆனைகொண்டானைப்
பார்க்கும் போது வருவதில்லை.
குலை நடுங்குகிறது

பொன்ஸ்~~Poorna said...

யோகன், இது தான் ஆனை கொண்டானா?!! தலைப்பைப் பார்த்துட்டு வந்தேன்.. இப்படி ஏமாத்திட்டீங்களே..

இருக்கட்டும், இதுவும் நல்லா இருக்கு :)

Anonymous said...

இரண்டாவது படத்தில் இருப்பது அனக்கொண்டா வகையைச் சார்ந்த பாம்பு அல்ல, அது ஒருவகையான மலைப்பாம்பு - Reticulated Python அதன் பெயர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெரிசு!
நீங்க பேருவிலயா??இருக்கிறீங்க! மிக சுவாரசியமான பழமையான நாகரீக முள்ள நாடே! "நஸ்கா" மலையோவியம் பார்த்துள்ளீர்களா???2000 வருடங்களுக்கு முதல் வரைந்தவை; ஆச்சரியமானது. அதை ஆகாயத்திலிருந்துதான் பார்க்க முடியும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொன்ஸ்!
நம்ம தலைப்பும் சுண்டி இழுக்குதா??? சந்தோசமா இருக்கு!!! இந்தச் சொல் தமிழில் இருந்து;போயிருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்குண்டு. ஏடிட்டோரியல்-editorial போல்;,வெற்றி-victory போல் பிரஞ்சில் கொய்தலை-cueillir (கொய்யே) எனவும்; லலிதா என்பதைlolitha (லொலிதா) எனவும் கூறுகிறார்கள்.
நான் ஓர் அமேசன் ஆதிவாசிகளின் விவரணப்படம் பார்த்தேன். அவர்கள் மரவள்ளி மாவை மூங்கில் குழலில் இட்டு. நெருப்பில் சுட்டு வேகவைத்து; தயாரிக்கும் உணவுக்கு பெயர் ,ஆச்சரியப்படுவீர்கள்;"பிட்டு"-இதை இரு தடவை பார்த்தேன்.
அதனால் தான் இந்தலைப் பிட்டேன்.
வருகைக்கு நன்றி!
யோகன்

Chandravathanaa said...

நான் ஓர் அமேசன் ஆதிவாசிகளின் விவரணப்படம் பார்த்தேன். அவர்கள் மரவள்ளி மாவை மூங்கில் குழலில் இட்டு. நெருப்பில் சுட்டு வேகவைத்து; தயாரிக்கும் உணவுக்கு பெயர் ,ஆச்சரியப்படுவீர்கள்;"பிட்டு

சுவாரஸ்யமான தகவல்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பரணீ!
2 ம் படம், அந்த நீளம்; அதைக் கிடத்தியுள்ள தரை நீர்நிலைகளுக்கருகேயுள்ள பச்சைப்பசேல்;என்பதும் ;அனக்கொண்டாவாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தக் காரணியாகக் கொண்டேன் . நீங்கள் கூறுவது கூடச் சரியாக இருக்கலாம்.
யோகன் பாரிஸ்

Unknown said...

//மரவள்ளி மாவை மூங்கில் குழலில் இட்டு. நெருப்பில் சுட்டு வேகவைத்து; தயாரிக்கும் உணவுக்கு பெயர் ,ஆச்சரியப்படுவீர்கள்;"பிட்டு"//

அடடே..ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..

மங்கை said...

யம்மா,,,

என்ன யோகன்..இப்படி பயமுறுத்துறீங்களே... இந்த பயத்த சரி பண்ண அடுத்து வேற பதிவு போடுங்க

மங்கை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா! கல்வெட்டு!
இன்னுமொரு தடவை அதைப் பார்க்கக் கிட்டினால்; கட்டாயம் அந்த விபரணப்படம் பற்றிய முழுத்த தகவல்கள் எடுத்துத் தர முயல்கிறேன். மீண்டும் மீண்டும் இவை தொடர்ந்து காண்பிப்பார்கள்.
அடுத்து இதை நான் arte எனும் பிரான்சிய-ஜேர்மானிய கூட்டுத் தொலைக்காட்சிச் சேவையில் தான் பார்த்தேன். சந்திரவதனாவுக்கு இச்சேவையைத் தெரியவேண்டும். மிக அருமையான பொது அறிவை வளர்க்கும் சேவை!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மங்கை !
வரவுக்கு நன்றி!; பெரிசா! அல்லது சிறிசா! இருந்தால் தான் புதுமை!!
மாற்றத்துக்கு வேறு போடுரேன்.
யோகன் பாரிஸ்

ENNAR said...

யோகன்
எம்மாம் பெரிய பா...ம்..பு

Anonymous said...

Excellente écriture. J'ai également voulu écrire comme toi mais je ne suis pas un Tamoul indigène. Je voudrais apprendre à écrire le Tamoul.

பெத்தராயுடு said...

http://etymonline.com/index.php?term=anaconda

anaconda Look up anaconda at Dictionary.com
1768, probably a Latinization of Sinhalese henacandaya "whip snake," lit. "lightning-stem." A name first used in Eng. to name a Ceylonese python, it erroneously was applied to a large S.Amer. boa, called in Brazil sucuriuba. The word is of uncertain origin, and no snake name like it now is found in Sinhalese or Tamil. Another suggestion is that it represents Tamil anaikkonda "having killed an elephant."

ரவி said...

very good snakes...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெத்த ராயுடு!
தங்கள் விபரக்கோவைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
you are so good
ஏனென்றால் ,பாம்பைக் கூடக் good எனு சொல்லும்; நல்ல ஜீவனுங்க நீங்க!!!
பாம்புக்குப் பயம் போல இருக்கு. இல்ல நல்லாக் goodபோடுறீங்க !
யோகன் பாரிஸ்