என் வீட்டுப் பல்கனியில் ஓர் "
நாலுமணிப்பூ " மரம்;அது ஓரே கிளையில் இந்த இரு நிறப் பூ பூத்துள்ளது. இந்த விதையை என் நண்பர் வீட்டில் எடுத்தேன். அவர்கள் வீட்டில்
மஞ்சளும்;
நாவலும் எனத் தனிமரங்களாகவே இருந்தன.
இப் பூமரத்தை ஈழத்தில் மாலை நாலுமணிக்குப் பூப்பதால் ;"
நாலுமணிப்பூ" எனும் காரணப் பெயர் கொண்டே அழைப்போம்.
தமிழகத்தில் என்ன??பெயரில் அழைக்கிறீர்கள்????தெரிந்தவர் கூறவும்.இதன் தாவரவியல் பெயரும் யாருக்கும் தெரிந்தால் கூறவும்.
31 comments:
இங்கே நாங்கள் இதனை "அந்திமந்தாரை" என்பதுண்டு.
சிவப்பு, ஊதா, மஞ்சள், வெள்ளை மற்றும் இதன் கலவை நிறங்களில் பூக்கும்.
- சிமுலேஷன்
ஊரிற்கூட நாலுமணிப்பூ இந்த நிறங்களிற் பூத்து நான் பார்த்ததில்லை. ஒரேயொரு நிறம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட கனகாம்பரம்பூவை ஒத்த நிறம்.
நல்ல வடிவான பூக்கள். எனக்கும் இப்படி ஒரே மரத்துல ரெண்டு கலர் பூ வைச்சிருக்க ஆசையா இருக்கு.
என்னுடைய blog ல அல்பகாவைப் பற்றி நான் ஸ்கூலுக்கு எழுதினது போட்டிருக்கிறேன். அந்த பெயர் சொல்லி தந்ததுக்கு உங்களுக்கு நன்றியும் சொல்லி இருக்கிறேன்.
யோகன், அருமையான படங்கள். மனத்திற்கு நிறைவை தரும் வண்ணங்களில் - தாவரப் பூக்களிலும், உங்கள் நிற எழுத்திலும்.
ஹூம், இது மரமாக வளர்கிறதா? எனக்குச் செடியாக பார்த்தது போல்தான் படத்தைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்து போனது. ஆனால், சரியான பேர் தெரியவில்லையே... தேடிக் கொண்டுள்ளேன் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தி மந்தாரைப்பூ
நம் வீட்டிலும் ஒரே மலரில் இரு நிறமும் உள்ளா பூக்கள் பூத்துள்ளன
இதுக்கு அந்திமந்தாரைன்னு இலக்கியப் பேரு. அந்தியில மலரும்ங்குறதுக்காக அந்திமலர்ந்தாரைன்னு உள்ளது மருவி அந்திமந்தாரையாகி இருக்கலாம்.
ஆனா இதுக்கு ஊருக்குள்ள லேசான பேரு ஒன்னு உண்டே...அஞ்சுமணிப்பூ. அஞ்சு மணிக்குப் பூக்கிறதால அந்தப் பேரு. கருப்பா மெளக விடப் பெரிய அளவுல இருக்கும் விதை.
சிமுலேசன்!
முதற் தடவையாக என் பக்கம் பார்த்துள்ளீர்கள்! அடடா!!! இப்பூவுக்கு இவ்வளவு அழகான பெயரா???
இது தெரியாமல் நாலுமணிப்பூ என கூறியுள்ளோம். இப் பெயரில் ஓர் படமோ, கதையோ உள்ளதா??
நீங்கள் குறிப்பிடும் நிறங்களில் எல்லாம் தனிச் செடி,தனி நிறம் ,அல்லது ஒரு செடியில் ஒரே பூ இரு நிறம் கண்டுள்ளேன்.
ஆனால், ஒரு செடியில் ,ஒரே கிளையில் ,வேறு வேறு நிற இரு மொட்டுக்கள், எந்தவிதமான பதிய வேலையும் செய்யாமல், தனியே மகரந்தச் சேர்க்கையால் ,இரு நிறப்ப் பூ.....இது இச் செடிக்கேயுரிய தனியியல்போ!! எனச் சந்தேகிக்கிறேன்.
பதிய முறையில், தோடை,மா,அப்பிள்,ரோசா ,கிளைக்கொரு வகை பழமோ,பூவோ ஒரே தாய்ச் மரத்தில் பார்த்துள்ளேன்.
யோகன் பாரிஸ்
நானும் இந்த படங்களைப் பார்த்து விட்டு, ஒரே செடியில், இரு நிறப் பூக்கள் (அதுவும் பதிய முறையில் அல்லாமல் விதை மூலம்) வருவதற்கான சாத்தியக் கூறுகள் எவை என்பதுபற்றித்தான் சிந்திக்கிறேன். எங்கேயாவது தேடிப் பார்க்க வேண்டும். நீங்கள் அறிந்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.
பி.கு. ஆமாம். 'அந்திமந்தாரை' என்ற பெயரில் பாரதிராஜாவின் படம் ஒன்று வந்தது. நல்ல படம்.
யோகன், ஒரு தடியில் இரு மலர்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும், நீங்கள் தி.மு.க , அதிமுக வை சொல்லுகிறீர்கள்
என்று நினைத்துவிட்டேன் :-)தேர்தல் கலாட்டா என்று பதிவுகள் வருகிறது வேறு! சென்னை தமிழில் தடி என்பது அடிக்க உதவும் குட்டையான, தடித்த மரக் கொம்பு.
அந்திமந்தாரை என்றால் அதன் விதைகள் பெப்பர்- மிளகை ஒத்திருக்கும். இருக்கிறதா?
வசந்தன்!
நானும் ஊரில பாத்தது, ஒரே நிறச் செடியே!!!!இது ஆச்சரியமாக இருந்தது. இதன் தாய்ச் செடிகள் தனித் தனிச் சாடிகளில் அருகருகே வளர்ந்தவை. வருசாவருசம் தாய்ச் செடி கோடையில் பூ பூக்வருகிறது.அதன் விதைக் கன்றுகளே!!!இவை.
இதற்கு "அந்தி மந்தாரை" இவ்வளவு அழகான பெயர்.....இதை ஈழத்தில் பரப்பவேண்டும்.இதைக் கண்ட ஈழத்தின் பலபகுதியைச் சேர்ந்தோர், எவருமே இப்பெயர் கூறவில்லை.
நாலு மணிப்பூ....தான் எல்லோருக்கும் தெரிந்தது.
நன்றி
யோகன் பாரிஸ்
அஞ்சலி!
இந்த செடி விதை தேவையானால் என் மின்னஞ்சலுக்கு, தங்கள் தபால் விலாசம் தரவும், அனுப்பிவைப்பதில் சிரமமில்லை.
அல்லது, நோர்வேயில் இந்த இனப் செடி கிடைத்தால் இரு நிறச் செடிகளை பக்கத்தில் பக்கத்தில் வளர்க்கவும். அவற்றின் விதைகள் இந்த விதத்தில் வரும், அடுத்தவருடமில்லாவிடிலும், 2 வருடங்களின் பின் புதிய தலைமுறை உருவாகும்.
அடுத்து தங்கள், அல்பகா பற்றிய விபரக் கொத்து, மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
என் பேத்தி அபிராமிக்குக் காட்டி, அவர் மூலம் பின்னூட்டமிட்டேன்.
எனக்கும் மேலும் சுவையான தகவல்கள் கிடைத்தன.
யோகன் பாரிஸ்
ஆங்கிலத்திலும் இதை four o'clock flower என அழைக்கப்படுகின்றது.
தாவரவியல் பெயர்:Mirabilis jalapa
அந்திமந்தாரம்
அந்திமந்தாரை
அந்திமல்லி
அந்திமல்லிகை என தமிழிழ் அழைக்கப்படுகின்றன!
நான் இதை ஈழத்தில் நாவல் நிறத்தில் தான்பாத்தது உண்டு! ஆனால் இதில் பல வண்ணங்கள் உண்டு
இதன் பூர்வீர்கம் மெக்சிக்கோ, சீல, மற்றும் இந்தியா.
jalapa இதன் பெரு நாட்டுப் பெயர்!
http://en.wikipedia.org/wiki/Mirabilis_jalapa
நோநோ!
அந்திமந்தாரை பற்றிய விரிவான தகவல்கள் தந்ததற்கு நன்றி!
அட ! இங்கிலிசுக்காரனும் காரணப் பெயர் கொண்டுதான் அழைக்கிறானா??
யோகன் பாரிஸ்
துளசியக்கா!
ஒரே பூவில் இரு நிறப் பூ பூத்தது. ஆனால் ஒரே காம்பில் இரு வித நிறமே! சற்று வித்தியாசமாகப் பட்டது.
இப்பூவைப் பூசைக்கு எடுக்கும் வழக்கமுண்டா????, மிக மென்மையாக உள்ளது.
யோகன் பாரிஸ்
ராகவா!
மிக அழகான, காரணப்பெயர் "அந்திமந்தாரை"...நம் முன்னோரிட்டழைக்க..அதை நாலுமணிபூ என நாமழைக்க,நீங்கள் அஞ்சுமணிப்பூ என அழைக்க....படு தமாஸ் தான்.
இதைப் பூசைக்குச் சேர்க்கும் வழக்கமுண்டா???,இதழ்கள் மிக மிருதுவாக இருப்பதுடன் , விரைவில் வாடுகிறது.
இதன் உண்மையான அழகான தமிழ்ப் பெயரை அறிந்து மிக மகிழ்ந்து, அறிந்தவர்களுக்கெல்லாம் பரப்புகிறேன். நன்றி.
இது தான் இணையத்தின் பயன், தமிழ்மணத்தின் செயற்றிறன்!
யோகன் பாரிஸ்
கலையரசி!
வரவுக்கு நன்றி!
கட்டாயம், இந்த ஓரே காம்பில் இரு நிறப் பூவின் சாத்தியங்களை அறிந்தால் கூறவும்.
நானுமறிய ஆவலாகவுள்ளேன்.
யோகன் பாரிஸ்
கலை யரசி!
"அந்திமந்தாரை" படம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. பார்க்க முயல்கிறேன்.
யோகன் பாரிஸ்
"அந்திமந்தாரை என்றால் அதன் விதைகள் பெப்பர்- மிளகை ஒத்திருக்கும். இருக்கிறதா?"
அமாம் நானும் பார்த்திருக்கிறேன், இதன் விதை மிளகை ஒத்ததே, அழகான பெயர் "அந்திமந்தாரை"
பாரதிராஜாவின் படம். முதியவர்களின் இறுதிக்கால காதல். பகல்பொழுதின் முடிவில் பூக்கும் மலர் என்பதால் இப்பெயரை வைத்திருக்கிறார்,
THEKKIKATTAN
நிறப்பூக்கள் பற்றிய பதிவென்றதும், நிறஎழுத்துக்களை உபயோகிக்க எண்ணினேன்.பிடித்திருக்கா???
நீங்கள் குறிப்பிட்டது, மிகச்சரி இது செடியே!!!, என் வீட்டு பல்கனியில் சூரியவெளிச்சம் சற்றுக்குறைவால், சிறிது ஓங்கித்தான் வளர்கிறது.
நோ நோ முழு விபரமும் தந்துள்ளார்.
யோகன் பாரிஸ்
உஷா!
ஒரு கொடியில் என்று போடுவோம் எனுதான் நினைச்சேன், இது கொடியுமில்லை. இனி பழைய சினிமாப் பாடலோ என்று பார்க்காமல் விடலாமென "தடி" போட்டேன், அது கூட தேர்தல் தடியோ எனப் பயந்துள்ளீர்கள்.
ஈழத் தமிழிலும் அது தாங்க, அதுவும் பொடியள் நாங்க "தடி" அடி படாமல் வளரமுடியுமா???
நீங்கள் சொல்வது போல் மிளகு போல் விதைதான் வருகிறது.
இது அந்திமந்தாரை தான்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
அப்பிடியே!!" கவரிமானுக்கும்" கருத்துச் சொல்ல வேண்டும்.
எந்தப் பெண்மானும் வரவில்லை.
யோகன் பாரிஸ்
ஊதா நிற அந்திமந்தாரை மலர்களையே பார்த்து வழக்கம்.
நீங்கள் அளித்திருக்கும் பூக்கள் தெளிவாக அழகாக வளப்பமாக இருக்கின்றன.
நன்றி யோகன் பாரிஸ்
யோகன்
ஒரு தடியில் இரு மலர்கள் என்ற தலைப்பைப் பார்த்து விட்டு உஷாவைப் போல நானும் அரசியலோ ஏதொ என்று நினைத்து விட்டு இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இப்போ சின்க்குட்டியின் பதிவினூடுதான் இதற்கு வந்தேன்.
இதுதான் அந்திமந்தாரையா!இதுவரைநாள் தெரியாமற் போய் விட்டது.
http://sinnakuddy.blogspot.com/2006/10/blog-post_17.html
யோகன் ஐயா. அந்தி மந்தாரை என்று கேள்விபட்டதுண்டு. பார்த்திருக்கவும் வாய்ப்புண்டு; சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே கிளையில் வெவ்வேறு நிறத்தில் மலர்கள் இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி.
//அந்திமந்தாரை என்றால் அதன் விதைகள் பெப்பர்- மிளகை ஒத்திருக்கும். இருக்கிறதா?//
மிளகு எண்று சொல்லி சாப்பாட்டில போட்டிராதீர்கள் இதன் விதையும் வேர்ரும் நஞ்சுத்தன்மை வாய்தது!!!
ஈழபாரதி அண்ணா!
உங்களைப் போன்ற பதிவுப் பெரியவங்களையெல்லாம் ," பூ"....இந்தச் சின்னப்பூ கூட்டிவந்திருக்கு. சந்தோசம்.மிளகு மாதிரி விதைதான்.....இது அந்த அந்தி மந்தாரைதான். இப்பெயரை ஈழத்தில் பிரபலப்படுத்த வேண்டும்.
நீங்கள் கவரிமானுக்கும் கருத்துக் கூறவேண்டும்.
யோகன் பாரிஸ்
வல்லி!
மலர் பார்க்க மலருடன் வந்துள்ளீர்கள்! முதல் முதல் வந்துள்ளீர்கள். பூ அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. போட்டேன் உடன் பிறப்புகள் பல விபரம் தந்தார்கள்.
அப்படியே!! கவரிமாம்ன் பற்றியும் உங்கள் கருத்தைக் கூறவும்.
யோகன் பாரிஸ்
சந்திரவதனா!
இந்தப் பூவின் அழகிய பெயர் இதுவரை தெரியாமல் போய்விட்டது. இயன்றவரை பரப்பவும்.இந்த தடி எல்லாம் செடி விடயம், இது அரசியல் தடி அல்ல!!! அது நமக்குப் புரிவதுமில்லை.
அப்பிடியே!! கவரிமானுக்கும் கருத்துக் கூறவும்.
யோகன் பாரிஸ்
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் ஒருமணித்தியால வித்தியாசத்தில இந்தப் பூ மலர்ந்திருக்கு.
எண்டாலும் எங்களுக்குத்தான் முன்னுரிமை தந்திருக்கு எண்டது பேச்சந்தோசம்.
;-)
அன்பு குமரன்!
ஈழத்தில் இப்பூ நிறைய உண்டு. இதை அந்திமந்தாரை என அழைப்பதாக இப்போதே தெரியும், நமக்கு நாலுமணிப்பூ என்பதே அறிமுகம்.
எங்கும் ஒரே காம்பிலோ,கிளையிலோ இரு வெவ்வேறு நிறப் பூ பார்க்கவில்லை. இச்செடியில் எனையவும் பெரும்பான்மையானதும் , நாவல் பூவே!!!
யோகன் பாரிஸ்
NONO!
இதன் விதை நச்சுத்தன்மையுடையதா??, தெரியாது.
அத்துடன் இச் செடியை பல வீடுகளுக்கு முன் பார்த்தேன். குழந்தைகள் கூட உள்ள வீடுகள். சாதாரணமாக நச்சுத்தன்மையுள்ள தாவர வகைகளை வீடுகளில் வளர்க்க மாட்டார்கள், குறிப்பாக குழந்தைகள் உள்ள வீடுகளில் ,விளயாடுமிடங்களின் சாத்தியமில்லை.
அறிய முயல்கிறேன். தகவலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்
வைசா!
நன்றி
மிகப் பயனுள்ள தகவல்கள், ஒரு விடயம் இங்குள்ள குருவிவகைகள், சிலவகை தாவர விதைகளை சாப்பிடுவதைப் பார்த்துள்ளேன். ஆனால் இச் செடிகளின் கீழ் பெருந்தொகையான விதைகள் அப்படியே கிடந்து மீண்டும் பலநூறு சிறுசெடிகள் முளைப்பது, குருவிகள் விசத்தன்மையெனத் தவிர்ப்பது காரணமாக இருக்கலாம்.
குழந்தைகள் உள்ள வீட்டில் யோசிக்கத்தான் வேண்டும்.
யோகன் பாரிஸ்
Post a Comment