Saturday, November 04, 2006

கிறுக்கலில் நம் தெய்வங்கள்!








இந்தக் கிறுக்கல் ஓவியங்களை நான் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு.

என் போன்ற தற்க்குறிகளுக்கு இது "நவீன ஓவியத்தை" விட புரிவது போல் இருக்கும்; பெண்ணைப் பெண்ணாகக் காட்ட முயல்வார்கள்.

அவர்கள் பூசணிக்காயை பெண் என்பதில்லை. அதாவது நவீன ஓவியர்கள் போல்.....

நம் AVM PRODUCTIONS பாதகையில் கூட இந்த !!!!கிறுக்கலொவியச் சாயல் இருக்கும்.

பாரிசில் ஓர் பொதிவண்டியில் கிறுக்கியிருக்கே!!!!!!!அடடா!!! நம்ம பிள்ளையாரப்பா!; அட மீனாட்சியம்மா கூட!!!!அடுத்த பக்கமும் பார்த்தேன்.

புத்தர்;சீன பெரிய தொந்தி கடவுள் !!!வண்டிக் கதவுகளில் திருநீற்றுக் குறி; நாமம்,,,,,,,,

அன்று என் கையில் என் NIKON குட்டி இருந்தது.

வண்டி உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வண்டியைப் படம் பிடித்து விட்டேன்.

உங்களுக்காகத் தானுங்க!!!!!!எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக ....தானுங்க

23 comments:

G.Ragavan said...

ஒங்க கண்ணுல வந்து மாட்டுது பாருங்க... :-) நல்லவேளை கேமிரா இருந்தது. இத ஒங்க ஊர் பேப்பர்ல போட்டு அந்தாளு யாருன்னு கண்டுபிடிச்சி...தமிழ் கூறும் வலைப்பூவுலகத்துக்கு அடையாளம் காட்டீரலாமே! :-)

ஆனா ஓவியங்கள் நல்ல முயற்சி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!!!
நன்றி! அது ஓர் ஞாயிறு மாலை; அதனால் வண்டியுரிமையாளரையோ; வரைந்தவரியோ அறிய முடியவில்லை.
பிடித்ததா???
யோகன் பாரிஸ்

Hariharan # 03985177737685368452 said...

நடமாடும் இறையோவிய காலரி! வழக்கத்திலிருந்து விலகிய சிறப்பான கற்பனை/சிந்தனை!

நல்லாயிருக்குங்க யோகன்!

சின்னக்குட்டி said...

எனக்கும் உந்த கிறுக்கல் ஓவியங்கள் கார்ட்டூன்கள் பார்க்க பிடிக்கும்.... பதிவுக்கு நன்றிகள்...யோகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஹரிகரன்!
வரவுக்கு நன்றி! சிலசமயம் இந்த வாகன உரிமையாளருக்கு ;இந்திய இறையியல் பிடிக்குமோ!!ஆனால் எனக்குப் பிடித்தது.ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் " நடமாடும் ஓவியக் கலரி" தான்!
யோகன் பாரிஸ்

ரவி said...

படங்கள் நன்றாக வந்திருக்கு. துரத்தி துரத்தி எடுத்தீங்களோ !!!!

நாமக்கல் சிபி said...

ஓவியங்கள் நன்றாக உள்ளன யோகன் அவர்களே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
என்ன ??சொல்லுறீங்க !!உங்களுக்கும் கிறுக்குப் பிடிக்குமா??; நான் ஓவியத்தைத் தான் கேட்டேன்.
பாரிசில் இவர்களுக்கு மாநகரசபையால் வருடாவருடம் போட்டியும் வைப்பார்கள். என்ன??சிலசமயம் இவர்கள் "கிறுக்கு; பேருந்து;தொடர்வண்டி,முக்கிய அறிவுப்புப் பலகை என ஆட்கொண்டுவிடும்.
மற்றப்படி நான் மகிழ்வேன். இதைப் பார்த்து.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி !
துரத்தித் துரத்தியல்ல!!!சுற்றிச் சுற்றி எடுத்தேன். ஏதோ ,புள்ளையார் ஒங்களையெல்லாம் கூட்டி வந்துள்ளார்.
நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

நல்ல ஓவியங்கள். படம் பிடித்துப் போட்டதற்கு நன்றிகள் யோகன் ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தயா!!!
பிள்ளையாரை வரைந்தவருக்கு தத்துவங்கள் தெரிந்து தான் வரைந்தாரோ!! தெரியவில்லை. எனினும் வாயில்லாத் தெய்வத்துக்கு வாய் கொடுத்தவர் வாழட்டும்.
வேதாளத்துக்கு வாழ்க்கைப் பட்டால் முருங்கைமரம்; தமிழன் தெய்வத்துக்கும் அலைச்சல் !!!
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

வைசா. பிள்ளையாருக்கு ஐந்து விரல்கள் தான் வலக்கையிலும் இருக்கின்றன. கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் நீட்டியும் மற்ற விரல்களை மடக்கியும் வைத்திருக்கிறார். மடக்கிய மூன்று விரல்கள் இந்த ஓவியத்தில் நான்கு விரல்களைப் போல் தோற்றமளிக்கின்றன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
பிள்ளையார் தம்மி; குமரன் தான்; உங்கள் கேள்விக்கு அழகாக விளக்கம் தந்துள்ளார். நான் இதை யெல்லாம் கவனித்துப் படத்தையெடிக்கவில்லை. அத்துடன் இதை வரைந்தவர் கூட ,எல்லாவற்றையும் யோசித்தார??,தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
வருகை ,கருத்து; விளக்கம் யாவுக்கும் நன்றி!
படம் வித்தியாசமான இடத்தில் கண்டதால் எடுத்துப் போட்டேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிபி!
நல்லா இருக்குதா!!!! எனக்கும் மிகப் பிடித்ததால் படம் பிடித்தேன். உங்களைப் போல் பலருக்குப் பிடிக்கலாம் என்பதால் பதிவிலிட்டேன். கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

இக் கிறுக்கல் ஓவியங்களில் என் மகளுக்கு ஈடுபாடுண்டு. ஆனால் பொதுச் சொத்துக்களின் மேலேயே அதிகம் இத்தகைய ஓவியங்கள் கிறுக்கப்படுவதால் எனக்கு இவ் ஓவியங்களில் விருப்பிருத்தாலும் வெறுப்புத்தான் அதிகம் ஏற்படுவதுண்டு.

இங்கே நீங்கள் இட்டிருக்கும் படங்கள் அருமையாகவுள்ளன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
அப்படியா?,,நன்று மகளை ஊக்குவிக்கவும். நீங்கள் கூறுவது போல் இவை பொதுச் சொத்தில் அதிகம். அதனால் 5 மில்லியன் யூரோ வருடாந்த செலவு பிரஞ் அரசுக்கு; பின்பு இவர்களுடன் பேசி சில இடங்களை ஒதுக்கிக் கொடுத்து முள்ளனர். எனினும் சிலர் பழக்க தோசத்தால் ,கிறுக்கிவிடுவார்கள். அன்று என்னிடம் கமரா இருந்ததால் படமாக்க முடிந்தது.
நன்றி
யோகன் பாரிஸ்

jeevagv said...

" தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்"

:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவா!!
அது உண்மைதானே!!!!
யோகன் பாரிஸ்

MyFriend said...

ஓவியங்கள் அழகாய் இருகின்றது.. நல்ல வேளை! நீங்கள் இந்த லாரியை பார்க்கும்போது கையில் கேமராவை வைத்திருந்தீர்கள்.. :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

My friend!
பலருக்கு;இது பிடிக்கலாம் என எதிர்பார்த்தேன். அடுத்து அன்று நான் பழம்பொருள் விற்பனை அங்காடி
பார்க்க என் படக்கருவியுடன் சென்றேன்( அவை old is gold எனும் பதிவாக "என் பார்வை எனும் தளத்தில் உள்ளது- சில சிக்கலால் அது தடையாக உள்ளதுhttp://paris-johan.blogspot.com/). வழியில் இதைப் பார்த்ததும்; எடுத்தே விட்டேன். பதிவில் போட வேண்டுமென நினைத்தே போட்டேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
இந்தப் பழைய பதிவுகள் எல்லாம் வெகுநாளுக்குப்பின் வெளியே வருகிறது.

Unknown said...

தெரியத் தெரிய தெரியாமை தெரியும்.
ஒருவேளை, தெரியத் தெரிய இவ்வளவும் தெரியாமல் இருந்துவிட்டது தெரியுமோ!
அல்லது
தெரியத் தெரிய இன்னும் எவ்வளவோ தெரியாமல் இருப்பது தெரியுமோ!
தெரியத் தெரிய அறியாமை மறையும்.
ஆனாலும் - நல்லாத்தானிருக்குது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுல்தான் அண்ணா!
அறிதலும்;தெரிதலும்;அறியாமையும்;தெரியாமையும் ஒத்த கருத்தெனக் கருதுகிறேன்.
நீங்கள் சொல்லுவதுபோலும் யோசிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.