Saturday, December 09, 2006

இந்த மரத்தின் பெயர் என்ன??
ஈழத்தில் இந்த மரத்துக்கு ஓர் பெரிய சரித்திரமே!!உள்ளது.


இந்த மரத்தில் பெயர் தெரியுமா???


இது இருக்கும் ஊர் தெரியுமா??


தெரிந்தவர் கூறுங்கள்.

27 comments:

Anonymous said...

யோகன் பிழை என்றால்...சிரிக்க வேண்டாம்...சங்கமித்தை நட்ட அரசமரம் தானே


sinnakuddy

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
இதில் சிரிக்க எதுவுமில்லை!!உங்கள் விடை தவறு!! நான் சிலநாட்களில் ஓர் பதிவு இது தொடர்பாகப் போடுவேன்; மிகச் சுவாரசியமான சரித்திரத் தகவல்கள்; 2 பக்கங்கள் தட்டச்ச வேண்டும்.சில படங்களும் சேர்க்க வேண்டும்.
கட்டாயம் படிக்கவும்.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

எனக்கும் தெரியவில்லையே, உங்கள் விளக்கத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றேன்.

வெற்றி said...

யோகன் அண்ணை,
ஏதாவது clue/hint தாருங்களேன். இம் மரம் தமிழீழத்திலா அல்லது சிறீலங்காவிலா உள்ளது?

theevu said...

நெடுந்தீவிலா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இது தமிழீழ மரமே!!!
உண்மையில் நீங்கள் மிக விரும்பும் சரித்திரம்; வரலாறு பற்றிய மரம்.
சில நாட்களில் ;தமிழக அன்பர்கள் ஏதாவது??சொல்கிறார்களா??என்று பார்த்து , விபரமான பதிவு மேலதிக படங்களுடன் போடுகிறேன்.
யோகன் பாரிஸ்

வெற்றி said...

யோகன் அண்ணை,
மரத்தைப் பார்த்தால் அரச மரம் போல தெரியுது. அதே நேரம் மரம் சரியான மொத்தமாய் இருக்கிறதைப் பார்த்தால் ஆலமரமோ எண்டும் சந்தேகமாய் இருக்கு. ஆலமரம் எண்டால் விழுதுகள் காட்டிக் குடுத்துவிடும். விழுதுகள் இல்லாததாலை அரச மரமெண்டுதான் நினைக்கிறேன். மற்றும் படி மரம் எவடத்திலை இருக்கெண்டு சொல்ல முடியேலை.

/* உண்மையில் நீங்கள் மிக விரும்பும் சரித்திரம்; வரலாறு பற்றிய மரம். */

உண்மைதான் அண்ணை. அறிந்து கொள்ள மிகவும் ஆவலாய் இருக்கு. உங்கடை பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

ENNAR said...

இந்த மரம் நான்தான் நட்டேன் எனக்கே பெயர் மறந்து விட்டது. இப்பிறவியில் அல்ல

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
எல்லோருக்கும் தெரியவாய்ப்பில்லை. எனினும் நான் அந்த விபரங்களைத் தட்டச்சியதும்; இடுகிறேன்.
ஈழத்தில் ஒன்றோ!இரண்டோ தான் இப்போது இருக்கிறதாம்!!!;
யோகன் பாரிஸ்

Anonymous said...

மன்னாரில் ,மேற்கத்தையவர்கள் நட்டது ??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தீவு!
பெயரிலியா வந்தவர் எங்குள்ளதெனச் சரியான விடை கூறியுள்ளார்.பெயரைக் கூறுங்கள் பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார் !அண்ணா!
நீங்க இந்தப் பிறவியில் இதை நட்டிருக்க முடியாது. ஏனேனில் இதற்கு வயது 500 ;மேல் எனக் கணக்கிட்டுள்ளார்கள்
யோகன் பாரிஸ்

பகீ said...

எனக்கு தெரியேல்ல. பதிவுக்கு காத்திருக்கிறேன். 'என் பார்வையில் பிரச்சனை இல்லாமல் வேலை செய்கிறதல்லவா ? யோகன் அண்ணா?

ஊரோடி பகீ

Anonymous said...

அண்ணே இது சங்கமித்த நாகதீபத்தில நட்டமரம் எண்டு சிங்களவன் சல்லியடிக்கிற மரமே?

சயந்தன் said...

தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.

அப்பிடியே யாழ் மாவட்டடத்தில பெரிய சுற்றளவான மரம் எங்கை இருக்கெண்டு அறிய இந்த பதிவை பாருங்கோ..
http://sayanthan.blogspot.com/2005/03/blog-post_08.html

வெற்றி said...

சின்னக்குட்டி அண்ணை,

/* சங்கமித்தை நட்ட அரசமரம் தானே */

சங்கமித்தை வந்து இறங்கிய ஊர் எனது ஊர்தான். அங்கு அந்த இடத்தில்[வந்து இறங்கிய இடத்தில்] இப்படி ஒரு மரம் இல்லை.

நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

sa//சங்கமித்தை வந்து இறங்கிய ஊர் எனது ஊர்தான். //
அண்ணை,
நானும் உந்த ஊரைப்பற்றி அப்பிடித்தான் சொன்னன்.
ஊரின்ர பெயர்க்காரணமெல்லாம் சொல்லிப்பாத்தன்.
அடிவாங்காத குறைதான். (சங்கமித்தை வந்து இறங்கினதுக்காக இல்லை, புழுகிறன் எண்டதுக்காக)
ஏதோ அந்த ஊர்க்காரராவது சொல்லிக்கொண்டு திரியினம்.

Anonymous said...

இந்த மரத்தின் படத்தை யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டு அல்பத்தில் பார்த்த நினைவு எனக்கிருக்கிறது. நான் சின்னக்குழந்தையாக இருந்த போது எனக்கு முதலில் சோறு தீத்த திருக்கேதீஸ்வரம் கோயிலுக்குப் போனார்களாம், பின்பு மன்னார் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போன போது, பள்ளிமுனை என்ற இடத்தில் இந்த மரம் இருக்கிறதாம். சரித்திரம் எல்லாம் தெரியாது,. இவ்வளவும் தான் எனது அம்மாவுக்கு நினைவில் இருக்கிறது.

Anonymous said...

யோகண்ணை சங்கமித்தையும் மிகிந்தலையும் சிங்களவனில்ல உவங்கள்
தானே பனைமரத்த கொண்டுவந்து தமிழ்
ஈழத்தில (யாழ்ப்பாணம்)நட்டவங்கள்.

புத்தரும் சிங்களவன் அசோகச்சக்கரவத்தியும் சிங்களவன்
உவங்களாலதான் நாங்கள் இப்ப நின்மதி
இல்லாமல் இருக்கிறம்.
சி என் டவருக்கு பின்னால நாங்களும்
ஒரு வரலாற்று மரத்த நட்டு வைப்போம்

குமரன் (Kumaran) said...

ஒரு பெரிய மரத்தினைப் பற்றிச் சொன்னீர்கள் ஐயா. இதுவரை அறியாதது. இன்று அறிந்து கொண்டேன். நன்றி.

(இது அடுத்தப் பதிவிற்கான பின்னூட்டம். அங்கே இட முடியவில்லை. )

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பகீ!
" மரம் பற்றிய பதிலைப் புதுப் பதிவாக இட்டுள்ளேன்.
ஆனால் அது எனக்கு வழமைபோல் பிரச்சனையாகத் தான் உள்ளது.இரண்டையும் பார்க்கவும்
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக வந்தவர்!
மன்னார்; சரியான விடை...நீங்கள் மேற்கத்தையவர் என நினைப்பது ஐரோப்பியர் எனக் கருதுகிறேன். அப்படியானால் என் அடுத்தபதிவு இட்டுள்ளேன். நான் ஓர் புத்தகத்தில் வாசித்த விடயத்தை அப்படியே! இட்டுள்ளேன். இந்தச் சரித்திரச் சான்று பொருத்தமாக உள்ளது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
ஏன்??பெயரிலியாக.....
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!
சங்கமித்தை கொண்டுவந்தது. அரசெல்லோ!!!
இது அரசல்ல!!
பதிலிட்டுள்ளேன்; இன்னோர் பதிவாகப்- பார்க்கவும்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
இடத்தைச் சரியாகவும்; அத்துடன் நெடுந்தீவு மரத்தின் பதிவையும் தந்து;புதிய தகவலும் கூறியதற்கு நன்றி!
பதிலை ஓர் பதிவாகவே மேலதிக தகவலுடன் இட்டுள்ளேன்
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆரூரன்!
சுந்தரமான பெயர்!
நீங்கள் "மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில்; பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரையோனிடமா??,முதலமுதுண்டீர்கள்.மகிழ்ச்சி!!!
நீங்கள் கூறியது மிகச்சரியான தகவல்கள்.
மேலதிக தகவல் ஒரு பதிவாகவே போட்டுள்ளேன்; படிக்கவும்.
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Anonymous said...

வாகை மரம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது பெருக்கமரம், ஆங்கிலத்தில் Baobab tree.