Friday, December 22, 2006

இவரும் சாதனைப் பெண்ணே!

கடந்த 10 - 12 - 2006 அன்று பிரான்சில் நடை பெற்ற "மிஸ் பிரான்ஸ் - MISS FRANCE" தேர்வில் ; 2 ம் இடத்தைப் பெற்ற(Premiere Dauphine)Sophie VOUZELAUD என்னும் இந்தப் பெண் ஓர் வாய் பேசமுடியாதவர்.
இப்படிக் குறையுள்ளவர்களால் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்தவே!! தான் பங்கேற்றதாகக் கூறிய இவர் ஓர் 19 வயதுக் கணக்கியல் மாணவி.நீச்சல்,கராத்தி,சினிமா....இவர் ஆர்வங்கள்.
உலக அழகிகள் தேர்வு வரலாற்றிலேயே!! இப்படிப்பட்ட உடற்குறைபாடுடைய பெண்பங்கேற்றதும்; 2 ம் இடத்தைப் பெற்றதும் .
இதுவே முதற்தடவையாகும்.

MISS LIMOUSIN ஆக அவர் மாநிலத்தில் தெரிவாகி; பின்முதல் சுற்றுள் வரும் 45 அழகிகளில் ஒருவராகி, பின் 12 அழகிகள் அடங்கிய 2 ம் சுற்றுக்கும் தேர்வாகி ;இறுதிச் சுற்றில் ஐவருள் ஒருவராகி தன் இரண்டாம் இடத்தைத் தங்கவைத்துக் கொண்டார்.

தொலைக் காட்சியில் நேரடியாக நடந்த தேர்வில்; "சைகை நிபுணர்" உதவியுடன் பேசினார். அவர் குரலிலே சிலவார்த்தை பேச முயன்றார்.(அதற்காகக் கடும் பயிற்சி எடுக்கிறார்).

மிஸ் பிரான்சாகத் தெரிவானவரிலும் பலமடங்கு இவர் வசம் இருந்த போதும். இப் பதவியில் இருப்பவர்கள்;பேசக் கூடியவராக இருக்க வேண்டுமென நடுவர் குழு ;தீர்மானித்ததோ தெரியவில்லை.

இவருக்கு 2 ம் இடமே!! கிடைத்தது.எனினும் இவர் துணிவு பாராட்டுக்குரியதாக ;பத்திரிகைகள் புகழ்ந்தன.

22 comments:

சின்னக்குட்டி said...

சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் உரித்தாகுக

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அரிதான சாதனை. வாழ்த்துக்கள் சோபி!

யோகன் அண்ணா,
அது என்ன....//இறுதிச் சுற்றில் ஐவருள் ஒருவராகி//
அப்படியே கம்பர் ஸ்டைலில் உரைநடையில் எழுதறீங்க?:-)

சிறில் அலெக்ஸ் said...

இதுபோன்ற நிகழ்வுகளாவது அழகிதேர்வுகளுக்கு வந்திருக்கும் இழுக்குகளை களையட்டும்.

தகவலுக்கு நன்றி.

விழாக்கால வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக் குட்டியண்ணர்,பிரபா!!
வரவுக்கு நன்றி.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
என்ன???
//குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.//

இந்தப் பாடல் ஞாபகம் வந்ததா??? நான் அதை நினைத்து எழுதவில்லை. ஆனால் அவர்கள் பாதிப்பில்லாமல் எழுதமுடியுமா??,
அரிய சாதனைதான்...அதனாலே பகிர்ந்தேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

VSK said...

சோஃபிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

வர, வர நம்ம ரவியின் அட்டகாசம் தங்க முடியவில்லை!

எதிலும் ஒரு இலக்கிய அடையாளத்தைக் கொண்டுவந்து விடுகிறார்!

இப்போது, அதற்கு யோஹனாரின் மேல்விளக்கம்!

விருந்துதான்!!

:))

புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous said...

எஸ் கே அண்ணா!!
சிறியோரை மன்னிக்கவேண்டும்; இதெல்லாம் " உண்ணும் உணவிலும்;தின்னும் வெற்றிலையிலும்" வெங்கடவனைக் கண்டேனென இங்கே எழுதுவதைப் படிப்பதால் வந்த பாதிப்பெனவும் கொள்ளவேண்டும்.
கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிறில் அலெக்ஸ்!
இந்த அழகித் தேர்வு அதையொட்டிய சர்ச்சைகள்; ஏனையவற்றிலும் குறைந்தவையல்ல!!!எனினும் தற்செயலாகப் பார்த்தபோது;இந்தப் பெண் சைகையில் பேசியது; என்னை அவதானிக்க வைத்ததுடன்,அவர் பற்றி அறியுமாவலையும் தூண்டியது.அவர் துணிவையும் பாராட்டியது.
பேசும் பாவையருள் இப் பேசாப்பாவை....2 ம் இடம் பெற்றார். பாராட்டவே வேண்டும். திரைத் துறையில்;ஏன் ஆத்மீகமே! நாறுகிறது...ஒதுக்கியா வைத்துவிட்டோம். அதிலுள்ள திறமை;நல்லோரைப் பாராட்டுவதில்லையா?? அப்படியே தான் இதுவும்.
வரவு கருத்துக்கு நன்றி!!

பகீ said...

உண்மையிலேயே சாதனைப்பெண்தான்.

பதிவினை விட பின்னூட்டங்கள் நன்றாயிருக்கின்றன யோகன் அண்ணா.

ஊரோடி பகீ

ENNAR said...

அப்பெண்ணுக்கு எனது வாழ்துகள் உடற்குறை ஒரு குறையேயில்லை என நிரூபித்து விட்டார். வாழ்க அவரது புகழ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
நம்மைச் சுற்றி....பல அடிமைத்தனங்கள் வலம் வந்த வண்ணமே!!இருக்கின்றன. ஆனால் அவற்றில் இருந்து விடுபடவோ!ஒதுங்கவோ முடிவதில்லை...நம்நாடுகளின் அரசியல் அடிமை அடிவருடித்தனத்தை விட இவை ஒன்றும் கேவலமல்ல!ஒலிம்பிக் போட்டியோ;ஒஸ்கார்ப் போட்டியோ;அழகுப் போட்டியோ!!இது பணமும்;புகழும் கொழிப்பதுடன் பலருக்குத் தொழிலும் என்றுமாகிவிட்டது. இவ் வியாபார உலகில்...அது சகலராலும் ஏற்கப்பட்டுவிட்டது. நானும் நீங்களும் ஒதுக்கி என்னாவது.
எனினும் இப்பெண் தன் குறைபாட்டுடனும் ; ஏனையோருடனும்
என இருமுனைப் போட்டியில் இரண்டாமிடம் வென்றதே!! என்னைக் கவர்ந்தது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பகீ
பின்னூட்டம் நல்லா இருக்கா??எது நன்றோ??அதைப் பாருங்கள்.பதிவு நல்லாப் போட விருப்பம்;ஆனால் எப்படி
பதிவு நல்லாப் போடுவதென்பது தெரியவில்லை. முயல்கிறேன். வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யல அப்பு!!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

MyFriend said...

சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்,
உங்கள் தோழி..
.:: மை ஃபிரண்ட் ::.

பொன்ஸ்~~Poorna said...

யோகன்,
இது போலவே தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தி இருக்கிறார். பெயர் மறந்துவிட்டேன். பிறவியிலேயே வாய்பேச முடியாத, காது கேட்காத பெண்.

ஆனால், உள்ளூர் அழகிப் போட்டிகளில் கலந்து ஜெயித்து, இப்போது தமிழக விளம்பரங்களில் மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பெயர், இன்னபிற விவரங்கள் அறிந்தால் தெரியத் தருகிறேன். ஒரு சில வருடங்களுக்கு முன்னால் அவள் விகடனில் வந்தது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொன்ஸ்!
நீங்கள் குறிப்பிடும் பெண் பற்றி ,நான் கேள்விப்படவில்லை.கிடைக்கும் போது பகிரவும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

யோகன், நல்ல பதிவு.அழகும் அறிவும் இணைந்து ஒரு குழந்தையைப் பார்க்கும்போது மிக்க ஆனந்தமாக இருக்கிறது.
அதை எடுத்துச் சொன்னதற்கு நன்றி.

ஞானவெட்டியான் said...

//இதெல்லாம் " உண்ணும் உணவிலும்;தின்னும் வெற்றிலையிலும்" வெங்கடவனைக் கண்டேனென இங்கே எழுதுவதைப் படிப்பதால் வந்த பாதிப்பெனவும் கொள்ளவேண்டும்.//

எழுத நினைப்பவனும், எழுதவைப்பவனும் அவனல்லவா?
அவனன்றி ஓர் அணுவுமசையுமோ?

"ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்"

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி!
இந்தப் பெண்ணிடம் அழகு;அறிவு,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இருந்ததே! என்னைக் கவர்ந்தது. விடாமுயற்சியால் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
வரவு கருத்துக்கு நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

சாதனைப்பெண்ணிற்குச் சாதனை வாழ்த்துக்களும், உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஞானவெட்டியான் ஐயா!
இங்கு வந்ததிலிருந்து ஆத்மீகம்;இசை;கவிதை.என எனக்குப் பிடித்த பலவிடயங்களைப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வாயிலாகவும் படிக்கும் போது; என் எழுத்தைக் கூட ஏன்??அப்படி எழுதக் கூடாதெனும் ஆசை,ஏன்?பொறாமை என்றுகூடச் சொல்லலாம்,என்னை ஆட்கொண்டது. பெயர் குறிப்பிடுவதானால் இப்பின்னூட்டம் மிக நீளும்; குறிப்பாக குமரன்;ராகவனின் ஆத்மீகப் புலமை என்னை வியக்கவைத்தது.
அவர்கள் வயதில் இத் துறையை அவர்கள் செவ்வனே!!எழிலாகக் கையாள்கிறார்கள்.இவற்றை வாசிக்க வாசிக்க ,நாமும் அப்படி எழுத முயல்வோமே! என மனமுந்துகிறது.
இயக்கமும்,இயக்கலும் நீங்கள் குறிப்பிடுவது போல் அவனே!!
வரவு கருத்துக்கு நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
வரவுக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
யோகன் பாரிஸ்