Saturday, December 30, 2006

PILLCAM..மருத்துவப்படக்கருவி!!















உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.இது ஒரு கூட்டுக் குளிசைவடிவில் ;அளவிலமைந்த படப்பிடிப்பு மருத்துவக் கருவி!
குடல் வருத்தங்களைக் கண்டுபிடிக்க வழமையாகப் புழக்கத்திலுள்ள ENDOSCOPY க்கு பதிலாகக் கண்டுபிடித்து புழக்கத்தில் வந்து வெற்றியும் கண்டுள்ளது.
ENDOSCOPY யின் உதவியால் குடலின் குறிப்பிட்ட சிலபகுதிகளை குறிப்பாக சிறுகுடலின் மடிப்புகள்; நெளிவுகள் உள்ள பகுதியை இக்கருவியால் படமாக்க முடிவதில்லை.
அக் குறை இப் புதிய கருவியால் நிவிர்த்தியாவதுடன். நோயாளிக்கும் சிரமமேதும் இன்றி 20 நிமிடங்களில் தேவையான துல்லியமான தகவல்களை பெறமுடியுமென கூறப்படுகிறது.

கூட்டுக் குளிசை போல் அமைப்புடைய இதன் இரு முனையிலுமுள்ள வெளிச்சத்தைப் பீட்டியடிக்கக் கூடிய அமைப்புடைய படப்பிடிப்புக்கருவிகள்;செக்கனுக்குப் 14 படமாக மொத்தம் 2600படங்களை; வாயினூடு; குடல் மூலம் மலவாசல் வரைச் செல்லும் பாதையை படமாக்கி மின்காந்த அலைகளாக வெளிஉடம்பில் ஒட்டியிருக்கும் SENSORS க்குக் கம்பித் தொடர்பு மூலம் தகவல் பெற்று அதை; பதிவுக் கருவிக்கு அனுப்புகிறது.
அதைக் கணனியின் உதவியுடன் படமாகப் பார்த்து வியாதியைக் கண்டுபிடித்து வேண்டிய வைத்தியம் செய்ய வசதியாகவும்;இலகுவானதும்;வேதனையற்றதாகவும் இருப்பதாக மருத்துவ உலகு வரவேற்கிறது.
ஒரு தடவையே பாவிக்கக்கூடிய இக்கருவி மலத்துடன் சிரமமின்றி வெளிவேறுகிறது.

நான் ஒரு குடல் வியாதிக்காரன் இந்த ENDOSCOPY க்கு பலதடவை உட்பட்டவன் எனும் வகையில் இச்செய்தி எனக்கு மிக மகிழ்வைத் தந்தது.
மேலதிக விபரம் எஸ் கே அண்ணா போன்ற மருத்துவத்துறையில் உள்ளோர் தரலாம்.

9 comments:

சின்னக்குட்டி said...

நல்ல மருத்துவ கண்டு பிடிப்பு பற்றிய தகவலை தந்ததுக்கு நன்றிகள். ..யோகன்

குமரன் (Kumaran) said...

மிக நல்ல தகவல் யோகன் ஐயா. இது பலருக்கும் மிக உதவியாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. தாங்கள் குடல் நோயால் அவதிப்படுகிறீர்கள் என்று அறிந்து வருந்துகிறேன். தாங்கள் எல்லா நலமும் விரைவில் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னகுட்டியண்ணர்!
இங்கே இதைச் செய்தியில் காட்டிய போது; பாரம்பரிய 2 மீட்டர் குழாயால் பட்ட தொல்லை;எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. எம் பதிவரில் யாராவது இச் சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால் மேலதிக விபரம் கிடைக்குமே என நினைத்தே போட்டேன்.
வரவு கருத்துக்கு நன்றி
புது வருட வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

வெற்றி said...

யோகன் அண்ணை,
தகவலுக்கு மிக்க நன்றிகள். இது பற்றி நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.

/* நான் ஒரு குடல் வியாதிக்காரன் இந்த ENDOSCOPY க்கு பலதடவை உட்பட்டவன் */

இந்த வரிகளைப் படித்ததும் ஏதோ மனம் கனக்கிறது. விரைவில் நீங்கள் பூரண குணமெய்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரன்!
இந்தவருத்தம் சுமார் 15 வருடமாக இருந்து இப்போ எவ்வளவோ சுகம். அத்துடன் வருத்ததுடன் வாழவும் பழகிவிட்டேன்."வயது போக வருத்தம் வரும்" இது நியதிபோல் உள்ளது. அத்துடன் இந்த வெளிநாட்டுவாழ்க்கையும்; தாய் நாட்டுப் போர் சூழலால் ஏற்படும் உறவினர் பற்றிய மனவுளைச்சல் வருத்தங்கள் விரைவில் தாக்க ஏதுவாக உள்ளது. இந்தக் கருவியால் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யாராவது தங்கள் அனுபவத்தைப் பகிர்வார்களா??என எதிர்பார்க்கிறேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
நான் இந்த வியாதியுடன் 15 வருடங்களுக்கு மேல் வாழப்பழகிவிட்டேன். என்ன?இப்போ வாய்க்கு சுவையாக காரம் எண்ணை சேர்க்கக் கஸ்டம்; அதுகூட ஆரம்பத்தில் நன்கு சாப்பிட்டேன் எனும் திருப்தியுண்டு.
மேலும் இச் செய்தி பார்த்ததும் ,இவ்வளவு இலகுவான வைத்தியமுறை வந்துள்ளதென்பது;மகிழ்வாகவுள்ளது.
யாராவது அனுபவம் உள்ளவர்கள்;எஸ்கே அண்ணாபோல் மருத்துவம் சார்ந்தோர் மேலதிக அனுகூலங்கள் பற்றிச் சொல்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.
வரவு கருத்துக்கு நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

ENNAR said...

யோகன் தெரியாததை தெரிந்து கொண்டோம் தங்களால் நன்றி நல்லது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
"தெரியத் தெரிய தான் தெரியாமை தெரியுது"
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
தாங்கள் மிகச்சரியான மேலதிக தகவல்கள் தந்துள்ளீர்கள். இங்கே 2005 ல் கூட எனக்கு இப் முறையை வைத்தியர் சிபார்சு செய்யவில்லை. இதைப் செய்தியில் பார்த்ததும் கிரகித்துக் கொண்டு தகவல்களையும் குறிப்பெடுத்துவிட்டு;படமொன்று போடுவோமே! என இணையத்துள் சென்றபோது; தகவல் கொட்டிக் கிடந்தது. பதிவின் நீளம் கருதி ; வைத்தியச் சொற்களின் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் மனதில் கொண்டு,அதை வாசகர் ஆர்வத்தையொட்டிய விடயமாக விட்டுவிட்டேன்.மேலதிக தகவல் ,வரவுக்கு நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்