Wednesday, January 31, 2007

அமிதாப் பச்சனுக்கு பிரான்சின் உயர் விருது!



டெல்லியில் உள்ள பிரான்சின் தூதராலயத்தில் 27 ஜனவரி 2007; சனிக்கிழமை, பிரஞ்சுத் தூதர் திரு. டொமினிக் யிரா(Mr.Dominique Girard) வால்; பிரான்சின் உயர் விருதான "செவலியே"(chevalier de la légion d'honneur) விருது;
இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற அமிதாப் பச்சன்,"இது முழு இந்தியச் திரைத் துறைக்குக் கிடைத்த மரியாதை" எனக் கூறியுள்ளார்.

இவ் விருது ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


விருது பெற்ற வித்தகரை வாழ்த்துவோம்!


*படம் BBC இல் இருந்து பிரதி பண்ணியது!

5 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் .. இந்த தகவல் அடங்கிய பதிவுக்கு நன்றிகள்

வெற்றி said...

தகவலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
சினிமாவில் ஆர்வமுள்ள உங்களுக்குச் செய்தி தெரிந்திருக்குமென நினைத்தேன்.
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

வணக்கம்...சினிமாவில் ஆர்வம் உள்ளவன் தான். நீங்கள் சொல்வது.சரி...என்றாலும் இந்த செய்தியை உங்களால் தான் அறிந்தேன்.. உந்த செவாலேய விருது சிவாஜியை தவிர வேறு யாருக்கும் இந்திய உபகண்டத்தில் உள்ள ஆக்களுக்கு கொடுத்திருப்பதை பற்றி தெரியுமோ யோகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!

இந்த விருது; பாலமுரளி கிருஸ்ணாவுக்குக் கிடைத்ததை இந்தியா ருடே யில் படித்த ஞாபகம்; ஈழத்து இளவாலை அமுது என்பவர் பற்றிய செய்தியொன்றில் "செவலியே இளவாலை அமுது" எனக் கிடந்தது. இவருக்குக் கிடைத்திருக்கலாம் ;இவர் அன்னை திரேசா பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
எனினும் நிச்சயமாகத் தெரியவில்லை.
பலர் குறிப்பாக தென்னிந்திய நண்பர்கள் எவருமே படிக்காததால் எந்தப் புதிய செய்தியும் இல்லை.
யோகன் பாரிஸ்