Wednesday, February 07, 2007

பிடிக்காதெனினும்; இது பிடித்தது!!

முதல் வேலை!

என்ன இது வேலை!
எனக்குப் பிடித்தவாறு
உடையணிய உரிமை தர மறுக்கும் வேலை!

என் தாய் மொழி!
என் நாவில்
எட்டிப் பார்க்கக் கூடத் தடை போடும் வேலை!!

போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய்
என் முகத்தில்;ஒட்டிவிட்ட வேலை!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய்ப் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்யூட்டரில் கட்டிப் போட்டவேலை!

காந்தி விரட்டியவெள்ளயன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை
கலைக்கும் வேலை!

இங்கே கற்றதையும்,பெற்றதையும்
வெளிநாட்டு டாலருக்கு
அடகு வைத்துவிட்ட வேலை!

குவியலாய் இறுகிப் போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்கு நூறாய் சிதறடித்தது
"இரு துளி கண்ணீர்"!

"ரொம்பச் சந்தோசமா இருக்கடா"
முதல் மாத சம்பளத்தை நீட்ட;
தாயின் கண்ணில் தோன்றிய
"ஒரு துளி!!

"ரொம்ப கஸ்டமா இருக்குடா"
வெகு நாளாய் வேலை தேடும்;
நண்பனின் கண்ணில் தோன்றிய
"மற்றொரு துளி!

கெ.கார்த்திக் சுப்புராஜ்இதை சென்னையிருந்து சிவா எனும் ;நண்பர்
அனுப்பியிருந்தார்.


சொல்லப்பட்டவை! உண்மையே!

சிவா ;இத்துறை சார்ந்தவர் அனுபவித்துள்ளார்.

நீங்களும் சொல்லுங்கள்!

8 comments:

சினேகிதி said...

enkaum oru fwd vanthu irunthathu.software developers ondum theriyama velai thodangi piraku interviewer a varumpothu ondum theriyama velaiku vara aala interview panidu ivanuku innum nalla nadika theriyella interview la enadaya enaku athu therium ithu therium kathai viduran endu thanaku thane solluvar.vasika siripa irukukum.PDF la iruku type pannai poda panji.

சின்னக்குட்டி said...

காந்தி விரட்டிய

வெள்ளைக்காரன் நி்த்திரை காண

என் நித்திரை கலைக்கும் வேலை

குமரன் (Kumaran) said...

இதனைக் கவிதை எனச் சொல்ல முடியவில்லையெனிலும் நன்றாக இருக்கிறது. அவரின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சினேகிதி சொன்னது!
"எனக்கும் ஒரு fwd வந்திருந்தது.மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் ஒன்றும் தெரியாமல் வேலை தொடங்கி;பிறகு நேர்முகத் தேர்வாளராக வரும் போது;ஒண்ணும் தெரியாமல் வேலைக்கு வாற ஆளை; நேர்முகத் தேர்வு பண்ணிவிட்டு;இவனுக்கு இன்னும் நல்லா நடிக்கத் தெரியல!; நேர்முகத் தேர்வில எனடயே எனக்கு அது தெரியும் இது தெரியும் கதை விடுரான். எண்டு தனக்குத் தானே சொல்லுவார்.வாசிக்கச் சிரிப்பாக இருக்கும்.
PDF ல இருக்கு டைப் பண்ணிப் போடப் பஞ்சி!
சரி சினேகிதி!!
இந்தத் துறையில் இப்படியும்;சிரிப்புக்கள் உண்டா?? எனக்கு இவை புதிது!
முடிந்தால் தட்டச்சிப் போடுகிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
பொடியனின் இந்த "அடி" நமக்கும் பிடித்தது!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் குமரன்!
இதைக் கவிதையென நான் கொள்ளுவேனா? ஆனால் வகைப்படுத்துதலில் வேறு பிரிவில்லாததால் இட்டேன்.
"அனுபவம்" என்பதாகவே label ல் போட்டுள்ளேன்.
சொல்லவந்தவர்; உண்மையையும்;அனுபவத்தையும் அழகாக சொன்னது. பிடித்தது.
அதனால் பதிவிடலாமெனப்பட்டது.
வரவு கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

அனுபவ வார்த்தைகள் அத்தனையும் நிஜம்.
பன்னாட்டு நிறுவன வருகையால் தொலைந்து போகும் இந்திய குடும்ப முறை பற்றி வாசித்த கட்டுரை ஞாபகத்துக்கு வந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும்;பன்னாட்டு நிருவன வருகையும்;போர்ச்சூழலிலும் நம் நாட்டிலும்
பல வாழ்வுமுறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்தியாவின் நிலையைச் சொல்லத் தேவையில்லை. ஏற்கனவே மும்பாயின் தாக்கத்தால் அல்லலுறும் நாட்டில் இவற்றின் வாழ்வியல் தாக்கத்தின் எதிரொலிப்பே! இவ்விளைஞரின் எழுத்து.
மிக உண்மை! அதனால் படித்ததும் ;பிடித்தது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்