Wednesday, February 21, 2007

விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது!!


பரபரப்பான காலை வேளை; போக்குவரத்துச் சந்தடி சத்தம்;
இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"ஏய்!...எங்கேயோ..பூனைக்குட்டி கத்துற சத்தம் கேட்குது பாரு"..என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒரு நண்பன்.

தூரத்தில் நடைபாதையோரத்தில் கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது.

நண்பன் சென்று அந்தக் கல்லை நிமிர்த்திப் பூனைக்குட்டியை விடுவித்தான்.
அடுத்த நண்பனுக்கோ ஆச்சரியம்!!

தெருவில் எத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை.

உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்தது தான் என்றான்.

"விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது.என்றான் பூனைக்குட்டியைத்
தூக்கிவிட்ட நண்பன்!

"எப்படிச் சொல்கிறாய்?"

"இப்போ பார்" என்று கூறித் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை;
நடை பாதையில் போட்டான்.

உடனே நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"பார்த்தாயா இதுதான் மனித இயல்பு.காசு என்றதும் காது திறந்து கொள்கிறது" என்றான் நண்பன்.

**மன்னிக்கவும்!
இதை நான் கற்பனை செய்யவில்லை. காலை என் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து;
மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார்.நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிரலாமே எனப்
பதிவிட்டேன். அதைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.
பின்னூட்டத்தைப் பார்த்ததும்! அதைப் குறிப்பிட வேண்டிய அவசியம் உணர்ந்தேன்.
என்ன? இந்த ஆள் இப்படியெல்லாம் யோசிப்பதாவது? அப்படியேன நினைக்கிறீங்களா?

***படம் :நீர்கொழும்புக் கடற்கரை மாலைச் சூரியன்!

17 comments:

Anonymous said...

ரசித்தேன்...

செந்தழல் ரவி

சின்னக்குட்டி said...

ஆகா.. உண்மை தான்..தொடருங்கள்...நீதி கதைகளை..

பகீ said...

காசு என்றதும்.............. உண்மைதான்.

யோகன் அண்ணா புது அடைப்பலகை மிக அழகாக இருக்கிறது. சயந்தனின் கையும் வந்து போயுள்ளது போலுள்ளது. அப்படித்தானே

sathiri said...

நல்லதொரு கதை யோகன் பாராட்டுக்கள் தொடருங்கள்

MyFriend said...

நல்ல ஒரு கருத்தை அழகாய் ஒரு கதையில் சொல்லியிருக்கீங்க யோகன்.

:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
ரசித்தீங்களா? யாராவது ரசிப்பார்கள் என்பதால் தான் ;படித்ததைப் போட்டேன்.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
இது என் கற்பனை எழுத்தில்லை என்பதைக் குறிப்படத் தவறிவிட்டேன்.
இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடிந்தால்; ...
வரவுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பகீ!
உண்மையை ரசித்தீர்களா?
ஆம் முகப்பு சயந்தனின் கைவண்ணமே!
அவர் வகுப்புக்குப் போய் என் "மேதாவித்தனம்" பற்றிக் கூறிய போது
அவரே! இட்டுத் தந்தார்.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாத்திரி!
"எல்லாப் புகழும் அதை எழுதியவருக்கே"..நான் படித்து ரசித்ததைப் பதிவிட்டேன்.
அதை எழுதியது யாரெனவும் தெரியாது. ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பினார்.
முதற் தடவை வந்து கருத்துக் கூறியுள்ளீர்கள்!
நன்றி

கானா பிரபா said...

நல்ல நீதிக்கதை, சயந்தனின் கைவண்ணம் நன்றாக உள்ளது, ஆனால் ஆக்கப்பகுதி நிரலி கீழே வந்திருக்கிறதே?

Anonymous said...

சூப்பர் மாமு

Anonymous said...

சூப்பர் மாமு

குமரன் (Kumaran) said...

உண்மை ஐயா. நானும் பலமுறை இதனை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். நான் கவனிக்கும் விதயங்களை என் மனைவி கவனிப்பதில்லை. அவர் கவனிப்பதை நான் கவனிப்பதில்லை. எங்கள் மகள் கவனிப்பதை நாங்கள் கவனிப்பதில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அனானி!
என்ன "சுப்பராக" இருந்தாலும் இப்படி!!! நாலு தரம் பின்னூட்டி;என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.
ரசித்தால் சந்தோசமே!

Unknown said...

//விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது//
சரியாகச் சொல்லி இருக்கிறார் நண்பன். நல்ல கதை. பதிவிலிட அதைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு உணர்வு வேண்டுமே யோகன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
ஆம்; "தாயும் பிள்ளையுமானாலும் ,வாயும் வயிரும் வேறென்பாங்க!"...அதனால் எண்ணங்கள் ;வேறே!
எனினும் பணமெனும் போது;மனித எதிர்த் தாக்கமே!!ஒன்றாகத் தான் இருப்பதாக நினைக்கிறேன்.
வரவு கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுல்தான் அண்ணா!
சிலவற்றைப் படிக்கும்போதே யாருடனும் பகிரவேண்டும் போல இருக்கும். இந்தக் கதையும் அவ்வகையே!
அதனால் பகிர்ந்தேன். படித்தவர்கள் மகிழ்ந்துள்ளது; கண்டு மகிழ்வே!
நல்ல கருத்தை மிக எளிய நடையில் கூறியது. யாவருக்கும் பிடித்துள்ளதெனக் கருதுகிறேன்.
வரவு;கருத்துக்கு நன்றி