Wednesday, March 07, 2007

பாரதியார் பாடல்-தேவாரம்- ஒளி ஒலி -நித்யஸ்ரீ

இது ஒரு பரிசோதனைப் பதிவு!!

எல்லோரும் பாட்டுப் படமெல்லாம் காட்டுராங்களே!!
நாமும் முயன்று பார்ப்போம்.
என ஒரு சிறு முயற்சி!!


நம்மிசை, ஏன் திரையிசையிலும் முத்திரை பதித்த நித்தியஸ்ரீ!!

">

12 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் ...உங்கள் பரிசோதனை முயற்சி வெற்றியே வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
நீங்கள் அதுவும் இந்த இணையத்தில பூந்து விளையாடுபவர்; வந்து வெற்றி என்றது; வலு புழுகமாக் கிடக்குது.
சரி ஒரு பாடமை மாத்திரம்; இங்கே அழுத்தவும் எனப் போடுராங்களே!!அது எப்படி?? தனி மடல் விளக்கமாக இடவும்.
வரவுக்கும் சுடச்சுட வெற்றியைக் கூறியதற்கும் மிக்க நன்றி

துளசி கோபால் said...

வெற்றி வெற்றி வெற்றி

வாழ்த்து(க்)கள்.

சின்னக்குட்டியாரின் தனிமடலை எனக்கும் அனுப்புங்கோ:-))))

மாசிலா said...

நன்று, நன்று.

இருந்தாலும் ஒரு வருத்தம்!
பின் இருந்த பலகைகளில் மற்றும் அறிவுப்புகளில் மருந்துக்கு கூட தமிழை பார்க்க முடியாமல் போய்விட்டதே!

மற்றபடி போற்றிக் காக்கப்பட வேண்டிய அருமையான கலைப் பொக்கிசங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
கட்டாயம்;கிடைத்தால் அனுப்புகிறேன். சின்னக்குட்டி அண்ணரும் தருவார் என நினைக்கிறேன்.
சில தொழில் நுட்பங்கள் பிடிபடாததால்; சிறு விடயம் கூட பெரிதாகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாசிலா!
உங்கள் ஆதங்கம் புரிகிறது; வெள்ளையன் நம்மை விட்டுப் போய்விட்டான். நாம் அவனை இன்னும் விடவில்லை.
ஐயாவுக்கும்;சாருக்கும் என்ன வேறுபாடு; நாம் சாரில் மகிழ்கிறோம்;
இங்கே!!நமது கலைஞர்கள் வருவார்கள்;கச்சேரி முடிந்தபின் ;நான் தமிழில் கதைக்க;அவர்கள் ஆங்கிலத்தில்
பேசுவார்கள்;
இந்த நித்திய யிடமும் "பாட்டி எப்படி? சுகமா? என்று நான் கேட்க; O yes;என்றார்.
இதைவிட இங்கே ரி.எம். கிருஸ்ணா வந்த போது; பாரிஸ் பல்கலைக் கழகத்தில்;திரு. மெய்யப்பன் அவர்களிடம் தமிழ் கற்கும் மாணவர்கள்; நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து, "கைகுலுக்கி நீங்கள் மிக இனிமையாகப் பாடினீர்கள்" எனத் தமிழில் கூற ;அவர் "Thank you very much,for coming!" என்றார்;
அந்த மாணவர் உங்களுக்குத் தமிழ் தெரியாதா? எனக் கேட்டபோது; ஆங்கிலம் பழகிவிட்டது;எனச்
சமாளித்தார்.
இவை மாறும்;அதை நம்புவோம். இப்போ மக்கள் தொலைக்காட்சி இந்தத் தமிழ்ப்பணி ஆரம்பித்துள்ளதாமே!!

வைசா said...

நன்றி யோகன். இந்தக் கச்சேரி எங்கு எப்போது நடந்தது என்ற விபரத்தையும் தாருங்கள்.

வைசா

சின்னக்குட்டி said...

உங்களுக்கு தனிமடல் அநுப்பியுள்ளேன்.விளங்காவிடின் சரி வராவிடின் சயந்தனை கேட்டு பார்க்கவும்...உதிலை வகுப்பு எடுக்கிறார் இப்ப

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
இந்தக் கச்சேரி பற்றிய விபரம் ஏதும் எனக்கும் தெரியாது; யூ ருயூப் பில் கர்நாட்டிக்கில் சென்று சுற்றுவேன், அப்படிக் கண்டதே!! இது பொதிகையில் ஒளி பரப்பாகியது போல் உள்ளது; மிருதங்கம் வாசிப்பவர் நித்தியசிறியின் தந்தையார் சிவகுமார், வயலின் பேராசிரியர் கிருஸ்ண மூர்த்தி; மோர்சிங் யாரெனு தெரியல!!
இது பிடித்துது அதுதான் போட்டும் பார்த்தேன். தேறிவிட்டேன் போல் உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நன்றி!
சினக்குட்டியண்ணர்! இரவு முயன்று பார்க்கிறேன். அத்துடன் சயந்தனின் வகுப்புக்கும் போகிறேன்.
துளசியக்காவையும் வகுப்புக்குப் போகும்படி கூற வேண்டும்.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. மிக அருமையான பாடல். உங்கள் முயற்சி நல்ல வெற்றியைப் பெற்றது. (னம் நண்பர் வெற்றி எங்கே சென்றார் என்று தெரியுமா? ஆளைக் காணவில்லை). அடுத்த முயற்சியையும் விரைவில் செய்யுங்கள். அதுவும் வெற்றி பெறும். மிக எளிதே.

முப்பது கோடி முகமுடையாளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொண்டே வருவதைக் கேட்டால் பாடலை மாற்ற பாடுபவர்களுக்கு உரிமை உண்டா என்ற கேள்வி கொஞ்சம் எழுந்தாலும் தற்போதைய நிலையைப் பாடுகிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

இந்த பாரதி பாடலை மீண்டும் பாடலின் விளக்கத்துடன் என் பதிவில் இடலாமா? அனுமதி தருகிறீர்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரனுக்கு!
வெற்றிக்கு எப்போது தான் சொல்லிப் போட்டுப் போகும் பழக்கம் இருந்தது. தமிழ் மணத்தில் காணவில்லையென ஒரு பதிவிடுவோமா??உண்மையில் நானும் தான் அவர் பற்றி யோசித்தேன்.
விசாரிக்கிறேன்.
மேலும்; இப்படி சூழலுக்கு ஏற்றவண்ணம் மாற்றிப் பாடுதல் வெகுகாலமாக நடக்கிறது. குறிப்பாக
மதுரை சோமு; மதுரை மீனாட்சி பற்றிப் பாடும் போது; நல்லிச் செட்டியார் சபையில் இருந்தால்;
"நல்லிப் பட்டுடுத்தும் என் மதுரைத் தாய்" எனப்பாடுவார்;என 'சுப்புடு" ஒரு விமர்சனத்தில் எழுதப்படித்துள்ளேன்.
அந்த வகையில் இதையும் சேர்க்கலாம். இவற்றில் தவறேஇல்லை.
அடுத்து கட்டாயம் நீங்கள் தான் எழுதவேண்டும். பாரதியார் எல்லோருக்கும் பொதுவானவர்.
சிறப்பாக எழுதக் கூடிய நீங்களே எழுதுங்கள்.விரும்பினால் யூ ருயூப் you tube ஒலி ஒளி போடுவதானாலும்
போடவும். உங்கள் பதிவில் மேலும் பலரைச் சென்றடையும் .அன்று இரவு முயலும் போது அதிகாலை ஆகிவிட்டது. அதனால் பாடல் எழுத முற்படவில்லை
மூலம் பலவரிகளைக் கொண்ட பாடல்; இவர் குறிப்பிட்ட வரிகளையே எடுத்துள்ளார்.
நன்றி