Monday, March 26, 2007

கவியரசர் கவிதை கேட்போமா??




அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் - நகைச்சுவை மன்னன் நாகேஷ்
சம்பத்தப்பட்ட காட்சி.
இதில் கவிஞர் கவிதை கூறுகிறார்.

18 comments:

MyFriend said...

இந்த படத்தை நான் இதற்கு முன் பார்ததே இல்லை யோகன். இதை இன்று எனக்கு காட்டியதுக்கு நன்றி. :-)

வைசா said...

கண்ணதாசன் இன்னும் சில வருடங்கள் கூடுதலாக வாழ்ந்திருக்கக் கூடாதா?

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

My Friend;
இதைப் பார்த்ததும்; போட்டதே உங்களைப் போன்ற இளைய தலைமுறையினரை மனதில் நினைத்தே!! அது ஒரு பார்க்கக்கூடிய; படம்.
வரவு கருத்துக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
சில மரணங்கள் என் மனத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியது. குறிப்பாக கவியரசர்;சீர்காழியார்.
வரவு கருத்துக்கு நன்றி!

கானா பிரபா said...

நல்லாயிருந்தது அண்ணா, கவியரசர் படங்களில் தானும் பாட்டுக்குக் குரலசைத்து நடிக்கவேண்டும் என்று அடம்பிடித்த சந்தர்ப்பங்களை மெல்லிசை மன்னர் சொல்ல வாசித்திருக்கின்றேன். வெண்ணிற ஆடையில் அது நிறைவேறியும் இருந்தது.

கவி ரூபன் said...

ஆகா.... அருமை

கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி அவரின் சொற்பொழிவை கேட்க விரும்புபவர்கள் :

http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm

நன்றி

செல்லி said...

யோகன்
அபாரம்!
நா:அர்த்தமுள்ள இந்துமதம் எப்பிடி போகுது?
கவி:எல்லாம் கடை வழியாத் தான் போகுது
:-))))
+=++==+=++==
பாக்க முதல் சாஞ்சிருங்க
ஏன் பாத்தா சாஞ்சிடுவேனோ?
:-)))))
அருமையான பகிடியள்!
தந்தமைக்கு நன்றி, யோகன்.

வெற்றி said...

யோகன் அண்ணை,
கவியரசரின் பரம இரசிகன் என்ற வகையில், கவியரசரின் கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கவி ரூபருக்கு
கவி பிடித்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தங்கள் சுட்டியில் கவிஞர் குரல் கேட்டேன்.ரசித்தேன்.
அர்த்தமுள்ள இந்து மதம்...படித்துமுள்ளேன்.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
பச்சை விளக்கு - ஒரு கோப்பையிலே!
சூரியகாந்தி - பரமசிவன் கழுத்திலிருந்து.. அவர் பாடுவது போல் வாயசைத்த அவர் எழுதி ரி.எம்.எஸ் பாடிய பாடல்கள்,எம்.எஸ்.வி இசையமைத்தவை!!
கவிதை சொன்னது; இந்த அபூர்வராகமாகத்தான் இருக்கும். வேறுண்டோ தெரியவில்லை.
இப்படம் நீங்கள் பார்க்கவில்லையா? பாலசந்தர் படம் பார்க்கவும்.j

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சூரியகாந்தி - பரமசிவன் கழுத்திலிருந்து..//

மன்னிக்கவும் அண்ணா, சூரியகாந்தியை வெண்ணிற ஆடை என்று குறிப்பிட்டேன்.
அபூர்வ ராகங்கள் சிறுவயதில் பார்த்தது, மீண்டும் பார்க்கவேண்டும்.

உண்மைத்தமிழன் said...

அன்பு யோகன்.. இந்தக் கவிதையை நாகேஷிடம் கவியரசர் சொல்லும் காட்சி இடம் பெற்றது 'அபூர்வராகங்கள்' திரைப்படத்தில்தான். ஆனால் 'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது' பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'சூரியகாந்தி'. முத்துராமன், ஜெயலலிதா நடித்தது. தமிழ்நாட்டில் உள்ளவர்களே கவியரசரை மறந்து போய்க் கொண்டிருக்கும்போது பாரீஸில் இருந்து நீங்கள் செய்துள்ள இந்த பதிவு பாராட்டத்தக்கது.. வாழ்க வளமுடன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
பகிடியுடன் அந்தக் கவிதையையும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
வரவுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
கவியரசர் ரசிகனுக்கு; கவிதேடிப் போட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!!
இதை பார்க்க உங்களையும் எதிர் பார்த்தேன்.நன்றி

செல்லி said...

யோகன்

weird இல் எழுத உங்களுக்கும் அன்புடன் அழைப்பு வித்தேன் .கிடைத்ததா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மைத்தமிழன்!
அப்பாடலான "பரமசிவன் கழுத்தில் இருந்து"..முத்துராமன் ,ஜெயலலிதா நாயகன் -நாயகியாக நடித்த சூரிய காந்தி படத்தில் இருந்த போதும்; இப்பாடலுக்கு வாயசைத்தது;அதை எழுதிய கவியரசரே!!என்பதையே குறிப்பிட்டேன்.
தமிழர் (உண்மைத்) எங்கிருந்தும் கவியரசரை மறக்கவில்லை.என நம்புகிறேன்.
வரவு,கருத்து,வாழ்த்துக்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

ஐயா. ஐயா. ஐயா. அருமை ஐயா. அருமை. ஒவ்வொரு வசனமும் அருமை. சிரித்துக் கொண்டே இருந்தேன். கவிதை பாடத் தொடங்கியவுடனேயே புரிந்துவிட்டது கவியரசர் என்ன செய்யப் போகிறாரென்று. ஆனாலும் அவர் 'அது தான் ஃபீஸு' என்று சொல்லும் போது குபீரென்று வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்பு குமரன்!
இப்படம் வந்த காலங்களில் கவியரசரைக் அறிந்திருந்தேன். குரல் வானொலியில் கேட்டுள்ளேன். ஆனால் பேசியதை;கவி சொன்னதை பார்க்கக் கிடைக்கவில்லை. ஈழத்தவராகிய எங்களுக்கு இச்சிக்கல் இருந்தது. இலங்கை அரசில் விசாத் தடைக்கு உட்பட்டவர்களில்;கவியரசரும் ஒருவர்.
ஆனால் அக்குறை பாலசந்தரால் தீர்த்தது. இக்காட்சியைச் சேர்த்து பலர் ஆசையைத் தீர்த்தார். பாலசந்தர். என் மரபுக்கவிதையும்..புதுக்கவிதைய்ம் கட்டுரையிலும் இக்கவிதை சேர்த்துள்ளேன். அந்தளவுக்குக் கேட்டதும் பதிந்தது.
கருத்துக்கு நன்றி