கொஞ்ச நாளாக சக பதிவர்கள் ஒரே என் வியர் அறிய பெருந்தொல்லை!!
குமரன் தொடங்கி; ஷ்ரேயா வால்..இப்போ செல்லியும் கூப்பிட்டுள்ளா??
இந்தப் பதிவுகளைப் பார்த்த போது இந்த WEIRD ; வியர் ; விசர் எல்லாம் ஒரு தொடர்பான எப்படி?ஆனது என்றும் யோசித்தேன்.
குமரன் தொடங்கி; ஷ்ரேயா வால்..இப்போ செல்லியும் கூப்பிட்டுள்ளா??
இந்தப் பதிவுகளைப் பார்த்த போது இந்த WEIRD ; வியர் ; விசர் எல்லாம் ஒரு தொடர்பான எப்படி?ஆனது என்றும் யோசித்தேன்.
நம் ஊரில் வயது போனோர் விசர் என கூறமாட்டார்கள். " அவனுக்கு வியரடி"...இந்த "ச " வை "ய"வாக்கிப் போடுவார்கள்.
சமீபத்தில் என் அக்கா என்னைப் பற்றிக் கூறியது.
அவனுக்கு "வியர்! (அவவுக்கு என்னைப் புரியும் அடுத்துப் பிறந்தவன்)
அதனால் எனக்கு என்ன ? வியர் என்று யோசித்தேன்.
*இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை!! அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் "சுணை" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்!என்ன? அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பது!!அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன ? முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளியம் செய்து அடிவாங்குவது..
*வீட்டை ஒரு மிருகக் காட்சிச் சாலை போல் வைத்திருக்க முயன்றது. ஆடு;மாட்டு; கோழியுடன்;நாய் ;பூனை; கிளி மைனா;முயல்; புறா,கினிக் கோழி.
*இளமை முதல் கோவில்; மேளக் கச்சேரி; பின் சங்கீதக் கச்சேரி;கதாபிரசங்கம் கேட்க அலைந்தது.
*வாசித்தல்; வானொலி....பிரியமானது!.
*வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே!!இன்றுவரை விட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு வாழ்க்கை மிகப் பெரிய மாறுதலை என்னில் ஏற்படுத்தா விடிலும்; புதிய சில விசர்ஒட்டிக் கொண்டது.
- எந்த கொடுப்பனவும் (தொலைபேசி;மின்சாரம்;வாடகை போன்றவை)கடிதம் கிடைத்த உடன் காசோலை தயார் பண்ணி வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போவது."காவயித்துக் கஞ்சியானாலும் ,கடனில்லாக் கஞ்சி என்பதில் விசராக உள்ளேன்.
-காட்டூன்;விபரணச் சித்திரம் பார்ப்பது
-ஒரு பொருளை வாங்குமுன் ; அது பற்றி பல தடவை யோசிப்பது
- OLD IS GOLD என்பதில் மாறாமல் இருப்பது!
- கைக்குழந்தைகளில் வீசும் மணம் பால் மொச்சையை ரசித்து நுகர்வது; வயது முதிர்ந்தவர்களுடன் நானே பேச்சுக் கொடுத்து ;அலட்டுவது..
(கட்டாயம் வைத்தியம் செய்ய வேண்டுமென்னிறீர்களா?)
- சந்தையை சாமான் வாங்காவிடிலும் போய் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவது (சரியான விசர் தான் என யோசிக்கிறீர்களா)
-வருடா வருடம் புதுவருட வாழ்த்து அட்டை உறவினர்;நண்பர்களுக்கு 1979 ல் இருந்து தவறாமல் அனுப்புவது.(நான் சம்பாதிக்கத் தொடங்கியதிலிருந்து)
-காலையும் மாலையும் என் பல்கனி பூந்தோட்டத்தைப் தவறாமல் ஒருதடவையாவது பார்ப்பது!
-என்ன சாப்பாடு இருந்தாலும் காலைச்சாப்பாடாக பாற்கஞ்சி...மதியம் ;இரவு கத்தரிக்காய்..உப்பவியல்..குத்தரிசிச் சோற்றுடன் வெகு பிரியம்...
- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது (சோவுடன் பல விடயங்களில் ஒத்த கொள்கை இல்லாத போதும்)
- பத்திரிகைக்கு என் கருத்தையும் ;அவர் எந்தக் கொம்பனானாலும் எழுதுவது...
- சைவனாக இருந்த போதும் கடந்த 20 வருடங்கள் ;செவ்வாய் தோறும் "அந்தோனியாரையும்" தரிசிப்பது.
இதை விட பதிவுகளால் பழகி என் பல வியருகள் நீங்கள் அவதானித்திருக்கலாம்.
இவ்வளவும் போதுமா?
*** இப் படம் ...என் அக்கா வழிப் பேத்தி "பூமிகா"
*** இப் படம் ...என் அக்கா வழிப் பேத்தி "பூமிகா"
29 comments:
யோகன்
//சந்தையை சாமான் வாங்காவிடிலும் போய் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவது (சரியான விசர் தான் என யோசிக்கிறீர்களா)//
இது எனக்கும் பிடிக்கும். இதைத்தான் இங்கை window-shopping எண்டு சொல்லுறவங்கள்.
மானிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு நாங்க முந்திப் போற நாங்கள்.சில்லாலையில் ஒரு மேரி தேவாலயத்துக்கும் போய் மெழுகுதிரி கொழுத்டிக் கும்பிடுறனாங்கள்.
எல்லாம் நம்பிக்கைதான்.
மருதடிக்குப் பக்கத்துல இருக்கிறதால அந்தோனிப்பிள்ளயார் எண்டு சொல்லிக் கும்பிடுறவை.
ஒருபடியா இந்தக் களத்தில இறங்கிவிட்டியள்
யோகன்
அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றி.
உங்க இப் பதிவை என் பதிவில் தொடுப்புக் குடுத்திருக்கிறேன்.
http://pirakeshpathi.blogspot.com/2007/03/weird_25.html
ஆகா. ஐந்தே ஐந்து எழுதுவதற்குள் நான் பெரும்பாடு பட வேண்டி இருந்ததே. நீங்கள் அள்ளிக் கொட்டியிருக்கிறீர்களே. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது உங்களிடம்.
இப்ப உங்களைப் பற்றி முழுமையாத் தெரிஞ்சுகொண்டன் ;-) ஐந்து தான் கேட்டவை, நீங்கள் முழுக்க அவிட்டு விட்டுட்டியள்
//வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே!!இன்றுவரை விட்டுள்ளது.//
வாழ்வின் உயர்ந்த வாழ்வின் நெறி உங்களுக்கு வியராக கிடைத்திருக்கு. இதை விட வேறு என்ன வேண்டும்
வியரடியை விடுங்கோ.
புள்ளை பூமிகா அருமையா இருக்கா.
//இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை!! அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் "சுணை" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்!என்ன? அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பது!!அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன ? முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளியம் செய்து அடிவாங்குவது.. //
நீங்க மட்டும் இல்ல,
வீட்டீல யாரட்டையாவது சண்டை போட்டு அடிவாங்காட்டி
அண்டைக்கு விடிச்ச மாதிரி இருக்காது.
சுணையில்லாம் இருக்கிறதுக்கு ஒரு தில்லு வேணுமுங்க !!!
அது ஒர் அழகிய காலம் :))
மிக நல்ல (Weird) பதிவு.இரசித்தேன்.
ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. ;)
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது
செல்லி!
பல விடயங்களை நாம் ;நமக்குத்தான் உண்டென நினைப்போம்;ஆனால் அதில் சில உலகுக்குப் பொதுபோல் உள்ளது. உங்கள் பின்னூட்டம் கண்டு தெளிந்தது.நன்றி.
குமரா!
நம்ம வீட்டார்,என்னை வியரென்கிறார்கள்; நீங்கள் கற்றுக் கொள்ளப் போகுறீர்களா? பிழைக்கும் வழியைப் பாருங்கோ!!
நன்றி
அப்பு பிரபா!
இந்த " அவுட்டுக் கொட்டலால்" தான் ; என் அக்காள் ;என்னை வியர் என்கிறவ!!
ஆனால் முழுதும் கொட்டயில்ல!!
உந்த "வியரை" யும் பார்க்க வந்ததுக்கு நன்றி!
பூமிகா குட்டி பயங்கர அழகு...(உங்க பாஷையில சொன்னா வடிவு...) இமெயில் ஐடி. இருக்கா அந்த பாப்பாவுக்கு :)))))))))
யோகன்!
அட இந்த "வியர்" எனக்கு எத்துப்படாமல் போயிட்டுதே. அதுக்குப் பிறகு மத்ததெல்லாம் என்ன..:))
யோகன்,
நீங்கதான் உண்மையிலேயே வியர்ட்டான விஷயங்களை பற்றி எழுதியிருக்கீங்க.. :)
உங்க பதிவை தெனாலி கமல் பேசும் தோனிலே படித்து பார்த்தேன். ;-)
பூமிகா...
உங்கள் "வியர்" பதிவு கண்டு, "உண்மையெல்லாம் சொல்லி என்னிடம் இனி நன்றாக மாட்டிக் கொண்டீர்கள் தாத்தா" என்று சிரிக்கிறாளோ! :-)))
அச்சச்சோ!
இன்னமும் நான் என் வியர்டு பதிவைப் போடவில்லையே! சரியான வியர்டாய் இருப்பேன் போல இருக்கே! அழைத்த குமரனும், வெட்டிப்பையலும் அடிக்க வருவதற்குள் போட்டு விட வேண்டும் :-)
சின்னக்குட்டியர்!
என் ,எந்த திட்டமுமே இல்லா வாழ்வு ;உங்களுக்கு "வாழ்வின் உயர்ந்த நெறி"!!
எனக்கு ஆதரவாக ஒருவர்!!
நன்றி
//- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது //
இது கொஞ்சம் வியர்டா தான் இருக்கு யோகன் அய்யா :))..
பாப்பா ரொம்ப அழகு.
வியர்டுக்குள்ளும் வித விதமான நபர்கள் இருப்பதில் வியப்பே இல்லை.
நிங்க நல்ல வியர் தன்.
பாப்பா பூமிகாவும் அதைத்தன் சொல்லி சிரிக்கிறா.
சுளசியக்கா!
பூமிகா நன்றாக உள்ளா? 29- 04 அவர் தன் 2 வயது பூர்த்தியாகி 3 வயதாகிறார்!
சாடையாக கதைப்பார். சில படங்கள் தனிமடலிடுகிறேன். இப்போ சிறு முக மாற்றமுண்டு.
Thillakan!
என்ன? சுணையில்லாமல் இருக்க ஒரு தில் வேண்டுமா?? அதுதான் போல் அந்தக் காலங்களில்
"எருமை மாட்டில் மழை" எனக்கூறினார்கள்.உண்மை "எருமையாகத் தான் இருந்தேன்.
ஆதரவுக்கு நன்றி
Rajj!
இந்த வியருக்கும் இவ்வளவு ரசிகரா?? ஆச்சரியமாக இருக்குங்க? இதை அப்படியே பிரதி யெடுத்து
என் அக்காவுக்கு அனுப்பப் போகிறேன்.( அவ என்னை மிகக் கேவலமாக நினைக்கிறார்- என் "தில்" அவருக்கு தெரியவைக்க வேன்டும்)
நன்றி!
-l-l-d-a-s-u!
இங்கே "துக்ளக் " விற்பனைசெய்யும் கடையில்; என்னைக் கண்டதும் கூறுவது" இந்தா வாரார்"..நீங்க திருந்தவே மாட்டீங்களா??ஆனால் என்னால் விட முடியவில்லை. விட எதுவுமில்லை. அவர் ஈழம் பற்றிய கருத்துக்குப் என், பதில் கருத்துண்டு. 11- 04- 2007 ;பார்த்துவிட்டே எழுதுகிறேன்.
நன்றி
ரவி!
பூமிகாவிடம் நீங்க ஐடி கேட்டவிடயம் கூறினேன்.
அவ அப்பாஅம்மாவுக்கு மிக்க சந்தோசம்!(புத்திசாலி இஞ்சினியர்;அத்துடன் புரட்சிகர கருத்துடைய;சீதனத்துக்கு எதிரான பையன் என்றால் விடுவாங்களா!)
நன்றி!
மலைநாடர்!
அட நம்ம "வியர்" ;உங்களைக் கூட இந்தப்பக்கம் இழுத்துவிட்டுது.
நன்றி!
My friend!
என்ன? நான் தான் "உண்மையான " வியர் என்கிறீர்களா?
ஈழத்தமிழை ..அட தென்னாலி கமல் போல் படித்துப் பார்த்தீர்களா??
எனக்கு கருணாநிதி சொன்ன செய்தியை வாசிக்கும் போது,
அவர் குரலில் கிரகிக்கும் பழக்கம் உண்டு. சம்மந்தப் பட்ட
குரல் கேட்டுப் பழக்கமிருந்தால் இப்படி செய்ய வரும்.
ரவிசங்கர்!
நம்ம "வியர்" பார்த்ததும்; உங்க வியர் ஞாபகம் வந்துவிட்டுதா??
ஓடிப்போய் சொல்லுங்க.
சந்தோஷ்!
இந்த "துக்ளக்" காசுகொடுத்து வாங்கிப்படிப்பதை பலர் வியராகத்தான் கருதுகிறார்கள்;(சிலர் ஓசியில் படித்துவிட்டு;காசுகொடுத்து வாங்கிப் படிப்பதை விசர் என்பார்கள்). என்ன? செய்வது. அந்த எள்ளல் எனக்கு மிகப்பிடிக்கிறது.
பாப்பா அழகாங்க!!அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி விடுகிறேன்.
நன்றி!
வல்லி சிம்ஹன்!
அடடா! என்ன? நல்ல விசரென நினைக்கிறீங்க!!
நன்றி!!
பாப்பாவுக்கு நாம வியர் தான் ;அதில் சந்தேகமில்லை;
Post a Comment