பிரான்சின் தொடர் வண்டி சேவை யான "SNCF " தனது "மிக அதி வேகம் " TGV யின், 26 வருட சேவையில் ; மேலும் தனது வேக விரிவாக்கத்தில்; சென்ற வாரம் உலகில் அதிவேகமான சேவையாக மணிக்கு 574.8 கிலோமீட்டர் வேகத்தை வெற்றிகரமாகக் கடந்து சாதனை புரிந்துள்ளது.
அதாவது வினாடிக்கு 150 மீட்டர்கள்.
1990 ல் இதன் அதி உயர் வேகம் 513.3 கிலோமீட்டர்/ மணி யாக இருந்தது.
இப்புதிய சேவை கிழக்குப் பிரான்சுக்கு முதலும் பின்பு படிப்படியாக ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் பயண நேரம் வெகுவாகக குறையவுள்ளதால்; பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது.
சமீபகாலங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகளால் ; விமான நிலையங்களில் ஏற்படும் வீண் கால விரயத்துக்குசிறந்த மாற்றீடாகக் கணிக்கப்படுகிறது.
அத்துடன் , ஆரம்ப காலத்திலிருந்து பாரிய விபத்தெதனையும் சந்திக்காது; பாதுகாப்பான சேவை எனப் பயணிகள் மத்தியில் பெயரெடுத்துள்ளதால், மிகுந்த எதிர் பார்ப்புடன் இச்சேவை வரவேற்கப்படுகிறது.
18 comments:
இப்போது உள்ளூர் தொலைக்காட்சியிலும் செய்தியில் காட்டினார்கள், என்னதொரு வேகம். 4 மணி நேர பிரான்ஸ் - ஜேர்மனி பயணத்தொடுகை இனி 2 மணி நேரமாகுமாம் உண்மையா?
வணக்கம்.. யோகன்.. இந்த செய்தியை இங்கு தொலைக்காட்சியிலும் பார்த்தம். உந்த வேகத்தில் ஓடி ஊர்மனைக்குளேளை பிச்சு கொண்டு போகாவிட்டால் சரி
இந்த train ஐப் பற்றி இன்று இங்கு news
இல் காட்டினவங்கள். அரை மணித்தியாலத்தில பிரான்ஸ்சில இருந்து ஜேர்மனி போகலாமாமே!.
பிரபா!
பாரிஸ் - பிராங்போட் மொத்தம் 550 கிலோமீட்டர்; இதன் மூலம் 1 மணித்தியாலத்தில் போகமுடியும். ஆனால் நிச்சயம் பெரு நகர இடை நிறுத்தங்களுடன் 2 மணியாக நிர்ணயிப்பார்கள்.
நான் இப்போ உங்கள் கேள்விகளின் பின் மேலதிகமாக வாசிக்கிறேன்.
வரவு கருத்துக்கு நன்றி.
சின்னக்குட்டியர்!
உந்த பிச்சுக் கொண்டு போனது இது வரையில்லை; இனியும் இராதென நம்புவோம்.வந்து ஒருக்கா ஏறித்தான் பாருங்கோவன்."ம்".. எல்லாஇடமும் காட்டிப் போட்டார்கள்.
வரவு கருத்துக்கு நன்றி
செல்லி!
ஆம், அரை மணித்தியாலத்தில் ஜேர்மனி எல்லையை அடையலாம்.
உந்த ரெயினைப் பாத்துட்டியள்.
நன்றி
அண்ணை,
சின்னப்பிசகெண்டாலும் அந்திரட்டிக்கு எலும்பும் மிஞ்சாது.
என்ர சிபாரிசு நடை அல்லது மாட்டுவண்டில்தான்.
பிரென்ச் தொழில்நுட்பத்தின் மேலுமொரு சாதனை.
வைசா
WoW! 1000 கி.மீ தூரத்தை 1 மணித்தியாலத்தில் அடைந்துவிடலாம்.
இந்த புகையிரதத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு 10 அல்லது 15 நிமிடங்களில் சென்றுவிடலாம், இல்லையா?
இந்த வேகத்தில் ஓடும் புகையிரதத்தில் பிரயாணம் செய்து பார்ப்பதற்காகவே ஒருக்கால் பிரான்சுக்கு வர வேணும் போல இருக்கு.
யோகனண்ணை, இந்த துரித வேகப் புகையிரதத்தில் நீங்கள் பயணித்திருக்கிறீர்களா? எப்படி அனுபவம்? பயணித்திருந்தால் உங்கள் அனுபவத்தையே ஒரு பதிவாகப் போடலாமே.
படத்தில் பார்த்தால், பெட்டிகளும் நிறைய உள்ளனவே யோகன் அண்ணா!
அதி வேக வண்டிகள் எல்லாம், குறைந்த பெட்டிகளுடனே செல்லும் என்பதெல்லாம் பொய்யாகி விட்டது போலும்.
விமானக் காத்திருப்பு மற்றும் பாதுகாப்பு சோதனை நேரத்துக்குப் பதிலாக, இதில் ஜாலியா ஊர் போய் விடலாம் போல் உள்ளதே!
பெயரிலியாக வந்த அன்பருக்கு!
"நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன கதை" யாக இருக்கு உங்க; கதை . வருவது எங்கிருந்தாலும்
எவருக்குமே வரும்!!
நீங்கள் நடயை நம்புவது உங்கள் விருப்பம்; நான் இதை நம்பி ஏறவே உள்ளேன். இவள் அக்கா "யூரோ ஸ்ராரில்-EUROSTAR" நான் சுமார் 30 தடவை பயணித்து விட்டேன்.
வைசா!
ஒரு நாட்டின் அமைதி என்பது; வளர்ச்சிக்கு முக்கியம். அதை இவர்கள் நன்கு பயன் படுத்துகிறார்கள்.
அதனால் சாதனையும் செய்கிறார்கள்.
வெற்றி!
இந்த வகைவண்டி, நம் நாட்டுக்கு அவற்றின் உச்சக் கட்ட வேகமெடுக்குமுன் , சேருமிடம் வந்துவிடும்.
*யாழ் - கொழும்பு , 2 மணி நேரத்தில் சேவை தந்தாலே போதும்.
** கட்டாயம் வந்து ;பயணம் செய்து பார்க்கவும்.
*** இங்கு இப்போ பெருநகரங்களுக்கிடையில் உள்ள சேவை; இவ் வகையே ,ஆனால் சற்று வேகம் குறைவு. லண்டன் "யூரோஸ்ரார் " - 2மணி 33 நிமிடம்;சுகானுபவமே!!
இந்த வண்டி யூலை மட்டில் சேவைக்கு வரும் அப்போ முயல்வேன்.
ரவி சங்கர்!
இவ் வகை வண்டித் தொடர், இதுவரையில் 2 இயந்திரம் உட்பட சுமார் 15 முதல் 18 பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.
இப் புதியது; சுமார் 10 பெட்டியில்லாவிடில்; தேவையை நிவிர்த்தி செய்யாது.
விமான நிலையச் சிக்கல்களால் ஐரோப்பியப் பெருநகர் யாவும்; இச்சேவைக்குள் கொண்டுவருவதே!
திட்டத்தின் நோக்கம்.
கூட்டு முயற்சியாலும், வரவேற்பாலும் வெற்றியளிக்கும்!
இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்குள் வந்த முதல் கேள்விகள்: இந்த வேகத்தில் போனால் காதை அடைக்காதா? ரோலர் கோஸ்டரில் சென்ற அனுபவம் கிடைக்குமா? :-)
யோகன் ஐயா. இதற்கெனவே பிரான்ஸுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
அன்புக் குமரன்!
இவ் வகை வண்டிகள் விமானம் போல் உயரப் பறக்காததால் காதடைக்கும் தொல்லையில்லை; அத்துடன்
சாளரங்கள் , கதவுகள் யாவும் காற்றிறுக்க அமைப்புடன்; வளிபதனப்படுத்தப்பட்டது. இதனால் எமக்கு வெளிக்காற்றுடன் பயணிக்கும் போது தொடர்பில்லை; வெளிக்காட்சி அசைவைக் கொண்டே வண்டி செல்லும் வேகம் உணரப்படும். இருக்கைக்கு முன் உள்ள சிறு மேசை மேல் வைத்த நீர்க் குவளை
தளம்பாது. அப்படி மென்மையான அசைவு.
நிறுத்தத்தில் கதவுகள் மாத்திரம் திறக்கும். ஒரு கதவு சரியாகப் பூட்டாவிடிலும் ,வண்டி அசையாது.
தாராளமாக வந்து இதை அனுபவிக்கவும்.
அருமையான செய்தி.. இந்த ரயில் ஜப்பான் புல்லட் ரயிலை வவிட அதிவேகமானதா?
My Friend!
ஜப்பன் புல்லட் வண்டிதான் (443 கிலோ/மணி) இவற்றுக்கு முன் மாதிரி ;அதைப் பின்பற்றி இப்போ வேகம் கூடியது; இது தான் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Post a Comment