ஆடு பாம்பே!!
நான் இங்கே இணைத்திருக்கும், ஒலி ஒளி விவரணச் சித்திரங்கள் , உலகிலே மிகப் பெரிய விசப் பாம்பான "இராஜ நாகத்தினது".
இந்த இராஜ நாகம் இந்தியா;தென்சீனா;மலேசியா,பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்காசியக் காடுகளில்
வசிப்பது.
இது சுமார் 18.5 அடி (5.7 மீ) நீளமும்; 44 இறாத்தல் (20 கிலோகிராம்) எடையும் உடையதாகவும் ;25 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய பாம்பினமாகும்.
இதன் விசம்; நொடியில் கொல்லக் கூடியது. இது படமெடுத்தாடும் போது இதன் உடலின் முக்கால் பகுதி
நிலத்திலிருந்து மேல் இருக்கும். அத்துடன் மிக மூர்க்கமான சீறும் சத்தத்தையும் உடையது.
இந்த இராஜ நாகத்தின் தனித் தன்மையே! இது ஏனைய பாம்பு வகைகளை உண்பது. மலைப்பாம்பு கூட
தப்பமுடியாது.
அதனால் தான் கிரேக்கில் " OPHIOPHAGUS " அதாவது "பாம்பு தின்னி "எனும் பெயரில் இதை அழைப்கிறார்கள்.
இந்த இராட்சதப் பாம்பை இவர்கள் கையாளும் விதத்தைப் பாருங்கள்.
பாம்பெனில் படையும் நடுங்கும்; ஆனால் சிலர் நடுங்குவதுமில்லை ஒடுங்குவதுமில்லை. அதை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.
இக் காட்சிகளை நான் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.
இதை you tube ல் பார்த்தபோது உங்களுடன் பகிர எண்ணினேன்.
21 comments:
"மயிற்கூச்செரிய வைக்கும்"எனச் சொல்வார்களே... அது இதுதான் போலும், நண்பரே!
முன்னரே டிஸ்கவரியில் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் பரவசப்படுத்தும் படம் இது.
வழங்கியமைக்கு நன்றி.
யோகன்
எனக்கு பாம்பென்றால் நல்ல விருப்பம்.பயப்படமாட்டேன்.
//இந்த இராட்சதப் பாம்பை இவர்கள் கையாளும் விதத்தைப் பாருங்கள்.//
இந்தப் பாம்பை இப்போதான் பாக்கிறேன்.
நல்ல பதிவு, ஆனா கனபேர் பயப்பிடப் போகினம்.
நன்றி
VSK அண்ணா!
நான் ஆரம்பத்தில் விவரணச் சித்திரம் பார்க்கும் போது ; 1930 ல் படமாக்கப்பட்ட வியட்னாமிய மலை வாழ் மக்கள் வழிபாடு செய்யும் இராஜ நாகத்தை கறுப்பு வெள்ளையில் பார்த்து மலைத்துப் போனேன்.அப் பெண்ணில் தலைக்கு மேல் படபெடுத்து ஆட்டம் போட ;அதன் கழுத்துப் பகுதியைத்
தொட்டு அப்பெண் காட்டும் போது; தெய்வீக சக்தி உள்ளவராக கருதி குடிமக்கள் அவரை வழிபட்டார்கள்.
இப்படி விபரங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். இவர் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியவர். இணையத்தில் கிடைத்தது. பெரு மகிழ்வைத் தந்தது. பல தடவை பார்த்து மகிழ்ந்து விட்டே
பதிவிட்டேன்.
//நல்ல பதிவு, ஆனா கனபேர் பயப்பிடப் போகினம்.//
ஹிஹி நான் பயப்படமாட்டன்.. நாங்கள் இச்சாதாரி பாம்பையே கண்டனாங்கள்..
யோகன் ஐயா, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் உங்களைப்போலவே ஒரு விவரணப் பட ரசிகன்.
முதல் கோப்பில் வருபவர் ஆஸ்டின் ஸ்டிவன்ஸ், எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். இவரது விவரணப்படங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
இரண்டம் கோப்பில் உள்ளவர்கள் டாக்டர் பிராடி பார் மற்றும் ஜெர்ரி மார்டின். ஜெர்ரி மார்டின் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பாம்பியல் நிபுணர். இவர் ரோமுலஸ் விடேகரின் கீழ் பயின்றவர். ( ரோமுலஸ் -அமெரிக்க நாட்டினை சேர்ந்தவர், சென்னை முதலைப் பண்ணையின் நிறுவனர்.) மூன்றாவது கோப்பில் ராஜ நாகம் சாரை பாம்பினை உண்பதனை ஆவணப்படுத்தியது ரோமுலசும் ஜெர்ரி மார்டினும்தான்.
மார்க் ஓ சியா என்று ஒருவர் இருக்கிறார், இவரது விவரணப்படங்கள் காணக் கிடைத்தால் காணத்தவறாதீர்கள். http://www.markoshea.tv/
ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் ( http://animal.discovery.com/fansites/austinstevens/austinstevens.html )
த்ரில்லிங்கா இருந்துச்சி.
எனக்கு பாம்புகள டீவில பாத்தாதான் பயம், நேர்ல பாத்தா பயமில்ல
அருமையான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி Johan-Paris.
யோகன்! நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? பாவி! இன்று தூக்கம் தொலைஞ்சுது. கை, கால் நடுங்குது.
புள்ளிராஜா
யோகனண்ணை,
நல்ல சுவாரசியமான தகவல்களை எல்லாம் தேடிப்பிடித்துத் தருகிறீர்கள். மிக்க நன்றி.
எனக்குப் பாம்பென்றால் மிகவும் பயம்.
/* இது சுமார் 18.5 அடி (5.7 மீ) நீளமும்...இது படமெடுத்தாடும் போது இதன் உடலின் முக்கால் பகுதி
நிலத்திலிருந்து மேல் இருக்கும்.*/
Wow! அப்ப இந்தப் பாம்பு படம் எடுக்கும் போது கிட்டத்தட்ட 14 அடி நிலத்திலிருந்து மேலெழும்! மனிதர்கள் அண்ணாந்துதான் பார்க்க வேணும் :)))
நினைச்சாலே பயமாக இருக்கு.
முந்தி எங்கட வீட்டு முகடுகளுக்கிள்ளை சாரைப் பாம்பு சிலவேளைகளில் எலி பிடிப்பதற்கு வரும். அப்பிடி பாம்பு வந்தால் அடுத்த ஒரு கிழமை என் சிறியதாயார் வீட்டில் போய்த் தங்கிவிடுவேன்.
இதிலை சிரிப்புக்குரிய விடயமென்னவென்றால் 2005/2006 ம் ஆண்டுகளில் கிளிநொச்சி சென்றிருந்த போது, இந்தப் பாம்புப் பயத்தால் இரவில் வெளியில் திரியும் போது அந்த வெக்கேக்கிள்ளையும் சப்பாத்துப் போட்டுக் கொண்டுதான் நடக்கிறது. பாம்பு கொத்தினால் காலில் கொத்தாமல் சப்பாத்தில் கொத்தும் எண்ட நப்பாசையில்.
அதுவும் அங்கு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த வெள்ளையர் ஒருவரை பாம்பு கொத்தி, சிறிலங்கா அரசின் உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு பயம் இன்னும் அதிகமாகிவிட்டது.:))
//
முன்னரே டிஸ்கவரியில் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் பரவசப்படுத்தும் படம் இது.
வழங்கியமைக்கு நன்றி.
//
Ditto ! Thanks for sharing :)
செல்லி!
உங்களுக்குப் பாம்பு பிடிக்கும்; ஆனால் பாம்பைப் பிடிக்கமாட்டீர்கள்!!.
இந்த இராஜ நாகத்தை இப்போ தான் பார்க்கிறீர்களா?? பதிவு போட்டதுக்குப் பயனாச்சு.
நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் படமாகக்கூடப் பார்க்கவில்லை. பார்த்தபோது பிரமித்துவிட்டேன்.
அதனால் பகிர எண்ணினேன்.
சின்னக்குட்டியர்!
இச்சாதாரிப் பாம்புக்கு எங்களுக்கும் பயமில்லை. இருந்தால் தானே பயப்பட...
நன்றி
பரணீ!
மேலதிக பயனான விபரங்களைத் தந்ததற்கு மிக்க நன்றி!
உங்கள் ஆர்வமும் ,தேடுதலும் போற்ற வேண்டியது.
இந்த மிருகவியல் ஆர்வலர்கள் செய்யும் பணி மகத்தானது.
நம்மை வீட்டுச் சேபாவில் இருத்தி வைத்து உலகத்தைக் காட்டுகிறார்கள்.
என் வாழ்வில் இராஜ நாகத்தைப் படமாகவாவது பார்க்க வைத்தார்கள்.
தொடர்ந்து இந்த விவரணச் சித்திரம் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள்
என நம்புகிறேன்.
நன்றி!
தம்பி!
நீங்க சீனாக்காரரா? அவங்களும் பாம்பை நேரே கண்டால் பயப்படாமல்; கோப்பைக்குள்
வைத்திருவாங்க??
நன்றி
புள்ளிராஜா!
இந்த "ராஜ" நாகம் பற்றி தலைப்பில் தமிழில் "ஆடு பாம்பே" என்றும் ,ஆங்கிலத்தில் தமிழ் தெரியாத உங்களுக்காக எனும் போட்டேன். பிறகும் ஏன் பார்த்தனீங்க. பாம்பே என்பதை பம்பாய் என்னு நினைச்சுட்டீங்களா??எதாவது கசமசா என திறந்தீங்களா?
இன்னும் இரண்டு தரம் பாருங்க பயம் தணிந்திடும்.
வெற்றி!
ஊரில் வாழ்ந்த காலத்தில் பாம்பு அனுபவம் உண்டு. வீட்டில் நாயின் உறுமல்; கோழியின் கொக்கரிப்பு
சமிச்சைகளை வைத்து பெரியவர்கள் பாம்பின் நடமாட்டத்தை கண்டுபிடிப்பார்கள்; அத்துடன் நிலத்தில் ஊர்ந்த அடையாளத்தையும் வைத்து ;பாம்பை இனம் காணும் விண்ணர்கள் கூடயிருந்தவர்கள்.
நடமாட்டத்தை உணர்ந்தால் மண்ணெய் தெளிக்கும் பழக்கமுண்டு. அந்த மணத்துக்கு பாம்பு ஓடிவிடும்.
அத்துடன் வெள்ளி செவ்வாயில் மஞ்சளுடன் வசம்பும் உரைத்துத் தெளிக்கும் பழக்கம் இருந்தது.
அத்துடன் இரவில் நடக்கும் போது அடியை தொப்புத் தொப்பென வைத்து நடக்கவேண்டுமென பெரியோர்
அறிவுறுத்துவார்கள். பாம்பு அதிர்வை உணர்வது..விலகிவிடும்;இரவில் நாயையும் கூட்டிக் கொண்டு செல்லும்
பழக்கம் பலருக்கு இருந்தது. மின்சார வருகையின் பின் இவை மாறி விட்டன.
கிளி நொச்சி ,வன்னி கவனமாக இருக்க வேண்டிய இடங்களே!!
அவற்றின் குடியிருப்பை மனிதன் அபகரிப்பதால் சில அவதிகள்; சந்திக்க வேண்டியுள்ளது.
தொ.காவில் இவற்றை ரசித்துப் பார்க்கலாம்.
உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி
பாலா!
இதைப் பலவருடங்களுக்கு முன் தொ.காவில் பார்த்து; பிரமிப்பும் சந்தோசமாகவும் இருந்தது. பின் ; youtube ; பார்த்த போது ; விருப்பப் பகுதியில் வைத்துப் பல தடவை ரசித்தேன்.
அப்போ இது பற்றி வாசித்தபோது; இதன் தன்மை மாறுபட்டதாக இருந்ததால் பகிரலாமென நினைத்தேன்.
நன்றி
மாசிலா!
நீங்கள் ரசித்ததில் ஆச்சரியமில்லை; நீங்களும் "படம் எடுப்பவர்" ...இந்த இராஜ நாகமும் "படம் தானே எடுக்குது"
வரவுக்கு நன்றி!
வணக்கம்....
யாரையாவது தொலைபேசியில் அழைத்து ப்ளேடு போடவேண்டும் போல் உள்ளது...உங்கள் எண்ணுக்கு அழைக்கவா ?
செந்தழல் ரவி ( லேண்ட் லைனுக்கா அழைக்க வேண்டும் இல்லை மொபைலுக்கா )
அடேங்கப்பா! பாக்கவே பயம்மா இருக்கே. மனுசன விடப் பெருசா இருக்கு! அத இந்தாளு என்னவோ பொம்மையப் பிடிச்சு வெளையாடுறாப்புல வெளையாடுறாரு. யப்போய்! இந்த ஆட்டைக்கு நான் வரலை.
Post a Comment