"புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்"
அங்கே ஒரு சிறப்பு இம்மலையைச் சுற்றியுள்ள கடல் வற்றி நிரம்புவது. இதை முன்கூட்டியே கணித்து அறிவித்தல் வைத்துள்ளார்கள்.
அன்று மாலை 7.30 மணிக்கு எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மலையருகே இரவு 8.00 மணிக்குத் தொடங்கியதைப் படமாக்கி
உள்ளேன்।
இந்த கடற்பெருக்கு ஒரு குதிரையின் வேகத்தை ஒத்ததாம்.
தரவையாக செம்மறி ஆடுகள் மேய்ந்த இடம் , நீர்க்காடாவது
சில மணித் துளியில் வியப்பான காட்சி॥
நான் ஒரு இடத்தில் நின்று படம் பிடிக்க முடியாமல்..
கரை நோக்கி மேலேறும் படியானது।
முதற் படம் பிடித்த இடம் ,சில நிமிடத்தில் நீரால் நிறைந்தது.
வாகனத் தரிப்பிடம் முற்றாக நீரில் மூழ்குவதால், மாலை 7 மணிக்கு முன் வண்டிகள் எடுத்துவிடவேண்டும்।
ஆச்சரியமும், ரம்மியமும் மிக்க காட்சி॥
கோடை காலமானதால் சூரியன் ஒத்துழைப்பு, படம் பிடிக்க
நிறைய இருந்தது.




9 comments:
தொடர்ச்சியாகப் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி யோகன் ஐயா. நேரில் வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை.
அருமை
ஐயா, இந்த இடம் எங்க இருக்கு? எந்த நாட்டில்? பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றீர்கள்.
சொல்ல மறந்து விட்டேன். இந்தியாவிலும் இப்படி ஒரு இடம் உள்ளது. மும்பையில். அந்த இடத்தின் பெயர் மறந்து விட்டது. கடலில் ஒரு மசூதி. இணைப்பது ஒரு பாலம். பகலில் போகலாம். இரவில் தண்ணீர் வந்து பாலத்தை மூடிவிடும்.
குமரா!
வந்தால் பார்க்கலாம். வீடியோ காட்சியாக்கினேன்.நவீன கருவியில்லாததால் , கணனிக்கு
மாற்றும் வசதியில்லை.
பிரபா!
நேரில் பிரமிப்பாக இருக்கும்.
ராகவா!
இது பிரான்சில் தான் உண்டு.
என் முதல் பதிவைப்(புனித மைக்கல் தேவாலயம் Normandy யின் கட்டிடக் கலையின் இரத்தினம்)http://johan-paris.blogspot.com/2007/06/normandy.html பார்க்கவும்.
அட மும்பையிலும் உண்டா? அதுவும் இறை இல்லமா? ஆச்சரியமே.
ஒல்லாந்திலிருந்து நேரே வரலாம்.
மும்பையில் Haji Ali Mosque லேயும் இப்படித்தான் . Tide வருமுன்பு போயிட்டு வரணும்.
துளசியக்கா!
என்ன? உங்கள் கால் படாத பிரசித்தமான இடங்கள் இருக்காது போல இருக்கிறது.
மும்பை மயூதி பற்றி ராகவனும் கூறினார். நீங்கள் பெயரும்
கூறியுள்ளீர்கள்.
இதற்கு சென்றுவர 14 ம் நூற்றாண்டிலே பாதை போட்டு விட்டார்கள்.
2012 மிகப் பாரிய நவீனமயமாக்கலுக்கு
ஆயத்தம் நடக்கிறது.
Post a Comment