
எங்கள் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினமின்று!
சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து தமிழ்பேசும் கிராமமெங்கும்
மங்காப் புகழ் பெற்ற எங்கள் கவிஞர்।
24-06-1927 , முத்தையா எனும் இயற்பெயருடன் பிறந்து
வெறும் 8 வகுப்பே படித்து, உலக அறிஞர்கள் போற்ற
வாழ்ந்தவர்.
அவரை அறியாத தமிழர், அவருக்கு முன் பிறந்தோரே!!
அந்தக் கவிமாமணியின் சிந்தையில் உதித்த தேன் இசைப்
பாடல்கள் சிலவற்றை அவர் நினைவாக உங்களுடன்
பகிர்வதில் மகிழ்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென இவற்றை
Youtube ல் பதிவிறக்க வசதி செய்த தழிழ் ஆர்வலருக்கு
இதய பூர்வமான நன்றி!
1- அச்சம் என்பது மடமையடா!!
2-கல்வியா? செல்வமா? வீரமா?
3-மனைவியமைவதெல்லாம் இறைவன் ....
4-ஆறோடும் மண்ணிலேங்கும்......
5- போனால் போகட்டும் போடா!!!
6- கடவுள் ஏன்? கல்லானார்....
7- படித்தறியா அறிவுபெற்றோர்....
8-ஒன்று எங்கள் ஜாதியே....
9-பேசுவது கிளியா?
10- ஒரு நாள் போதுமா....
14 comments:
இன்று கவியரசர் பிறந்த நாளா...ஆகா..கவியரசர் புகழ் வளர்க.
நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து பாடல்களும் அருமையைய்யா!
யோகன்,
கண்ணதாசன் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ,அவர் இடத்தை இது வரை வேறு யாரும் நிரப்பவில்லை. அருமையான பதிவு,அவரது கடைசி திரைப்பாடல் கண்ணே கலைமானே ...மூன்றாம் பிறை. எனது விருப்ப பாடலும் அதுவே.
பிறந்த நாள் பரிசு அருமை அண்ணா
இன்று கவியரசரின் எண்பதாவது பிறந்த நாள்.
கண்ணதாசா எழுந்து பிறந்து வா! என்று சுட்டி போட்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள். நன்றி.
சுட்டி: http://yennamviri.blogspot.com/2007/06/blog-post.html
ராகவா!
அவர் புகழ் வாழும்!தமிழ் உள்ளவரை!
இவை அனைவருக்கும் பிடித்த பாடல்களே!
வவ்வால்!
"கண்ணதாசன் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ,அவர் இடத்தை இது வரை வேறு யாரும் நிரப்பவில்லை. "
உண்மை...நிரப்புவார்கள் எனும் நம்பிக்கையும் போய்விட்டது.
புகழ், பணமே பிரதானமாக போய்விட்டது.
கண்ணே கலைமானே! எனக்குப் பிடித்த பாடல்கூட, ஆனால் ஒலிஒளி வடிவாகக் கிடைக்கவில்லை.
(இதை எழுதிக் கொண்டிடுக்கும் போது சிங்கப்பூர் ஒலி வானொலியினல், கவிஞருக்குச் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அதில் அச்சமென்பது மடமையடா.. ஒலிக்கிரது.)
கவியரசர் புகழ் வாழும்....
பிரபா!
உங்கள் வானொலி பரிசெதுவும் கொடுக்கவில்லையா???
"பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது"
"ஒரு கோப்பையிலே என் குடியிருக்கு
ஒலிஒளியாகப் போடமுடியுமா??"
இவை கவிஞர் தோன்றிய பாடல்கள்
வயிரவன்!
கவியரசரை நினைவு கூர்ந்துள்ளீர்கள்
நன்றி
யோகனண்ணை,
வணக்கம்.
அற்புதமான கவிஞர். அவரது படைப்புக்கள் காலத்தால் அழியாதவை.
என்னைப் பாத்தித்த தமிழகத்தவர்களில் கவியரசரும் ஒருவர்.
ஈழத்தமிழர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும் கரிசனையும் அளவிட முடியாதது.
உங்களின் பதிவை வாசித்து விட்டு, என் நண்பனின் தந்தையாராடு கவியரசர் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன ஒரு தகவல் : கவியரசரின் ஒவ்வொரு பிறந்தநாள் தினத்திலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் இந்தப் பாடலை ஒலிபரப்புவார்களாம்.
அருமையான கவிஞருக்கு அருமையான பதிவு.
இன்னும்கூட இவரைவிட்டா இந்த கவியரசர் என்ற பட்டத்துக்கு யாருமே கிட்டேகூட வரமுடியாதுன்னுதான்
நினைக்கிறேன். எப்பேர்ப்பட்ட கவிஞர், என்ன மாதிரி எழுத்து ........ அடடடா.............
கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளில் அவரது பத்து அருமையான பாடல்கள்!
சிறந்த அஞ்சலி, யோகன் அண்ணா!
வவ்வால் சொன்னது போல்,
கண்ணே கலைமானே என்ற கண்ணதாசனின் கடைசிப் பாடல் கூட காலத்தால் அழியாத பாட்டாகி விட்டது, பாருங்கள்!
//என்னைப் பாதித்த தமிழகத்தவர்களில் கவியரசரும் ஒருவர்.//
வெற்றி!
இவர் பாதிப்பில்லாவிடில் அவர் தமிழரல்லாதவராகத் தான் இருக்கவேண்டும்.
அந்தப் பாட்டுச் செய்தி புதிது.
//இன்னும்கூட இவரைவிட்டா இந்த கவியரசர் என்ற பட்டத்துக்கு யாருமே கிட்டேகூட வரமுடியாதுன்னுதான்
நினைக்கிறேன்.//
அக்கா!
இதைப் புரிந்து தெரிந்து, இப்பட்டத்தை
எவருக்குமே கொடுக்காமலும், எவருமே வாங்காமலும் இருப்பதே மேல்.
ரவிசங்கர்!
கிடைத்த இவையும் அவர் அருமையான பாடல்களில் சிலவே!
கண்ணே கலைமானே! கிடைக்கவில்லை.
Post a Comment