Monday, July 30, 2007

அதி புத்திசாலித்தனம்....

கல உயிரினங்களும், உயிர் வாழ உரிய வித்தைகளைக் கற்றவையாக இயற்கையிலே அமையப் பெற்றன.


சிம்பன்சிக் குரங்னினம் மிகுந்த புத்திசாலித் தனமான விலங்காகக் கணிக்கப்பட்டு; மனிதனுக்கு மிகக் கிட்டிய உறவும்;புத்திசாலித் தனமும் உள்ளதாக ஆய்வாளர்கள்; கூறுகிறார்கள்.

எனினும் சிலவற்றின் அதீத நவீன உலகுக்கேற்ற வாழ்வியல் மாற்றப் புத்திசாலித் தனம் ஆச்சரியமானது.

சென்ற வாரம் ஜப்பானியக் காகங்கள் பற்றிய ஆய்வு சம்பந்தமான விலங்கியல் விவரணச்சித்திரம் ;பார்த்த போது.... காகத்துக்கு, புறாவை விட மூளை ;3 மடங்கு பெரியது என விளக்கி ;அதன் புத்திசாலித் தனம் பற்றியும்; இந்த நவீன உலகின் மக்களுடன் அது எப்படி ? தன் வாழ்க்கையை அனுசரித்துச் செல்கிறதென்பதனை விளக்கிய போது...

காகம் பற்றிய தேடுதல் செய்த போது...YOUTUBEல் இவற்றைக் கண்டேன்..
நீங்களும் பாருங்கள்....




6 comments:

தீவிரவாசகன் said...

நாட்டில் கண்ட காகத்தின் சேட்டைகளையும் நீங்கள் இதில் பதிவு செய்திருக்கலாமே.
ஒரு நாள் தலையில் கொத்து வாங்கிய அனுபவம் எனக்கு இருக்கின்றது, உங்களுக்கு ஏற்படவில்லையா?
அண்டங்காகம், அரிசிக்காகம் என்று இரு பிரிவுள்ளது, கொழும்பில் ஒரு தடவை ஓர் நரை நிற வெள்ளைக் காகத்தைக் கண்டேன், சவூதி அரேபியாவில் காகத்தைக் காணவில்லையென்று நண்பரொருவர் கூறினார் இதைப் பற்றி அறிந்தவர்களும் பதிவிடலாமே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசகன்!
இந்தப் பதிவை எவருமே சீண்டவில்லை. பதிவுலகம் சிவாஜியை விட்டுவரவில்லையே ,என் ஆதங்கப்பட்டு, இப்பதிவை எடுத்து விடுவோமா?? என எண்ணினேன்.
உங்களால் தப்பியது....
நாட்டுக் காகத்தின் சேட்டை ஒன்றா இரண்டா??உங்களுக்கு ஒரு கொத்து,நான் எண்ணிவைக்கவில்லை. குறிப்பாக கையில் வைத்திருப்பதைப் பறித்துண்ணும், ஆனால் விரதத்துக்கு வீட்டார் காகத்துக்கு வைத்ததை உண்ண அருக்காணி பண்ணும்,
அன்றைய வீரகேசரியில் தென் பகுதியில் ஒரு வெள்ளைக் காகம் பற்றிய செய்தி படத்துடன் படித்துள்ளேன்.
சிங்கப்பூரில் நகரை அசுத்தப்படுத்துதென சுட்டுக் கொன்றதைக் கண்டேன்.
சவூதி அரேபியாவில் கிராமப்புறங்களில் இருக்கலாம்.
இங்கும் கிராமங்களில் உள்ளது.தானும் தன் பாடும்.
சற்று வேறுபாடான குணாதிசயம் கொண்டது.

வவ்வால் said...

யோகன்,

ஜூலை 30 இல் பதிவை போட்டு விட்டு அதற்குள் யாரும் சீண்டவில்லை எடுத்துவிடலாமா எனப்பார்த்தேன் என சொல்வதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா!

என்னோட எத்தனையோ பதிவுகள் சீண்டபடாமலே கிடந்து இருக்கு(வவ்வால் உன் கதை வேற . நான் வேற ரேஞ்ச் என்கிறீர்களா யோகன்). அதற்காக அதனை தூக்க ஆசைப்பட்டதில்லை. பின்னூட்டம் போடாமல் படித்து இருப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான்! அவசரப்பட்டு பதிவை எல்லாம் தூக்க வேண்டாம் , படிப்போர் படிப்பார்கள்.

உங்கள் மிருக நேயம் போல இதுவும் நல்லவே இருக்கு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//வவ்வால் உன் கதை வேற . நான் வேற ரேஞ்ச் என்கிறீர்களா யோகன்).//

வவ்வால்!
எவரையுமே நான் ரேஞ்ச் கணக்கெல்லாம் ,வைத்துப் பார்ப்பதில்லை. பிரமிப்புடனும்,கூச்சத்துடனுமே பார்ப்பேன்.
நம்மால் முடிந்தது இவ்வளவே எனச் சமாதானப்படுவேன்.
குறிப்பாக ஏனைய என் பதிவுகள், ஒரு பின்னூட்டமாவது சிலமணி நேரத்தில் பெறும்....இது அப்படியல்ல!!
அதனால் தமிழ்மணவாசகர் சுவை புரியாச் சிக்கல் இன்னும் எனக்குப் புரியாததால் எடுத்த முடிவு.
மேலும் காகத்தை வவ்வால் பார்த்தது.
இனம் இனத்தை நாடியது எனக் கொள்கிறேன்.
நீங்கள் இதை ரசித்திருப்பீர்கள்.
எனக்கு இக்காகத்தின் இயல்பு வியப்பாகத்தான் இருக்கிறது.

துளசி கோபால் said...

இப்பத்தான் பதிவைப் பார்த்தேன்.

காகம் மட்டுமில்லை, பூனைகளும் புத்திசாலித்தனத்துலே கொறைஞ்சதில்லைப்பா.

நம்மூட்டு ஜிகே ஒரு நாள் பெட் சைட்
டேபிளில் இருந்து கீழ்ப்புற ட்ராவைத்
திறந்து அங்கே குடைஞ்சுக்கிட்டு இருந்தது.


கொசுறுச் செய்தி: நியூஸியில் காகம் கிடையாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
வீட்டுப் பிராணிகளிடன் புத்திக் கூர்மை சற்று அலாதியானதே!!
இங்கே ஒரு நண்பர் தன் பூனை , பைப்பில் தண்ணீர் திறந்து குடித்துவிட்டு மூடியும் விடுமாம்; அந்த பைப் மேலே தள்ளினால் திறக்கும்;கீழே தள்ளினால் மூடும்;. தினமும் வீட்டில் ஏனையோர் செய்வதைப் பார்த்துச் செய்கிறது.
அமெரிக்காவில் ஒரு நாய் எசமான் மயங்கி விழுந்த போது; அடுத்த அறையில் உள்ள தொலைபேசியைத் தட்டிவிட்டு; தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ;இணைப்பு பொலிசுக்குச் சென்று ,அவர்கள் வந்து முதலுதவி செய்துள்ளார்கள்.
இப்படி பல ...