Thursday, August 23, 2007

குரங்கு வேலை...

னிதன் தனக்கு உதவியாக வேலைகள் செய்யக் காலாகாலமாக மிருகங்களைப் பழக்கியுள்ளான். இந்தக் குரங்குகளை பொதுவாக வேடிக்கை காட்டவே நம் நாடுகளில் பழக்கியுள்ளார்கள். அப்படியே நான் பார்த்துள்ளேன்.

தாய்லாந்து , வியட்னாம் போன்ற நாடுகளில் ,இந்தக் குரங்குகள் தேங்காய் பறிக்க பழக்கப்பட்டு; நாளுக்கு 300 தேங்காய் பறிப்பதுடன்;மனிதனிலும் அதிவேகமாகப் பறிப்பதாகவும்; களைப் படைவதில்லை எனவும் கூறுகிறார்கள்.

சுமார் 2 மாதக் குட்டியாகப் பிடித்து;படிப்படியாகப் பயிற்சி கொடுத்து; இரு வருடப் பயிற்சியில் ,அது வேலைக்குத் தயாராகிறது.

இந்தக் குரங்குகள் இடையில் போட்டி வைத்து; பயிற்சியாளருக்குப் பணமுடியும் அக் கிராமங்களில் வழங்குகிறார்கள்.

பயிற்றப்பட்ட குரங்கு ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்கிறார்கள்.

தென்னந்தோப்பு சொந்தக்காரர்கள் இவற்றை வாங்கிப் பயனடைகிறார்கள்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பின் இணையத்தில் தேடிய போது யூருயூப்பில் கிடைத்ததைப் பகிர்கிறேன்.


இலங்கை; இந்தியாவில் இப்படியான முறையுண்டா???









10 comments:

சின்னக்குட்டி said...

யோகன் ..குரங்கை வைத்து இருக்கோ தெரியலை... யானையை வைச்சு கோயில் வாசலில் பிச்சை எடுக்கிறவை தானே

Anonymous said...

ஆனால் கொடுமையாகவும் இருக்கிறது. மிருவதைத்தடுப்பாளர்கள் எதிர்ப்பு ஒன்றும் தெரிவிப்பதில்லையா?
- திலகேஸ்

வவ்வால் said...

யோகன்
நல்ல தகவல்.

ஆனால் இந்தியாவில இதை எல்லாம் விட சூப்பர் வேலைகளை குரங்குக்கு சொல்லி தராங்க. ராம.நாராயணன் குரங்கு குட்டிகு சிலம்பம், சைக்கில் ஓட்ட, பொண்ணுக்கு சடை பின்னிவிட, சாப்பாடு எடுத்து வர எல்லாம் கத்துக்கொடுத்து சினிமா எடுக்கிறார்.

கிளிக்கு சீட்டு எடுக்க சொல்லி கொடுத்து ஜோசியம் பார்க்கிறாங்க!

இலவசக்கொத்தனார் said...

நாகர்கோயில் / கன்னியாக்குமரி பகுதியிலோ அல்லது கேரளத்திலோ இது போல குரங்குகளைப் பழக்கப்படுத்தி தேங்காய் பறிக்க வைத்ததாக ஞாபகம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
பிச்சையெல்லாம் வேலை,தொழில் என அங்கீகரித்த புதினம் தெரியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திலகேஸ்!
எத்தனை மனிதர் மாடாக வேலைசெய்கிறார்கள். அடிமையாக வேலை செய்கிறார்கள்.
இதைப் பார்த்த போது இந்தக் குரங்குகளுக்கு பீடி சுற்ற,தீப்பெட்டி செய்ய,பட்டாசு செய்ய,செங்கல்லுச் செய்ய, கம்பளம் செய்ய பழக்கினால் நமது நாடுகளின் எவ்வளவு பிள்ளைகள் இந்த வகைத் தொழில் கூடங்களில் இருந்து தப்பி வரும் என நான் யோசிக்கிறேன்.
இந்த வாயுள்ள சீவன்களைக் காக்க எவருமே இல்லை.
போற போக்கைப் பார்த்தால் எருது வைத்திருக்கும் சிவனுக்கே மிருகபாதுகாவலர் மூலம் வழக்குப் போடுவீர்கள் போல் இருக்கிறது.
எந்த ஒரு மிருகத்தையும் பயன்படுத்தாமல் மனிதன் வாழ்வது கடினம்.
ஆகவே மனிதனை முதல் பாதுகாப்போம்.
இப்பயிற்சியைப் பார்த்தேன். கொடுமையாக இருக்கவில்லை.
உங்கள் உணர்வை மதிக்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
அட அதுக்குத்தானா! கலைஞர், கலைமாமணி விருது, ராம.நாராயணனுக்குக் கொடுத்தார்.
ராம நாராயணன் - விருது சிலிற்குதுங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இ.கொத்தனார்!
இதைப் பார்த்த போது ,இந்த இடங்களை நினைத்தேன்.
இலங்கையில் தெங்கு அதிகமுள்ள காலி,மாத்தறை, பளை,சாவகச்சேரியில்
இருந்ததாக இல்லை.

MyFriend said...

குரங்குகளுக்கு @ மிருகங்களுக்கு பயிற்சி கொடுத்து ஒரு வேலையை செய்ய வைத்தால், வேலையும் வேகமாக நடக்கிறது, அந்த மிருகமும் சீக்கிரம் களைப்படைவதில்லை, மற்றும் அதற்காக செலவு பண்ணும் தொகையும் அதிகமில்லை. மனிதன் கேட்கும் அதிக பணமும் கேட்பதில்லை. அதான் ஒவ்வொருத்தனும் இப்படி யோசிக்க ஆரம்பித்துவிட்டான்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மை..பிரண்ட் !
இது பற்றி எகித்தியர்கள் 2000 வருடத்துக்கு முன் யோசித்துள்ளார்கள்.
இணையத்தில் பார்த்தேன்.