Wednesday, October 17, 2007

பாரிசில் தியாகராஜர் விழா...காணொளியாகபிரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'

ஆராதனை விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்
நடந்தேறியது.

அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.
வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.


கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT


இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா


நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)

முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)


இவ்வருட விழாவில்...
தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்
வயலின் மேதை விஜி கிருஸ்ணன்
வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி
வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்
வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்
வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்

புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி
வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்

ஆகியோருக்கு பக்க வாத்தியமாக

மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி


மிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்


வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்


கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.
அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.
சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.


மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா


ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்


மெச்சத் தக்கது.சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு


பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக


காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்


வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.

சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை


இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்


முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.

பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)


ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி


கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.
பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.
சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்

அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்

பாடமெடுக்க வேண்டும்.

கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.

இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.
அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.

11 comments:

வழிப்போக்கன் said...

While I feel elated that Carnatic music concerts were held in Paris, I was saddened to read that only a few Tamil and Eela Tamils attended the concerts and the French carnatic music rasikas had outnumbered them.
There is a proverb in Tamil "Ulloor maadu vilai pohathu", which aptly fits the comment.
S. Krishnamoorthy

கானா பிரபா said...

//கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT//

வணக்கம் அண்ணா

இந்த அமைப்பை மேற்கத்தேயத்தோரா கொண்டு நடாத்துகின்றார்கள்?

விபரமான படங்களையும் ஒளித்தொகுப்பையும் தந்தமைக்கு மிக்க நன்றிகள்

குமரன் (Kumaran) said...

ஒரு வேளை பெரும்பான்மையோர் பிரான்சியர்கள் என்பதால் இறகு விழுந்தாலும் கேட்கும் அமைதி நிலவியதோ? பட்டுப்புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லையே?! ;-)

cheena (சீனா) said...

அயல் நாட்டில் தியாகராஜர் விழா கொண்டாடுவது என்பது பாராட்டத்தக்கது. அதிலும் புகைப்படங்கள் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன.

//பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி. //

நல்ல உவமை. இறகு விழுந்தால் சத்தம் கேட்குமாம். அவ்வளவு அமைதி. அயல் நாட்டு ரசிகர்கள் ரசிப்புத் தன்மைக்கு பேர் போனவர்கள்.

//சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்//

கலந்து கொண்டவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் இந்திய ஏழ ரசிகர்கள். என்ன செய்வது.

Muruganandan M.K. said...

எமது கலைகளை ரசித்து எம்மையும் ரசிக்க வைக்கும் உங்கள் பதிவு மனத்தை நெகிழ வைக்கிறது. வயலின் இசையை கேட்டு மகிழ்ந்தேன். வந்திருந்த ரசிகர்களில் எம்மவர்கள் விரல் விட்டு எண்ணிக்கையினரே என்ற குறிப்பு எமது தேர்வுகளை நினைத்து வருத்தப்படவே முடிகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திரு.கிருஸ்ண‌மூர்த்தி!
இங்கிருக்கும் தமிழக; ஈழத்தவர் தொகையில் .1 வீதம் வந்தாலே , இதைப்போல் 10 மடங்கு பெரிய மண்டபம் வேண்டும். ஆனால் ஏனோதெரியவில்லை. வெகு சொற்பம்.
இத்தனைக்கும் பல பெற்றோர் பிள்ளைகளுக்கு இசை,நடனம் கற்பிக்கிறார்கள்.
இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறுகிறார்கள்.
ஏதேதோ எல்லாம் வெள்ளையரிடம் கற்கிறார்கள். இதைக் கற்கிறார்களில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இந் நிறுவனம் பெரும்பகுதி பிரான்சியர்களைக் கொண்ட அமைப்பே
ஆனந்தி றோய் எனும் தமிழகப் பெண்(இவர் கணவர் ஐரோப்பியர்) செயலாளராக உள்ளார். வேறு சில இந்தியர்களும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
நம் மிசையில் ஆர்வமும்,கற்க வேண்டுமெனும் விருப்பமுள்ள பிரான்சியர்களே இதன் இருப்புக்கும்,வளர்ச்சிக்கும் காரணம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பட்டுப்புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லையே?!//

குமரா!
நகைச்சுவையை ரசித்தேன். அது மாத்திரமல்ல...இவர்களிடமுள்ள சிறப்பியல்பே, தனக்குப் பிடிக்காவிடிலும்
பிடிப்பவருக்கு இடைஞ்சலாக இல்லாதது.
அத்துடன் நமது இசையிலுள்ள அமைதியை நாடியே அவர்கள் வருகிறார்கள்.
மேலும் நமது கலைஞர்களும் ரசிகர்களுடன் ஒன்றுபவர்கள். ரி.என்.கிருஸ்ணன் , "மோட்சமு கலதா" வாசிக்கும் போது ;இது கடவுளை அடைதலைப் பற்றிக் கூறுகிறது; இப்போ என் கடவுளே நீங்கள் தான் என சபையை நோக்கி கைகூப்பி வணங்கினார். கலைஞனுக்கு நல்ல இரசிகனே கடவுள்..
இவை அவர்களைக் கட்டிப் போட்டது.மூச்சு மாத்திரம் விட்டார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சீனா!
படங்கள் பற்றிய பாராட்டு உண்மையில் மகிழ்வைத் தந்தது.
படம் எடுக்க அனுமதியில்லை.ஆசன ஒழுங்குக்கு நின்ற பெண் தடுத்தார். இடைவேளையில் அவர்களிடம் கூறினேன். இது விற்கவல்ல. இந்தியாவில் இருக்கும் இசை அன்பர்களுக்கு என் புளக் மூலம் இந்த
நாட்டு ரசனையைக் கூற என கூறினேன். சம்பதித்தார்.

நான் கூறிய அமைதியை நீங்கள் நேரடியாக பார்த்தே உணரவேண்டும்.
அல்லது கலைஞர்களிடம் கேளுங்கள்.
குறிப்பாக ஒ.எஸ்.தியாகராஜன்...பிரன்சு வானொலியில் கூட இதைக் கூறினார்.

நமது நாட்டு மக்களின் ரசனை எவரையுமே சிந்திக்க வைப்பதே..
சினிமா தாண்டி வர மறுக்கிறார்கள்.
ஆனால் பெரும்பான்மையானோர் பிள்ளைகளுக்கு இசை,நடனம் கற்பிக்கிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//உங்கள் பதிவு மனத்தை நெகிழ வைக்கிறது. வயலின் இசையை கேட்டு மகிழ்ந்தேன்//

ஐயா!
ஓம் ,அந்த வயிலின் பேசியது..முழுக் கச்சேரியும் தரமுடியவில்லை.வித்துவான் ரசிகர்களுடன் மிக ஒன்றினார்.
தங்களைப் போன்றோருக்கே அந்தச் சிறு பகுதியையும் பதிவு செய்தேன்.