Thursday, March 20, 2008

வேதனையற்ற மரணம் நிராகரிக்கப்பட்ட பெண் மரணம்


பிரான்சில், சாந்தல் செபிர் (Chantal Sebire)எனும் 52 வயது முன்னாள் பள்ளி ஆசிரியையும் 3 பிள்ளைகளுக்குத் தாயான பெண் பல வருட காலமாக மூக்குப் பகுதியில் அபூர்வ மாற்ற முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் , தான் வேதனையற்ற மரணத்தைத்(euthanasia) தழுவ அனுமதி தரவேண்டுமென அரசைக் கேட்டிருந்தார்.

பிரான்சு அதிபர் நிக்கோலா சார்கோசிக்கும் எழுதியிருந்தார்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றி.. நாளாக ஆக வேதனையுடன் பார்வை,நுகரும் தன்மை, மணம் என்பனவற்றையும் உணரும் தன்மையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதைவிட தன்னைத் தெருவில் காணும் குழந்தைகள் பயப்படுவதும், சமீபத்தில் ஒரு பெண் தன்னைக்கண்டு ஓடியதும் தனக்கு மிக வேதனை தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.
இவர் கோரிக்கை டியோன் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் சுவிஸ்,பெல்சியம்,ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய 'வேதனையற்ற மரணத்தை' தழுவ அனுமதியுள்ள நாடுகளில் ஒன்றில் சென்று தன் வாழ்வை முடிக்க எண்ணியிருந்துள்ளார்.
அத்துடன் எந்த வைத்தியத்தையும் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் இல்லத்தில் தனிமையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
'வேதனையற்ற மரணம்' பிரான்சில் சட்டபூர்வமாக அனுமதியில்லை.
இதையொட்டிய சர்ச்சைகள்,விவாதங்கள் இப்போ முக்கிய இடம் வகுக்கிறது.என்ன??இருந்தென்ன ? நோயற்ற வாழ்வு போல் வருமா??
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm

2 comments:

வடுவூர் குமார் said...

இதே மாதிரி சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒருவர் இப்படி அவஸ்தைப்பட்டார்.
எனக்கென்னவோ,இதை அனுமதிக்கலாம் என்றே தோன்றுகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வடுவூர் குமார்!
அப்பெண்ணின் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்த போது, எனக்கும்
அதே எண்ணமே வந்தது ஆனால் அரசு
சட்டம் என அடம் பிடித்து, அவரை தனிமையில் மரணத்தைத் தழுவ வைத்து விட்டது.
இப்போ விவாதங்கள் உருவாகியுள்ளதால்
வருங்காலத்தில் புதிய சட்டம் உருவாகலாம்.