Tuesday, April 08, 2008

கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்...

வட்டாள் நாகராஜ் எப்படி இருப்பார் என பார்க்க ;அவர் படம் தேடிப் போனபோது இந்தப் படங்களையும் கண்டேன்.ஏதோ; பார்த்த போது கமல் பற்றிய என் எண்ணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது வரை எத்தனையோ நடிகர்களின் குடும்பப் படங்கள் பார்த்துள்ளேன்.


இப்படி ஒரு படம்பார்க்கவில்லை.

கமல் பரந்து பட்ட வாசனைப் பழக்கம் உள்ளவர் எனத் தன்னைப் குறிப்பிடுவார்!! அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ?? எனச் சந்தேகிக்கிறேன்.
என்ன??தான் அன்பானாலும் வயது வந்த பெண்களை ஏன் ? சிறுமிகளில் கூட கையை எங்கே? வைக்கலாமெனும் நியதி மனித சமுதாயத்துக்கு உண்டு.

போக்கற்ற எம் சினிமாவில் தான் ஊரான் பெற்ற பிள்ளையை கிழவர்கள் முதல் குமரர்கள் வரை தோடம்பழம் பிளிவதுபோல் பிளிவதைப் பார்க்கிறோம்.
அதற்காகப் பெற்ற பிள்ளையையுமா??கமல் தன் படங்களில் பல இளம் நாயகிகளை எங்கெல்லாம் தொட்டு; எப்படிக் கட்டிப் பிடித்து; முகர்வாரோ அதைத்தானே இந்தப் பெற்றபிள்ளைக்குச் செய்கிறார்.
இதே காட்சிகளை சிம்ரனிடம் பார்த்துள்ளேன்.
அது காதற்காட்சியானால் இது???
இப்படிப்பட்ட காட்சிகளை நாம் இந்த மேற்கத்தேய நாடுகளில் கூட காண்பதரிது.
அன்று சுகாசினி பிரபலமாக இருந்த போது, கமலுடன் ஒரு படமும் சேர்ந்து நடிக்கவில்லை.சித்தப்பன் + மகள் உறவு எனத் தவிர்த்தார்கள் எனக் கொண்டோம்.
ஆனால் இதைப் பார்த்த போதுஅதைச் சுகாசினி தான் தவிர்த்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.
இந்த கமலின் மகள் உடுத்தியுள்ள ஆடை; இந்தக் காட்சியை பார்க்க எவ்வளவு தான் நவநாகரீகமாக வளர்த்தாலும் அவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு; என்பது இப் புத்திஜீவி உணராமல் போனது வருத்தமே!
இப்படங்களையாவது தவிர்த்திருக்கலாம்,தான் பெற்ற பெண்ணானாலும்..
இது என் கருத்து...கமல் அன்பர்கள் தடியெடுத்து வரலாம்.
எனக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது.

29 comments:

கோவி.கண்ணன் said...

அவர் மகள் என்று தெரிந்தவர்களுக்கு ஆபாசமாக தெரியாது என்றே நினைக்கிறேன். அது பற்றி தெரியாதவர்கள் அப்படி நினைக்கும் படித்தான் படம் இருக்கிறது. :(

சின்னப் பையன் said...

சரியாச் சொன்னீங்க!!!
ஆமா, தோடம்பழம்னா என்னங்க???

Anonymous said...

are you really in Paris?

Anonymous said...

உங்களது பார்வையில்தான் குறை உள்ளது.

தந்தையின் பெருமிதம், பெருமையைதான் இந்த போட்டோக்களில் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் கமல்ஜி பற்றி எதிர்மறையான விஷயங்களே பெரிதுபடுத்தப்படுகிறது.

உண்மையான கலைஞனாக இருக்கும் கமல்ஜி தமிழ்நாட்டில் பிறந்ததுதான் பெருந்தவறு.

Anonymous said...

Oru appa than ponnukku mutham kuduppadha indha kannottathula paakkaradhu unga vakkira buthiya thaan kaattudhu. unga ponnukku mutham kudukkumbodhu andha 'mood' la dhaan iruppeenga pola

Anonymous said...

நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம்.

மயிலாடுதுறை சிவா said...

கமல் தமிழ்நாட்டில் பிறந்த ஓர் "வெள்ளைகாரன்"

தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழும் ஓர் கலைஞன்.

இந்த புகைப் படத்தில் ஓர் "அந்நோன்யம்" தெரிகிறது...

மயிலாடுதுறை சிவா...

இத்துப்போன ரீல் said...

கமலின் மகள் உடுத்திய உடைதான் பிறரது பார்வையில் இந்தக்காட்சியை தவறாகத் தோன்றவைக்கிறது.கமல் இதைத் தவிர்த்திருக்க வேண்டும்!.

Sundar Padmanaban said...

என்னென்னவோ சொல்லவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது - நேர விரயம் என்பதால் சொல்லப் போவதில்லை.

பெற்றோருக்கு - அவர் பெற்ற பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் - என்றும் குழந்தைதான்.

பெண் பி்ள்ளைகளை அதட்டி மிரட்டி மூலையில் உட்கார வைத்து, எட்டி நின்றே பேசி, வயதானதும் முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வீட்டை விட்டுத் துரத்தும் சமூகச் சூழலில் இப்படங்கள் நீங்கள் சொன்ன கோணத்தில்தான் பார்க்கப்படும் - பிரச்சினை கோணல் புத்தி, கோணல் பார்வையில்.

தந்தை-மகள் இருவருக்கிடையேயான பாசப்பிணைப்பையும் அன்பையும் அரவணைப்பையும் கொச்சைப்படுத்துவதைப் பார்த்து அருவருப்பாக உணர்கிறேன்.

:(

மாயன் said...

யோஹன்

யாரிடம் எப்படி பழக வேண்டும்... எது சரி தவறு என்பதெல்லாம் அவரவர் பிறந்து, வளர்ந்து, பார்த்து பழகிய சமூகத்தின் வெளிப்பாடுகள்...

எல்லாமும் எல்லார் பார்வையிலும் சரியாக தோன்ற முடியாது...

சமூகத்தின் வேறு தளத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை நம் பார்வையில் மட்டும் தராசில் நிறூத்திப் பார்க்கிறொமேயானால்
சரி தவறு என்று தான் விமரிசிக்கக் கூடாது...

ஆனால் இப்படி செய்வது எனக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளது....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எனக்கு நன்றே ஞாபகம் உள்ளது. எனக்குப் பத்தொன்பது வயசு என் அக்காவுக்கு 24 வயசு அப்போது. இலங்கையில் நான் இருப்பதால் நாட்டுப்பிரச்சினை காரணமாகப் படிக்கச் சென்ற அக்காவும் நானும் 2 வருடங்களின் பின் சந்திக்கின்றோம்.

ஒரு உணவுச்சாலையில்தான் சந்தித்தோம். கண்டதும் அக்கா என்னைவந்து கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வழிய என்னை முத்தமிட்டது ஞாபகம் உள்ளது.

அங்கே இருந்தவர்கள் எங்களை ஒரு மாதிரயாகப் பார்த்தார்கள். எனது நண்பர்களும் ஏண்டா இப்பிடி ஆக்களுக்குள்ள செய்யதனீங்கள்? என்று கேட்டார்கள்.

பின்னர்(19இல்) நான் யோசித்தபோது நாங்கள் அப்படிச்செய்திருக்கக் கூடாதோ என யோசித்தாலும் அந்த அன்புக்கு, உறவுக்கு அது ஏற்றுக் கொள்ளத் தக்கதே என நினைக்கிறேன்.

அந்த சம்பவத்தை இப்போது நினைதாலும் அக்காவின் அந்த பாசம் நிறைந்த ஆனந்தக் கண்ணீர்தான் ஞாபகம் வருகிறது.

உங்கள் அனுபவங்கள், வாசிப்புக்கள், சூழ்நிலைகள் மற்றும் வயது என்பன நீங்கள் காணும் காட்சியை தப்பானதாகவோ சரியானதாகவோ தோன்றச் செய்வதில் பங்கெடுக்கின்றன.

தகப்பன் மகளுடன் தவறாகப் பழகும் செய்திகளை நான் கேட்டிருக்கிறேன், செய்திகளில் மட்டும். சிலவேளைகளில் நீங்கள் வசிக்குமிடத்தில் அவ்வாறானதொன்று நடந்தை நீங்கள் கேட்டிருந்தால் இப்படம் தவறானதாக உங்களுக்குத் தோன்றலாம்.

எனக்கென்னவோ இதுவொன்றும் தவறானதாகத் தோன்றவில்லை. எனக்கும் இருவருக்குமிடையான பாசமே முன்னால் தெரிகிறது.

கமல் இதைத் தவிர்த்திருக்கலாம் என்ற தலையங்கத்தினூடு, கமல் ஏதோ முன்னமே பிளான் பண்ணி வந்த மாதிரியல்லவா தோன்றச் செய்கிறீர்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நபர் ஒரு விதமாக நடந்தால் அவர் அப்படித்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நடப்பார் என்னும் சமூகநலப்(?) பார்வை இன்னும் எங்கள் மக்களிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ம்ஹீம்..என்ன செய்ய?

உதயதேவன் said...

பாலின வேறுபாடு பாசத்திற்க்கு இல்லை என்பது என் கருத்து.(இதுவே அவரது பெண்ணாய் இல்லாமல் மகனாய் இருந்தல் அப்போதும் நீங்கள் குறை சொல்வீர்களா?) மற்றும் கமல் என்றும் மற்றவர்களின் மதிபிடலுக்காகவோ.. மற்றவரின் முன் ஒரு மாயை(இமேஜ்) உருவாக்கவோ என்றும் முயன்றதில்லை. நமது வளரும் சுழல் நம்மை பிள்ளைகளிடமிருந்தும் தள்ளிவக்கிறது. அவர் தான் பெயருக்கு முன்னால் தந்தை பெயரையே போடுவதில்லையே.... பின் எதற்க்காக உங்களைப்போல் (உங்கள் விருப்பம் போல்) அவரும் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்....

வால்பையன் said...

பெற்றவருக்கு மகள் எப்போதும் குழந்தை தான்.
திருமணம் முடிந்து செல்லும் போது பாசத்துடன் ஒரு தகப்பன் மகளை கட்டி பிடித்து உச்சியில் முத்தமிட்டு வழியனுப்புவது வழக்கம்.

கமல் எனற மனிதனை முத்தத்தின் மொத்த உருவமாக பார்க்கும் உங்கள் கண்களுக்கு தான் கோளாறு.

வால்பையன்

தமிழன் said...

அடபாவிகளா இதை இந்த தந்தை பாசத்தை கூட புரிந்துகொள்ள முடியாத அளவு தமிழ் சமுதாயம் இன்னும் கெட்டுபோகவில்லை, நண்பர் இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம், அனைவருக்கும் ஒரே எண்ணம் ஆண்டவன் படைக்கவில்லை.

Boston Bala said...

‘விடுகதை‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. மெரீனாவில் வயதான ஆணும் இளமையான பெண்ணும் சிரித்துப் பேசி வருவதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் சினமுறுவார்.

உளவியல் அலசலாக ஆராயும் ருத்ரன் ‘அவர்கள் ஏன் அண்ணன், தங்கச்சியாக இருக்கக் கூடாது? ஏன் பேராசிரியர், மாணவியாகவோ பிற உறவுகளாகவோ இருந்திருக்கக் கூடாது’ என்று கேட்பார்.

siva said...

Iam 26 years of age .Up to my father , iam a school going KID. To me , my sister is a kid what ever she is

ஜோ/Joe said...

அதிர்ச்சி படத்தைப் பார்த்து அல்ல ..இந்த பதிவைப் பார்த்து.

ஒரு தந்தை தன் மகளுக்கு முத்தம் கொடுப்பதைக்கூட இவ்வளவு வக்கிர கோணத்தில் அலச முடியும் என்பது அருவருப்பாக இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தவறான நோக்கம் கமலுக்கு இருந்திருக்காது என்று நம்புகிறேன்
தந்தை பாசம் தெரிகிறது. மகளின் உடை உங்களுக்கு உறுத்தலாக தெரிந்திருக்கலாம்.

பிருந்தன் said...

தந்தை மகள் பாசத்தில் கூட தப்பை காண்பவர் வாழும் உலகம் இது, என்னத்தை சொல்ல பார்வைகள் தப்பாக இருக்கும் போது படங்களும் தப்பாக தெரிகிறது. கமல் தனது வாழ்க்கையை தனக்காக வாழ்பவர்.போலி வாழ்க்கை வாழதெரியாதவர்.

dondu(#11168674346665545885) said...

இந்தியன் படம் எடுக்கப்பட்டபோது கிழவன் மேக்கப்பில் இருந்த கமலை பலருக்கு அடையாளம் தெரியவில்லையாம். அப்போது அப்பக்கம் வந்த தன் குட்டிமகளை அணைத்து தூக்க, குழந்தை உடனே அப்பா என அழைத்தாளாம். எப்படி கண்டு கொண்டாய் எனக்கேட்டபோது, அப்பாவின் வாசனை எனக்கு தெரியாதா என அக்குழந்தை பதில் சொன்னாளாம். அந்த குழந்தைதான் இந்தப் பெண்ணா அல்லது அவளது சகோதரியா எனத் தெரியவில்லை.

எது எப்படியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியை அவ்வை ஷண்முகியில் கமல் உபயோகித்தார். அவர் பெண்ணின் உடையில் நெருப்பு பிடிக்க, பிராம்மண மாமி உடையில் இருக்கும் கமல் குழந்தையை தூக்கிச் சென்று நீச்சல் குளத்தில் போட, பிறகு குழந்தை அவரை அப்பா எனக் கூப்பிட்ட காட்சி நினைவுக்கு வருகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

MeenaArun said...

i would like you to see this link.it will clear your doubt

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2008/rolling-stone-shruthi-kamal-050308.html

Anonymous said...

அந்த பெண்ணின் பார்வையில் வேண்டுமானால் ஒரு குறு குறுப்பு இருக்கலாம் ஆனால் கமல்ஜி பார்வையில் தெரிவது என்னமோ அக்மார்க அப்பா பாசம்,ஒரு நெகிழ்ச்சி அப்புறம் ஒரு வித ஆயாசம் மட்டுமே! மறுபடியும் ஒரு முறை படம் பாருங்கள்.அன்புடன் லதா

PPattian said...

//நண்பர் இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம்,//

திலீபன், கட்டாயமாக அவர் கருத்துகளை கூற யோகனுக்கு உரிமை இருக்கிறது. இது தவிர்க்க கூடிய பதிவு அல்ல.

//அவர் மகள் என்று தெரிந்தவர்களுக்கு ஆபாசமாக தெரியாது என்றே நினைக்கிறேன். அது பற்றி தெரியாதவர்கள் அப்படி நினைக்கும் படித்தான் படம் இருக்கிறது//

கோவி கண்ணன் சொன்னதும் முற்றிலும் உண்மை

//பெண் பி்ள்ளைகளை அதட்டி மிரட்டி மூலையில் உட்கார வைத்து, எட்டி நின்றே பேசி, வயதானதும் முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வீட்டை விட்டுத் துரத்தும் சமூகச் சூழலில் இப்படங்கள் நீங்கள் சொன்ன கோணத்தில்தான் பார்க்கப்படும் - பிரச்சினை கோணல் புத்தி, கோணல் பார்வையில். //

சுந்தர், கமல் இங்கு செய்வதற்கும், மேலே சொன்ன உங்கள் கருத்துக்கும் என்ன சம்பந்தம். கமல் போல முத்தம் கொடுக்காத, கண்ட இடத்தில் கையை வைக்காத எல்லா தகப்பன்களும், மகள்களை அதட்டி, மிரட்டி வளர்த்து, தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வீட்டை விட்டுத் துரத்துபவர்கள் என்பதுதான் உங்கள் கூற்றா?

மகளுக்கு தாரளமாக முத்தம் கொடுக்கட்டும், கொஞ்சட்டும்.. ஆனால் அதற்கும் ஒரு வரைமுறை உண்டு..

கமல் என்றதும் வரிந்து கட்டிக் கொண்டு இத்தனை பேர் வருவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

பரத் said...

கேவலமாக இருக்கிறது...உங்கள் பார்வை :(

PRABHU RAJADURAI said...

இந்தப் பதிவினை தாங்கள் தவிர்த்திருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து!

படத்திலும் எவ்வித தவறும் எனக்கு தோன்றவில்லை.

TBCD said...

இந்த பதிவை தவிர்த்திருக்கலாம் என்பது தேவையற்றது.

தந்தை மகள் என்ற விவரம் சொல்லி, ஒரு கிராமத்து மனிதரிடம் கொடுத்தால் அவர் இத்தகைய கருத்தைச் சொல்லக் கூடும். இதுப் போன்ற கருத்தை மொத்த இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தினால், 49% சதவிகிதம் எடுத்து பெரும்பான்மை இழந்தாலும், நம் நாட்டில் ஒரு பிரிவினரின் சிந்தனை தளம் அத்தகையது என்பதை நான் உணர வேண்டும்.

நம் வீட்டில் வளர்ந்த பெண்களை இப்படி கட்டிப் பிடிப்பது கிடையாது, அதனால் உறுத்துகிறது.

இந்தியில் மகேஷ் பட் (இயக்குனர், தயாரீப்பாளர்), தனது மகள் பூஜா பட்டுக்கு (நடிகை,இயக்குனர், தயாரீப்பாளர ) உதட்டில் முத்தம் கொடுப்பது பத்திரிக்கைகளில் வந்து சர்சைக்குள்ளானது. எங்கள் வீட்டில் இது சாதாரணம். சிறு வயது முதலே உதட்டின் மேல் முத்தம் கொடுப்போம் என்றுச் சொல்லியதாக நினைவு.

ஆக, இது வளர்ப்பு, வாழும் சூழல் பொறுத்தது. கமல் எல்லா விதத்திலும், சமூகத்தின் பார்வைக்களை பொருட்படுத்தாது நடந்தவர். திருமணம் செய்யாமலே, இரண்டு குழந்தைகள் பெற்றவர்.பின் திருமணம் செய்தவர்.

வடநாட்டில், சகோதர சகோதரிகள், நண்பர்களுக்குள் பால் வேற்றுமை இல்லாமல் கட்டிப்பிடிக்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ் நாட்டில் செய்தால் ஊர் உற்றூப் பார்க்கும்.

சகோதரன், சகோதரியயை பைக்கில் கொண்டு விட்டாலும், காதலன் காதலி போலிருக்கு என்று முகவாயயை இடிக்கும் சமூகம் தமிழ் சமூகம்.

இதைக் கண்டு, அதிர்ச்சி அலைகள் கிளம்பினாலும் தவறில்லை. கிளம்பாவிட்டாலும் தவறீல்லை. :)

கமல் பார்வையில் அது தெரியுது இது தெரியுது என்றுச் சொல்லுவதெல்லாம், கொஞ்சம் ஓவருங்கண்ணா...

நான் கொஞ்சம் படம் தருகிறேன். அதைப் பார்த்து என்ன தெரிகிறது என்று யாராவது சொல்லுங்க.. :P

வக்கிரம் என்றுச் சொல்லுவதெல்லாம், கண்டிக்கத்தக்கது. இன்றைய சூழலில் சிலருக்கு சில மதிப்பீடுகள் அவசியமில்லாமல் போகலாம். சிலருக்கு அது தேவையானதாக இருக்கலாம். நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு போனதாக எண்ணி, பின் தங்கியவர்களை ( அப்படி நினைத்துக் கொண்டு) வக்கிரம், சிக்கிரம் என்று எல்லாம் சொல்லக் கூடாது.

மகளை கற்பழித்த தந்தை என்று தினத்தந்தியில் வாரம் ஒரு முறையேனும் வருகிறது.

பிரச்சனை கமல் குறித்தல்ல..இதுப் போன்ற ஒரு தந்தையும் மகளும் நடந்துக் கொள்ளலாமா ( அது பொதுவில் என்றாலும், தனியே என்றாலும் எலலம் ஒன்னு தான்) என்பது மட்டுமே...

கமலை மறந்துவிட்டு, இதைப் பற்றி பேசினால், நன்று.

(பெரிய பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும்..யோகன் )

ILA (a) இளா said...

குழந்தைக்கும், காமத்துக்கு ஒரே முத்தம்தான். பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது அய்யா.

வசந்தன்(Vasanthan) said...

யோகத்தார்,

என்ன நடந்தது?

யாழ்ப்பாணத்தில், எங்கள் சமூகத்தில் கட்டிப்பிடித்துக் கொஞ்சும் வழக்கம் இன்றுவரை இருக்கிறது. குறிப்பாக கிறித்தவர்களிடம் அதிகமாகவுள்ளது. இதை யாருமே அருவருப்பாகவோ ஆபாசமாகவோ கருதுவதில்லை.
மச்சாள், மச்சான், அண்ணன், தங்கை, ஏன்? தூரத்து உறவினர்கள் என்றிருந்தாலும்கூட நீண்டகாலம் கழித்துச் சந்திக்கும்போது கட்டிப்பிடித்துக் கொஞ்சுவது வழக்கம்தான். அவர்கள் இளவயது எதிர்ப்பாலார் என்றாலும்கூட.

இந்நிலையில் தந்தையும் மகளும் இப்படி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைய எந்தவொரு காரணமுமில்லை.
'கமல்' என்பதால் மட்டுமே உங்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்று பலரைப்போலவே நானும் கருதுகிறேன்.

Anonymous said...

இந்த‌ ப‌ட‌த்தில் திரு.க‌ம‌ல‌ஹாச‌ன் அவ‌ர்க‌ள் க‌ண்ணிய‌ம் இல்லாம‌ல் ந‌ட‌ந்துக் கொண்டிருக்கிறார் என‌ கூறுகிறீர்க‌ள். ஆனால், என‌து பார்வையில் க‌ம‌ல் இங்குதான் க‌ண்ணிய‌த்தைக் காட்டியிருக்கின்றார். ம‌க‌ள் சுருதியை அவ‌ர் அணைத்துள்ள‌ கை ச‌ற்று மேலே இருப்ப‌த‌ன் கார‌ண‌ம் என்ன‌? இன்னும் ச‌ற்று கையை கீழே இற‌க்கியிருந்தால் ஆடை இல்லாத‌ ப‌குதி, அதாவ‌து இடுப்புப் ப‌குதியை அவ‌ர் பிடித்திருந்தால் இன்னும் இவ்விட‌ய‌ம் பெரிது ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும். இதைத் த‌விர்ப்ப‌த‌ற்கு அவ‌ர் கையை ச‌ற்று மேலே உய‌ர்த்தி த‌ன‌து ம‌க‌ளை அணைத்திருக்க‌லாம். த‌ய‌வு செய்து த‌ந்தை ம‌க‌ள் உற‌வை கொச்சைப் ப‌டுத்த‌ வேண்டாம். ச‌மூக‌த்தில் க‌ரைபுர‌ண்டோடியிருக்கும் சில‌ ப‌ழ‌மைவாத‌ கருத்துக்க‌ளை நீக்கி விட்டு அனைவ‌ரையும் ஒரே இன‌மாக‌ப் பாருங்க‌ள். க‌ம‌லின் முக‌த்தில் உள்ள‌ த‌ந்தை பாச‌த்தைப் பாருங்க‌ள்..‌

த‌மிழ‌ன்