1-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனையில் உள்ள "பெருக்க மரம்" பற்றிய விபரக்கோவை!
2-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனை எனும் சிறு கிராமத்தில் உள்ள;
BAO BAB -Adasonia Digitata இனம் ;ஆபிரிக்க அரேபிய இனத்தைச் சேர்ந்தது.
3-மடகஸ்காரிலுள்ள BAO BAB- Adasonia Grandidieri எனும் இனம்.
4-ஆபிரிக்க அரேபிய BAO BAB -Adasonia Digitata எனும் இனம்.
5-மடகஸ்காரில் BAO BAB- Adasonia Grandidieri இனம் தொகையாக உள்ள படம்.
நான் "புத்தளம் வரலாறும்,மரபுகளும்" எனும்; திரு.அசன் நெய்னா மரைக்கார் ஷாஜஷான் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தபோது; புத்தளம்;கற்பிட்டி; மன்னார் பகுதியில் ஒருவகை மரம்;அரேபியரால்(1477 மட்டில்) கொண்டுவந்து நடப்பட்டதாகவும்; அதன் பிரமாண்டத்தால் அதை "பெருக்க மரம்" என அழைக்கிறார்கள் என்பதையும் வாசித்தேன்.
நான் "புத்தளம் வரலாறும்,மரபுகளும்" எனும்; திரு.அசன் நெய்னா மரைக்கார் ஷாஜஷான் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தபோது; புத்தளம்;கற்பிட்டி; மன்னார் பகுதியில் ஒருவகை மரம்;அரேபியரால்(1477 மட்டில்) கொண்டுவந்து நடப்பட்டதாகவும்; அதன் பிரமாண்டத்தால் அதை "பெருக்க மரம்" என அழைக்கிறார்கள் என்பதையும் வாசித்தேன்.
2004 ல் மன்னார் சென்ற போது; பெருக்கமரம் பார்க்கப் போவோம். என்ற போது; அந்த மரம் இருக்கா???என ஆச்சரியப்பட்டுச் சென்று; பார்த்துப் படமும் பிடித்தேன்.இப்போ இந்த ஓர் மரமே!! மிகுதியாக உண்டென என்ணுகிறேன்; இதைப் பள்ளிமுனை கத்தோலிக்கத் தேவாலயத்தினர் பாதுகாக்கின்றார்கள்.
இனி அப்புத்தகத்தில் உள்ள பகுதி.........
அரேபியர்களின் செல்வாக்கு இப்பகுதியில் இருந்ததென்பதற்கு சான்றாக "பெருக்கமரம்" என்ற ஒரு வகைத் தாவரம் விளங்குகிறது. இம்மரம் மத்திய கிழக்குக் குரியதாகும். அரேபியர் வாழ்ந்த இடத்தில் இதை நட்டு வளர்த்தனர்.புத்தளம்;கற்பிட்டி;மன்னார்ப் பகுதிகளில் நின்றுள்ளது.
காலகதியில்முக்கியத்துவம் குன்றி பராமரிக்கப் படாமல் அழிந்து போயின.இதன் இலைகள் ஒட்டகத்துக்குத் தீனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது;அதிஸ்டவசமாக கற்பிட்டியிலுள்ள திகழி எனும் பண்டைச் சிறப்பு மிக்க கிராமப் பள்ளிவாசலில் வரலாற்று நினைவுச் சின்னமாக இருந்து; 1991 ல் வேரோடு சாய்ந்தது; துரதிஸ்டமே!!!
பெருக்க மரத்தைக் குறிப்பிட்டு வழங்கும் கிராமியப்பாடலொன்று.......
ஊருக்கலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கமரம்
காட்டுக்கலங்காரம் கலை மானும் குட்டிகளும்
ஊட்டுக்கலங்காரம் விடிவிளக்கும் பிள்ளைகளும்
கடலுக்கலங்காரம் கப்பலும் பாய்மரமும்.
ஊருக்கலங்காரமெனப் பெருக்கமரத்தைக் குறிப்பதன் மூலம் அதன் அழகும் முக்கியமும் புலப்படுகிறது.பண்டைய பள்ளிவாசல்களிலும்;முஸ்லீம் குடியிருப்புகளிலும் இவை வளர்க்கப் பட்டுள்ளன.இம்மரம் பாரிய விருட்சமாகும்;1848ல் புத்தளம் வந்த "டெனன்ட்" எனும் வரலாற்றாசிரியர்; புத்தளம் பள்ளிவாசலில் இப்படி ஓர் மரம் நின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதைப் பப்பரப்புளி(இராட்சதப்புளி);தொதி எனவும் தமிழில் கூறுவர்..;...இப்படி பல தகவல்கள் உள்ளன.
இன்னும் பல தகவல்கள் இவ்வகை மரம் பற்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.
13 comments:
இது குமரன் சொன்னது.
பின்னூட்டப் பெட்டிப் பிரச்சனையால்!! முதற்பதிவிலிட்டது.
ஒரு பெரிய மரத்தினைப் பற்றிச் சொன்னீர்கள் ஐயா. இதுவரை அறியாதது. இன்று அறிந்து கொண்டேன். நன்றி.
(இது அடுத்தப் பதிவிற்கான பின்னூட்டம். அங்கே இட முடியவில்லை
அண்ணை,
நல்ல பதிவு. நன்றி.
தமிழ் பற்றி ஒரு முறைப்பாடு.
கண்டதுக்கெல்லாம் "ஓர்" எண்டு பாவிக்கிறியள்.
உயிரெழுத்தில தொடங்கிற சொல்லுக்கு முன்னால மட்டும்தான் 'ஓர்' வரும். மிச்ச இடமெல்லாம் 'ஒரு' தான். இதைக் கவனிச்சா தமிழுக்கு நல்லது.
அதற்கு 500 ஆண்டுகளா? நல்ல தகவல் இதைப் போய் எங்களிடம் கேட்டால் எங்களுக்கு எப்படித்தெரியும்.
அன்புக் குமரா!!
அந்த வரலாறைப் படித்த போது மரத்தைப் பார்ப்பேன் என நினைக்கவில்லை; பார்த்துப்;படமெடுத்த போது; பதிவு பற்றியெல்லாம் தெரியாது. இப்போ இதைப் பலருடன் பகிர்ந்து; மேலும் பல தகவல்கள் கிடைக்கும் போது; பதிவு பயனானதே!!
சுப்பையா அண்ணர் கவனிக்க வேண்டும்;
யோகன் பாரிஸ்
என்னார் அண்ணா!
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்த குடியல்லா??தெரியாமல் இருக்குமா?,
ஆனால் எல்லோருக்கும் எல்லாம் தெரியமுடியாது; வேண்டியதுமில்லை.வேண்டினும் முடிவில்லை
யோகன் பாரிஸ்
அன்புடன் பெயரிலிக்கு!
நான் இந்த ஓர்;ஒரு என்பவற்றைச் சரியான இலக்கணத்துடன் பாவிக்கவில்லையென்பதைச் சுட்டியதற்கு!
மிக்க நன்றி!
அந்த நாளில் "அவளுக்கென்று ஓர் மனம்" படம் வந்த போது இச் சர்ச்சை வந்தது. ஞாபகம் வருகிறது.ஏற்கனவே "ற்"க்குப் பின் மெய் பாவித்து; திருத்தப் பயின்றேன்.
இயன்றவரை சரியாக எழுத வேண்டுமென விரும்புபவன்.
"தெரியத் தெரிய தெரியாமை தெரியுது"
பதிவின் பயன்!!
வந்து பார்த்து திருத்தினால் மகிழ்வேன்.
வருகை;கருத்து யாவுக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்
பதிவிற்கு நன்றி யோகன் அண்ணா. இரண்டு நாட்களாக முயற்சித்து இன்றுதான் பின்னூட்டம் போட முடிந்தது.
ஊரோடி பகீ
ஊரோடி பகீ!
உங்கள் நிலமை அறிவேன்; இக்குறிப்பிட்டதற்கு நன்றி!!மன்னார் பக்கம் போகக் கிடைத்தால் சென்று பாருங்கள்;500 வயதல்லா??,
யோகன் பாரிஸ்
யோகன் அண்ணை,
மரத்தின் வரலாற்றினைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் சுவாரசியமாக இருந்தது.
யோகன் அண்ணை,
இப் பதிவை கடந்த வாரமே படித்து விட்டேன். பல தடவைகள் பின்னூட்டம் இட முயற்சித்தும் முடியவில்லை.
வெற்றி!
இம் மரத்தைப் பற்றிப் படித்தபோது,பார்பேன் என நினைக்கவில்லை!
பார்த்துப் படம் பிடித்த போது;இப்படிப் பகிர்வேன் எனவும் நினைக்கவுமில்லை.
நான் ஒரு 400 வயது புளியமரத்தின் நிழலில்(இப்போ தறித்து வெதுப்பகத்துக்குப் பாவித்து விட்டார்கள்) வளர்ந்தவன் என்ற வகையில்;இம்மரம் எனக்கு மிக ஆவலையும்;ஆசையையும் தூண்டியது.
பீட்டாவின் பின் பல பிரச்சனைகள்;அதன் தாக்கம் உங்களுக்குப் பின்னூட்ட இருந்திருக்கலாம். இப்போ பீட்டாவும் போயிற்றுதாம்.
வருகை கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்
இப்படி பயாலாஜிக்கலா புதிர் போட்டா எங்களுக்கு எப்டி தெரியும்...
ஜீ!
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டுமென்றும்;ஈழத்தில் ஓர் இனத்தில் வரலாறு சம்பந்தமான மரம்
அதனால் தான் இட்டேன்.பலர் அறிந்து கொண்டார்கள்.தாவரவியலைப் பற்றியும் தெரிவோமே!!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்
Post a Comment