Thursday, March 08, 2007

சென்னையில் நாதஸ்வர இசை விழா

சென்னையில் நாதஸ்வர இசை விழா ஒன்று முதல் தடவையாக
நடந்திருக்கிறது.
கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் (முருகதாஸ்)ஒருவரின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த இசைவிழா, தமிழகமெங்கும் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு மிகவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.
வழமையான மார்கழி மாத இசைவிழாவின் போது நாதஸ்வரக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக பலராலும் கூறப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த நாதஸ்வர இசைவிழா மிகவும் முக்கியமான ஒன்றாக பல இசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த இசைவிழா குறித்து எமது சென்னை நிருபர் டி. என். கோபாலன் தயாரித்து வழங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/03/070304_nadeswaram.shtml

இது BBC இல் இருந்து எடுக்கப்பட்டது.

இதன் உருவாக்க கர்த்தா ஒரு ஈழத்தமிழர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

5 comments:

வைசா said...

இது நான் முன்பு கேள்விப்படாத ஒன்று. தகவலுக்கு நன்றி, யோகன்.

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
இது கனடாவில் 10 வருடமாக நடந்துள்ளது.எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்;இக்கலையில்
நிலையை கவனத்தில் எடுத்து; கிட்டத் தட்ட தமிழகத்தில் மறு வாழ்வு அளிக்கும் நிலைக்கு
வந்தது பாராட்டுக்குரியது.
அதை விழாவில் பலர் கூறியுள்ளார்கள்.

வெற்றி said...

யோகன் அண்ணை,
இங்கு ஒவ்வொரு வருடமும் ஈழத்திலை இருந்தும், தமிழகத்திலை இருந்தும் நாதஸ்வர, தவில் வித்துவான்களை அழைத்து கச்சேரி நடப்பது வழக்கம். அத்துடன் இங்குள்ள ஆலயங்களிலும் கச்சேரிகள் நடக்கும். நான் நாதஸ்வர தவில் கச்சேரி பரம இரசிகன் எண்டதாலை அதிகமான கச்சேரிகளுக்குப் போறனான். போன வருசமும் ஈழத்திலை புகழ்பெற்ற நாதஸ்வர மேதை காணமூர்த்தி வந்திருந்தவர். ஒரு 7 அல்லது 8 வருசங்களுக்கு முன் பத்மநாதன், "வாக்கன்" கணேசன் போன்ற மேதைகளும் வந்திருந்தனர். அவர்கள் இப்போது உயிருடன் இல்லை.

இந்த நாதஸ்வர தவில் கச்சேரிகளைக் கேட்டாலே பழைய ஊர் நினைவுகள் வந்து அலை மோதும். எங்கடை ஊர்க் கோயில்களில் இப்படி இக் கச்சேரிகளைப் பார்க்கும் நாள் எப்போ வருமோ!!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
மீண்டும் நீங்கள் வந்தது சந்தோசமே! இந்த விழாவை நடத்தியவர் கனடாவில் தான் உள்ளார். டிவிடி ஆக்கியுள்ளதாக அறிந்தேன். அவ்விடம் கோவில்களில் கிடைக்கும்.
ஆம் நாதஸ்வரக் கச்சேரிகள் மறக்கமுடியாதவை!!
ஆனால் இந்த முருகதாசுக்கு வரும் காலங்களில் புலம்பெயர் நாடுகளில் இந்த விழாவை நடத்தும் நோக்கம் உண்டென அறிந்தேன்.
நடந்தால் நன்றே!!
தேடிப் படிக்கும் உங்களைக் காணவில்லையென பலர் கவலைப்பட்டார்கள்.

வெற்றி said...

யோகன் அண்ணை,

/* தேடிப் படிக்கும் உங்களைக் காணவில்லையென பலர் கவலைப்பட்டார்கள். */

உண்மையாகவா? ஆகா! தமிழ்மணத்து அன்பர்கள் என்னையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என அறியும் போது மெய் சிலிர்க்கிறதே. :))