Tuesday, July 31, 2007

திருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULT

பிரஞ்சுத் திரைப்பட உலகில் 50 வருடங்களாக தன் திறம்பட்ட
நடிப்பால் ,குறிப்பாக நகைச்சுவையால் கோலோச்சிய சிறந்த குணசித்திர நடிகர் மிசல் செறோ (MICHEL SERRAULT) தன் 79 வயதில் நோய்வாய்ப்பட்டு 29-07-2007 மாலை காலமானார்.

பிரான்சில் புறுனொய் (BRUNOY) ல் 24-01-1928 ல் பிறந்து, 1954 ல் திரையுலகுக்கு வந்து பல தரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும். அவருக்கு ( CAGE AUX FOLLES) காச் ஓ பொலி என்ற படத்தில் ஏற்று நடித்த திருநங்கை பாத்திரமே மிகப் பெரிய புகழைத் தேடித் தந்ததுடன், சர்வதேச கீர்த்தியையும் ஏற்படுத்தியது மாத்திரமன்றி தொடர்ந்து 3 பாகமாக வெளிவந்து வெற்றி கண்டது.


நான் மிக மிக இரசித்த இவர் படமும் இந்த CAGE AUX FOLLES.



இவர் சிறந்த நடிப்பால், திருநங்கைகளே வெகுவாகப் பாராட்டியதாக கூறுவார்கள். அவ்வளவு இயல்பான மிக அவதானிப்பான நடிப்பு.



இவர் பிரான்சின் உயர் திரைப்பட விருதான சிசர்(CESAR) , 3 தடவைகள் பெற்றுள்ளார். மொத்தம் 135 முழுப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், மேடை நாடகமென ,சென்ற வருடம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.
ஒப்பாரும் மிக்காரும் அற்றவர். பிரான்சின் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பே!


இன்று தொலைக்காட்சிச் செய்தியில் கூட அவர் திருநங்கை வேசத்தின் சில காட்சியைக் காட்டி... செய்தி வாசிப்பவர் ,இந்தக் கவலையான சூழலிலும் தன்னை மறந்து சிரிக்கும் படியானது.
உங்களில் யாருக்காவது இந்தத் திரைப்படம் கிடைத்தால் பார்க்கவும்.



7 comments:

சிவபாலன் said...

நல்ல பதிவு!

பகிர்வுக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
பிரஞ்சு நடிகர்களை தமிழ்திரை இரசிகர்கள் அதிகம் அறியார்; பாண்டிச்சேரி அன்பர்கள் தவிர.(சில கனடிய தமிழர் உட்பட)
நீங்கள் முடிந்தால் இப்படத்தைப்பார்க்க முயலவும். மொழி பெரிய சிக்கலில்லை. கதை புரியும்.
இவர் "உடல் மொழி" புரியக் கூடியது.

Anonymous said...

inku tamilnattil, ms. vidhya(L.smile) poraadikittu allava irukirarkal -itharunathil neenkal intha pathivai pottatharukku avarkalum unkalai paaratalam

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!
//இங்கு தமிழ்நாட்டில் செல்வி வித்யா (லிவ்விங் ஸ்மைல்)போராடிக்கிட்டு அல்லவா இருக்கின்றார்கள், இத்தருணத்தில் நீங்கள் இந்த பதிவு போட்டதற்கு அவர்கலும் உங்களைப் பாராட்டலாம்.//

ஆம் செல்வி வித்யாவின் போராட்டம் அவர் எழுத்தில் அறிவேன்.துணிச்சல் மிக்கவர்.
பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியவர்.

கானா பிரபா said...

இப்போது தான் வாசித்தேன், அருமையான பகிர்வு அண்ணா

வவ்வால் said...

நான் பார்த்தறியாத படங்கள் பற்றி சொல்லியுள்ளீர்கள், ஆனாலும் குறிப்பிடதக்க ஒரு நடிகராகதான் அவர் இருப்பார் என அறிகிறேன் தங்கள் பதிவில் இருந்து , ஒரு புதிய தகவல் அறியபெற்றேன். அவர் மறைவு வருந்த கூடியதே!

பி.கு: பாண்டி மக்கள் பார்த்திருப்பார்கள் என நீங்கள் நினைப்பது தான் வேடிக்கை. இங்கே இப்போது உள்ள பிரஞ்ச் குடியுரிமை பெற்றோர் ஒரு சில 100 களே(அவர்களுக்கு க்ல்யாண சந்தையில் நல்ல கிராக்கி) , அவர்களும் இதெல்லாம் பார்ப்பதில்லை. அல்லையன்ஸ் பிரான்சிசில் படம் போடுவார்கள் பார்க்க வருவது பெரும்பாலும் திரைப்பட உதவி இயக்குனர்களே,சில உறுப்பினர்கள் வருவார்கள் அவ்வளவே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இவர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
திறமைமிக்க பிரான்சின் பெருமைக்குரிய நடிகர்!
அதனால் பகிர விரும்பினேன்.