Wednesday, August 01, 2007

சென்னைத் தமிழும்…. யாழ்ப்பாணத் தமிழும்....

மது தமிழ் இடத்துக்கிடம் எப்படியெல்லாம் பேசப்படுகிறது.
சில இடங்களில் அவை புரிந்துகொள்ளப்படுவதும் இல்லை.

அதிலும் ஓரளவு தூய தமிழ் பேசினால், இவர் என்ன?? மொழி பேசுகிறார் என விழி பிதுங்கும் நிலையும் உண்டு.


இந்தத் திரைப்படக் காட்சி நகைச்சுவையானாலும்,பேச்சுத் தமிழின் நிலையும், அரசியலின் போக்கும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

மிக ரசிக்கும் படி அனைவரும் நடித்துள்ளார்கள்.
பார்த்திருப்பீர்கள் மீண்டும் பாருங்கள்.....
32 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன். நல்லாயிருக்கு மயில்சாமி மட்ராஸ் தமிழுக்கு மொழி பெயர்வு செய்வது.. பதிவுக்கு நன்றிகள்

Sundar Padmanaban said...

அபாரமான நகைச்சுவைக் காட்சி இது.

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்கு இரசித்துச் சிரித்தேன் ஐயா. உண்மை தான். எனக்கு யாழ்ப்பாணத்தமிழ் நன்றாகப் புரிகிறது. இந்தச் சென்னைத் தமிழ் தான் படா பேஜாராக்கீது. :-)

சிவபாலன் said...

Nice one!

Thanks for Sharing!

Anonymous said...

பேச்சுத் தமிழ் முன்ணனிக்கு வருவது என்பது, நிச்சயம் தமிழ் மொழிச் சிதைவுக்கான என்னுமொரு வடிவமாகும். அதை ஊக்குவிப்பதும் தவறு ஆகும்.

மலையளாம், தெலுங்கு, கன்னடம் என்று தமிழில் இருந்து மொழிப் பிரள்வு ஏற்பட இப்படியான பேச்சுத் தமிழ் தான் காரணமாக இருக்கக் கூடும்.

நாளைக்கு மதுரைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் என்று இருப்பவை, புதுப்புதுப் பெயரோடு என்னுமொரு மொழி வடிவமாக மாறக் கூடும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மலைநாடன் ஐயா பதிவில் சென்னையின் தாரகை நம்ம பொன்ஸ் அக்கா பேசும் தமிழைச் சிலாகித்துச் சொல்லி இருந்தாங்க.
அது பற்றிய பதிவோ-ன்னு ஓடி வந்தா...

யோகன் அண்ணா, சூப்பர் காமெடி சீன் போட்டிருக்காரு! மயில்சாமியின் மொழிபெயர்ப்பு ஹிஹி...
அச்சமில்லை அச்சமில்லை, "மெர்சல்" என்பதில்லையே! :-)

வெற்றி said...

யோகன் அண்ணை,
பேய்ப் பகிடியண்ணை. உண்மையாயே சென்னையில் இப்படித்தான் தமிழ் கதைப்பினமோ?

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

மாயா said...

நன்றி அண்ணா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
தமிழுக்குத் தமிழ் மொழி பெயர்ப்பு,
உலகத்தில் எங்கும் நடக்குமா???
இது என்ன? படம் தெரியுமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வற்றாயிருப்பு சுந்தர்!
உண்மை ,நானும் மிக ரசித்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்

//இந்தச் சென்னைத் தமிழ் தான் படா பேஜாராக்கீது//

ஆனால் எனக்கு சென்னைத் தமிழ் மிகப்பிடிக்கும், அதனால் ''சோ'' வின் கூவம் நதிக்கரையில் படித்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன் !
எனக்குப் பிடித்தது. மற்றவர்க்கும் பிடிக்கலாம் என இட்டேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!
உங்கள் ஆதங்கம் புரிகிறது. சரி தமிழில் இருந்து இன்னுமொரு மொழி பிறக்கட்டும்.
ஆனால், அது வளர்ந்து ஆற்று நீரைத் தரமறுக்காமல் இருந்தால் போதும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சென்னையின் தாரகை நம்ம பொன்ஸ் அக்கா பேசும் தமிழைச் சிலாகித்துச் சொல்லி இருந்தாங்க.
அது பற்றிய பதிவோ-ன்னு ஓடி வந்தா...//

ரவிசங்கர்!
அட நீங்க அதை நினைத்து வந்தீங்களா?
அது சிந்திக்க! இது சிரித்துச் சிந்திக்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
சென்னையில் பலதரப்பட்ட பேச்சுத் தமிழ் , அதில் இது ஒரு வகை.
இதை சேரிகளில் புழங்குவோரே அதிகம் என நினைக்கிறேன்.
எனக்கு ''சோவின்'' கூவம் நதிக்கரையில் ,நகைச்சுவை நாவலில் வந்த ஜக்கு எனும் பாத்திரத்தின் மொழிநடையாக இருந்தபோது வாசித்து மகிழ்ந்துள்ளேன்.
நன்கு பிடிக்கும்...
தமிழ் நதிகூட இந்த நடையில் நன்கு எழுதுவார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாயா!
ரசித்தீர்களா??
இது என்ன? படத்தில் இடம் பெற்றதென எவரும் சொல்லவில்லை.

G.Ragavan said...

கலக்கல் நகைச்சுவை. ஆனா என்ன படம்னு தெரியலை.

Anonymous said...

//பெயரிலி!
உங்கள் ஆதங்கம் புரிகிறது. சரி தமிழில் இருந்து இன்னுமொரு மொழி பிறக்கட்டும்.//

எங்கள் அண்ணன் பெயரிலி எந்தப் பின்னூட்டங்களையும் இடவில்லை என்பதை கனம் யோகர் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். :)))

மாயா said...

படத்தின் பெயர் தெரியாது . . .
இப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருந்தார் . . .
சில வேளை "அள்ளித்தந்த வானம்" ஆக இருக்கலாம் நினைவில்லை . .

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
நகைச்சுவை கலக்குது;ஆனால் நம்ம மட்டத்தில் எவருக்குமே இடம் பெற்ற படப் பெயர் தெரியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயர் போடாமல் வரும் அன்பர்களை அடியேன் "பெயரிலி" என அன்பாக (கனமாக)அழைப்பது வழமை!
இப்போது தான் "பெயரிலி" எனும் ஒரு பதிவரும் இருக்கிறார் என்பதை அறிகிறேன்.
இந்தப் பெயர் போடாதவர்களை " என்ன பெயர் வைக்கலாம்;எப்படி அழைக்கலாம்"...
சொல்லுங்கள்.

கானா பிரபா said...

//இந்தப் பெயர் போடாதவர்களை " என்ன பெயர் வைக்கலாம்;எப்படி அழைக்கலாம்"...
சொல்லுங்கள்//

கை நாட்டு ;-)

ramachandranusha(உஷா) said...

இல்லை யோகன், இது சேரி தமிழ் என்று மட்டும் சொல்ல முடியாது. இன்றிரவு அல்லது நாளை விவரமாய் எழுதுகிறேன். வர்ட்டா :-)
இப்படிக்கு,
பக்கா சென்னைவாசி

Anonymous said...

Padam Peyar "Pennin Manathai Thotu"

வினையூக்கி said...

இந்த நகைச்சுவைக் காட்சி இடம்பெற்ற படம் பிரபுதேவா, ஜெயாசீல் நடிக்க எழிலின் இயக்கத்தில் வெளிவந்த பெண்ணின் மனதைத் தொட்டு. இதில் சரத்குமார் கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார். விவேக்கின் நீங்க வெறும் தாஸா லார்டு லபக்கு தாஸா என்ற நகைச்சுவைக்காட்சி இடம் பெற்ற படமும் இதுதான். இந்த காட்சி முடிந்தவுடன் ஒரு பாடல் சென்னைத் தமிழில் வரும். அந்த பாடல் முடிந்தவுடம் யாழ்ப்பாணத்தமிழ் பேசுபவர் சென்னைத்தமிழ் பேசுவதாகக் காட்சி முடியும்.

வசந்தன்(Vasanthan) said...

//இப்போது தான் "பெயரிலி" எனும் ஒரு பதிவரும் இருக்கிறார் என்பதை அறிகிறேன்.//

இதென்ன கோதாரி???
கொஞ்சம் பொருத்தமான சாட்டைச் சொல்லக் கூடாதா?

sankar said...

Padathin Name: PENNIN MANATHAI THOTTU. This was one of the Comedy Buster film from Vivek

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உஷா!
கட்டாயம் விளக்கமாகக் கூறவும்.
நான் திரைப்படக்காட்சியையும், சோவின் ஜக்குவையும் வைத்து எடுத்தமுடிவு.
திரைப்படங்களில் லூஸ் மோகன், பசி சத்யா... பொதுவாக சேரிவாசிகளாக நடிக்கும் போதும், சோவின் ''கூவம் நதிக்கரையினிலே'' ஜக்கு வின் மொழி நடையும் இதே!!
ஆனால் சென்னை வந்த போது கடைகள், சந்தை மற்றும் பொதுவாகச் சந்தித்த எவருமே பேசவில்லை. ஒரு இளநீர் விற்பவர் என்னுமொருவருடன் பேசியதையும் வைத்து... இது பாமரர் பாவனை..எனவே ,சேரிப்புறப் புழக்கமோ எனும் முடிவுக்கு வந்தேன்.
அத்துடன் இந்த மொழி நடையை நான் வெகுவாக ரசிப்பேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Anonymous2, வினையூக்கி,சங்கர்!
படப்பெயர் சொன்னதற்கு நன்றி!
வினையூக்கி மிகவிபரமான பதில் தந்தார்.
உங்கள் படம் முன்பு சிமுலேசன் எனும் தளத்தில் எழுதியவர் படம் போல் உள்ளது.
ஒருவரேயா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதென்ன கோதாரி???
கொஞ்சம் பொருத்தமான சாட்டைச் சொல்லக் கூடாதா?//

வசந்தன்!
சரி இது பொருத்தமா? என்று பாருங்கள்.
''அட நீங்க அந்தப் பெயரிலி இல்லையா''

வினையூக்கி said...

//வினையூக்கி மிகவிபரமான பதில் தந்தார்.
உங்கள் படம் முன்பு சிமுலேசன் எனும் தளத்தில் எழுதியவர் படம் போல் உள்ளது.
ஒருவரேயா??//

இல்லை சார். நான் அவரில்லை. நான் வினையூக்கி மட்டும்தான்,.

MyFriend said...

நானும் ரசித்து பார்த்த காட்சி இது யோகன். ;-)