Friday, February 09, 2007

GRAMMY- கிராம்மி விருதும் -இந்தியா டுடேயும்

2003 ல் "GRAMMY "-கிராம்மியின் 5 விருது; " நோரா ஜோன்ஸ்" எனும் ஜாஸ் பாடகிக்குக் கிடைத்தது. உங்களில் ஒரு சிலருக்காவது ஞாபகம் வரலாம்.

இந்த நோரா ஜோன்ஸ் உலகக் கீர்த்தி மிக்க சித்தார் வித்தகர் ரவி சங்கருக்கு ; அவர் உதவியாளராக இருந்த ஆங்கிலப் பெண்ணுக்கும் பிறந்த பெண்.

இந்தப் பெண்; அன்று விருது வழங்கும் விழா மேடையில் மறந்தும்;
தன் தந்தையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

தன் இந்த வளர்ச்சிக்குத் தாயே காரணமெனக் கூறியவர். காரணம் இளமையிலே ரவிசங்கருக்கும்; நோராவின் தாயாருக்கும் மனக்கசப்பாகிப் பிரிந்து விட்டனர்.நோரா இசை கற்றுத் தேறினார்.

இந்த நிலையில் விருது பெற்றார். புகழும் பெற்றார்.

அதை இந்தியா டுடே ; கொண்டாடியது.அட்டையில் போட்டு ஆராதித்தது; முழுத் தமிழருமே இதில் மகிழ்வது போல் ஆர்ப்பரித்தது. எனக்கு சரியாகப்படவில்லை.
இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வந்த காலங்களில் இருந்து படித்தவன்;அவதானித்தவனேனும் வகையில் தமிழ் இசைக் கலைஞர்களைக் கண்டு கொள்ளாத போக்கும்; சினிமாவைத் தூக்கித் தலையில் வைத்தாடுவது; விற்பனை மந்தமாகும் போது; இந்தியர்களில் "செக்ஸ்" வாழ்வு பற்றி; "குஸ்பு" விடம் ஆய்வு செய்து ஆதாயம் கண்டு; நாட்டை அல்லோகல்லப் படுத்துவதுமான பத்திரிகையாகவே இருந்தது. "செக்ஸ்" ஆய்வுக் கட்டுரையென்பது ஆரம்பகாலத்திலே இருந்து இருக்கிறது.ஆனால் குஸ்பு விவகாரத்தின் பின்பே சூடுபிடித்தது.நீங்களும் அவதானித்திருக்கலாம்.
ரவி சங்கர் மகள் என்பதைத் தவிர நாம் அவரைத் தலையில் வைத்தாட என்ன? உள்ளது எனும் கேள்வியும்; தன் தந்தை புகழ் பூத்த
இந்திய இசை மேதை என்று ஒர் இசைக்குப் விருது வழங்கும்
விழாவில் கோடிட்டுக் காட்டாததும்;நோரா நம் எல்லோரையுமே! கேவலப்படுத்தியதாக உணர்ந்ததாலும்;நமது இசைக் கலைஞர்களை
இந்தியா டுடே கண்டு கொள்ளாத போக்கையும் என்ணி; ஆசிரியருக்கு என் மன உணர்வை எழுதினேன்.

அக் கடிதம் மார்ச் 26,2003 இதழில் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.

அந்த நாட்களில்; நான் "தாரணி சுப்பிரமணியம்" எனும் பெயரிலே தான்; பத்திரிகைகளுக்கு எழுதுவேன்.

ஒவ்வொரு வருடமும் இந்த "GRAMMY" விருது வழங்கல் நடந்தால்; இவர் ஞாபகம்;இந்தியா டுடேக்கு நான் எழுதியதும் ஞாபகம் வரும்.
இவ்வருடம்; 49 வது வருடமாக;இந்த விருது வழங்கும் நாளில் ,அதை உங்களுடன் பகிர்கிறேன்.
*********************************************
1 ம் படத்தில் கிளிக்கினால் கடிதத்தைப் பெரிதாகப் பார்க்கலாம்.
தாரணி சுப்பிரமணியம்
பாரிஸ்13 - 03 - 2003

ஆசிரியர்
இந்தியா டுடே

கனம் அசிரியர் அவர்கட்கு!
தங்கள் மார்ச் 12 இதழில் "நோரா ஜோன்ஸ்" ;விருதுகள் பற்றி எழுதிக் குதூகலித்துள்ளீர்கள்.
இதன் மூலம் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
அந்தப் "பாடப் பிறந்த குயில்" தவறியும் விருது பெறும் விழாவில் தன் தந்தை "ரவி சங்கர்" பற்றிக் குறிப்பிடவில்லை.
இத்தனைக்கும்அவர் ஓர் இசைமேதை ஆனால்; ஏன்? நீங்கள் குதிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

அவர் "எந்த இந்திய மொழியில் பாடிவிட்டார்?";எந்த இந்திய இசையை இசைத்து விட்டார்?" அவர் பிறக்கஓர் இந்தியர் காரணமாக இருந்த தென்பது தவிர என்ன? இந்தியத் தன்மை அங்கே பளிச்சிட்டதெனக்கூத்தடிக்கிறீர்கள்.உங்களைத் திருத்தவே முடியாதா?

ஆஸ்கார்;கிராமி விருதுக்குழுவில் உள்ளவர்களுக்கு ,இந்தியத் தன்மை பற்றித் தெரியுமா? தெரிய என்றாவது ஆசைப்பட்டர்களா? ஏன் இவற்றுக்கு ஏங்குகிறீர்கள்; அதை ஓர் இந்திய வேர்நுனியோ;துளிரோபெற்றுவிட்டால்,ஏன் ஆட்டம் போடுகிறீர்கள்.

இந்திய இசைக்காகவே வாழ்ந்து மறைந்த நாதஸ்வரச் சக்கரவர்த்திகள்;ஷேக் சின்ன மௌலானா; நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன் போன்றோர் மறைந்தபோது; மறந்து விட்டீர்களே! அட்டையில் போட்டுஒவ்வொரு இந்தியரும் ஆராதிக்க வேண்டிய " பாரத ரெத்தினங்கள்" அவர்கள்.

உங்களுக்கு இந்திய இசையுணர்வே இல்லையா? அதற்கு நிகரானது..எதுவுமில்லை அவர்களே! ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் நீங்கள் இன்னும் "சுதந்திரம்" பெறவில்லை. அதனால் உண்மையை மறுக்கிறீர்கள்.

திருந்துவீர்களா?

"நெஞ்சு பொறுக்குதில்லையே! உங்களைப்போல் நிலை கெட்ட மனிதரை நினைத்தால்!"

தங்களை மதிக்கும்
தாரணி சுப்பிரமணியம்.
**************************************************************************************

19 comments:

பினாத்தல் சுரேஷ் said...

நியாயமான கடிதம் யோகன்; நல்ல பதிவும் கூட!

எனக்கு கல்பனா சாவ்லாவோ,சுனிதா வில்லியம்ஸோகூட இந்தியா பெருமைப்பட சாதித்ததாக தோன்றுவதில்லை!

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. நீங்களும் இந்தியா டுடே என்று தமிழகத்தார் Tயைச் சொல்வது போல் தலைப்பில் சொல்லியிருப்பதைப் பார்த்து உள்ளே வந்தேன். :-)

இந்தியா டுடேயின் வியாபார தந்திரங்களைப் பற்றியும் அவர்கள் வெளியிடும் செய்திகளைப் பற்றியும் உங்களுக்கு இருக்கும் கருத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். அண்மையில் நோரா ஜோன்ஸ் பற்றி அமெரிக்க 'ந்யூஸ்வீக்' வார இதழில் படித்தேன். அந்த சிறுகுறிப்பின் கடைசி வரியில் அவர்கள் இவரின் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்கள்.

கால்கரி சிவா said...

நியாயமான கடிதம். அவரின் தந்தை இந்தியாராக இருப்பதில் என்ன பெருமை நமக்கு. அவர் தந்தை அவருடைய தாயரை மணமுடித்து இவரைப் பெற்றாரா? தன் உதவியாளினிடம் உடல் உறவு கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் பிறந்தவர் இவர். சரி அவ்வாறு பிறந்தவுடன் நன்றாக வளர்த்தாரா? அதுவும் இல்லை. ஆகையால் நோரா அவர் தந்தையின் மேல் கொண்டுள்ள கோபம் நியாயமானதே.
அவர் இசைத்துறையில் சாதனை புரிந்ததும் இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடுவது இந்தப் பத்திரிகைகள் அடிமைத் தனத்திலிருந்து மீளவில்லை என்பது புலனாகிறது

SurveySan said...

:) நல்ல கடிதம் அது.

ரவி சங்கர் நோரா ஜோன்ஸ் பிறப்புக்கு மட்டுமே காரணமாக இருந்ததனாலும், வளர்ப்புக்கு தாயின் பங்கு அதிகமாக இருந்ததனாலும், நோரா ஜோன்ஸ் தந்தை மீது பெரிய மரியாதை கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

எல்லாம் ஒரு கெஸ்ஸிங் தான்.

எது எப்படியோ, நம் பத்திரிகைகள், உள்ளூர் திறமையை சொல்லி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்லட்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுரேஷ்!
கடிதத்தின் நியாயத்தை உணர்ந்துள்ளீர்கள். நன்றி!
ஆம் ;எனக்குக் கூட இந்தியப் பெயர் இருக்கேனும் காரணத்துக்காக; வெளிநாடுகலில் வாழ்ந்து; படித்து; குடியுரிமை பெற்றுச் சாதிப்போரை தலையில் வைத்தாடுவதில் விருப்பமே இல்லை.
இவர்களிலும் நம்நாட்டுச் சூழலில் வாழ்ந்து சிறு சாதனை புரிந்தாலும் அவர்களே போற்றுதற்குரியோரே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரன்!
இந்த TODAY (ருடே) யை ;டுடே என எழுதுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னினும் அந்தப் பத்திரிகை அப்படிக் குறிப்பிடுவதால் அதையே! இட்டேன்.
அவர்கள் இவர்களைக் கடைக்கோடியில் வைத்தாலும்; இன்னும் இவர்கள் அவர்களைத் தலையில் வைத்தாடுவதும்; வாசகர்களையும் ஆடவைப்பதுமாகவே! இருக்கிறது.
உங்களைப் போல் பலர்.. இச்சஞ்சிகையின் சுயரூபம் புரிந்துள்ளது. வரவேற்கத்தக்கது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவா!
என் பக்க நியாயத்தைப் புரிந்துள்ளீர்கள் நன்றி!
கோபதாபங்கள் இருந்துள்ளது. பின்பு சேர்ந்துமுள்ளார்கள். இதே வேளை சாதித்த துறை, வேற்றிசைத்துறை என்றாலும் இசைத்துறையென்பதால், அவர் மேடையிலோ ;பேட்டிகளிலோ;தன் தந்தை பற்றிச் சொல்வதால் குறைந்து விடமாட்டார்.அதுவும் ஓர் உலகம் புகழ் மேதை!
அவர் தவிர்த்த போது; நம் பத்திரிகைகள் அடித்த கும்மி தான்; என்னை இதை எழுதவைத்தது.

சின்னக்குட்டி said...

பதிவை வாசித்தேன்...நன்றிகள்..

//அந்த நாட்களில்; நான் "தாரணி சுப்பிரமணியம்" எனும் பெயரிலே தான்; பத்திரிகைகளுக்கு எழுதுவேன்.//

இனி மேல் பழைய பத்திரிகைகளை தட்டி பார்க்கோணும் போலை... என்ன எழுதி இருக்கிறீங்கள் என்ற ஆவல் தான்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Surveysan!
உங்கள் ஊகம் சரியாக இருக்கலாம். எனினும் அவர் சொல்வது ,விடுவது ஒருபக்கமிருக்க ,நம் பத்திரிகைகள் ஏன், இந்தத் துள்ளுத் துள்ளியதென்பதே! எனது ஆதங்கம்.
இதே துள்ளலை நீங்கள் குறிப்பிடுவதுபோல் உள்நாட்டுத் திறமையிலும் காட்டினால் வரவேற்கலாம்.
வரவு கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
கவனிக்க வேண்டும்."எழுதுவேன்". என்றுதான் கூறியுள்ளேன்; எல்லாம் வெளிவந்ததெனக் கூறவில்லை.அந்த நாளில் பொம்மைக்கு எழுதி; அவர்கள் "சொந்தச் செலவில்;தங்களுக்குச் சூனியம் வைக்க விரும்பாமல்" திரும்பி வந்தது.(பின்பு எப்படியோ பொம்மை வெளிவராமலே போனது வேறுவிடயம்)சிந்தாமணி;வீரகேசரி;கலைமகள்;துக்ளக்;ஆனந்த விகடன்;குமுதம் யாவுக்கும் எழுதுவேன்.
அதைப் பிரசுரிக்கவில்லை? அவர்கள் படித்தாலே போதுமெனும் நோக்கத்துடனே! எழுதுவேன்.
அடுத்து;இந்தியாருடே;ஆனந்த விகடன் தவிர எவருமே! தொலைநகல் வசதியற்றவர்களாக இருப்பதால்; என் கடிதங்கள்;சாதாரண தபாலில் செல்லும் போது மிகப் பிந்தியே கிடைப்பதால்; சூடாறிய விடயமாகப் போய், வேறு சூடான விடயம் வந்து விடுகிறது.
மேலும் சுஜாதா அவர்கள் கேள்வி பதிலில்;வந்த ஒரு விடை சம்பந்தமாக அவருக்கும் மின்னஞ்சலிட்டேன்.
இதுவரை; அதற்கான விளக்கம் வரவில்லை. இது பற்றி அவர் வாசகரும்;சேகரிப்பாளருமான சக வலைப்பதிவாளர். திரு தேசிகனுக்கும் மின்னஞ்சலிட்டேன். எனது கருத்துடன் திரு.தேசிகன் ஒத்து; அவ்விடயம் பற்றி; திரு.சுஜாதா அவர்களுடன் பேசுவதாக மின்னஞ்சலிட்டார்.அதுவே எனக்குத் திருப்தி!
இப்படி!!பல
என் பஞ்சாமிர்தம் பதிவுகூட அப்படி? சிந்தாமணிக்கு ;நான் எழுதிய கடிதமே! அந்த Blog சிக்கலில் உள்ளதால்; அதை விரிவாக முடிக்கமுடியாமல்;இருக்கிறது.
ஆகவே!!பழைய பத்திரிகைகள் எதையும் தேடவேண்டாம்.
சில கடிதப் பிரதிகள் வைத்துள்ளேன். உரிய நேரத்தில் பதிவாக்குவேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
பதிவைப் படித்துக் கருத்துக் கூறியதற்கு நன்றி!

பிச்சைப்பாத்திரம் said...

உலக அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்தியாவுடன் ஏதோவொரு வகையில் சம்பந்தம் இருந்தாலே அவரையும் இந்தியராக பாவித்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது பத்திரிகைகளின் விற்பனை தந்திரம். இதைப்பற்றி ஞாநியும் "ஓ" பக்கங்களில் எழுதின நினைவு.

நோரா ஜோன்ஸ் தந்தையைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் நாணயத்தை திருப்பிப் பார்த்தால், ரவிசங்கர் தன் மகளைப் பற்றி ஆரம்பம் முதலே எங்குமே குறிப்பிடவில்லை என்பதும் அதனால்தான் மகளும் புகழ் பெற்ற தந்தையின் நிழலை புறக்கணித்து சுயமாக வென்றதால் அவரைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இரண்டு பகுதிகளாக பிரித்து என் கருத்துக்களை சொல்கிறேன்.

முதலில் நோரா ஜோன்ஸ் ஏன் பண்டித் ரவிஷங்கர் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறித்து இந்த சுட்டியில் பாருங்கள்

http://www.spring.net/music/

சில பகுதிகளை இங்கு வெட்டி ஒட்டிக் கீழே கொடுத்துள்ளேன். இதனைப் படித்து எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி எடுத்துக் கொள்ளலாம்.

///
Jones's mother, Sue Jones, who has been a dancer, producer and a nurse, had a nine-year relationship with Ravi Shankar, towards the end of which Norah was born. She saw her father a few times a year until she was nine, and then not until she was 18, when she was introduced to her 16-year-old half-sister Anoushka, now a Shankar-trained classical sitar player with three albums under her belt, and of whom Jones is very proud. 'My mom and I have always been very close,' Jones wrote to me a few days after our interview. 'She is my best friend. She had to make a lot of sacrifices early on in my life to make sure I got to do what I wanted to do. Although I love my dad very much, I did only spend a fraction of my adolescence around him. This is probably why I try to downplay our relationship in the press. When misquotes start flying around, inevitably someone's feelings get hurt, and I didn't get into music to have family business printed in the press. I love my dad, and I think he's a brilliant musician. I just want to make my music, and I want it to stand on its own.'
///

அடுத்து அவர் இந்தியன் என்று பெருமை கொள்ளக் கூடாது என்ற கருத்து.

இது சற்று மாறுபட்ட கருத்து ஆகவே இதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

தேசிய உணர்வு என்பது இன்று மிகைப் படுத்தப் பட்ட ஒன்றாகி விட்டது(Patriotism is becoming overrated). எனக்கென்னவோ மனிதம் என்பதை தேசிய உணர்வுக்கு மேலாக வைக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மதம், ஜாதி, மொழி போன்ற இன உணர்வுகளுடன் ஒப்பிடும் சமயம் இதனால் பிரச்சனைகள் மிகப் பெரிய அளவில் ஏற்படுவதில்லை.

ஆனால் இது போன்ற உணர்வுகளால் கூட பிரச்சனை தான் என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரை இது சரி என்றே தோன்றுகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனார் பாடலில் இந்திய ஊர்கள் மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளதாக்க தெரியவில்லை.

ஆகவே இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு பெருமை என்று இந்தியா டூடே சொல்வதும் சரியல்ல என்று தோன்றுகிறது. அதே போல இந்தியாவுக்காக என்ன செய்தார் அவருக்கு எதற்கு இந்த பாராட்டு மாலை என்று கொதிப்பதும் சரியல்ல என்று தோன்றுகிறது.

ஒரு சக மனிஷிக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது என்றே எனக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

எனது இந்த நிலைப்பாடு பலருக்கு தவறாகத் தெரியலாம். நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் தோன்றலாம். மத நம்பிக்கை இல்லா விட்டாலும் இறை நம்பிக்கை கொண்டிருக்கும் எனக்கு அந்த இறைக்கு கற்பனைக் கோடுகளால் பிரிக்கப் பட்டு இருக்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி ஒலிகளை எழுப்பக் கற்றுக் கொண்டு அவரவர் முன்னோர் கற்றுத் தந்த வழியில் நடக்கும் மனிதர்கள் பல விஷயங்களில் வேற்றுமை கொண்டிருந்தாலும் ஒன்றாகவே தெரிவார்கள் என்று நம்புகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுரேஷ் கண்ணன்!
இது அவர்கள் உறவுமுறை சிக்கல் என விட்டுத் தள்ளுவோம். ஆனால் தமிழ்ப் பதிப்பில் தமிழ்க் கலைஞர்கள் மறைந்த போது கூடக் கண்டு கொள்ளாத இந்தச் சஞ்சிகையின் ;இந்த ஆனந்தக் கூத்தின் அர்த்தம் என்ன? என்பதே!!என் ஆதங்கம்.
அதுவே அக்கடிதம்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

யோகன்,
மிகவும் சரியான கருத்துகள். இந்திய ருடே யின் இவ்வாறான கட்டுரைகள் பற்றி கல்பனா சாவ்லா இறந்த போதுதான் கவனத்தில் வந்தது. நானும் உங்களைப்போலவே இங்கு அமெரிக்காவில் என்னுடன் பணியாற்றும் இந்தியர்களுடன் தர்க்கித்திருக்கிறேன். அவர்களில் மிகப்பெரும்பான்மையோர் என்னுடன் உடன்படாதது இன்னும் எனக்கு ஆச்சர்யமாகவே உள்ளது. அது மட்டுமல்ல இந்தியா அவருக்கு எதோ 'விருது' கூட அறிவித்ததாக வாசித்த ஞாபகம்!

இது போலத்தான் லூசியானா காங்கிரஸ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொபி ஜிந்தாலையும் தலையில் வைத்து ஆடினார்கள்!!!!

உங்களது கருத்துகளையே மிகவும் நக்கலாகவும் ஆனால் உறைக்கும்படியும் rediff.com இல் ரஜிவ் சிறீனிவாசன் எழுதியிருந்தார்.
இணைப்பு கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செந்தில் குமரனுக்கு!

ஆம்! நீங்கள் ஆங்கிலத்தில் தந்துள்ள பகுதியை அதே இந்தியா டுடே விலாவாரியாகப் படங்களுடன் சுமார், நாலு பக்க Cover story யாகத் தந்தது. Anoushka ன் அல்பங்களும் இங்கே தட்டுகளை நிறைப்பதை அறிவேன்.

எனினும் தாயாரின் அர்ப்பணிப்பால்; தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர்;தந்தையில் புகழ் நிழல் தனக்குத் தேவையில்லையென மிக உயர்ந்த இடத்துக்கு வந்து விட்டதாகக் கருதுபவர். "I love my dad" என்பவர். இந்தப் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதிலும் வட துருவத்திலோ;தென் துருவத்திலோ போய் நின்று கூவுவதிலும்; அச் சபையில் ஒரு வார்த்தை கூறியிருக்கலாம். இருவரின் இசைக்கும் வித்தியாசம் புரியாத ஞான சூனியங்களா? அச் சபையில் இருந்தார்கள்.

அடுத்து ரவி சங்கர் கால் பதித்த உலக மேடைகளில் இவர் கால் வைக்கக்கூட முடியாது. அதையும் புரியாத சிறுமியல்ல இவர்.

அதனால் இதைக் குடும்ப விவகாரமாக எடுத்து;இந்தியா டுடே அமத்தி வாசித்திருக்கலாம்.தானும் துள்ளி மற்றவர்களையும் துள்ளவேண்டுமென எதிர் பார்க்காதிருந்திருக்கலாம். என்பதே! என் அபிப்பிராயம்.

இதே வேளை இச்சஞ்சிகை உள்நாட்டுக் கலைஞர்களுக்கு மறைந்த போதாவது மரியாதை செய்திருக்க வேண்டுமென்பதே! என் ஆதங்கம்!

தென்னகத்தில் பிறந்து இசையே தங்கள் மூச்சாக வாழ்ந்து; உலக மேடைகள் பல கண்ட நாதஸ்வர விற்பன்னர்கள் ;ஷேக் சின்ன மௌலானா சாகிப்; நாமகிரிப்பேட்டைக் கிருஸ்ணன் போன்றோர். இந்தச் பெண்ணிலும் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல!

இது தான் என் ஆதங்கம்.

அவர் மறைந்த போது ஒரு வரி எழுதாத ;இவர்கள் அலச்சியப் போக்கே எனக்கு வேதனையைத் தந்தது.

அடுத்த பகுதிக்கு ஒலிம்பிக்கில் நம் நாடுகள் தவிரப் பல நாடுகள் பதக்கங்களைப் பெறுகின்றனவே! அப்போ மகிழ்வது போல் இவர் இசை புரியாவிடிலும்; ஓ யாரோ விருது பெற்றார். என மகிழ்வதில்
எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனந்தக் கூத்து தேவையில்லை என்பதே! என் அபிப்பிராயம்.

இதே கொள்கையை பாகிஸ்தான் ;நம்மைக் கிரிக்கெட்டில் வெல்லும் போதும் கடைப்பிடித்தால்; கணியன் பூங்குன்றனார் எம்மை ஆசீர்வதிப்பார்.

தங்கள் வருகை; ஆக்கபூர்வமான சிந்திக்க வைத்த கருத்துக்களுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக வந்த அன்பருக்கு!
நல்ல;தெளிவான;யாரையுமே நோகடியாத கருத்தைக் கூறப் பெயரிலியாக வரும் காரணமென்ன?
ஆம்! அன்பரே, எப்போதுமே இவ்விடயங்களில் இரு வேறு பட்ட கருத்துக்கள்;உலாவருவது இயல்பாகிவிட்டது.
எதையுமே! உணர்வு பூர்வமாகப் பார்க்கப் பழகிவிட்டதன் பிரதிபலிப்பே இது.
என் ஆதங்கம் உள்ளூர்த் திறமைகளையும் கொண்டாடுங்கள் முதல்!பின்பு வெளித் திறமையைப் பார்ப்போம்.
அடுத்து; கல்பனா சாவ்லா பெயரில் பல விருதுகள் பல இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்கப்பட்டதாக பத்திரிகைகள் கூறின.
மேலும் ரஜீவ் சிறீநிவாசின் இணைப்பைத் தாருங்கள்.அந்த "நக்கல்" எழுத்தைப் பயில ஆவல்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பரிசோதனை

Anonymous said...

யோகன்,

அனாமதேயமாக வருவதில் எனக்கும் வருத்தம் தான். ஆனாலும் இதற்கு முக்கிய காரணம் எனது பெயரை இடுவதனால் எனது கருத்துகளுக்கு ஒரு முகம் கிடைத்து அதன் மூலம் இதற்கு ஏதாவது உட்கருத்து இருக்கிறதா என மற்றவர்கள் சிந்திக்கத்தலைப்படுவார்களோ என்கின்ற பயம் தான், வேறேதுமில்லை!

ரீடிஃ.கொம் மில் வந்த பதிவைத்தேடாத இடமில்லை.
சாராம்சம் என்னவென்றால் அமெரிக்காவுக்கு ஒரு இந்தியர் எவ்வாறு வருகிறார் யூ.எஸ் எம்பசியில் அவமரியாதை, இங்கே அமெரிக்காவில் கடும் உழைப்பு, இனத்துவேசம், சரியான உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் பதவியுயர்வு மறுக்கப்படுதல்......எல்லாம் முடிய ஒருநிலைக்கு வந்ததும் இந்தியா ஒரு கற்கால தேசம் போன்ற எக்காளத்தொனிகலந்த கருத்து! ஆனால் இந்தியாவோ அவர் எந்த மூலையில் இருந்தாலும் தலையில் வைத்து ஆடுவது போன்றவை!

அதுமட்டுமல்ல யோகன், இங்கே இலங்கையைச் சேர்ந்த ஒருவர் , சஞ்சய் குமார், Computer Associates நிறுவனத்தின் CEO வாக வந்தார். 89-90 களில் அவர் பற்றிய profile தினசரிகளில் வந்தது. அதில் அவர் தான் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் என கூறியிருந்தார். எனது சக தொழிலாளர்கள் கூட அவரை எனக்குத்தெரியுமா எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நான் எவ்வளவு முயன்றும் அவர் பற்றி மேலதிக தகவல்களைப் பெற முடியவில்லை. தான் இலங்கையின் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என சொல்லாமல் அவ்வளவு கவனமாக இருந்தார். ஆனால் 1999 இல் "சுத்துமாத்து" விட்டு மாட்டிக்கொண்டபோதுதான் அவருடைய 'அழுகை' யில், தான் 1977 கலவரங்களில் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் ஒழுங்கான சப்பாத்துக்கூட இல்லாமல் தவித்தது அது இது என அவிழ்த்தார். ஆனால் இந்தியா ருடே போலல்லாமல் நாம் யாரும் அவரை தலையில் தூக்கி கொண்டாடவில்லை! இப்போது சிறையில், 15 வருடம் என நினைக்கிறேன். 90 வருடங்கள் தீரும் ஆனால் நீதிபதி கருணை காட்டினார் என பத்திரிகைகளில் எழுதினார்கள்